Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Aaya: (71) Simoore: Simoore rewɓe
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا خُذُوْا حِذْرَكُمْ فَانْفِرُوْا ثُبَاتٍ اَوِ انْفِرُوْا جَمِیْعًا ۟
4.71. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்கள் எதிரிகளுடன் போரிடுவதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்களுடன் போரிடுவதற்கு ஒரு படையின் பின் ஒரு படையாகவோ அனைவரும் ஒன்றுசேர்ந்தோ புறப்படுங்கள். இவையனைத்தும் உங்களின் நலன்களின் அடிப்படையிலும், எதிரிகளுக்கு சேதமும் தோல்வியும் ஏற்படும் விதத்திலும் நீங்கள் முடிவுசெய்ய வேண்டியதாகும்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• فعل الطاعات من أهم أسباب الثبات على الدين.
1. நன்மையான காரியங்களில் ஈடுபடுவது மார்க்கத்தில் உறுதியாக நிலைத்து நிற்பதற்கான பிரதான காரணிகளில் ஒன்றாகும்.

• أخذ الحيطة والحذر باتخاذ جميع الأسباب المعينة على قتال العدو، لا بالقعود والتخاذل.
2. முஸ்லிம் சமூகம் எதிரிகளை எதிர்ப்பதற்குத் தேவையான எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பின்தங்கிவிடுதன் மூலமோ பலவீனப்படுவதன் மூலமோ அல்ல.

• الحذر من التباطؤ عن الجهاد وتثبيط الناس عنه؛ لأن الجهاد أعظم أسباب عزة المسلمين ومنع تسلط العدو عليهم.
3. போருக்குச் செல்லாமல் பின்தங்குவது மற்றும் மக்களை போருக்குச் செல்லவிடாமல் தடுப்பது ஆகியவற்றை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் போர் புரிவதுதான் முஸ்லிம்களின் கண்ணியத்திற்கும் அவர்கள் மீது எதிரிகளின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கும் வழிவகுக்கக்கூடிய மிக முக்கியமான காரணியாகும்.

 
Firo maanaaji Aaya: (71) Simoore: Simoore rewɓe
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude