Traduzione dei Significati del Sacro Corano - Traduzione in tamil - Omar Sharif * - Indice Traduzioni

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

Traduzione dei significati Sura: Al-Baqarah   Versetto:

ஸூரா அல்பகரா

الٓمّٓ ۟ۚ
அலிஃப் லாம் மீம்.
Esegesi in lingua araba:
ذٰلِكَ الْكِتٰبُ لَا رَیْبَ ۖۚۛ— فِیْهِ ۚۛ— هُدًی لِّلْمُتَّقِیْنَ ۟ۙ
இதுதான் - (ஏக இறைவனாகிய அல்லாஹ், வானவர் ஜிப்ரீல் மூலமாக இறுதி இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கிய இறுதி) - வேதமாகும். இதில் அறவே சந்தேகம் இல்லை. (இது,) இறையச்சமுள்ளவர்களுக்கு நேர்வழிகாட்டக் கூடியதாகும்.
Esegesi in lingua araba:
الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِالْغَیْبِ وَیُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ۙ
அவர்கள் (இந்த மார்க்கத்தில் கூறப்பட்ட) மறைவானதை நம்பிக்கை கொள்வார்கள். இன்னும், தொழுகையை நிலை நிறுத்துவார்கள். இன்னும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து தர்மம் செய்வார்கள்.
Esegesi in lingua araba:
وَالَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ ۚ— وَبِالْاٰخِرَةِ هُمْ یُوْقِنُوْنَ ۟ؕ
இன்னும், அவர்கள் உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும் மறுமை (வாழ்க்கை)யை அவர்கள் உறுதி(யாக நம்பிக்கை) கொள்வார்கள்.
Esegesi in lingua araba:
اُولٰٓىِٕكَ عَلٰی هُدًی مِّنْ رَّبِّهِمْ ۗ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
அவர்கள் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருக்கிறார்கள். இன்னும், அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்.
Esegesi in lingua araba:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا سَوَآءٌ عَلَیْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
நிச்சயமாக எவர்கள் (மன முரண்டாக) நிராகரித்தார்களோ அவர்களை நீர் எச்சரித்தாலும், அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லையென்றாலும் (அது) அவர்கள் மீது சமம்தான். அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
خَتَمَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَعَلٰی سَمْعِهِمْ ؕ— وَعَلٰۤی اَبْصَارِهِمْ غِشَاوَةٌ ؗ— وَّلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟۠
அவர்களின் உள்ளங்கள் மீதும், அவர்களின் செவியின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டான். இன்னும், அவர்களின் பார்வைகள் மீதும் திரையிருக்கிறது. இன்னும், அவர்களுக்கு (மறுமையில்) பெரிய தண்டனை உண்டு.
Esegesi in lingua araba:
وَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْیَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِیْنَ ۟ۘ
இன்னும், “நாங்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டோம்” எனக் கூறுபவர்களும் மக்களில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பிக்கையாளர்களே இல்லை.
Esegesi in lingua araba:
یُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِیْنَ اٰمَنُوْا ۚ— وَمَا یَخْدَعُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟ؕ
அவர்கள் அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் ஏமாற்றுகிறார்கள். ஆனால், அவர்கள் தங்களைத் தாமே தவிர (பிறரை) ஏமாற்றவில்லை. இன்னும், (இதை) அவர்கள் உணர மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ ۙ— فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۙ۬۟ — بِمَا كَانُوْا یَكْذِبُوْنَ ۟
அவர்களின் உள்ளங்களில் ஒரு (சந்தேக) நோய் இருக்கிறது. எனவே, அவர்களுக்கு அல்லாஹ் (சந்தேக) நோயை அதிகப்படுத்தினான். இன்னும், அவர்கள் பொய் கூறுபவர்களாக இருக்கின்ற காரணத்தால் துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு.
Esegesi in lingua araba:
وَاِذَا قِیْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ ۙ— قَالُوْۤا اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ ۟
இன்னும், பூமியில் விஷமம் (குழப்பம், கலகம், பாவம்) செய்யாதீர்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், “நாங்களெல்லாம் சீர்திருத்தவாதிகள்தான்” என்று கூறுகிறார்கள்.
Esegesi in lingua araba:
اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰكِنْ لَّا یَشْعُرُوْنَ ۟
அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக அவர்கள்தான் விஷமிகள்.” எனினும், அவர்கள் (அதை) உணர மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
وَاِذَا قِیْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوْۤا اَنُؤْمِنُ كَمَاۤ اٰمَنَ السُّفَهَآءُ ؕ— اَلَاۤ اِنَّهُمْ هُمُ السُّفَهَآءُ وَلٰكِنْ لَّا یَعْلَمُوْنَ ۟
இன்னும், “(இந்த தூதரை உண்மையாக பின்பற்றிய) மக்கள் (-நபித்தோழர்கள்) நம்பிக்கை கொண்டது போன்று (நீங்களும்) நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், “அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நாங்கள் நம்பிக்கை கொள்வோமா?” என்று கூறுகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக அவர்கள்தான் அறிவீனர்கள்.” எனினும், அவர்கள் (அதை) அறிய மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
وَاِذَا لَقُوا الَّذِیْنَ اٰمَنُوْا قَالُوْۤا اٰمَنَّا ۖۚ— وَاِذَا خَلَوْا اِلٰی شَیٰطِیْنِهِمْ ۙ— قَالُوْۤا اِنَّا مَعَكُمْ ۙ— اِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ ۟
இன்னும், அவர்கள் நம்பிக்கையாளர்களை சந்தித்தால், “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறுகிறார்கள். அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய மனித) ஷைத்தான்களிடம் சென்று (அவர்களுடன்) தனிமையில் இருந்தாலோ, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நாங்களெல்லாம் (அவர்களை) கேலி செய்பவர்கள்தான்” என்று கூறுகிறார்கள்.
Esegesi in lingua araba:
اَللّٰهُ یَسْتَهْزِئُ بِهِمْ وَیَمُدُّهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
அல்லாஹ் அவர்களை கேலி செய்கிறான். இன்னும், அவர்களுடைய அட்டூழியத்தில் அவர்கள் கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக அவர்களை விட்டுவைக்கிறான்.
Esegesi in lingua araba:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰی ۪— فَمَا رَبِحَتْ تِّجَارَتُهُمْ وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟
அவர்கள் எத்தகையோர் என்றால் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டை விலைக்கு வாங்கினார்கள். ஆகவே, அவர்களின் வியாபாரம் இலாபமடையவில்லை. இன்னும், அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை.
Esegesi in lingua araba:
مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِی اسْتَوْقَدَ نَارًا ۚ— فَلَمَّاۤ اَضَآءَتْ مَا حَوْلَهٗ ذَهَبَ اللّٰهُ بِنُوْرِهِمْ وَتَرَكَهُمْ فِیْ ظُلُمٰتٍ لَّا یُبْصِرُوْنَ ۟
அவர்களின் உதாரணம் நெருப்பை மூட்டியவர்களின் உதாரணத்தைப் போலாகும். அது, அவர்களைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கியபோது அல்லாஹ் அவர்களின் ஒளியை போக்கிவிட்டான். இன்னும், அவன் அவர்களை இருள்களில் - அவர்கள் (எதையும்) பார்க்க முடியாதவர்களாக - விட்டுவிட்டான்.
Esegesi in lingua araba:
صُمٌّۢ بُكْمٌ عُمْیٌ فَهُمْ لَا یَرْجِعُوْنَ ۟ۙ
(அவர்கள்) செவிடர்கள், ஊமைகள், குருடர்கள் ஆவார்கள். ஆகவே, அவர்கள் (நேர்வழிக்கு) திரும்ப மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
اَوْ كَصَیِّبٍ مِّنَ السَّمَآءِ فِیْهِ ظُلُمٰتٌ وَّرَعْدٌ وَّبَرْقٌ ۚ— یَجْعَلُوْنَ اَصَابِعَهُمْ فِیْۤ اٰذَانِهِمْ مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ ؕ— وَاللّٰهُ مُحِیْطٌ بِالْكٰفِرِیْنَ ۟
அல்லது, (அவர்களின் உதாரணம்) வானத்திலிருந்து பொழியும் மழையைப் போலாகும். அதில் இருள்களும் இடியும் மின்னலும் இருக்கின்றன. இடி முழக்கங்களால் மரணத்தைப் பயந்து அவர்கள் தங்கள் விரல்களைத் தங்கள் காதுகளில் ஆக்கிக் கொள்கிறார்கள். இன்னும், அல்லாஹ் நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்திருக்கிறான்.
Esegesi in lingua araba:
یَكَادُ الْبَرْقُ یَخْطَفُ اَبْصَارَهُمْ ؕ— كُلَّمَاۤ اَضَآءَ لَهُمْ مَّشَوْا فِیْهِ ۙۗ— وَاِذَاۤ اَظْلَمَ عَلَیْهِمْ قَامُوْا ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْ ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. அது அவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அதில் அவர்கள் நடந்து செல்கிறார்கள். அவர்கள் மீது இருள் சூழ்ந்தால் நின்று விடுகிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களின் செவிப்புலனையும் அவர்களின் பார்வைகளையும் திட்டமாக போக்கிவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Esegesi in lingua araba:
یٰۤاَیُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِیْ خَلَقَكُمْ وَالَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟ۙ
மக்களே! நீங்கள் (உண்மையான) இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்கு உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனை வணங்குங்கள்.
Esegesi in lingua araba:
الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً ۪— وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّكُمْ ۚ— فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟
அவன் பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் ஆக்கினான். இன்னும், வானத்தி(ன் மேகத்தி)லிருந்து (மழை) நீரை இறக்கினான். ஆக, அதன் மூலம் உங்களுக்கு (பல விதமான) கனிகளிலிருந்து உணவை உற்பத்தி செய்(து கொடுத்)தான். ஆகவே, (இந்த உண்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில், அல்லாஹ்விற்கு நிகரானவர்களை (-பொய்யான இணை தெய்வங்களை) ஏற்படுத்தாதீர்கள்.
Esegesi in lingua araba:
وَاِنْ كُنْتُمْ فِیْ رَیْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰی عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ ۪— وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
நாம் நம் அடிமை மீது இறக்கிய (வேதத்)தில் (அது இறைவனிடமிருந்து இறக்கப்பட்டது என்பதில்) நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இன்னும், அல்லாஹ் அல்லாத உங்கள் ஆதரவாளர்களையும் (உங்கள் உதவிக்காக) நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதை செய்து காட்டுங்கள்).
Esegesi in lingua araba:
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوا النَّارَ الَّتِیْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ ۖۚ— اُعِدَّتْ لِلْكٰفِرِیْنَ ۟
ஆக, நீங்கள் (அப்படி ஒரு வேதத்தை) உருவாக்கவில்லையென்றால், - நீங்கள் (அப்படி) உருவாக்கவே முடியாது - (நரக) நெருப்பை அஞ்சுங்கள். மக்களும் கற்களும் அதன் எரிபொருள் ஆவார்கள். அது நிராகரிப்பாளர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
Esegesi in lingua araba:
وَبَشِّرِ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ— كُلَّمَا رُزِقُوْا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِّزْقًا ۙ— قَالُوْا هٰذَا الَّذِیْ رُزِقْنَا مِنْ قَبْلُ وَاُتُوْا بِهٖ مُتَشَابِهًا ؕ— وَلَهُمْ فِیْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّهُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
இன்னும் (நபியே!) எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! “நிச்சயமாக அவர்களுக்கு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றிலிருந்து (ஏதேனும்) ஒரு கனி உணவாக அவர்களுக்கு வழங்கப்படும்போதெல்லாம் இது, முன்னர் நமக்கு வழங்கப்பட்டதுதான் என்று அவர்கள் கூறுவார்கள். இன்னும் (பார்வைக்கு) ஒரே விதமாகத் தோன்றக்கூடியதாகவே அது (-கனி) அவர்களிடம் கொண்டு வரப்படும். இன்னும், தூய்மையான மனைவிகளும் அவற்றில் அவர்களுக்கு உண்டு. இன்னும், அவர்கள் அவற்றில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.”
Esegesi in lingua araba:
اِنَّ اللّٰهَ لَا یَسْتَحْیٖۤ اَنْ یَّضْرِبَ مَثَلًا مَّا بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ؕ— فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا فَیَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۚ— وَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا فَیَقُوْلُوْنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ— یُضِلُّ بِهٖ كَثِیْرًا وَّیَهْدِیْ بِهٖ كَثِیْرًا ؕ— وَمَا یُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِیْنَ ۟ۙ
கொசு இன்னும் (அற்பத்தில்) அதற்கு மேலுள்ளதையும் கூட உதாரணமாக கூறுவதற்கு நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். ஆக, நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக அது தங்கள் இறைவனிடமிருந்து (கூறப்பட்ட) உண்மைதான் என அறிவார்கள். ஆக, நிராகரிப்பாளர்கள் - அல்லாஹ் இந்த உதாரணத்தின் மூலம் என்ன நாடினான்? என்று - (கேலியாக) கூறுவார்கள். இதன் மூலம் அதிகமானோரை அவன் வழி தவற செய்கிறான். இன்னும், இதன் மூலம் அதிகமானோரை அவன் நேர்வழி நடத்துகிறான். இன்னும், பாவிகளைத் தவிர இதன் மூலம் அவன் வழி தவற செய்ய மாட்டான்.
Esegesi in lingua araba:
الَّذِیْنَ یَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْ بَعْدِ مِیْثَاقِهٖ ۪— وَیَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیُفْسِدُوْنَ فِی الْاَرْضِ ؕ— اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
(பாவிகளாகிய) அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை, அது உறுதியாகிவிட்ட பின்னர் முறிக்கிறார்கள். இன்னும், எது சேர்க்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் ஏவினானோ அதை (-இரத்த உறவை)த் துண்டிக்கிறார்கள். இன்னும், பூமியில் விஷமம் (குழப்பம், கலகம், பாவம்) செய்கிறார்கள். அவர்கள்தான் நஷ்டவாளிகள் ஆவார்கள்.
Esegesi in lingua araba:
كَیْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَكُنْتُمْ اَمْوَاتًا فَاَحْیَاكُمْ ۚ— ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یُحْیِیْكُمْ ثُمَّ اِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
(நீங்கள்) அல்லாஹ்வை எப்படி நிராகரிக்கிறீர்கள்? நீங்கள் இறந்தவர்களாக இருந்தீர்களே! அவன் உங்களை உயிர்ப்பித்தான். பிறகு, அவன் உங்களை மரணிக்கச் செய்கிறான். பிறகு, அவன் உங்களை உயிர்ப்பிப்பான். பிறகு, அவனிடமே நீங்கள் (மறுமையில்) திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்.
Esegesi in lingua araba:
هُوَ الَّذِیْ خَلَقَ لَكُمْ مَّا فِی الْاَرْضِ جَمِیْعًا ۗ— ثُمَّ اسْتَوٰۤی اِلَی السَّمَآءِ فَسَوّٰىهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ ؕ— وَهُوَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
அவன்தான் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பிறகு, வானத்திற்கு மேல் (தனது கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்தான். ஆக, அவற்றை ஏழு வானங்களாக அவன் அமைத்தான். அவன் எல்லாப் பொருளையும் நன்கறிந்தவன் ஆவான்.
Esegesi in lingua araba:
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىِٕكَةِ اِنِّیْ جَاعِلٌ فِی الْاَرْضِ خَلِیْفَةً ؕ— قَالُوْۤا اَتَجْعَلُ فِیْهَا مَنْ یُّفْسِدُ فِیْهَا وَیَسْفِكُ الدِّمَآءَ ۚ— وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ؕ— قَالَ اِنِّیْۤ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ ۟
இன்னும் (நபியே!) “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை படைக்கப்போகிறேன்” என உம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக. (அதற்கு) அவர்கள் கூறினார்கள்: “அதில் விஷமம் செய்து, அதிகமாக இரத்தம் சிந்தக் கூடியவர்களை அதில் நீ படைக்(கப் போ)கிறாயா? நாங்களோ உன்னைப் புகழ்ந்து துதித்து வருகிறோம். இன்னும், உன்னைப் பரிசுத்தப்படுத்துகிறோம்.” (அதற்கு) அவன் கூறினான்: “நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் அறிவேன்.”
Esegesi in lingua araba:
وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَی الْمَلٰٓىِٕكَةِ فَقَالَ اَنْۢبِـُٔوْنِیْ بِاَسْمَآءِ هٰۤؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
இன்னும், அவன் எல்லா (பொருள்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்பித்தான். பிறகு, அவற்றை அந்த வானவர்களுக்கு முன் சமர்ப்பித்தான். இன்னும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான்.
Esegesi in lingua araba:
قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَاۤ اِلَّا مَا عَلَّمْتَنَا ؕ— اِنَّكَ اَنْتَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟
அவர்கள் கூறினார்கள்: “நீ மகாத் தூயவன். நீ எங்களுக்குக் கற்பித்தவற்றைத் தவிர எங்களுக்கு அறவே அறிவு இல்லை. நிச்சயமாக நீதான் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”
Esegesi in lingua araba:
قَالَ یٰۤاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَآىِٕهِمْ ۚ— فَلَمَّاۤ اَنْۢبَاَهُمْ بِاَسْمَآىِٕهِمْ ۙ— قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْ اِنِّیْۤ اَعْلَمُ غَیْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۙ— وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ ۟
அவன் கூறினான்: “ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!” ஆக, அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் அறிவித்தபோது, அவன் கூறினான்: “வானங்கள் இன்னும் பூமியில் மறைந்திருப்பவற்றை நிச்சயமாக நான் அறிவேன். இன்னும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைத்திருந்ததையும் நான் அறிவேன் என்று உங்களுக்கு நான் கூறவில்லையா?”
Esegesi in lingua araba:
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ— اَبٰی وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
இன்னும் (நபியே!) ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! ஆக, இப்லீஸைத் தவிர (மற்ற அனைவரும்) சிரம் பணிந்தார்கள். அவன் மறுத்தான். இன்னும், பெருமையடித்தான். இன்னும், நிராகரிப்பாளர்களில் அவன் ஆகிவிட்டான்.
Esegesi in lingua araba:
وَقُلْنَا یٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَیْثُ شِئْتُمَا ۪— وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِیْنَ ۟
இன்னும், நாம் கூறினோம்: “ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் தங்கி இருங்கள்! இன்னும் நீங்கள் இருவரும் அதில் நாடிய விதத்தில் தாராளமாக சாப்பிடுங்கள். ஆனால், இந்த மரத்தை நீங்கள் இருவரும் நெருங்காதீர்கள். (அப்படி நெருங்கினால்) அநியாயக்காரர்களில் நீங்கள் இருவரும் ஆகிவிடுவீர்கள்.”
Esegesi in lingua araba:
فَاَزَلَّهُمَا الشَّیْطٰنُ عَنْهَا فَاَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِیْهِ ۪— وَقُلْنَا اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ— وَلَكُمْ فِی الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟
ஆக, ஷைத்தான் அவ்விருவரையும் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) மாறு செய்ய தூண்டி அதிலிருந்து அகற்றினான். ஆக, அவ்விருவரும் இருந்த (சொர்க்கத்)திலிருந்து அவ்விருவரையும் அவன் வெளியேற்றினான். இன்னும், நாம் கூறினோம்: “நீங்கள் இறங்குங்கள். உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவீர்கள். இன்னும், உங்களுக்குப் பூமியில் வசிக்குமிடமும் ஒரு காலம் வரை இன்பமும் உண்டு.”
Esegesi in lingua araba:
فَتَلَقّٰۤی اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَیْهِ ؕ— اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
ஆக, ஆதம் (பாவமன்னிப்புத் தேட சில) வாக்கியங்களைத் தம் இறைவனிடமிருந்து பெற்றார். (அவற்றைக் கூறி பாவமன்னிப்புத் தேடினார்.) ஆகவே, அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.
Esegesi in lingua araba:
قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِیْعًا ۚ— فَاِمَّا یَاْتِیَنَّكُمْ مِّنِّیْ هُدًی فَمَنْ تَبِعَ هُدَایَ فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்குங்கள். ஆக, என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி நிச்சயமாக வரும். ஆக, எவர்கள் என் நேர்வழியைப் பின்பற்றினார்களோ அவர்கள் மீது அச்சமில்லை. இன்னும், அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠
இன்னும், எவர்கள் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.”
Esegesi in lingua araba:
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَوْفُوْا بِعَهْدِیْۤ اُوْفِ بِعَهْدِكُمْ ۚ— وَاِیَّایَ فَارْهَبُوْنِ ۟
இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்கள் மீது நான் அருள் புரிந்த என் அருளை நினைவு கூருங்கள். இன்னும், எனது உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். நான் உங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றுவேன். இன்னும், என்னையே நீங்கள் பயப்படுங்கள்.
Esegesi in lingua araba:
وَاٰمِنُوْا بِمَاۤ اَنْزَلْتُ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُوْنُوْۤا اَوَّلَ كَافِرٍ بِهٖ ۪— وَلَا تَشْتَرُوْا بِاٰیٰتِیْ ثَمَنًا قَلِیْلًا ؗ— وَّاِیَّایَ فَاتَّقُوْنِ ۟
இன்னும், உங்களிடமுள்ளதை உண்மைப்படுத்தக்கூடியதாக நான் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள்! இன்னும் இதை நிராகரிப்பவர்களில் முதலாமவர்களாக நீங்கள் ஆகிவிடாதீர்கள்! இன்னும், என் வசனங்களுக்குப் பகரமாக (அவற்றில் கூறப்பட்ட சட்டங்களை மறைப்பதற்காக அல்லது, மாற்றுவதற்காக) சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள்! இன்னும், நீங்கள் என்னையே அஞ்சுங்கள்!
Esegesi in lingua araba:
وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟
இன்னும், உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்! இன்னும், நீங்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில் உண்மையை மறைக்காதீர்கள்!
Esegesi in lingua araba:
وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرّٰكِعِیْنَ ۟
இன்னும், (இஸ்லாமை ஏற்று முஸ்லிம்களுடன்) தொழுகையை நிலைநிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தை கொடுங்கள்! இன்னும், (தொழுகையில்) குனி(ந்து பணி)பவர்களுடன் (சேர்ந்து) குனி(ந்து பணி)யுங்கள்.
Esegesi in lingua araba:
اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟
நீங்களோ வேதத்தை ஓதுபவர்களாக இருக்கும் நிலையில் உங்களை நீங்கள் மறந்துவிட்டு, மக்களுக்கு (மட்டும்) நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?
Esegesi in lingua araba:
وَاسْتَعِیْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ— وَاِنَّهَا لَكَبِیْرَةٌ اِلَّا عَلَی الْخٰشِعِیْنَ ۟ۙ
இன்னும், நீங்கள் பொறுமையாக இருந்தும் தொழுதும் (அல்லாஹ்விடம்) உதவி கோருங்கள். இன்னும், நிச்சயமாக அது (-தொழுகை) பளுவானதுதான், உள்ளச்சமுடையோர் மீதே தவிர.
Esegesi in lingua araba:
الَّذِیْنَ یَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَاَنَّهُمْ اِلَیْهِ رٰجِعُوْنَ ۟۠
(உள்ளச்சமுடைய) அவர்கள் “நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்பார்கள் என்றும் அவனிடமே நிச்சயமாக அவர்கள் திரும்புவார்கள்” என்றும் நம்புவார்கள்.
Esegesi in lingua araba:
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَنِّیْ فَضَّلْتُكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟
இஸ்ராயீலின் சந்ததிகளே! நான் உங்கள் மீது அருள்புரிந்த என் அருளையும் நிச்சயமாக நான் உலகத்தார்களைவிட உங்களை மேன்மைப்படுத்தியதையும் நீங்கள் நினைவு கூருங்கள்.
Esegesi in lingua araba:
وَاتَّقُوْا یَوْمًا لَّا تَجْزِیْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَیْـًٔا وَّلَا یُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَّلَا یُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟
இன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள்! (அதில்) ஓர் ஆன்மா (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் பலனளிக்காது. இன்னும் அதனிடமிருந்து பரிந்துரை ஏற்கப்படாது. இன்னும் அதனிடமிருந்து மீட்புத் தொகை வாங்கப்படாது. இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
وَاِذْ نَجَّیْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ یُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ— وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟
இன்னும், ஃபிர்அவ்னுடைய கூட்டத்திடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சமயத்தை நினைவு கூருங்கள். அவர்கள் உங்களுக்கு தீய தண்டனையால் கடும் சிரமம் (-துன்பம்) தந்தார்கள். உங்கள் ஆண் பிள்ளைகளை அறுத்தார்கள். இன்னும், உங்கள் பெண் (பிள்ளை)களை வாழ விட்டார்கள். இன்னும், அதில் - உங்கள் இறைவனிடமிருந்து - ஒரு பெரிய சோதனை இருந்தது.
Esegesi in lingua araba:
وَاِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَاَنْجَیْنٰكُمْ وَاَغْرَقْنَاۤ اٰلَ فِرْعَوْنَ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟
இன்னும், உங்களுக்காக நாம் கடலை பிளந்த சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, உங்களைக் காப்பாற்றினோம். இன்னும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நாம் மூழ்கடித்தோம்.
Esegesi in lingua araba:
وَاِذْ وٰعَدْنَا مُوْسٰۤی اَرْبَعِیْنَ لَیْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ ۟
இன்னும், மூஸாவிற்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்த சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, நீங்களோ அநியாயக்காரர்களாக ஆகிவிட்ட நிலையில் - நீங்கள் ஒரு காளைக்கன்றை அவருக்குப் பின்னர் (தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள்.
Esegesi in lingua araba:
ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
பிறகு, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அதன் பின்னர் உங்களை நாம் மன்னித்தோம்.
Esegesi in lingua araba:
وَاِذْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟
இன்னும், நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவிற்கு வேதத்தையும், பிரித்தறிவிக்கக்கூடிய சட்டத்தையும் நாம் கொடுத்ததை நினைவு கூருங்கள்.
Esegesi in lingua araba:
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْۤا اِلٰی بَارِىِٕكُمْ فَاقْتُلُوْۤا اَنْفُسَكُمْ ؕ— ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ عِنْدَ بَارِىِٕكُمْ ؕ— فَتَابَ عَلَیْكُمْ ؕ— اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
இன்னும், மூஸா தன் சமுதாயத்திற்கு, “என் சமுதாயமே! நீங்கள் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டதால் நிச்சயமாக நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்கு தீங்கு செய்தீர்கள். எனவே, (பாவத்தை விட்டு விலகி) மன்னிப்புக் கோரி உங்களைப் படைத்தவனின் பக்கம் திரும்புங்கள். இன்னும், உங்க(ளில் காளைக் கன்றை வணங்கியவர்க)ளுடைய உயிர்களைக் கொல்லுங்கள். அது, உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். ஆகவே, (நீங்கள் உங்களில் காளைக் கன்றை வணங்கியவர்களைக் கொன்றவுடன் அல்லாஹ்) உங்களை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன்.
Esegesi in lingua araba:
وَاِذْ قُلْتُمْ یٰمُوْسٰی لَنْ نُّؤْمِنَ لَكَ حَتّٰی نَرَی اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْكُمُ الصّٰعِقَةُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟
இன்னும் மூஸாவே! “அல்லாஹ்வை நாம் கண்கூடாக காணும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று நீங்கள் கூறியதை நினைவு கூருங்கள். ஆக, நீங்கள் பார்க்கின்ற நிலையில் பெரும் சப்தம் உங்களைப் பிடித்தது. (நீங்கள் இறந்து விட்டீர்கள்.)
Esegesi in lingua araba:
ثُمَّ بَعَثْنٰكُمْ مِّنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
பிறகு, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்கள் மரணத்திற்குப் பின்னர் உங்களை (உயிர்ப்பித்து) நாம் எழுப்பினோம்.
Esegesi in lingua araba:
وَظَلَّلْنَا عَلَیْكُمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَیْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰی ؕ— كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ ؕ— وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
இன்னும், உங்கள் மீது மேகத்தை நிழலிடும்படிச் செய்தோம். இன்னும், மன்னு ஸல்வா (உண)வை உங்களுக்கு இறக்கி கொடுத்தோம். நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றிலிருந்து நீங்கள் புசியுங்கள். அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், (அவர்கள்) தங்களுக்குத் தாமே தீங்கிழைப்பவர்களாக இருந்தனர்.
Esegesi in lingua araba:
وَاِذْ قُلْنَا ادْخُلُوْا هٰذِهِ الْقَرْیَةَ فَكُلُوْا مِنْهَا حَیْثُ شِئْتُمْ رَغَدًا وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُوْلُوْا حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطٰیٰكُمْ ؕ— وَسَنَزِیْدُ الْمُحْسِنِیْنَ ۟
இன்னும் நாம் (உங்களுக்கு) கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்: நீங்கள் இந்த ஊரில் நுழையுங்கள்! ஆக, அதில் நீங்கள் நாடிய விதத்தில் தாராளமாகப் புசியுங்கள்! (அதன்) வாசலில் தலை குனிந்தவர்களாக நுழையுங்கள்! இன்னும், (எங்கள்) பாவச்சுமை நீங்கட்டும் எனக் கூறுங்கள்! (அப்படி நீங்கள் செய்தால்) உங்கள் குற்றங்களை உங்களுக்கு மன்னிப்போம். இன்னும், நல்லறம் புரிவோருக்கு (நன்மையை மேலும்) அதிகப்படுத்துவோம்.
Esegesi in lingua araba:
فَبَدَّلَ الَّذِیْنَ ظَلَمُوْا قَوْلًا غَیْرَ الَّذِیْ قِیْلَ لَهُمْ فَاَنْزَلْنَا عَلَی الَّذِیْنَ ظَلَمُوْا رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟۠
ஆக, (அந்த) அநியாயக்காரர்கள் தங்களுக்கு எது கூறப்பட்டதோ அதை வேறு வார்த்தையாக மாற்றி(க் கூறி)னார்கள். எனவே, அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறுபவர்களாக இருந்த காரணத்தால் (அந்த) அநியாயக்காரர்கள் மீது வானத்திலிருந்து நாம் தண்டனையை இறக்கினோம்.
Esegesi in lingua araba:
وَاِذِ اسْتَسْقٰی مُوْسٰی لِقَوْمِهٖ فَقُلْنَا اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ؕ— فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَیْنًا ؕ— قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ ؕ— كُلُوْا وَاشْرَبُوْا مِنْ رِّزْقِ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
இன்னும், மூஸா தனது சமுதாயத்திற்குத் தண்ணீர் தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். “நீர் உம் தடியால் கல்லை அடிப்பீராக!” எனக் கூறினோம். அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. மக்கள் எல்லாம் தங்களது நீர் அருந்தும் பகுதியை திட்டமாக அறிந்தார்கள். அல்லாஹ் கொடுத்த உணவிலிருந்து புசியுங்கள்! பருகுங்கள். இன்னும், (பூமியில்) விஷமம் (கலகம், குழப்பம், பாவம்) செய்தவர்களாக இருந்த நிலையில் பூமியில் எல்லை மீறி விஷமம் செய்யாதீர்கள்.
Esegesi in lingua araba:
وَاِذْ قُلْتُمْ یٰمُوْسٰی لَنْ نَّصْبِرَ عَلٰی طَعَامٍ وَّاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ یُخْرِجْ لَنَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّآىِٕهَا وَفُوْمِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا ؕ— قَالَ اَتَسْتَبْدِلُوْنَ الَّذِیْ هُوَ اَدْنٰی بِالَّذِیْ هُوَ خَیْرٌ ؕ— اِهْبِطُوْا مِصْرًا فَاِنَّ لَكُمْ مَّا سَاَلْتُمْ ؕ— وَضُرِبَتْ عَلَیْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا یَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَیَقْتُلُوْنَ النَّبِیّٖنَ بِغَیْرِ الْحَقِّ ؕ— ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟۠
இன்னும், “மூஸாவே! ஒரே ஓர் உணவை (மட்டும் சாப்பிட்டு வாழ்வதில்) நாங்கள் அறவே பொறுமையாக இருக்க மாட்டோம். ஆகவே, உம் இறைவனிடம் எங்களுக்காக பிரார்த்திப்பீராக. பூமி விளைவிக்கும் அதன் கீரை, அதன் வெள்ளரிக்காய், அதன் கோதுமை, அதன் பருப்பு, அதன் வெங்காயத்தை எங்களுக்காக அவன் வெளியாக்குவான்” என நீங்கள் கூறியதை நினைவு கூருங்கள். “சிறந்ததற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக் கொள்கிறீர்களா? ஒரு நகரத்தில் இறங்குங்கள். நீங்கள் கேட்டது நிச்சயமாக உங்களுக்கு (அங்கே) உண்டு” என அவர் கூறினார். இன்னும், இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சார்ந்து விட்டார்கள். அது, நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிப்பவர்களாகவும், நியாயமின்றி நபிமார்களை கொலை செய்பவர்களாகவும் இருந்த காரணத்தினாலாகும். அது, அவர்கள் பாவம் செய்த காரணத்தினாலும், இன்னும், அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறுபவர்களாக இருந்த காரணத்தினாலும் ஆகும்.
Esegesi in lingua araba:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالنَّصٰرٰی وَالصّٰبِـِٕیْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۪ۚ— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
நிச்சயமாக நம்பிக்கையாளர்கள், யூதர்கள், கிறித்தவர்கள், ஸாபியிகள் - (இவர்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (உண்மையாகவே) நம்பிக்கை கொண்டு நன்மை செய்தார்களோ, அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடத்தில் உண்டு. இன்னும், அவர்கள் மீது பயமுமில்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَ ؕ— خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِیْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟
இன்னும், உங்களுக்கு மேல் மலையை உயர்த்தி, உங்கள் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். “நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை பலமாகப் (பற்றிப்) பிடியுங்கள். இன்னும், அதில் உள்ளவற்றை நினைவு கூருங்கள்.
Esegesi in lingua araba:
ثُمَّ تَوَلَّیْتُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ ۚ— فَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ لَكُنْتُمْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟
பிறகு, அதன் பின்னர் புறக்கணித்து விட்டீர்கள். ஆக, உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனின் கருணையும் இல்லையென்றால் நீங்கள் நஷ்டவாளிகளில் ஆகியிருப்பீர்கள்.
Esegesi in lingua araba:
وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِیْنَ اعْتَدَوْا مِنْكُمْ فِی السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِـِٕیْنَ ۟ۚ
இன்னும், சனிக்கிழமைகளில் உங்களில் (நமது கட்டளைக்கு மாறு செய்து) எல்லை மீறியவர்களை திட்டமாக நீங்கள் அறிவீர்கள். ஆக, சிறுமைப்பட்டவர்களாக குரங்குகளாக ஆகிவிடுங்கள் என அவர்களுக்கு நாம் கூறினோம்.
Esegesi in lingua araba:
فَجَعَلْنٰهَا نَكَالًا لِّمَا بَیْنَ یَدَیْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟
ஆக, அதை (-குரங்குகளாக மாற்றப்பட்டதை) அதற்கு முன்னால் (அவர்கள் செய்த) பாவங்களுக்கும் அதற்கு பின்னால் (வருபவர்கள் செய்கின்ற அது போன்ற) பாவங்களுக்கும் (முன்னுதாரணமான) தண்டனையாகவும், இறையச்சமுள்ளவர்களுக்கு ஓர் உபதேசமாகவும் ஆக்கினோம்.
Esegesi in lingua araba:
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖۤ اِنَّ اللّٰهَ یَاْمُرُكُمْ اَنْ تَذْبَحُوْا بَقَرَةً ؕ— قَالُوْۤا اَتَتَّخِذُنَا هُزُوًا ؕ— قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ ۟
இன்னும், “ஒரு பசுவை நீங்கள் அறுப்பதற்கு நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஏவுகிறான்” என மூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதற்கு) அவர்கள், “(மூஸாவே!) நீர் எங்களை கேலியாக எடுத்துக் கொள்கிறீரா?” எனக் கூறினார்கள். “அறிவீனர்களில் நான் ஆகுவதை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என அவர் கூறினார்.
Esegesi in lingua araba:
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا هِیَ ؕ— قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌ ؕ— عَوَانٌ بَیْنَ ذٰلِكَ ؕ— فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ ۟
“எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அ(ந்த மாட்டின் வய)து என்னவென்று எங்களுக்கு அவன் விவரிப்பான்” எனக் கூறினார்கள். “நிச்சயமாக அது கிழடும் அல்லாத, இளங்கன்றும் அல்லாத அதற்கு மத்தியில் நடுத்தரமான ஒரு பசு என நிச்சயமாக அவன் கூறுகிறான். எனவே, நீங்கள் ஏவப்படுவதைச் செய்யுங்கள்” என (மூஸா) கூறினார்.
Esegesi in lingua araba:
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا لَوْنُهَا ؕ— قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُ ۙ— فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النّٰظِرِیْنَ ۟
(மூஸாவின் சமுதாயத்தினர்) கூறினார்கள்: “எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அதன் நிறம் என்ன என்று அவன் எங்களுக்கு விவரிப்பான்.” (மூஸா) கூறினார்: “நிச்சயமாக அது மஞ்சள் நிறமான பசு. அதன் நிறம் தூய்மையானது (கலப்பற்றது). பார்வையாளர்களை அது மகிழ்விக்கும்” என்று நிச்சயமாக அவன் கூறுகிறான்.
Esegesi in lingua araba:
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا هِیَ ۙ— اِنَّ الْبَقَرَ تَشٰبَهَ عَلَیْنَا ؕ— وَاِنَّاۤ اِنْ شَآءَ اللّٰهُ لَمُهْتَدُوْنَ ۟
(மூஸாவின் சமுதாயத்தினர்) கூறினார்கள்: “எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அது எது (வேலைக்கு பயன்படுத்தப்பட்டதா, இல்லையா)? என எங்களுக்கு அவன் விவரிப்பான். மாடுகள் (பல வகைகளாக இருப்பதால் அவற்றில் எதை நாங்கள் அறுக்க வேண்டும் என்பதில் அவை) எங்களுக்கு குழப்பமாக (சந்தேகமாக) இருக்கின்றன. நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் நாடினால் திட்டமாக நேர்வழி பெறுவோம்.”
Esegesi in lingua araba:
قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِیْرُ الْاَرْضَ وَلَا تَسْقِی الْحَرْثَ ۚ— مُسَلَّمَةٌ لَّا شِیَةَ فِیْهَا ؕ— قَالُوا الْـٰٔنَ جِئْتَ بِالْحَقِّ ؕ— فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا یَفْعَلُوْنَ ۟۠
(மூஸா) கூறினார்: “நிச்சயமாக அது நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தப்படாத, (விளை) நிலத்திற்கு நீர் இறைக்காத பசுவாகும். (அது) குறையற்றதாகும். அதில் வடு அறவே இல்லை” என்று அவன் கூறுகிறான்.. “நீர் இப்போதுதான் உண்மையைக் கொண்டு வந்தீர்” என அவர்கள் கூறினார்கள். ஆக, (பல கேள்விகளுக்குப் பின்னர்) அவர்கள் அதை அறுத்தார்கள். ஆனால், (அதை) விரைவாக செய்ய அவர்கள் நெருங்கவில்லை.
Esegesi in lingua araba:
وَاِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادّٰرَءْتُمْ فِیْهَا ؕ— وَاللّٰهُ مُخْرِجٌ مَّا كُنْتُمْ تَكْتُمُوْنَ ۟ۚ
இன்னும் நீங்கள் ஓர் உயிரைக் கொன்று பிறகு, அ(தை யார் கொன்றார் என்ப)தில் நீங்கள் தர்க்கித்ததை நினைவு கூருங்கள். நீங்கள் மறைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கக் கூடியவன் ஆவான்.
Esegesi in lingua araba:
فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَا ؕ— كَذٰلِكَ یُحْیِ اللّٰهُ الْمَوْتٰی وَیُرِیْكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
ஆக, “அதில் சில (பாகத்)தைக்கொண்டு (இறந்த) அவரை அடியுங்கள்” எனக் கூறினோம். இவ்வாறுதான், இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். இன்னும், நீங்கள் சிந்தித்து புரிவதற்காக தன் அத்தாட்சிகளை அவன் உங்களுக்குக் காண்பிப்பான்.
Esegesi in lingua araba:
ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ فَهِیَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً ؕ— وَاِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا یَتَفَجَّرُ مِنْهُ الْاَنْهٰرُ ؕ— وَاِنَّ مِنْهَا لَمَا یَشَّقَّقُ فَیَخْرُجُ مِنْهُ الْمَآءُ ؕ— وَاِنَّ مِنْهَا لَمَا یَهْبِطُ مِنْ خَشْیَةِ اللّٰهِ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
பிறகு, உங்கள் உள்ளங்கள் அதற்குப் பின்னர் இறுகி விட்டன. ஆக, அவை கற்களைப் போல் அல்லது இறுக்கத்தால் (அவற்றைவிட) மிகக் கடினமானவையாக உள்ளன. இன்னும் நிச்சயமாக கற்களில் நதிகள் பீறி(ட்டு ஓ)டக்கூடியவையும் திட்டமாக உண்டு. இன்னும் நிச்சயமாக பிளந்து அதிலிருந்து நீர் வெளியேறக் கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. இன்னும் நிச்சயமாக அல்லாஹ்வுடைய பயத்தால் (மேலிருந்து கிழே உருண்டு) விழக்கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
Esegesi in lingua araba:
اَفَتَطْمَعُوْنَ اَنْ یُّؤْمِنُوْا لَكُمْ وَقَدْ كَانَ فَرِیْقٌ مِّنْهُمْ یَسْمَعُوْنَ كَلٰمَ اللّٰهِ ثُمَّ یُحَرِّفُوْنَهٗ مِنْ بَعْدِ مَا عَقَلُوْهُ وَهُمْ یَعْلَمُوْنَ ۟
உங்களுக்காக அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகுவதை நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? திட்டமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய பேச்சை செவியுறுகிறார்கள். பிறகு, அதை அவர்கள் சிந்தித்து புரிந்த பின்னர் அவர்களோ (தாம் செய்வது பாவம் என்பதை) அறிந்தவர்களாக இருந்த நிலையில் அதை தவறாக மாற்றுகிறார்கள்.
Esegesi in lingua araba:
وَاِذَا لَقُوا الَّذِیْنَ اٰمَنُوْا قَالُوْۤا اٰمَنَّا ۖۚ— وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰی بَعْضٍ قَالُوْۤا اَتُحَدِّثُوْنَهُمْ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَیْكُمْ لِیُحَآجُّوْكُمْ بِهٖ عِنْدَ رَبِّكُمْ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟
இன்னும் அவர்கள் நம்பிக்கையாளர்களைச் சந்தித்தால் “(நாங்களும்) நம்பிக்கை கொள்கிறோம்” எனக் கூறுகிறார்கள். அவர்களில் சிலர் (மற்ற) சிலருடன் தனி(மையில் சந்தி)த்து விட்டால் (அந்த சிலர் தங்களை சந்தித்தவர்களிடம்) கூறுகிறார்கள்: “உங்கள் இறைவனுக்கு முன் அதைக் கொண்டு அவர்கள் உங்களிடம் தர்க்கிப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு தெரிவித்ததை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?”
Esegesi in lingua araba:
اَوَلَا یَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ۟
அவர்கள் இரகசியமாகப் பேசுவதையும் வெளிப்படையாக பேசுவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை (அவர்கள்) அறிய மாட்டார்களா?
Esegesi in lingua araba:
وَمِنْهُمْ اُمِّیُّوْنَ لَا یَعْلَمُوْنَ الْكِتٰبَ اِلَّاۤ اَمَانِیَّ وَاِنْ هُمْ اِلَّا یَظُنُّوْنَ ۟
இன்னும், எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் அவர்களில் உண்டு. வீண் நம்பிக்கைகளைத் தவிர வேதத்(தில் உள்ள)தை அவர்கள் அறியமாட்டார்கள். இன்னும் அவர்கள் (வீணாகச்) சந்தேகிக்கிறார்களே தவிர (உறுதியான கல்வியறிவு அவர்ளுக்கு) இல்லை.
Esegesi in lingua araba:
فَوَیْلٌ لِّلَّذِیْنَ یَكْتُبُوْنَ الْكِتٰبَ بِاَیْدِیْهِمْ ۗ— ثُمَّ یَقُوْلُوْنَ هٰذَا مِنْ عِنْدِ اللّٰهِ لِیَشْتَرُوْا بِهٖ ثَمَنًا قَلِیْلًا ؕ— فَوَیْلٌ لَّهُمْ مِّمَّا كَتَبَتْ اَیْدِیْهِمْ وَوَیْلٌ لَّهُمْ مِّمَّا یَكْسِبُوْنَ ۟
ஆகவே, தங்கள் கரங்களால் (கற்பனையாக) புத்தகத்தை எழுதி, பிறகு அதைக் கொண்டு சொற்பக் கிரயத்தை வாங்குவதற்காக, “இது அல்லாஹ்விடமிருந்து (வந்த வேதமாகும்)” என்று கூறுபவர்களுக்குக் கேடுதான்! ஆக, அவர்களின் கரங்கள் எதை எழுதியதோ அதனால் அவர்களுக்குக் கேடுதான்! இன்னும், அவர்கள் (இதன் மூலம்) எதை சம்பாதிக்கிறார்களோ அதனாலும் அவர்களுக்குக் கேடுதான்!
Esegesi in lingua araba:
وَقَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَیَّامًا مَّعْدُوْدَةً ؕ— قُلْ اَتَّخَذْتُمْ عِنْدَ اللّٰهِ عَهْدًا فَلَنْ یُّخْلِفَ اللّٰهُ عَهْدَهٗۤ اَمْ تَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “எண்ணப்பட்ட (சில) நாட்களைத் தவிர, நரக நெருப்பு எங்களை அறவே தீண்டாது.” (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்விடம் (அவ்வாறு ஏதேனும்) ஓர் உடன்படிக்கையை (நீங்கள்) ஏற்படுத்திக் கொண்டீர்களா? (அப்படியெனில்) அல்லாஹ் தன் உறுதிமொழியை அறவே மாற்ற மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுகிறீர்களா?
Esegesi in lingua araba:
بَلٰی مَنْ كَسَبَ سَیِّئَةً وَّاَحَاطَتْ بِهٖ خَطِیْٓـَٔتُهٗ فَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
அவ்வாறன்று! எவர்கள் தீமையைச் சம்பாதித்து, இன்னும் அவர்களுடைய பாவம் அவர்களைச் சூழ்ந்து கொண்டதோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Esegesi in lingua araba:
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠
இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்காரியங்களைச் செய்தார்களோ அவர்கள் சொர்க்கவாசிகள் ஆவார்கள்! அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Esegesi in lingua araba:
وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ ۫— وَبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَّذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ؕ— ثُمَّ تَوَلَّیْتُمْ اِلَّا قَلِیْلًا مِّنْكُمْ وَاَنْتُمْ مُّعْرِضُوْنَ ۟
இன்னும், (யூதர்களே!) “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வணங்காதீர்கள்; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை (-உதவி உபகாரம்) செய்யுங்கள்; மக்களிடம் அழகியதைக் கூறுங்கள்; தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஸகாத்தை கொடுங்கள்” என்று (உங்கள் மூதாதைகளாகிய) இஸ்ராயீலுடைய சந்ததிகளின் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, உங்களில் குறைவானவர்களைத் தவிர (மற்ற அனைவரும் இந்த ஒப்பந்தத்திலிருந்து) திரும்பிவிட்டீர்கள். இன்னும் நீங்கள் (எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைகளை) புறக்கணிப்பவர்கள் ஆவீர்கள்.
Esegesi in lingua araba:
وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَكُمْ لَا تَسْفِكُوْنَ دِمَآءَكُمْ وَلَا تُخْرِجُوْنَ اَنْفُسَكُمْ مِّنْ دِیَارِكُمْ ثُمَّ اَقْرَرْتُمْ وَاَنْتُمْ تَشْهَدُوْنَ ۟
இன்னும், நீங்கள் உங்கள் (மக்களுடைய) இரத்தங்களை ஓட்டாதீர்கள்; உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் மக்க)ளை வெளியேற்றாதீர்கள் என்று நாம் உங்களின் உறுதிமொழியை வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, நீங்களே சாட்சிகளாக இருக்கும் நிலையில் (அதை) ஒப்புக்கொண்டு உறுதிப்படுத்தினீர்கள்.
Esegesi in lingua araba:
ثُمَّ اَنْتُمْ هٰۤؤُلَآءِ تَقْتُلُوْنَ اَنْفُسَكُمْ وَتُخْرِجُوْنَ فَرِیْقًا مِّنْكُمْ مِّنْ دِیَارِهِمْ ؗ— تَظٰهَرُوْنَ عَلَیْهِمْ بِالْاِثْمِ وَالْعُدْوَانِ ؕ— وَاِنْ یَّاْتُوْكُمْ اُسٰرٰی تُفٰدُوْهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَیْكُمْ اِخْرَاجُهُمْ ؕ— اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍ ۚ— فَمَا جَزَآءُ مَنْ یَّفْعَلُ ذٰلِكَ مِنْكُمْ اِلَّا خِزْیٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۚ— وَیَوْمَ الْقِیٰمَةِ یُرَدُّوْنَ اِلٰۤی اَشَدِّ الْعَذَابِ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
(இவ்வாறு ஒப்பந்தத்தை நீங்கள் உறுதிப்படுத்திய) பிறகு, நீங்கள் உங்(கள் மக்)களைக் கொல்கிறீர்கள். இன்னும், உங்களில் ஒரு பிரிவினரை அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் உதவுகிறீர்கள். ஆனால், அவர்கள் கைதிகளாக உங்களிடம் வந்தால் மீட்புத் தொகை கொடுத்து அவர்களை மீட்கிறீர்கள். அவர்களை (அவர்களின் இல்லங்களிலிருந்து) வெளியேற்றுவதோ உங்கள் மீது தடுக்கப்பட்டதாகும். நீங்கள் வேதத்தில் சிலவற்றை நம்பிக்கை கொண்டு, சிலவற்றை நிராகரிக்கிறீர்களா? ஆக, உங்களில் அ(த்தகைய காரியத்)தைச் செய்பவர்களின் கூலி இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர (வேறு) இல்லை. மறுமை நாளிலோ, (அவர்கள்) மிகக் கடுமையான தண்டனையின் பக்கம் மீண்டும் கொண்டு வரப்படுவார்கள். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
Esegesi in lingua araba:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الْحَیٰوةَ الدُّنْیَا بِالْاٰخِرَةِ ؗ— فَلَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ یُنْصَرُوْنَ ۟۠
அவர்கள் எத்தகையோர் என்றால் மறுமைக்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கையை வாங்கினார்கள். எனவே, அவர்களை விட்டு (நரக) தண்டனை இலேசாக்கப்படாது. இன்னும், அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَقَفَّیْنَا مِنْ بَعْدِهٖ بِالرُّسُلِ ؗ— وَاٰتَیْنَا عِیْسَی ابْنَ مَرْیَمَ الْبَیِّنٰتِ وَاَیَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ ؕ— اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰۤی اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ ۚ— فَفَرِیْقًا كَذَّبْتُمْ ؗ— وَفَرِیْقًا تَقْتُلُوْنَ ۟
திட்டவட்டமாக நாம் மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். இன்னும், அவருக்குப் பின்னர் தொடர்ச்சியாக(ப் பல) தூதர்களை அனுப்பினோம். இன்னும், மர்யமுடைய மகன் ஈஸாவிற்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். இன்னும், அவரை (ஜிப்ரீல் எனும்) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு பலப்படுத்தினோம். ஆக, (நம்) தூதர் எவரும் உங்களிடம் உங்கள் மனங்கள் விரும்பாததை கொண்டு வந்தபோதெல்லாம் நீங்கள் பெருமையடித்(து மறுத்)தீர்களல்லவா? ஆக, (அத்தூதர்களில்) சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள். இன்னும், சிலரைக் கொலை செய்தீர்கள்.
Esegesi in lingua araba:
وَقَالُوْا قُلُوْبُنَا غُلْفٌ ؕ— بَلْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَقَلِیْلًا مَّا یُؤْمِنُوْنَ ۟
இன்னும், “எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று (பரிகாசமாக) அவர்கள் கூறினார்கள். மாறாக, அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்தான். ஆக, மிகக் குறைவாகவே அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்.
Esegesi in lingua araba:
وَلَمَّا جَآءَهُمْ كِتٰبٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ ۙ— وَكَانُوْا مِنْ قَبْلُ یَسْتَفْتِحُوْنَ عَلَی الَّذِیْنَ كَفَرُوْا ۚ— فَلَمَّا جَآءَهُمْ مَّا عَرَفُوْا كَفَرُوْا بِهٖ ؗ— فَلَعْنَةُ اللّٰهِ عَلَی الْكٰفِرِیْنَ ۟
இன்னும், அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தபோது, - அவர்களோ, நிராகரித்தவர்களுக்கு எதிராக (இந்த வேதத்தின் பொருட்டால் அல்லாஹ்விடம்) வெற்றியை தேடுபவர்களாக (இதற்கு) முன்னர் இருந்தார்கள். ஆக, அவர்கள் அறிந்திருந்த (இந்த வேதமான)து அவர்களிடம் (இப்போது) வந்தபோது அதை (அவர்கள்) நிராகரித்தார்கள். ஆக, நிராகரிப்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக!
Esegesi in lingua araba:
بِئْسَمَا اشْتَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ اَنْ یَّكْفُرُوْا بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ بَغْیًا اَنْ یُّنَزِّلَ اللّٰهُ مِنْ فَضْلِهٖ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ۚ— فَبَآءُوْ بِغَضَبٍ عَلٰی غَضَبٍ ؕ— وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ مُّهِیْنٌ ۟
அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியவர் மீது (வேதம் எனும்) தன் அருளை இறக்குவதைப் பற்றி பொறாமைப்பட்டு, அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை அவர்கள் நிராகரித்து, தங்களை எதற்குப் பகரமாக விற்றார்களோ அது (மிகக்) கெட்டதாக இருக்கிறது. (தவ்ராத்தை செயல்படுத்தாததால் அவர்கள் மீதிருந்த அல்லாஹ்வின்) கோபத்திற்கு மேல் (குர்ஆனையும் இந்த நபியையும் நிராகரித்து மேலும் அல்லாஹ்வின்) கோபத்திற்குரியவர்களாக அவர்கள் ஆகிவிட்டார்கள். இன்னும், (முஹம்மத் நபியை) நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரக்கூடிய தண்டனை உண்டு.
Esegesi in lingua araba:
وَاِذَا قِیْلَ لَهُمْ اٰمِنُوْا بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا نُؤْمِنُ بِمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَیَكْفُرُوْنَ بِمَا وَرَآءَهٗ ۗ— وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ ؕ— قُلْ فَلِمَ تَقْتُلُوْنَ اَنْۢبِیَآءَ اللّٰهِ مِنْ قَبْلُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
இன்னும், “அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டதை (மட்டுமே) நாங்கள் நம்பிக்கை கொள்வோம்” எனக் கூறுகிறார்கள். அதற்குப் பின்னால் இறக்கப்பட்ட (இந்த வேதத்)தை நிராகரிக்கிறார்கள். அதுவோ அவர்களிடமுள்ள (தவ்ராத்)தை உண்மைப்படுத்தக்கூடிய உண்மையா(ன வேதமா)கும். (நபியே!) கூறுவீராக: “(உங்கள் வேதத்தை உண்மையாகவே) நம்பிக்கை கொண்டவர்களாக நீங்கள் இருந்தால் (உங்களுக்கு அனுப்பப்பட்ட) அல்லாஹ்வுடைய தூதர்களை (இதற்கு) முன்னர் எதற்காகக் கொலை செய்தீர்கள்?”
Esegesi in lingua araba:
وَلَقَدْ جَآءَكُمْ مُّوْسٰی بِالْبَیِّنٰتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ ۟
இன்னும், திட்டவட்டமாக மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார். பிறகு, அவர் (தனது இறைவன் குறிப்பிட்ட நேரத்தில் அவனை சந்திக்க) சென்றதற்குப் பின்னர் - நீங்களோ அநியாயக்காரர்களாக இருந்த நிலையில் - ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள்.
Esegesi in lingua araba:
وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَ ؕ— خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاسْمَعُوْا ؕ— قَالُوْا سَمِعْنَا وَعَصَیْنَا ۗ— وَاُشْرِبُوْا فِیْ قُلُوْبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ ؕ— قُلْ بِئْسَمَا یَاْمُرُكُمْ بِهٖۤ اِیْمَانُكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
இன்னும், உங்களுக்கு மேல் மலையை நாம் உயர்த்தி, “உங்களுக்கு நாம் கொடுத்ததைப் பலமாகப் பிடியுங்கள் (பின்பற்றுங்கள்); செவிசாயுங்கள்” என உங்கள் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். செவியுற்றோம் (என்று நாவாலும்); மாறுசெய்தோம் என்று (உள்ளத்தாலும் அவர்கள்) கூறினார்கள். அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் காளைக் கன்றுடைய மோகம் (- அதை வணங்க வேண்டுமென்ற ஆசை) மிகைத்து விட்டது. “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எதை ஏவுகிறதோ அது மிகக் கெட்டது” என்று (நபியே!) கூறுவீராக!
Esegesi in lingua araba:
قُلْ اِنْ كَانَتْ لَكُمُ الدَّارُ الْاٰخِرَةُ عِنْدَ اللّٰهِ خَالِصَةً مِّنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
(நபியே!) கூறுவீராக: “(யூதர்களே!) அல்லாஹ்விடம் (சொர்க்கம் என்ற) மறுமை வீடு (மற்ற) மக்களுக்கு அன்றி (விசேஷமாக) உங்களுக்கு மட்டும் என்று இருந்தால், நீங்கள் (உங்கள் கொள்கையில்) உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை விரும்புங்கள்.”
Esegesi in lingua araba:
وَلَنْ یَّتَمَنَّوْهُ اَبَدًا بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟
ஆனால், அவர்களது கரங்கள் முற்படுத்தியவற்றின் காரணத்தால் அதை அவர்கள் ஒருபோதும் அறவே விரும்பவே மாட்டார்கள். இன்னும் அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன் ஆவான்.
Esegesi in lingua araba:
وَلَتَجِدَنَّهُمْ اَحْرَصَ النَّاسِ عَلٰی حَیٰوةٍ ۛۚ— وَمِنَ الَّذِیْنَ اَشْرَكُوْا ۛۚ— یَوَدُّ اَحَدُهُمْ لَوْ یُعَمَّرُ اَلْفَ سَنَةٍ ۚ— وَمَا هُوَ بِمُزَحْزِحِهٖ مِنَ الْعَذَابِ اَنْ یُّعَمَّرَ ؕ— وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا یَعْمَلُوْنَ ۟۠
இன்னும் (நபியே! பொதுவாக எல்லா) மக்களை விடவும் (குறிப்பாக) இணைவைப்பவர்களை விடவும் (உலக) வாழ்க்கையின் மீது பேராசைக்காரர்களாக அவர்களை (-யூதர்களை) நிச்சயமாக நீர் காண்பீர்! அவர்களில் ஒருவர், “அவர் ஆயிரம் ஆண்டு(கள்) உயிரோடு இருக்க வேண்டுமே?” என்று விரும்புவார். அவர் (நீண்ட காலம்) வயது நீட்டிக்கப்படுவது (அல்லாஹ்வின்) தண்டனையிலிருந்து அவரைத் தப்ப வைக்கக்கூடியதில்லை. அல்லாஹ், அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.
Esegesi in lingua araba:
قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِّجِبْرِیْلَ فَاِنَّهٗ نَزَّلَهٗ عَلٰی قَلْبِكَ بِاِذْنِ اللّٰهِ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ وَهُدًی وَّبُشْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟
(நபியே!) கூறுவீராக: “(உங்களில்) யார் ஜிப்ரீலுக்கு எதிரியாக ஆகிவிட்டார்? ஆக, நிச்சயமாக (ஜிப்ரீலாகிய) அவர் அல்லாஹ்வின் அனுமதியுடன் அதை - அதற்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாகவும், நேர்வழியாகவும், நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தியாகவும் - உமது உள்ளத்தின் மீது இறக்கினார்.”
Esegesi in lingua araba:
مَنْ كَانَ عَدُوًّا لِّلّٰهِ وَمَلٰٓىِٕكَتِهٖ وَرُسُلِهٖ وَجِبْرِیْلَ وَمِیْكٰىلَ فَاِنَّ اللّٰهَ عَدُوٌّ لِّلْكٰفِرِیْنَ ۟
எவர்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய வானவர்களுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகா(யீ)லுக்கும் எதிரிகளாக ஆகிவிட்டார்களோ (அவர்கள் நிராகரிப்பாளர்களாக ஆகிவிட்டார்கள்.) ஆக, நிராகரிப்பாளர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் எதிரி ஆவான்.
Esegesi in lingua araba:
وَلَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكَ اٰیٰتٍۢ بَیِّنٰتٍ ۚ— وَمَا یَكْفُرُ بِهَاۤ اِلَّا الْفٰسِقُوْنَ ۟
இன்னும், (நபியே!) திட்டவட்டமாக தெளிவான வசனங்களை நாம் உமக்கு இறக்கினோம். ஆனால், அவற்றை நிராகரிக்க மாட்டார்கள், பாவிகளைத் தவிர.
Esegesi in lingua araba:
اَوَكُلَّمَا عٰهَدُوْا عَهْدًا نَّبَذَهٗ فَرِیْقٌ مِّنْهُمْ ؕ— بَلْ اَكْثَرُهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
இன்னும், அவர்கள் (தங்கள் நபியிடம்) ஓர் உடன்படிக்கை செய்த போதெல்லாம் அவர்களில் ஒரு கூட்டம் அதை (நிறைவேற்றாது) தூக்கி எறியவில்லையா? மாறாக, அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
وَلَمَّا جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِیْقٌ مِّنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ ۙۗ— كِتٰبَ اللّٰهِ وَرَآءَ ظُهُوْرِهِمْ كَاَنَّهُمْ لَا یَعْلَمُوْنَ ۟ؗ
இன்னும், அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் கொடுக்கப்பட்டவர்களில் ஒரு கூட்டம் அல்லாஹ்வுடைய (இந்த) வேதத்தை (நம்பிக்கை கொள்ளாமல் அதை) - அவர்கள் அறியாதது போல் - தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தார்கள்.
Esegesi in lingua araba:
وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّیٰطِیْنُ عَلٰی مُلْكِ سُلَیْمٰنَ ۚ— وَمَا كَفَرَ سُلَیْمٰنُ وَلٰكِنَّ الشَّیٰطِیْنَ كَفَرُوْا یُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ ۗ— وَمَاۤ اُنْزِلَ عَلَی الْمَلَكَیْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ ؕ— وَمَا یُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰی یَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ؕ— فَیَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا یُفَرِّقُوْنَ بِهٖ بَیْنَ الْمَرْءِ وَزَوْجِهٖ ؕ— وَمَا هُمْ بِضَآرِّیْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ— وَیَتَعَلَّمُوْنَ مَا یَضُرُّهُمْ وَلَا یَنْفَعُهُمْ ؕ— وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰىهُ مَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ۫ؕ— وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ ؕ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟
இன்னும், (யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியில் ஷைத்தான்கள் ஓதியவற்றைப் பின்பற்றினார்கள். ஸுலைமான் நிராகரிக்கவில்லை. எனினும் ஷைத்தான்கள்தான் நிராகரித்தார்கள். (அவர்கள்) மனிதர்களுக்கு சூனியத்தையும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் (என்ற இரு) வானவர்களுக்கு இறக்கப்பட்ட (மந்திரத்)தையும் கற்றுக்கொடுத்தார்கள். அவ்விருவானவர்களோ, “நாங்களெல்லாம் ஒரு சோதனையாவோம். ஆகவே. (இதைக் கற்று) நீ நிராகரிக்காதே!” என்று கூறும் வரை (அதை) (யார்) ஒருவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. ஆக, அவர்கள் ஆணுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் எதன் மூலம் பிரிவினை உண்டாக்குவார்களோ அதை அவ்விரு(வான)வரிடமிருந்து கற்றார்கள். ஆனால், அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர அதன் மூலம் அவர்கள் (யார்) ஒருவருக்கும் தீங்கிழைப்பவர்களாக இல்லை. இன்னும், அவர்களுக்குப் பலனளிக்காததை, அவர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடிய (மந்திரத்)தை அவர்கள் கற்கிறார்கள். இன்னும், அதை எவர் விலைக்கு வாங்கினாரோ அவருக்கு மறுமையில் எந்த பாக்கியமும் இல்லை என்பதை திட்டவட்டமாக (அவர்கள்) அறிந்திருந்தார்கள். அவர்கள் தங்களை எதற்கு பகரமாக விற்றார்களோ அது திட்டமாக கெட்டதாகும். (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
Esegesi in lingua araba:
وَلَوْ اَنَّهُمْ اٰمَنُوْا وَاتَّقَوْا لَمَثُوْبَةٌ مِّنْ عِنْدِ اللّٰهِ خَیْرٌ ؕ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟۠
இன்னும், நிச்சயமாக அவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை அஞ்சி (சூனியத்தை விட்டு விலகி) இருந்தால் அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்கு) கிடைக்கும் சன்மானம் திட்டமாக மிகச் சிறந்ததாகும். (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
Esegesi in lingua araba:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَقُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا ؕ— وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ اَلِیْمٌ ۟
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) “ராஇனா” என்று கூறாதீர்கள். மாறாக, “உன்ளுர்னா” என்று கூறுங்கள். (நபியின் கூற்றை கவனமாக) செவியுறுங்கள். நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய தண்டனை உண்டு.
Esegesi in lingua araba:
مَا یَوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَلَا الْمُشْرِكِیْنَ اَنْ یُّنَزَّلَ عَلَیْكُمْ مِّنْ خَیْرٍ مِّنْ رَّبِّكُمْ ؕ— وَاللّٰهُ یَخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
(நம்பிக்கையாளர்களே!) வேதக்காரர்கள் இன்னும் இணைவைப்பவர்கள் ஆகிய நிராகரிப்பாளர்கள் (தங்களிடம் உள்ளதை விட) சிறந்தது எதுவும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள். என்றாலும், அல்லாஹ் - தான் நாடுகிறவர்களுக்குத் தனது கருணையை - விசேஷமாக வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்.
Esegesi in lingua araba:
مَا نَنْسَخْ مِنْ اٰیَةٍ اَوْ نُنْسِهَا نَاْتِ بِخَیْرٍ مِّنْهَاۤ اَوْ مِثْلِهَا ؕ— اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
(நபியே!) நாம் ஒரு வசனத்தை மாற்றினாலும் அல்லது அதை நாம் மறக்கடித்தாலும் அதைவிடச் சிறந்ததை அல்லது அது போன்றதைக் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நீர் அறியவில்லையா?
Esegesi in lingua araba:
اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ், அவனுக்கே வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி உரியது என்பதை நீர் அறியவில்லையா? இன்னும், அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு பொறுப்பாளருமில்லை; உதவியாளருமில்லை.
Esegesi in lingua araba:
اَمْ تُرِیْدُوْنَ اَنْ تَسْـَٔلُوْا رَسُوْلَكُمْ كَمَا سُىِٕلَ مُوْسٰی مِنْ قَبْلُ ؕ— وَمَنْ یَّتَبَدَّلِ الْكُفْرَ بِالْاِیْمَانِ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟
(இதற்கு) முன்னர் மூஸாவிடம் கேள்வி கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் நீங்கள் கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? எவர் (இந்த தூதரையும் அவர் கூறுவதையும்) நம்பிக்கை கொள்வதற்கு பதிலாக (அதை) நிராகரிப்பதை எடுத்துக் கொள்வாரோ அவர் திட்டமாக நேர்வழியிலிருந்து வழிதவறிவிட்டார்.
Esegesi in lingua araba:
وَدَّ كَثِیْرٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ یَرُدُّوْنَكُمْ مِّنْ بَعْدِ اِیْمَانِكُمْ كُفَّارًا ۖۚ— حَسَدًا مِّنْ عِنْدِ اَنْفُسِهِمْ مِّنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمُ الْحَقُّ ۚ— فَاعْفُوْا وَاصْفَحُوْا حَتّٰی یَاْتِیَ اللّٰهُ بِاَمْرِهٖ ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
வேதக்காரர்களில் அதிகமானவர்கள் - அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவானதற்கு பின்னர், அவர்களுடைய உள்ளங்களில் (உங்கள் மீது) உள்ள பொறாமையினால், - “நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு பின்னர் உங்களை நிராகரிப்பாளர்களாக மாற்ற வேண்டுமே” என்று விரும்புகிறார்கள். ஆக, அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டுவருகின்ற வரை (அவர்களை) மன்னித்து விடுங்கள்! இன்னும், புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Esegesi in lingua araba:
وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ؕ— وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَیْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
இன்னும், நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தை கொடுங்கள். இன்னும், நீங்கள் நன்மையில் எதை உங்களுக்காக முற்படுத்துவீர்களோ அல்லாஹ்விடம் (மறுமையில்) அதைப் பெறுவீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
Esegesi in lingua araba:
وَقَالُوْا لَنْ یَّدْخُلَ الْجَنَّةَ اِلَّا مَنْ كَانَ هُوْدًا اَوْ نَصٰرٰی ؕ— تِلْكَ اَمَانِیُّهُمْ ؕ— قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
இன்னும், “யார் யூதர்களாக, அல்லது கிறித்தவர்களாக இருக்கிறார்களோ அவர்களைத் தவிர (எவரும்) சொர்க்கத்தில் நுழையவே மாட்டார்” என (அவர்கள்) கூறினார்கள். அவை அவர்களுடைய வீண் நம்பிக்கைகளாகும்! (நபியே!) கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.”
Esegesi in lingua araba:
بَلٰی ۗ— مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗۤ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖ ۪— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟۠
அவ்வாறன்று! எவர், தான் நன்மை செய்பவராக இருந்த நிலையில் தனது முகத்தை (முற்றிலும்) அல்லாஹ்விற்குப் பணியவைப்பாரோ, அவருக்கு அவருடைய கூலி அவருடைய இறைவனிடம் (நிறைவாக) உண்டு. இன்னும், அவர்கள் மீது பயமுமில்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
وَقَالَتِ الْیَهُوْدُ لَیْسَتِ النَّصٰرٰی عَلٰی شَیْءٍ ۪— وَّقَالَتِ النَّصٰرٰی لَیْسَتِ الْیَهُوْدُ عَلٰی شَیْءٍ ۙ— وَّهُمْ یَتْلُوْنَ الْكِتٰبَ ؕ— كَذٰلِكَ قَالَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ مِثْلَ قَوْلِهِمْ ۚ— فَاللّٰهُ یَحْكُمُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
இன்னும், கிறித்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை என யூதர்கள் கூறினார்கள். இன்னும் யூதர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை எனக் கிறித்தவர்கள் கூறினார்கள். அவர்களோ (ஒரே) வேதத்தையே ஓதுகிறார்கள். இவ்வாறே இவர்களுடைய கூற்றைப் போன்று (வேதத்தை) அறியாதவர்கள் (யூதர்களும் கிறித்தவர்களும் பின்பற்றுவது மார்க்கமே இல்லை எனக்) கூறினார்கள். ஆக, இவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ அதில் மறுமை நாளன்று அல்லாஹ் இவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான்.
Esegesi in lingua araba:
وَمَنْ اَظْلَمُ مِمَّنْ مَّنَعَ مَسٰجِدَ اللّٰهِ اَنْ یُّذْكَرَ فِیْهَا اسْمُهٗ وَسَعٰی فِیْ خَرَابِهَا ؕ— اُولٰٓىِٕكَ مَا كَانَ لَهُمْ اَنْ یَّدْخُلُوْهَاۤ اِلَّا خَآىِٕفِیْنَ ؕ۬— لَهُمْ فِی الدُّنْیَا خِزْیٌ وَّلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ ۟
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவை பாழாகுவதில் முயற்சி செய்பவனை விட மகா அநியாயக்காரன் யார்? அவர்களோ பயந்தவர்களாகவே தவிர அவற்றில் நுழைய அவர்களுக்கு அனுமதி இருக்கவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு உண்டு. இன்னும் அவர்களுக்கு மறுமையில் பெரிய தண்டனை உண்டு.
Esegesi in lingua araba:
وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ۗ— فَاَیْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِیْمٌ ۟
இன்னும், கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. ஆக, நீங்கள் எங்கெல்லாம் (முகத்தைத்) திருப்பினாலும் அங்கு அல்லாஹ்வுடைய முகம் இருக்கிறது! நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன் நன்கறிந்தவன் ஆவான்.
Esegesi in lingua araba:
وَقَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۙ— سُبْحٰنَهٗ ؕ— بَلْ لَّهٗ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— كُلٌّ لَّهٗ قٰنِتُوْنَ ۟
அல்லாஹ் “சந்ததியை எடுத்துக் கொண்டான்” என்று கூறுகிறார்கள். - அவனோ மிகப் பரிசுத்தமானவன். - மாறாக, வானங்களிலும் பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனுக்குரியனவே! எல்லோரும் அவனுக்கு பணிந்தவர்களே.
Esegesi in lingua araba:
بَدِیْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَاِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
(அவன்) வானங்கள் இன்னும் பூமியை புதுமையாக படைத்தவன். அவன் ஒரு காரியத்தை (செய்வதற்கு) முடிவு செய்தால், அதற்கு அவன் கூறுவதெல்லாம் “ஆகு!” என்றுதான். உடனே, அது ஆகிவிடும்.
Esegesi in lingua araba:
وَقَالَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ لَوْلَا یُكَلِّمُنَا اللّٰهُ اَوْ تَاْتِیْنَاۤ اٰیَةٌ ؕ— كَذٰلِكَ قَالَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ مِّثْلَ قَوْلِهِمْ ؕ— تَشَابَهَتْ قُلُوْبُهُمْ ؕ— قَدْ بَیَّنَّا الْاٰیٰتِ لِقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟
இன்னும், (வேதத்தை) அறியாதவர்கள், “அல்லாஹ் எங்களுடன் பேச வேண்டாமா? அல்லது, ஒரு வசனம் எங்களுக்கு வரவேண்டாமா?” என்று கூறினார்கள். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இவர்களின் கூற்றைப் போன்றே கூறினார்கள். இவர்களுடைய உள்ளங்கள் (அனைத்தும்) ஒன்றுக்கொன்று ஒப்பாகி (ஒரே மாதிரி) இருக்கின்றன. (உண்மையை) உறுதியாக நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு வசனங்களை திட்டமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம்.
Esegesi in lingua araba:
اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَقِّ بَشِیْرًا وَّنَذِیْرًا ۙ— وَّلَا تُسْـَٔلُ عَنْ اَصْحٰبِ الْجَحِیْمِ ۟
(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை உண்மையான மார்க்கத்துடன் (அதை ஏற்பவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும், (அதை நிராகரிப்பவர்களை) எச்சரிப்பவராகவும் அனுப்பினோம். இன்னும் நரகவாசிகளைப் பற்றி (நீர்) விசாரிக்கப்படமாட்டீர்.
Esegesi in lingua araba:
وَلَنْ تَرْضٰی عَنْكَ الْیَهُوْدُ وَلَا النَّصٰرٰی حَتّٰی تَتَّبِعَ مِلَّتَهُمْ ؕ— قُلْ اِنَّ هُدَی اللّٰهِ هُوَ الْهُدٰی ؕ— وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِیْ جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ— مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟ؔ
(நபியே!) யூதர்களும் கிறித்தவர்களும் அவர்களுடைய மார்க்கத்தை நீர் பின்பற்(றி அவர்களைப் போன்று நீர் மா)றும் வரை உம்மைப் பற்றி அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். “அல்லாஹ் உடைய நேர்வழி(யாகிய இஸ்லாம்)தான் நேர்வழியாகும். (ஆகவே, அதையே நான் பின்பற்றுவேன்)” எனக் கூறுவீராக. கல்வி ஞானம் உமக்கு வந்த பின்னர் அவர்களுடைய மன விருப்பங்களை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடம் உமக்கு பொறுப்பாளருமில்லை, உதவியாளருமில்லை.
Esegesi in lingua araba:
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَتْلُوْنَهٗ حَقَّ تِلَاوَتِهٖ ؕ— اُولٰٓىِٕكَ یُؤْمِنُوْنَ بِهٖ ؕ— وَمَنْ یَّكْفُرْ بِهٖ فَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟۠
(நபியே!) எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை, ஓதுவதின் முறைப்படி (அறிந்து) அதை ஓது(வதுடன் அதன் பிரகாரம் அவர்கள் செயல்படவும் செய்)கிறார்கள். அவர்கள்தான் அதை (உண்மையாக) நம்பிக்கை கொள்கிறார்கள். எவர்கள் அதை நிராகரிப்பார்களோ அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
Esegesi in lingua araba:
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَنِّیْ فَضَّلْتُكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟
இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அருள்புரிந்த என் அருளையும், நிச்சயமாக (அக்கால) உலக மக்களைவிட நான் உங்களை மேன்மையாக்கியதையும் நீங்கள் நினைவு கூருங்கள்.
Esegesi in lingua araba:
وَاتَّقُوْا یَوْمًا لَّا تَجْزِیْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَیْـًٔا وَّلَا یُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَّلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟
இன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள்; (அந்நாளில்) ஓர் ஆன்மா மற்றோர் ஆன்மாவிற்கு எதையும் பலனளிக்காது. இன்னும், அதனிடமிருந்து மீட்புத் தொகை (நஷ்ட ஈடு) ஏதும் ஏற்கப்படாது. இன்னும், பரிந்துரை அதற்குப் பலனளிக்காது. இன்னும், அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
وَاِذِ ابْتَلٰۤی اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ؕ— قَالَ اِنِّیْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ؕ— قَالَ وَمِنْ ذُرِّیَّتِیْ ؕ— قَالَ لَا یَنَالُ عَهْدِی الظّٰلِمِیْنَ ۟
இன்னும், இப்ராஹீமை அவருடைய இறைவன் (பல) கட்டளைகளைக் கொண்டு சோதித்ததை நினைவு கூர்வாயாக. ஆக, அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். (அதற்கு அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நான் உம்மை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டுகிற) தலைவராக ஆக்குகிறேன்.” அவர் கூறினார்: “என் சந்ததிகளிலிருந்தும் (ஆக்கு).” (அதற்கு) அல்லாஹ் கூறினான்: “அநியாயக்காரர்களுக்கு எனது (இந்த) உடன்படிக்கை நிறைவேறாது.”
Esegesi in lingua araba:
وَاِذْ جَعَلْنَا الْبَیْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ— وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّی ؕ— وَعَهِدْنَاۤ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ اَنْ طَهِّرَا بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْعٰكِفِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟
இன்னும், திரும்பத் திரும்ப வர விரும்பும் இடமாகவும், பாதுகாப்பா(ன இடமா)கவும் கஅபாவை மனிதர்களுக்காக நாம் ஆக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதில்) இப்ராஹீம் நின்ற இடத்தில் தொழுமிடத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்னும், “(அதை) தவாஃப் சுற்றுபவர்களுக்கும், (அல்லாஹ்வை வணங்க அதில்) தங்கி இருப்பவர்களுக்கும், (தொழுகையில்) குனிபவர்களுக்கும், சிரம் பணிபவர்களுக்கும் என் வீட்டைச் சுத்தமாக வைத்திருங்கள்” என்று இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் நாம் கட்டளையிட்டோம்.
Esegesi in lingua araba:
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاَخِرِ ؕ— قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِیْلًا ثُمَّ اَضْطَرُّهٗۤ اِلٰی عَذَابِ النَّارِ ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟
இன்னும், இப்ராஹீம் கூறிய சமயத்தை நினைவு கூர்வாயாக: “என் இறைவா! (மக்காவாகிய) இதைப் பாதுகாப்பளிக்கக்கூடிய ஒரு நகரமாக ஆக்கு! இன்னும் அங்கு வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவருக்குக் கனி(வகை)களிலிருந்து உணவளி!” (அதற்கு அல்லாஹ்) கூறினான்: “எவர் நிராகரிப்பாரோ அவரை சிறிது (காலம்) சுகமனுபவிக்க வைப்பேன். பிறகு, நரக தண்டனையின் பக்கம் (செல்லும்படி) அவரை நிர்ப்பந்திப்பேன். இன்னும் அது மிகக் கெட்ட மீளுமிடமாகும்.”
Esegesi in lingua araba:
وَاِذْ یَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَیْتِ وَاِسْمٰعِیْلُ ؕ— رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ؕ— اِنَّكَ اَنْتَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
இன்னும், இப்ராஹீமும் இஸ்மாயீலும் இறை இல்லத்தின் அஸ்திவாரங்களை உயர்த்திய சமயத்தை நினைவு கூர்வாயாக! (அவ்விருவரும் பிரார்த்தனை செய்தார்கள்:) “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து ஏற்றுக்கொள். நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன்; மிக அறிந்தவன்.”
Esegesi in lingua araba:
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَیْنِ لَكَ وَمِنْ ذُرِّیَّتِنَاۤ اُمَّةً مُّسْلِمَةً لَّكَ ۪— وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَیْنَا ۚ— اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
“எங்கள் இறைவா! எங்களிருவரையும் உனக்கு முழுமையாக பணிந்தவர்களாகவும் எங்கள் சந்ததியிலிருந்தும் உனக்கு முழுமையாக பணிந்து நடக்கின்ற சமுதாயத்தை ஆக்கு! இன்னும், எங்கள் ஹஜ் கிரியைகளின் இடங்களை(யும் அங்கு நாங்கள் செய்ய வேண்டிய அமல்களையும்) எங்களுக்குக் காண்பித்துக் கொடு! இன்னும், எங்களை மன்னித்துவிடு! நிச்சயமாக நீதான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன்.”
Esegesi in lingua araba:
رَبَّنَا وَابْعَثْ فِیْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِكَ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَیُزَكِّیْهِمْ ؕ— اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
இன்னும், “எங்கள் இறைவா! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்பு! அவர் உனது வேத வசனங்களை அவர்களுக்கு ஓதி காண்பிப்பார். இன்னும், வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்பித்து கொடுப்பார். இன்னும், (தீய குணங்களில் இருந்து) அவர்களைப் பரிசுத்தப்படுத்துவார். நிச்சயமாக நீதான் மிகைத்தவன்; மகா ஞானவான்.”
Esegesi in lingua araba:
وَمَنْ یَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ؕ— وَلَقَدِ اصْطَفَیْنٰهُ فِی الدُّنْیَا ۚ— وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟
பெரிய மடையனாக இருப்பவனைத் தவிர இப்ராஹீமுடைய (இஸ்லாம்) மார்க்கத்தை (வேறு) யார் வெறுப்பார்? திட்டவட்டமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். இன்னும், மறுமையில் நிச்சயமாக அவர் நல்லோரில் இருப்பார்.
Esegesi in lingua araba:
اِذْ قَالَ لَهٗ رَبُّهٗۤ اَسْلِمْ ۙ— قَالَ اَسْلَمْتُ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
(இப்ராஹீமை நோக்கி) அவருடைய இறைவன், “நீ எனக்குப் பணிந்து (முஸ்லிமாகி)விடு!” என்று அவருக்குக் கூறியபோது, அவர் கூறினார்: “அகிலத்தார்களின் இறைவனுக்கு நான் பணிந்து (முஸ்லிமாகி) விட்டேன்.”
Esegesi in lingua araba:
وَوَصّٰی بِهَاۤ اِبْرٰهٖمُ بَنِیْهِ وَیَعْقُوْبُ ؕ— یٰبَنِیَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰی لَكُمُ الدِّیْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟ؕ
இன்னும், இப்ராஹீமும், யஅகூபும் (அகிலங்களின் இறைவனுக்கு பணிந்து முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற) அ(ந்த உபதேசத்)தையே தமது பிள்ளைகளுக்கு உபதேசித்தார்கள். “என் பிள்ளைகளே! நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்காக (இஸ்லாமிய) மார்க்கத்தை தேர்ந்தெடுத்தான். ஆகவே, ஒருபோதும் நீங்கள் மரணித்து விடாதீர்கள், நீங்கள் முஸ்லிம்களாக இருக்கும் நிலையில் தவிர.”
Esegesi in lingua araba:
اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ یَعْقُوْبَ الْمَوْتُ ۙ— اِذْ قَالَ لِبَنِیْهِ مَا تَعْبُدُوْنَ مِنْ بَعْدِیْ ؕ— قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآىِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ— وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
(யூதர்களே!) யஅகூபுக்கு மரணம் வந்தபோது (நீங்கள் அங்கு) சாட்சிகளாக இருந்தீர்களா? அவர் தமது பிள்ளைகளை நோக்கி, “எனக்குப் பின்னர் யாரை வணங்குவீர்கள்?” எனக் கூறியபோது (அவர்கள்) கூறினார்கள்: “நாம் உமது கடவுளை, இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய உமது மூதாதைகளின் கடவுளை - ஒரே ஒரு கடவுளை - வணங்குவோம். நாங்கள் அவனுக்கு - முற்றிலும் பணிந்த முஸ்லிம்களாக இருப்போம்.”
Esegesi in lingua araba:
تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ ۚ— لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَّا كَسَبْتُمْ ۚ— وَلَا تُسْـَٔلُوْنَ عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
அவர்கள் சென்றுவிட்ட சமுதாயம் ஆவார்கள். அவர்கள் செய்த (செயல்களின் கூலியான)து அவர்களுக்கு கிடைக்கும். நீங்கள் செய்த (செயல்களின் கூலியான)து உங்களுக்கு கிடைக்கும். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்
Esegesi in lingua araba:
وَقَالُوْا كُوْنُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی تَهْتَدُوْا ؕ— قُلْ بَلْ مِلَّةَ اِبْرٰهٖمَ حَنِیْفًا ؕ— وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
(முஸ்லிம்களை நோக்கி), “நீங்கள் யூதர்களாக அல்லது கிறித்தவர்களாக ஆகிவிடுங்கள், நேர்வழி பெறுவீர்கள்” என அவர்கள் கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக: “மாறாக, இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவரான இப்ராஹீமின் மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை.”
Esegesi in lingua araba:
قُوْلُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَمَاۤ اُوْتِیَ النَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۚ— لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ— وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
(நம்பிக்கையாளர்களே!) கூறுங்கள்: “அல்லாஹ்வையும் எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இன்னும் (இவர்களுடைய) சந்ததிகளுக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவு(க்கு)ம், ஈஸாவு(க்கு)ம் கொடுக்கப்பட்டதையும், (மற்ற) நபிமார்களுக்கு அவர்களது இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். அவர்களில் ஒருவருக்கு மத்தியிலும் (அவர் நபியல்ல என்று) பிரி(த்துக் கூறி அவரை நிராகரி)க்க மாட்டோம். நாங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்த முஸ்லிம்களாக இருப்போம்.”
Esegesi in lingua araba:
فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَاۤ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ۚ— وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِیْ شِقَاقٍ ۚ— فَسَیَكْفِیْكَهُمُ اللّٰهُ ۚ— وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟ؕ
ஆக, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் எப்படி நம்பிக்கை கொண்டீர்களோ அது போன்றே அவர்கள் நம்பிக்கை கொண்டால் திட்டமாக அவர்கள் நேர்வழி பெறுவார்கள். அவர்கள் புறக்கணித்தால் அவர்களெல்லாம் வீண் முரண்பாட்டில்தான் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களிடமிருந்து அல்லாஹ் உம்மை பாதுகாப்பான். அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
Esegesi in lingua araba:
صِبْغَةَ اللّٰهِ ۚ— وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ صِبْغَةً ؗ— وَّنَحْنُ لَهٗ عٰبِدُوْنَ ۟
(நீங்கள் கூறுவீராக:) “அல்லாஹ்வுடைய மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வை விட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? நாங்கள் அவனையே வணங்கக் கூடியவர்கள் ஆவோம்.”
Esegesi in lingua araba:
قُلْ اَتُحَآجُّوْنَنَا فِی اللّٰهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ ۚ— وَلَنَاۤ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ۚ— وَنَحْنُ لَهٗ مُخْلِصُوْنَ ۟ۙ
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனோ எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான்! எங்கள் செயல்கள் (உடைய பலன்) எங்களுக்கு கிடைக்கும். இன்னும் உங்கள் செயல்கள் (உடைய பலன்) உங்களுக்கு கிடைக்கும். நாங்கள் வணக்க வழிபாடுகளை (கலப்பின்றி) அவனுக்கு மட்டும் தூய்மையாக செய்வோம்.”
Esegesi in lingua araba:
اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی ؕ— قُلْ ءَاَنْتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ ؕ— وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
“நிச்சயமாக இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் (ஆகிய இவர்கள்) இன்னும் (இவர்களுடைய) சந்ததிகள் யூதர்களாக அல்லது கிறித்தவர்களாக இருந்தார்கள்” என நீங்கள் கூறுகிறீர்களா? (நபியே!) நீர் கூறுவீராக: “(இதை) நீங்கள் மிக அறிந்தவர்களா? அல்லது அல்லாஹ்வா? (இதைப் பற்றி) தன்னிடத்திலிருக்கும் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைத்தவரை விட மகா அநியாயக்காரர் யார்? நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.”
Esegesi in lingua araba:
تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ ۚ— لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَّا كَسَبْتُمْ ۚ— وَلَا تُسْـَٔلُوْنَ عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟۠
அவர்கள் சென்றுவிட்ட சமுதாயம் ஆவார்கள். இன்னும், அவர்கள் செய்த (செயல்களின் கூலியான)து அவர்களுக்கு கிடைக்கும். இன்னும், நீங்கள் செய்த (செயல்களின் கூலியான)து உங்களுக்கு கிடைக்கும். இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் விசாரிக்கப்படமாட்டீர்கள்.
Esegesi in lingua araba:
سَیَقُوْلُ السُّفَهَآءُ مِنَ النَّاسِ مَا وَلّٰىهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِیْ كَانُوْا عَلَیْهَا ؕ— قُلْ لِّلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ؕ— یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
“அவர்கள் எந்த கிப்லாவை நோக்கி (தொழுபவர்களாக) இருந்தார்களோ அவர்களின் அந்த கிப்லாவை விட்டு அவர்களைத் திருப்பியது எது?’’ என (முஸ்லிம்களைப் பற்றி) மக்களில் உள்ள அறிவீனர்கள் கூறுவார்கள். (அதற்கு நபியே! நீர்) கூறுவீராக: “கிழக்கும் மேற்கும் அல்லாஹ்விற்குரியனவே! அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு நேர்வழி காட்டுகிறான்.’’
Esegesi in lingua araba:
وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَی النَّاسِ وَیَكُوْنَ الرَّسُوْلُ عَلَیْكُمْ شَهِیْدًا ؕ— وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِیْ كُنْتَ عَلَیْهَاۤ اِلَّا لِنَعْلَمَ مَنْ یَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ یَّنْقَلِبُ عَلٰی عَقِبَیْهِ ؕ— وَاِنْ كَانَتْ لَكَبِیْرَةً اِلَّا عَلَی الَّذِیْنَ هَدَی اللّٰهُ ؕ— وَمَا كَانَ اللّٰهُ لِیُضِیْعَ اِیْمَانَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟
இன்னும், (நம்பிக்கையாளர்களே!) அவ்வாறுதான், நீங்கள் மக்களுக்கு சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், உங்களுக்கு தூதர் சாட்சியாளராக இருப்பதற்காகவும் (சிறந்த, நீதமான) நடுநிலைச் சமுதாயமாக உங்களை ஆக்கினோம். தமது குதிங்கால்கள் மீது திரும்பிவிடுவோரிலிருந்து தூதரைப் பின்பற்றுபவர் யார் என்பதை நாம் அறிவதற்காகவே தவிர நீர் (தொழுகையில் முன்னோக்குபவராக) இருந்த (பைத்துல் முகத்தஸ் ஆகிய முதல்) கிப்லாவை (விட்டு உம்மை திருப்பியதை) நாம் ஆக்கவில்லை. அல்லாஹ் எவர்களை நேர்வழி நடத்தினானோ அவர்கள் மீதே தவிர (மற்றவர்களுக்கு) நிச்சயமாக அது பெரிதாகவே (-பாரமாகவே) இருந்தது. உங்கள் நம்பிக்கையை (-முன்னர் நீங்கள் தொழுத தொழுகைகளை) அல்லாஹ் வீணாக்குபவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது மிக இரக்கமுடையவன், மகா கருணையாளன்.
Esegesi in lingua araba:
قَدْ نَرٰی تَقَلُّبَ وَجْهِكَ فِی السَّمَآءِ ۚ— فَلَنُوَلِّیَنَّكَ قِبْلَةً تَرْضٰىهَا ۪— فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ؕ— وَحَیْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ؕ— وَاِنَّ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ لَیَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا یَعْمَلُوْنَ ۟
(நபியே!) உம் முகம் வானத்தின் பக்கம் பல முறை திரும்புவதை திட்டமாக நாம் காண்கிறோம். ஆகவே, நீர் பிரியப்படுகின்ற ஒரு கிப்லாவிற்கு உம்மை நிச்சயமாக நாம் திருப்புவோம். எனவே, நீர் (தொழுகைக்கு நின்றால்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக. இன்னும் (முஸ்லிம்களே!) நீங்கள் எங்கிருந்தாலும் (தொழும்போது) அதன் பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். நிச்சயமாக வேதம் கொடுக்கப்பட்டவர்கள், - “நிச்சயமாக இது தங்கள் இறைவனிடமிருந்து (வந்துள்ள) உண்மைதான்’’ என - திட்டமாக அறிவார்கள். இன்னும் அவர்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
Esegesi in lingua araba:
وَلَىِٕنْ اَتَیْتَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ بِكُلِّ اٰیَةٍ مَّا تَبِعُوْا قِبْلَتَكَ ۚ— وَمَاۤ اَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ ۚ— وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ ؕ— وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ مِّنْ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ— اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِیْنَ ۟ۘ
இன்னும், (நபியே!) வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் எல்லா அத்தாட்சிகளையும் நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் (தமது வழிபாட்டில்) உமது கிப்லாவைப் பின்பற்றமாட்டார்கள். நீரும் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. அவர்களிலும் சிலர் சிலரின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களாக இல்லை. உமக்குக் கல்வி ஞானம் வந்த பின்னர் அவர்களுடைய ஆசைகளை நீர் பின்பற்றினால் அப்போது நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்.
Esegesi in lingua araba:
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَعْرِفُوْنَهٗ كَمَا یَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْ ؕ— وَاِنَّ فَرِیْقًا مِّنْهُمْ لَیَكْتُمُوْنَ الْحَقَّ وَهُمْ یَعْلَمُوْنَ ۟ؔ
நாம் எவர்களுக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் தங்கள் பிள்ளைகளை அறிவதைப் போன்று அதை (-மக்காவில் உள்ள அல்மஸ்ஜிதுல் ஹராம்தான் எல்லோருடைய கிப்லா என்பதை) அறிவார்கள். இன்னும் நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர், அவர்கள் அறிந்த நிலையிலேயே (அல்மஸ்ஜிதுல் ஹராம்தான் கிப்லா என்ற) உண்மையை மறைக்கிறார்கள்.
Esegesi in lingua araba:
اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِیْنَ ۟۠
இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும். எனவே, நீர் சந்தேகிப்பவர்களில் ஆகிவிட வேண்டாம்.
Esegesi in lingua araba:
وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّیْهَا فَاسْتَبِقُوْا الْخَیْرٰتِ ؔؕ— اَیْنَ مَا تَكُوْنُوْا یَاْتِ بِكُمُ اللّٰهُ جَمِیْعًا ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
ஒவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு. அவர் அதை முன்னோக்கக் கூடியவர் ஆவார். ஆக, நீங்கள் நன்மைகளில் (ஒருவரை ஒருவர்) முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Esegesi in lingua araba:
وَمِنْ حَیْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ؕ— وَاِنَّهٗ لَلْحَقُّ مِنْ رَّبِّكَ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
இன்னும் (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையில்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக! நிச்சயமாக இதுவோ உம் இறைவனிடமிருந்து (வந்த) உண்மையாகும். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
Esegesi in lingua araba:
وَمِنْ حَیْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ؕ— وَحَیْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ۙ— لِئَلَّا یَكُوْنَ لِلنَّاسِ عَلَیْكُمْ حُجَّةٌ ۗ— اِلَّا الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ ۗ— فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِیْ ۗ— وَلِاُتِمَّ نِعْمَتِیْ عَلَیْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟ۙۛ
இன்னும், (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையில்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக. இன்னும், (நம்பிக்கையாளர்களே!) - அவர்களில் அநியாயக்காரர்களைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் நேர்வழி பெறுவதற்காகவும் - நீங்கள் எங்கிருந்தாலும் ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்‘ பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். ஆக, அவர்களைப் பயப்படாதீர்கள்! என்னைப் பயப்படுங்கள்.
Esegesi in lingua araba:
كَمَاۤ اَرْسَلْنَا فِیْكُمْ رَسُوْلًا مِّنْكُمْ یَتْلُوْا عَلَیْكُمْ اٰیٰتِنَا وَیُزَكِّیْكُمْ وَیُعَلِّمُكُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَیُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ۟ؕۛ
ஒரு தூதரை உங்களுக்கு உங்களிலிருந்து நாம் அனுப்பியதற்காக(வும் என்னைப் பயப்படுங்கள்). அவர் உங்களுக்கு நம் வசனங்களை ஓதி காண்பிக்கிறார்; உங்களைத் தூய்மைப்படுத்துகிறார்; உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார்; நீங்கள் அறிந்திருக்காதவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்.
Esegesi in lingua araba:
فَاذْكُرُوْنِیْۤ اَذْكُرْكُمْ وَاشْكُرُوْا لِیْ وَلَا تَكْفُرُوْنِ ۟۠
ஆகவே, என்னை நினைவு கூருங்கள்; நான் உங்களை நினைவு கூருவேன். இன்னும் எனக்கு நன்றி செலுத்துங்கள்!; எனக்கு மாறு செய்யாதீர்கள்!
Esegesi in lingua araba:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اسْتَعِیْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ— اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیْنَ ۟
நம்பிக்கையாளர்களே! பொறுமை இன்னும் தொழுகையின் மூலம் உதவி கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
Esegesi in lingua araba:
وَلَا تَقُوْلُوْا لِمَنْ یُّقْتَلُ فِیْ سَبِیْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ— بَلْ اَحْیَآءٌ وَّلٰكِنْ لَّا تَشْعُرُوْنَ ۟
இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் (எதிரிகளால்) கொல்லப்படுபவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிருள்ளவர்கள். எனினும், (அதை) நீங்கள் அறியமாட்டீர்கள்.
Esegesi in lingua araba:
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَیْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ ؕ— وَبَشِّرِ الصّٰبِرِیْنَ ۟ۙ
இன்னும், பயத்தினாலும் பசியினாலும், செல்வங்கள், உயிர்கள், விளைச்சல்களுடைய (சிறிது) நஷ்டத்தினாலும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே!) பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
Esegesi in lingua araba:
الَّذِیْنَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِیْبَةٌ ۙ— قَالُوْۤا اِنَّا لِلّٰهِ وَاِنَّاۤ اِلَیْهِ رٰجِعُوْنَ ۟ؕ
அவர்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால், “நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்புகிறவர்கள்’’ எனக் கூறுவார்கள்.
Esegesi in lingua araba:
اُولٰٓىِٕكَ عَلَیْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۫— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ ۟
அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்புகளும் கருணையும் அவர்கள் மீது இறங்குகின்றன. இன்னும், அவர்கள்தான் நேர்வழிபெற்றவர்கள் ஆவார்கள்.
Esegesi in lingua araba:
اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآىِٕرِ اللّٰهِ ۚ— فَمَنْ حَجَّ الْبَیْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَیْهِ اَنْ یَّطَّوَّفَ بِهِمَا ؕ— وَمَنْ تَطَوَّعَ خَیْرًا ۙ— فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِیْمٌ ۟
நிச்சயமாக ஸஃபா, மர்வா (மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை ஆகும். ஆகவே, கஅபாவை ஹஜ் அல்லது உம்ரா செய்பவர் அவ்விரண்டையும் சுற்றி வருவது (அவருக்கு நன்மையாகும். அது) அவர் மீது அறவே குற்றமில்லை. இன்னும், எவர் நன்மையை உபரியாகச் செய்வாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றி பாராட்டுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
Esegesi in lingua araba:
اِنَّ الَّذِیْنَ یَكْتُمُوْنَ مَاۤ اَنْزَلْنَا مِنَ الْبَیِّنٰتِ وَالْهُدٰی مِنْ بَعْدِ مَا بَیَّنّٰهُ لِلنَّاسِ فِی الْكِتٰبِ ۙ— اُولٰٓىِٕكَ یَلْعَنُهُمُ اللّٰهُ وَیَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَ ۟ۙ
தெளிவான சான்றுகள் இன்னும் நேர்வழியை நாம் இறக்கி, அவற்றை மக்களுக்காக வேதத்தில் நாம் தெளிவுபடுத்திய பின்னர் நிச்சயமாக எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கிறார்கள்.
Esegesi in lingua araba:
اِلَّا الَّذِیْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَیَّنُوْا فَاُولٰٓىِٕكَ اَتُوْبُ عَلَیْهِمْ ۚ— وَاَنَا التَّوَّابُ الرَّحِیْمُ ۟
எவர்கள் (தங்கள் தவறுகளிலிருந்து திருந்தினார்களோ), மன்னிப்புக்கோரினார்களோ, (தங்களை) சீர்திருத்திக் கொண்டார்களோ, (தாங்கள் மறைத்த உண்மைகளை மக்களுக்கு) தெளிவுபடுத்தினார்களோ அவர்களைத் தவிர. ஆக, அவர்களுடைய தவ்பாவை நான் அங்கீகரிப்பேன். நான்தான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன் ஆவேன்.
Esegesi in lingua araba:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ اُولٰٓىِٕكَ عَلَیْهِمْ لَعْنَةُ اللّٰهِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟ۙ
நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ, இன்னும், அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தார்களோ, அவர்கள் மீது அல்லாஹ் உடைய சாபமும், வானவர்கள்; இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகும்.
Esegesi in lingua araba:
خٰلِدِیْنَ فِیْهَا ۚ— لَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟
அ(ந்த சாபத்)தில் (அவர்கள்) நிரந்தரமாக இருப்பார்கள். (மறுமையில்) அவர்களுக்கு தண்டனை இலேசாக்கப்படாது. இன்னும், அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِیْمُ ۟۠
இன்னும், (மனிதர்களே! நீங்கள் உண்மையில் வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். பேரருளாளன், பேரன்பாளனாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை.
Esegesi in lingua araba:
اِنَّ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِیْ تَجْرِیْ فِی الْبَحْرِ بِمَا یَنْفَعُ النَّاسَ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ مَّآءٍ فَاَحْیَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِیْهَا مِنْ كُلِّ دَآبَّةٍ ۪— وَّتَصْرِیْفِ الرِّیٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَیْنَ السَّمَآءِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
நிச்சயமாக வானங்கள் இன்னும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறுவதிலும், மனிதர்களுக்கு பலன் தருபவற்றை (ஏற்றி)க் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் (மழை) நீரை இறக்கி, அதன் மூலம் பூமியை - அது இறந்த பின்னர் - உயிர்ப்பிப்பதிலும், கால்நடைகளை எல்லாம் பூமியில் பரப்பியதிலும், காற்றை(ப் பலகோணங்களில்) திருப்பிவிடுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்ட மேகத்திலும் திட்டமாக (பல) அத்தாட்சிகள் சிந்தித்துப் புரிகிற மக்களுக்கு இருக்கின்றன.
Esegesi in lingua araba:
وَمِنَ النَّاسِ مَنْ یَّتَّخِذُ مِنْ دُوْنِ اللّٰهِ اَنْدَادًا یُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللّٰهِ ؕ— وَالَّذِیْنَ اٰمَنُوْۤا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ ؕ— وَلَوْ یَرَی الَّذِیْنَ ظَلَمُوْۤا اِذْ یَرَوْنَ الْعَذَابَ ۙ— اَنَّ الْقُوَّةَ لِلّٰهِ جَمِیْعًا ۙ— وَّاَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعَذَابِ ۟
மக்களில் அல்லாஹ்வை அன்றி (அவனுக்கு) சமமானவர்களை (-கற்பனை தெய்வங்களை) ஏற்படுத்தியவர்களும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது அன்பு வைக்கப்படுவது போல் அவர்கள் அவற்றின் மீது அன்பு வைக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் (உண்மையான இறைவனாகிய) அல்லாஹ்வின் மீதுதான் அதிகம் அன்பு வைப்பார்கள். அநியாயக்காரர்கள் (நரக) தண்டனையை (நேருக்கு நேர் கண்ணால்) காணும்போது, (தங்களது இறுதி முடிவு என்ன என்பதை) பார்த்துவிட்டால், “அனைத்து ஆற்றலும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (தாம் வணங்கிய தெய்வங்கள் சக்தி அற்றவை;) தண்டிப்பதில் அல்லாஹ் கடினமானவன்; (நம்மை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நமது தெய்வங்களால் காப்பாற்ற முடியாது)” என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
Esegesi in lingua araba:
اِذْ تَبَرَّاَ الَّذِیْنَ اتُّبِعُوْا مِنَ الَّذِیْنَ اتَّبَعُوْا وَرَاَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْاَسْبَابُ ۟
(மதத் தலைவர்களும் அவர்களை பின்பற்றுபவர்களும் மறுமையில் நரக) தண்டனையைக் கண்கூடாக பார்த்த சமயத்தில் பின்பற்றப்பட்ட (மதத் தலை)வர்களோ (தங்களை) பின்பற்றியவர்களை விட்டு விலகிவிடும்போது; (அவர்கள் எல்லோரும் தங்கள் வெற்றிக்காக நம்பியிருந்த) காரணிகள் (-சிலைகளும் அவற்றுக்கு செய்த வழிபாடுகளும்) அவர்களை விட்டு துண்டித்து (பயனற்று போய்)விடும்போது (“அனைத்து ஆற்றலும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; தாம் வணங்கிய தெய்வங்களுக்கு அறவே சக்தி இல்லை; தண்டிப்பதில் அல்லாஹ் கடினமானவன்; அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நமது தெய்வங்களால் நம்மை காப்பாற்ற முடியாது” என்பதை அவர்கள் எல்லோரும் திட்டமாக புரிந்து கொள்வார்கள்).
Esegesi in lingua araba:
وَقَالَ الَّذِیْنَ اتَّبَعُوْا لَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّاَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوْا مِنَّا ؕ— كَذٰلِكَ یُرِیْهِمُ اللّٰهُ اَعْمَالَهُمْ حَسَرٰتٍ عَلَیْهِمْ ؕ— وَمَا هُمْ بِخٰرِجِیْنَ مِنَ النَّارِ ۟۠
இன்னும், பின்பற்றியவர்கள் (அப்போது) கூறுவார்கள்: “(உலகிற்கு ஒருமுறை) திரும்பச் செல்வது நமக்கு சாத்தியமானால் அவர்கள் எங்களைவிட்டு (இப்போது) விலகியதுபோல் நாங்களும் அவர்களைவிட்டு விலகிவிடுவோம்.” இவ்வாறே, அவர்களின் செயல்களை அவர்கள் மீது கடும் துயரங்களாக அமையும்படி அல்லாஹ் அவர்களுக்கு காண்பிப்பான். இன்னும், அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து ஒருபோதும் வெளியேற மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
یٰۤاَیُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِی الْاَرْضِ حَلٰلًا طَیِّبًا ؗ— وَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ— اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟
மக்களே! பூமியிலுள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட நல்லதையே உண்ணுங்கள். இன்னும், ஷைத்தானின் அடிச்சுவடுகளை (-அவன் உங்களை அழைக்கும் அவனது பாதைகளை)ப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான்.
Esegesi in lingua araba:
اِنَّمَا یَاْمُرُكُمْ بِالسُّوْٓءِ وَالْفَحْشَآءِ وَاَنْ تَقُوْلُوْا عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
அவன் உங்களுக்கு ஏவுவதெல்லாம் தீமையையும், மானக்கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுவதையும்தான்.
Esegesi in lingua araba:
وَاِذَا قِیْلَ لَهُمُ اتَّبِعُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَتَّبِعُ مَاۤ اَلْفَیْنَا عَلَیْهِ اٰبَآءَنَا ؕ— اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا یَعْقِلُوْنَ شَیْـًٔا وَّلَا یَهْتَدُوْنَ ۟
இன்னும், அல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், “(நாங்கள் அதைப் பின்பற்ற மாட்டோம்.) மாறாக, நாங்கள் எங்கள் மூதாதைகளை எதில் (-எந்தக் கொள்கையில்) இருக்கக் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்” எனக் கூறுகிறார்கள். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா (அவர்களை இவர்கள் பின்பற்றுவார்கள்)?
Esegesi in lingua araba:
وَمَثَلُ الَّذِیْنَ كَفَرُوْا كَمَثَلِ الَّذِیْ یَنْعِقُ بِمَا لَا یَسْمَعُ اِلَّا دُعَآءً وَّنِدَآءً ؕ— صُمٌّۢ بُكْمٌ عُمْیٌ فَهُمْ لَا یَعْقِلُوْنَ ۟
நிராகரிப்பாளர்களின் உதாரணம் அழைப்பையும் சப்தத்தையும் தவிர (அறவே எதையும்) கேட்காததைக் கூவி அழைப்பவரின் உதாரணத்தைப் போன்றாகும். (அவர்கள்) செவிடர்கள், ஊமைகள், குருடர்கள். எனவே, அவர்கள் (சத்தியத்தை சிந்தித்து) புரியமாட்டார்கள்.
Esegesi in lingua araba:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟
நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றில் இருந்து உண்ணுங்கள்! இன்னும், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள், அவனையே (நீங்கள்) வணங்குபவர்களாக இருந்தால்.
Esegesi in lingua araba:
اِنَّمَا حَرَّمَ عَلَیْكُمُ الْمَیْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِیْرِ وَمَاۤ اُهِلَّ بِهٖ لِغَیْرِ اللّٰهِ ۚ— فَمَنِ اضْطُرَّ غَیْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
அவன் உங்களுக்கு (ஆகுமானதல்ல என்று) தடுத்ததெல்லாம் (தாமாக) செத்த பிராணிகளும் இரத்தமும், பன்றியின் மாமிசமும், (அறுக்கப்படும்போது) அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறப்பட்டதும்தான். ஆக, எவர் பாவத்தை நாடாதவராக, எல்லை மீறாதவராக இருக்கும் நிலையில் (தடுக்கப்பட்டதை உண்பதற்கு) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ அவர் மீது (அதிலிருந்து அவசியமான அளவு உண்பது) அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Esegesi in lingua araba:
اِنَّ الَّذِیْنَ یَكْتُمُوْنَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ الْكِتٰبِ وَیَشْتَرُوْنَ بِهٖ ثَمَنًا قَلِیْلًا ۙ— اُولٰٓىِٕكَ مَا یَاْكُلُوْنَ فِیْ بُطُوْنِهِمْ اِلَّا النَّارَ وَلَا یُكَلِّمُهُمُ اللّٰهُ یَوْمَ الْقِیٰمَةِ وَلَا یُزَكِّیْهِمْ ۖۚ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
நிச்சயமாக எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியதை மறைக்கிறார்களோ; இன்னும், அதற்குப் பகரமாக சொற்பத் தொகையை வாங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர (எதையும்) சாப்பிடுவதில்லை. இன்னும், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். இன்னும், அவர்களைப் பரிசுத்தமாக்க மாட்டான். இன்னும், துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு.
Esegesi in lingua araba:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰی وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ ۚ— فَمَاۤ اَصْبَرَهُمْ عَلَی النَّارِ ۟
அவர்கள் எத்தகையோர் என்றால் (அல்லாஹ்வின்) நேர்வழிக்குப் பதிலாக (ஷைத்தானின்) வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாகத் தண்டனையையும் விலைக்கு வாங்கியவர்கள். நரக நெருப்பின் மீது அவர்கள் எவ்வளவு துணிவாக இருக்கிறார்கள்?
Esegesi in lingua araba:
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ نَزَّلَ الْكِتٰبَ بِالْحَقِّ ؕ— وَاِنَّ الَّذِیْنَ اخْتَلَفُوْا فِی الْكِتٰبِ لَفِیْ شِقَاقٍ بَعِیْدٍ ۟۠
அ(வர்கள் நரகத்தில் தண்டனை பெறுவ)து, ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் உண்மையுடன் வேதத்தை இறக்கினான். (ஆனால், அவர்கள் அதில் முரண்பட்டார்கள்.) நிச்சயமாக (இந்த) வேதத்(தை நம்பிக்கை கொள்ளாமல் அ)தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (முஸ்லிம்களுடன்) வெகு தூரமான பகைமையில்தான் இருக்கிறார்கள்.
Esegesi in lingua araba:
لَیْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلٰكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالْكِتٰبِ وَالنَّبِیّٖنَ ۚ— وَاٰتَی الْمَالَ عَلٰی حُبِّهٖ ذَوِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنَ وَابْنَ السَّبِیْلِ ۙ— وَالسَّآىِٕلِیْنَ وَفِی الرِّقَابِ ۚ— وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَی الزَّكٰوةَ ۚ— وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ— وَالصّٰبِرِیْنَ فِی الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِیْنَ الْبَاْسِ ؕ— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ صَدَقُوْا ؕ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ ۟
நன்மை என்பது மேற்கு, கிழக்கு நோக்கி உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது அல்ல. எனினும், அல்லாஹ்வையும், இறுதிநாளையும், வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டவர்கள்; இன்னும் செல்வத்தை அதன் விருப்பம் (தமக்கு) இருப்பதுடன் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், அடிமைகளுக்கும் கொடுத்தவர்கள்; தொழுகையை நிலைநிறுத்தியவர்கள்; ஸகாத்தைக் கொடுத்தவர்கள்; மேலும், உடன்படிக்கை செய்தால் தங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றுபவர்கள்; கொடிய வறுமையிலும், நோயிலும், போர் சமயத்திலும் பொறுமையாக இருப்பவர்கள் ஆகிய இவர்களுடைய செயல்கள்தான் நன்மை ஆகும். அவர்கள் எத்தகையோர் என்றால் (தங்கள் நம்பிக்கையை) உண்மைப்படுத்தினார்கள். இன்னும், அவர்கள்தான் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்கள் ஆவார்கள்!
Esegesi in lingua araba:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَیْكُمُ الْقِصَاصُ فِی الْقَتْلٰی ؕ— اَلْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْاُ بِالْاُ ؕ— فَمَنْ عُفِیَ لَهٗ مِنْ اَخِیْهِ شَیْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوْفِ وَاَدَآءٌ اِلَیْهِ بِاِحْسَانٍ ؕ— ذٰلِكَ تَخْفِیْفٌ مِّنْ رَّبِّكُمْ وَرَحْمَةٌ ؕ— فَمَنِ اعْتَدٰی بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِیْمٌ ۟ۚ
நம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்குப் பதிலாக (கொலையாளியான) சுதந்திரமானவனை, (கொல்லப்பட்ட) அடிமைக்குப் பதிலாக (கொலையாளியான) அடிமையை, (கொல்லப்பட்ட) பெண்ணுக்குப் பதிலாக (கொலையாளியான) பெண்ணைத்தான் (பழிக்குப் பழி கொல்ல வேண்டும்). எவருக்கு, தன் சகோதரனிடமிருந்து (பரிகாரத் தொகையில்) ஏதேனும் மன்னிக்கப்பட்டால், கண்ணியமான முறையில் (அதைப்) பின்பற்றுதல் வேண்டும். நன்றி அறிதலுடன் (மீதமுண்டான பரிகாரத் தொகையை) அவரிடம் நிறைவேற்றுதல் வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து (வந்த) சலுகையும் அருளுமாகும். எவர் அதற்குப் பின்னர் எல்லை மீறுவாரோ அவருக்குத் துன்புறுத்தக்கூடிய தண்டனை உண்டு.
Esegesi in lingua araba:
وَلَكُمْ فِی الْقِصَاصِ حَیٰوةٌ یّٰۤاُولِی الْاَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟
இன்னும் பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை(யின் பாதுகாப்பு) உண்டு. நிறைவான அறிவுடையவர்களே! நீங்கள் (பழிவாங்கப்படுவதை) பயப்பட வேண்டுமே!
Esegesi in lingua araba:
كُتِبَ عَلَیْكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ اِنْ تَرَكَ خَیْرَا ۖۚ— ١لْوَصِیَّةُ لِلْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ بِالْمَعْرُوْفِ ۚ— حَقًّا عَلَی الْمُتَّقِیْنَ ۟ؕ
உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால், (மேலும்) அவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அப்போது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் நல்ல முறையில் (நீங்கள்) மரண சாசனம் கூறுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (இது) அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீது அவசியமாகும்.
Esegesi in lingua araba:
فَمَنْ بَدَّلَهٗ بَعْدَ مَا سَمِعَهٗ فَاِنَّمَاۤ اِثْمُهٗ عَلَی الَّذِیْنَ یُبَدِّلُوْنَهٗ ؕ— اِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ؕ
ஆக, எவர் (மரண சாசனம் கூறுபவரிடமிருந்து) அ(வரது மரண சாசனத்)தை செவியுற்றதற்குப் பின்னர், அதை மாற்றுவாரோ அதன் பாவமெல்லாம் மாற்றுகிறவர்கள் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்.
Esegesi in lingua araba:
فَمَنْ خَافَ مِنْ مُّوْصٍ جَنَفًا اَوْ اِثْمًا فَاَصْلَحَ بَیْنَهُمْ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
ஆக, எவர் மரண சாசனம் கூறுபவரிடத்தில் அநீதி அல்லது தவறைப் பயந்தாரோ; இன்னும், அவர்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்தாரோ (அவர் செய்ததில்) அவர் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Esegesi in lingua araba:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَیْكُمُ الصِّیَامُ كَمَا كُتِبَ عَلَی الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟ۙ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது - உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று.
Esegesi in lingua araba:
اَیَّامًا مَّعْدُوْدٰتٍ ؕ— فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِیْضًا اَوْ عَلٰی سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَیَّامٍ اُخَرَ ؕ— وَعَلَی الَّذِیْنَ یُطِیْقُوْنَهٗ فِدْیَةٌ طَعَامُ مِسْكِیْنٍ ؕ— فَمَنْ تَطَوَّعَ خَیْرًا فَهُوَ خَیْرٌ لَّهٗ ؕ— وَاَنْ تَصُوْمُوْا خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
(ஓர் ஆண்டில் ரமழான் மாதம் என்று) எண்ணப்பட்ட நாட்களில் (நோன்பிருத்தல் கடமையாகும்). ஆக, உங்களில் யார் நோயாளியாக இருப்பாரோ, அல்லது பயணத்தில் இருப்பாரோ அவர் (விடுபட்ட நோன்புகளை) மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு வைக்கவும். அ(ந்த மாதத்தில் நோன்பு நோற்பதான)து யாருக்கு சிரமமாக இருக்குமோ அவர்கள் கட்டாயம் ஓர் ஏழைக்கு (ஒரு வேளை) உணவளிப்பது (நோன்பை விட்டதற்கு) பரிகாரம் ஆகும். ஆக, எவர் நன்மையான அமலை விருப்பமாக செய்வாரோ அது அவருக்கு நன்மையாகும். ஆனால், நீங்கள் (நோன்பின் நன்மையை) அறிந்தவர்களாக இருந்தால் (சிரமத்தை தாங்கிக் கொண்டு) நோன்பு நோற்பதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் (என்பதை அறிந்து கொள்வீர்கள்).
Esegesi in lingua araba:
شَهْرُ رَمَضَانَ الَّذِیْۤ اُنْزِلَ فِیْهِ الْقُرْاٰنُ هُدًی لِّلنَّاسِ وَبَیِّنٰتٍ مِّنَ الْهُدٰی وَالْفُرْقَانِ ۚ— فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْیَصُمْهُ ؕ— وَمَنْ كَانَ مَرِیْضًا اَوْ عَلٰی سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَیَّامٍ اُخَرَ ؕ— یُرِیْدُ اللّٰهُ بِكُمُ الْیُسْرَ وَلَا یُرِیْدُ بِكُمُ الْعُسْرَ ؗ— وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் நேர்வழி உடைய சான்றுகளாகவும் இன்னும் உண்மை, பொய்யை பிரித்தறிவிக்கின்ற தெளிவான சத்தியத்தின் சான்றுகளாகவும் உள்ள அல்குர்ஆன் இறக்கப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தில் (உள்ளூரில்) தங்கி இருப்பாரோ அவர் அதில் கண்டிப்பாக நோன்பு நோற்கவும். இன்னும், எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருப்பாரோ அவர் (அந்த நோன்பை) மற்ற நாட்களில் கணக்கிடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். சிரமத்தை நாடமாட்டான். (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும்; உங்களை நேர்வழிபடுத்தியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (ரமழான் மாதத்தில் நோன்பிருங்கள்)!
Esegesi in lingua araba:
وَاِذَا سَاَلَكَ عِبَادِیْ عَنِّیْ فَاِنِّیْ قَرِیْبٌ ؕ— اُجِیْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْیَسْتَجِیْبُوْا لِیْ وَلْیُؤْمِنُوْا بِیْ لَعَلَّهُمْ یَرْشُدُوْنَ ۟
இன்னும், என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமானவன்; என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன்” (எனக் கூறுவீராக!). ஆக, அவர்கள் நேர்வழி பெறுவதற்காக அவர்கள் எனக்குப் பதிலளி(த்து கீழ்ப்படிந்து நட)ப்பார்களாக! இன்னும், அவர்கள் என்னையே நம்பிக்கை கொள்வார்களாக!
Esegesi in lingua araba:
اُحِلَّ لَكُمْ لَیْلَةَ الصِّیَامِ الرَّفَثُ اِلٰی نِسَآىِٕكُمْ ؕ— هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَاَنْتُمْ لِبَاسٌ لَّهُنَّ ؕ— عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَكُمْ فَتَابَ عَلَیْكُمْ وَعَفَا عَنْكُمْ ۚ— فَالْـٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا كَتَبَ اللّٰهُ لَكُمْ ۪— وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰی یَتَبَیَّنَ لَكُمُ الْخَیْطُ الْاَبْیَضُ مِنَ الْخَیْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ ۪— ثُمَّ اَتِمُّوا الصِّیَامَ اِلَی الَّیْلِ ۚ— وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْتُمْ عٰكِفُوْنَ فِی الْمَسٰجِدِ ؕ— تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ اٰیٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟
நோன்புடைய இரவில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் உடலுறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை ஆவர். நீங்கள் அவர்களுக்கு ஆடை ஆவீர்கள். நிச்சயமாக நீங்கள் உங்களை ஏமாற்றுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் தவ்பாவை அவன் அங்கீகரித்தான். இன்னும், உங்களை விட்டும் முற்றிலும் தவறை போக்கி (மன்னித்து) விட்டான். ஆகவே, இப்போது நீங்கள் அதிகாலையில் கருப்பு நூலிலிருந்து வெள்ளை நூல் உங்களுக்குத் தெளிவாகும் வரை அவர்களுடன் உடலுறவு வைக்கலாம்; அல்லாஹ் உங்களுக்கு விதித்த (குழந்தை பாக்கியத்)தை நீங்கள் தேடலாம்; உண்ணலாம்; பருகலாம். (அதன்) பிறகு, இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள். நீங்கள் மஸ்ஜிதுகளில் (இஃதிகாஃப்) தங்கி இருக்கும்போது அவர்களுடன் (-மனைவிகளுடன்) உடலுறவு வைக்காதீர்கள். இவை அல்லாஹ்வுடைய சட்டங்களாகும். ஆகவே, அவற்றை நெருங்காதீர்கள். அல்லாஹ் மனிதர்களுக்கு - அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக - தன் வசனங்களை இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
Esegesi in lingua araba:
وَلَا تَاْكُلُوْۤا اَمْوَالَكُمْ بَیْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَاۤ اِلَی الْحُكَّامِ لِتَاْكُلُوْا فَرِیْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟۠
இன்னும், உங்களுக்கு மத்தியில் உங்கள் செல்வங்களைத் தவறாக (பாவமாக) உண்ணாதீர்கள் (அனுபவிக்காதீர்கள்). நீங்கள் (செய்வது பாவம் என்று) அறிந்திருந்தும் மக்களுடைய செல்வங்களில் ஒரு பகுதியை தவறாக நீங்கள் உண்பதற்காக (-அனுபவிப்பதற்காக) அவற்றை அதிகாரிகளிடம் (லஞ்சமாக) கொடுக்காதீர்கள்.
Esegesi in lingua araba:
یَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ؕ— قُلْ هِیَ مَوَاقِیْتُ لِلنَّاسِ وَالْحَجِّ ؕ— وَلَیْسَ الْبِرُّ بِاَنْ تَاْتُوا الْبُیُوْتَ مِنْ ظُهُوْرِهَا وَلٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقٰی ۚ— وَاْتُوا الْبُیُوْتَ مِنْ اَبْوَابِهَا ۪— وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
(நபியே!) அவர்கள் பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அவை மக்களு(டைய கொடுக்கல் வாங்கலு)க்கும் ஹஜ்ஜுக்கும் காலங்களை அறிவிக்கக்கூடியவை ஆகும். இன்னும், நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் பின்வாசல்கள் வழியாக வருவது நன்மை இல்லை. எனினும், நன்மை என்பது யார் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறாரோ அதுதான். ஆகவே, நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்கள் வழியாக வாருங்கள். இன்னும் நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்!”
Esegesi in lingua araba:
وَقَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ الَّذِیْنَ یُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟
இன்னும் (மக்காவாசிகளில்) உங்களிடம் போர் புரிவோரிடம் அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் போர் புரியுங்கள். ஆனால், வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
Esegesi in lingua araba:
وَاقْتُلُوْهُمْ حَیْثُ ثَقِفْتُمُوْهُمْ وَاَخْرِجُوْهُمْ مِّنْ حَیْثُ اَخْرَجُوْكُمْ وَالْفِتْنَةُ اَشَدُّ مِنَ الْقَتْلِ ۚ— وَلَا تُقٰتِلُوْهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتّٰی یُقٰتِلُوْكُمْ فِیْهِ ۚ— فَاِنْ قٰتَلُوْكُمْ فَاقْتُلُوْهُمْ ؕ— كَذٰلِكَ جَزَآءُ الْكٰفِرِیْنَ ۟
இன்னும் (உங்களுடன் போர் செய்யும் மக்காவாசிகளாகிய) அவர்களை நீங்கள் பார்த்த இடத்தில் கொல்லுங்கள். உங்களை அவர்கள் (மக்காவிலிருந்து) வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை (மக்காவிலிருந்து) வெளியேற்றுங்கள். இணைவைத்தல் கொலையை விட மிகக் கடுமையானது. (மக்காவில்) புனித மஸ்ஜிதுக்கு அருகில் அவர்களிடம் போர் புரியாதீர்கள், அதில் அவர்கள், உங்களிடம் போர்புரியும் வரை. ஆக, அவர்கள் உங்களிடம் போரிட்டால் அப்போது நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள். இப்படித்தான் (உங்களிடம் சண்டை செய்கிற அந்த) நிராகரிப்பவர்களின் கூலி இருக்கும்.
Esegesi in lingua araba:
فَاِنِ انْتَهَوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
ஆக, அவர்கள் (உங்களிடம் சண்டை செய்யாமல்) விலகிக் கொண்டால், (நீங்களும் அவர்களை விட்டுவிடுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Esegesi in lingua araba:
وَقٰتِلُوْهُمْ حَتّٰی لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّیَكُوْنَ الدِّیْنُ لِلّٰهِ ؕ— فَاِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ اِلَّا عَلَی الظّٰلِمِیْنَ ۟
இன்னும், (மக்காவில்) இணைவைத்தல் நீங்கும் வரை, வணக்க வழிபாடு அல்லாஹ்விற்கு மட்டும் ஆகும் வரை அவர்களிடம் போர் புரியுங்கள். ஆக, அவர்கள் (உங்களிடம் சண்டை செய்யாமல்) விலகிக் கொண்டால் அப்போது அறவே தாக்குதல் (நிகழ்த்துவது) இல்லை, அநியாயக்காரர்கள் மீதே தவிர.
Esegesi in lingua araba:
اَلشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمٰتُ قِصَاصٌ ؕ— فَمَنِ اعْتَدٰی عَلَیْكُمْ فَاعْتَدُوْا عَلَیْهِ بِمِثْلِ مَا اعْتَدٰی عَلَیْكُمْ ۪— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟
புனித மாதம் புனித மாதத்திற்கு பதிலாகும். புனிதங்கள் (பாதுகாக்கப்பட வேண்டும். அவை பாழ்படுத்தப்பட்டால்) பழிதீர்க்கப்பட வேண்டும். ஆகவே, யார் உங்களை தாக்குவாரோ, அவர் உங்களை தாக்கியது போன்றே (நீங்களும்) அவரை தாக்குங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Esegesi in lingua araba:
وَاَنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَیْدِیْكُمْ اِلَی التَّهْلُكَةِ ۛۚ— وَاَحْسِنُوْا ۛۚ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟
இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் புரியுங்கள்; உங்கள் கரங்களை அழிவில் போடாதீர்கள்; நல்லறம் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிபவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
Esegesi in lingua araba:
وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ ؕ— فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَیْسَرَ مِنَ الْهَدْیِ ۚ— وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰی یَبْلُغَ الْهَدْیُ مَحِلَّهٗ ؕ— فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِیْضًا اَوْ بِهٖۤ اَذًی مِّنْ رَّاْسِهٖ فَفِدْیَةٌ مِّنْ صِیَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍ ۚ— فَاِذَاۤ اَمِنْتُمْ ۥ— فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَی الْحَجِّ فَمَا اسْتَیْسَرَ مِنَ الْهَدْیِ ۚ— فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ ثَلٰثَةِ اَیَّامٍ فِی الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْ ؕ— تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ؕ— ذٰلِكَ لِمَنْ لَّمْ یَكُنْ اَهْلُهٗ حَاضِرِی الْمَسْجِدِ الْحَرَامِ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟۠
இன்னும், நீங்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக முழுமையாக்குங்கள். நீங்கள் (மக்காவிற்கு யாத்திரை செல்லும்போது வழியில்) தடுக்கப்பட்டால் (உங்களுக்கு) இலகுவாகக் கிடைக்கின்ற ஒரு பிராணியை பலி கொடுங்கள். அந்த பலிப் பிராணி தன் இடத்தை அடையும் வரை உங்கள் தலை(முடி)களை சிரைக்காதீர்கள். ஆக, உங்களில் எவர் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது அவருடைய தலையில் அவருக்கு (பேன் அல்லது காயம் போன்ற சிரமம் தரும்) இடையூறு இருந்து, அதனால் அவர் தனது தலையை சிரைத்துவிடுவாரோ அவர் நோன்பு வைத்து; அல்லது, தர்மம் கொடுத்து; அல்லது, பலிப் பிராணியை அறுத்து பரிகாரம் செய்யவும். நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் எவர் உம்ரா செய்துவிட்டு (இஹ்ராமிலிருந்து வெளியேறி) ஹஜ்ஜு(க்கும் இஹ்ராம் கட்டுகின்ற) வரை சுகம் அனுபவிப்பாரோ (அவர் தனக்கு) இலகுவான பலிப் பிராணியை அறுக்கவும். எவர் (பலிப் பிராணியை) பெறவில்லையோ, அவர் ஹஜ்ஜில் மூன்று நாட்களும் நீங்கள் (ஹஜ் முடித்து) திரும்பிய பின் ஏழு நாட்களும் நோன்பு வைக்க வேண்டும். அவை முழுமையான பத்து நாட்களாகும். (ஹஜ் தமத்துஃ செய்கின்ற அனுமதியாகிய) அது எவருடைய குடும்பம் அல் மஸ்ஜிதுல் ஹராமில் (-மக்காவில்) வசிப்பவர்களாக இருக்கவில்லையோ அவருக்குத்தான். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Esegesi in lingua araba:
اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ۚ— فَمَنْ فَرَضَ فِیْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَ وَلَا جِدَالَ فِی الْحَجِّ ؕ— وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ یَّعْلَمْهُ اللّٰهُ ؔؕ— وَتَزَوَّدُوْا فَاِنَّ خَیْرَ الزَّادِ التَّقْوٰی ؗ— وَاتَّقُوْنِ یٰۤاُولِی الْاَلْبَابِ ۟
ஹஜ்ஜு(க்காக இஹ்ராம் கட்ட வேண்டிய காலம் ஷவ்வால், துல் கஅதா, துல் ஹஜ்ஜுடைய முதல் பத்து நாட்கள் ஆகிய) அறியப்பட்ட மாதங்களாகும். ஆகவே, அவற்றில் எவர் ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கினாரோ அவர் ஹஜ்ஜில் (இஹ்ராமில் இருக்கும்போது) தாம்பத்திய உறவு அறவே செய்யக் கூடாது; தீச்சொல் பேசுதல் அறவே கூடாது; தர்க்கம் செய்வது அறவே கூடாது. நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிவான். (பயணத்திற்கு தேவையான உணவு தானியம், பொருளாதாரம் போன்ற) கட்டுச் சாதத்தை (உங்களுடன்) எடுத்துக் கொள்ளுங்கள். ஆக, நிச்சயமாகக் கட்டுச் சாதத்தில் மிகச் சிறந்தது தக்வா - அல்லாஹ்வின் அச்சம்தான். இன்னும். நிறைவான அறிவுடையவர்களே! நீங்கள் என்னை அஞ்சுங்கள்.
Esegesi in lingua araba:
لَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُمْ ؕ— فَاِذَاۤ اَفَضْتُمْ مِّنْ عَرَفٰتٍ فَاذْكُرُوا اللّٰهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ ۪— وَاذْكُرُوْهُ كَمَا هَدٰىكُمْ ۚ— وَاِنْ كُنْتُمْ مِّنْ قَبْلِهٖ لَمِنَ الضَّآلِّیْنَ ۟
நீங்கள் (ஹஜ்ஜில் வியாபாரம் செய்து) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை. ஆக, நீங்கள் அரஃபாவிலிருந்து புறப்பட்டால் ‘அல் மஷ்அருல் ஹராம்’ அருகில் (முஸ்தலிஃபாவில் தங்கி) அல்லாஹ்வை நினைவு கூருங்கள். இன்னும், அவன் உங்களை நேர்வழி நடத்தியதற்காக (தக்பீர் கூறி) அவனை நினைவு கூருங்கள். நிச்சயமாக இதற்கு முன்னர் நீங்கள் வழி தவறியவர்களில் இருந்தீர்கள்.
Esegesi in lingua araba:
ثُمَّ اَفِیْضُوْا مِنْ حَیْثُ اَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
பிறகு, (அரஃபாவில் தங்கிவிட்டு) மக்கள் புறப்படுகிற (அந்த) இடத்திலிருந்து புறப்படுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Esegesi in lingua araba:
فَاِذَا قَضَیْتُمْ مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللّٰهَ كَذِكْرِكُمْ اٰبَآءَكُمْ اَوْ اَشَدَّ ذِكْرًا ؕ— فَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا وَمَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ۟
ஆக, நீங்கள் உங்கள் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (மினாவில் தங்கி இருக்கும் நாட்களில் இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்தமிட்டுப் பெருமையாக) நினைவு கூர்ந்ததைப் போல அல்லது (அதைவிட) அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூருங்கள். ஆக, “எங்கள் இறைவா! எங்களுக்கு (வேண்டியவற்றை எல்லாம்) இம்மையில் தா!’’ என்று கூறுபவரும் மக்களில் உண்டு. ஆனால், அவருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமுமில்லை.
Esegesi in lingua araba:
وَمِنْهُمْ مَّنْ یَّقُوْلُ رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَةً وَّفِی الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ ۟
இன்னும், “எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் அழகியதைத் தா! மறுமையிலும் அழகியதைத் தா! (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்தும் எங்களைப் பாதுகாத்துக்கொள்’’ என்று கூறுபவரும் அவர்களில் உண்டு.
Esegesi in lingua araba:
اُولٰٓىِٕكَ لَهُمْ نَصِیْبٌ مِّمَّا كَسَبُوْا ؕ— وَاللّٰهُ سَرِیْعُ الْحِسَابِ ۟
அவர்கள் செய்த(ஹஜ் வணக்கத்)திலிருந்து அவர்களுக்கு (நன்மையில் பெரும்) பங்கு உண்டு. அல்லாஹ் (அடியார்களின் அமல்களை) கணக்கிடுவதில் (இன்னும், அவர்களை விசாரணை செய்வதில்) மிக விரைவானவன் ஆவான்.
Esegesi in lingua araba:
وَاذْكُرُوا اللّٰهَ فِیْۤ اَیَّامٍ مَّعْدُوْدٰتٍ ؕ— فَمَنْ تَعَجَّلَ فِیْ یَوْمَیْنِ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ۚ— وَمَنْ تَاَخَّرَ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ۙ— لِمَنِ اتَّقٰی ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّكُمْ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
இன்னும், எண்ணப்பட்ட (11, 12, 13 ஆகிய) நாள்களில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். ஆக, எவர் இரண்டு நாள்களில் (ஊர் திரும்ப வேண்டும் என்று) அவசரப்பட்டாரோ அவர் மீது அறவே குற்றமில்லை. இன்னும், எவர் (மூன்றாவது நாளும் மினாவில் தங்குவதற்காக) தாமதித்தாரோ அவர் மீதும் அறவே குற்றமில்லை. (அதாவது,) அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு (அவர்கள் இந்த இரண்டில் எதை செய்தாலும் அவர்கள் மீது குற்றமில்லை). அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக நீங்கள் (மறுமையில்) அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Esegesi in lingua araba:
وَمِنَ النَّاسِ مَنْ یُّعْجِبُكَ قَوْلُهٗ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیُشْهِدُ اللّٰهَ عَلٰی مَا فِیْ قَلْبِهٖ ۙ— وَهُوَ اَلَدُّ الْخِصَامِ ۟
இன்னும், (நபியே!) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி எவனுடைய பேச்சு உம்மை வியக்க வைக்குமோ அ(த்தகைய)வனும் மக்களில் இருக்கிறான். அவன், தன் உள்ளத்தில் உள்ளவற்றிற்கு (பொய்யாக) அல்லாஹ்வை சாட்சியாக்குவான். அவனோ வாதிப்பதில் மிகக் கடுமையான பேச்சாளன் (மிகவும் பொய்யாகவும் முரட்டுத்தனமாகவும் வாதிடுபவன்.)
Esegesi in lingua araba:
وَاِذَا تَوَلّٰی سَعٰی فِی الْاَرْضِ لِیُفْسِدَ فِیْهَا وَیُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ الْفَسَادَ ۟
இன்னும், அவன் (உம்மை விட்டு) திரும்பிச் சென்றால் பூமியில் அதில் விஷமம் (கலகம், பாவம்) செய்வதற்கும், விளைநிலம் இன்னும் கால்நடைகளை அழிப்பதற்கும் (பெரும் முயற்சி எடுத்து) வேலை செய்கிறான். அல்லாஹ், விஷமத்தை விரும்பமாட்டான்.
Esegesi in lingua araba:
وَاِذَا قِیْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ فَحَسْبُهٗ جَهَنَّمُ ؕ— وَلَبِئْسَ الْمِهَادُ ۟
இன்னும், “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்’’ என அவனுக்குக் கூறப்பட்டால், (அவனது) கர்வம் அவனை (மேலும்) குற்றம் செய்ய தூண்டுகிறது. ஆகவே, அவனுக்கு (தண்டனையால்) நரகமே போதும். அது மிக கெட்ட தங்குமிடமாகும்.
Esegesi in lingua araba:
وَمِنَ النَّاسِ مَنْ یَّشْرِیْ نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ ۟
இன்னும், அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடி, (தன் செல்வத்தைக் கொடுத்து) தன் உயிரை (சொர்க்கத்திற்கு பதிலாக அல்லாஹ்விடம்) விற்பவரும் மக்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள் மீது மிக இரக்கமுடையவன் ஆவான்.
Esegesi in lingua araba:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِی السِّلْمِ كَآفَّةً ۪— وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ— اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟
நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஸ்லாமில் முழுமையாக நுழையுங்கள். இன்னும், ஷைத்தானின் அடிச்சுவடுகளை (-அவன் உங்களை அழைக்கும் அவனது பாதைகளை)ப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரியாவான்.
Esegesi in lingua araba:
فَاِنْ زَلَلْتُمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْكُمُ الْبَیِّنٰتُ فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
ஆக, தெளிவான சான்றுகள் உங்களிடம் வந்த பின்னர் நீங்கள் (இஸ்லாமை விட்டு விலகி) வழிதவறி (வழிகேட்டில்) சென்றால் (அல்லாஹ்விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Esegesi in lingua araba:
هَلْ یَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ یَّاْتِیَهُمُ اللّٰهُ فِیْ ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلٰٓىِٕكَةُ وَقُضِیَ الْاَمْرُ ؕ— وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠
அல்லாஹ் மேகங்களின் நிழல்களில் அவர்களிடம் வருவதையும் இன்னும் வானவர்கள் வருவதையும் (அவர்களின்) காரியம் முடிக்கப்படுவதையும் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? காரியங்கள் எல்லாம் (முடிவில்) அல்லாஹ்வின் பக்கமே திருப்பப்படும்.
Esegesi in lingua araba:
سَلْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ كَمْ اٰتَیْنٰهُمْ مِّنْ اٰیَةٍ بَیِّنَةٍ ؕ— وَمَنْ یُّبَدِّلْ نِعْمَةَ اللّٰهِ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
(நபியே!) எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களுக்குக் கொடுத்தோம் என இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக! எவர் அல்லாஹ்வின் அருட்கொடையை அது தம்மிடம் வந்த பின்னர் மாற்றுவாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவரைத்) தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்.
Esegesi in lingua araba:
زُیِّنَ لِلَّذِیْنَ كَفَرُوا الْحَیٰوةُ الدُّنْیَا وَیَسْخَرُوْنَ مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا ۘ— وَالَّذِیْنَ اتَّقَوْا فَوْقَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— وَاللّٰهُ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟
நிராகரிப்பவர்களுக்கு உலக வாழ்க்கை அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்னும், அவர்கள் நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். அல்லாஹ்வை அஞ்சியவர்கள் மறுமை நாளில் அவர்களுக்கு மேலாக (சொர்க்கத்தில்) இருப்பார்கள். அல்லாஹ், தான் நாடுகிறவர்களுக்கு கணக்கின்றி (தன் அருள்களை) வழங்குவான்.
Esegesi in lingua araba:
كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً ۫— فَبَعَثَ اللّٰهُ النَّبِیّٖنَ مُبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ ۪— وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَقِّ لِیَحْكُمَ بَیْنَ النَّاسِ فِیْمَا اخْتَلَفُوْا فِیْهِ ؕ— وَمَا اخْتَلَفَ فِیْهِ اِلَّا الَّذِیْنَ اُوْتُوْهُ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ بَغْیًا بَیْنَهُمْ ۚ— فَهَدَی اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِیْهِ مِنَ الْحَقِّ بِاِذْنِهٖ ؕ— وَاللّٰهُ یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
(ஆரம்ப காலத்தில்) மக்கள் ஒரே ஒரு சமுதாயமாக (-ஒரே ஒரு கொள்கையுடையவர்களாக) இருந்தனர். (பிறகு, தங்களுக்கு மத்தியில் வேறுபட்டார்கள்.) ஆக, அல்லாஹ் நபிமார்களை நற்செய்தியாளர்களாகவும் (அச்சமூட்டி) எச்சரிப்பவர்களாகவும் (தொடர்ந்து) அனுப்பி வைத்தான். (இஸ்ரவேலருடைய) மக்களுக்கு மத்தியில் அவர்கள் கருத்து வேறுபாடு செய்த விஷயங்களில் (இறை வேதம்) தீர்ப்பளிப்பதற்காக அவர்களுடன் உண்மையான (தவ்ராத்) வேதத்தையும் இறக்கினான். தெளிவான சான்றுகள் தங்களுக்கு வந்த பின்னர் தங்களுக்கு மத்தியில் (போட்டி) பொறாமையின் காரணமாக, (தவ்ராத்) வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அ(ந்த வேதத்)தில் தங்களுக்குள் கருத்து வேறுபட்டனர். ஆகவே, அவர்கள் கருத்து வேறுபட்ட உண்மையின் பக்கம் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் தனது கட்டளையினால் நேர்வழி காட்டினான். அல்லாஹ், தான் நாடியவருக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகிறான்.
Esegesi in lingua araba:
اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا یَاْتِكُمْ مَّثَلُ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ ؕ— مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰی یَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰی نَصْرُ اللّٰهِ ؕ— اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِیْبٌ ۟
உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு (வந்த சோதனைகள்) போன்று உங்களுக்கு (சோதனைகள்) வராத நிலையில் நீங்கள் சொர்க்கத்தில் (இலகுவாக) நுழையலாமென்று நினைத்துக் கொண்டீர்களா? அவர்களுக்கு கொடிய வறுமையும் நோயும் ஏற்பட்டன. இன்னும், “அல்லாஹ்வுடைய உதவி எப்போது (வரும்)?‘’ என்று தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் கூறும் வரை அவர்கள் (எதிரிகளால்) அச்சுறுத்தப்பட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக அல்லாஹ்வுடைய உதவி சமீபமானதாகும்.’’
Esegesi in lingua araba:
یَسْـَٔلُوْنَكَ مَاذَا یُنْفِقُوْنَ ؕ— قُلْ مَاۤ اَنْفَقْتُمْ مِّنْ خَیْرٍ فَلِلْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ؕ— وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟
“எதை அவர்கள் தர்மம் புரியவேண்டும்?’’ என்று உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: “செல்வத்திலிருந்து நீங்கள் எதைத் தர்மம் செய்தாலும் அது பெற்றோர், உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்களுக்கு செய்யப்பட வேண்டும். நீங்கள் நன்மை எதைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து உங்களுக்கு அதற்கேற்ப கூலி கொடுப்)பவன் ஆவான்.’’
Esegesi in lingua araba:
كُتِبَ عَلَیْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ ۚ— وَعَسٰۤی اَنْ تَكْرَهُوْا شَیْـًٔا وَّهُوَ خَیْرٌ لَّكُمْ ۚ— وَعَسٰۤی اَنْ تُحِبُّوْا شَیْـًٔا وَّهُوَ شَرٌّ لَّكُمْ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟۠
போர், -அதுவோ உங்களுக்குச் சிரமமானதாக இருக்கும் நிலையில் - உங்கள் மீது கடமையாக்கப்பட்டது. நீங்கள் ஒன்றை வெறுக்கலாம், அதுவோ உங்களுக்குச் சிறந்ததாகும். நீங்கள் ஒன்றை விரும்பலாம், அதுவோ உங்களுக்கு தீமையானதாகும். அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
Esegesi in lingua araba:
یَسْـَٔلُوْنَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِیْهِ ؕ— قُلْ قِتَالٌ فِیْهِ كَبِیْرٌ ؕ— وَصَدٌّ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَكُفْرٌ بِهٖ وَالْمَسْجِدِ الْحَرَامِ ۗ— وَاِخْرَاجُ اَهْلِهٖ مِنْهُ اَكْبَرُ عِنْدَ اللّٰهِ ۚ— وَالْفِتْنَةُ اَكْبَرُ مِنَ الْقَتْلِ ؕ— وَلَا یَزَالُوْنَ یُقَاتِلُوْنَكُمْ حَتّٰی یَرُدُّوْكُمْ عَنْ دِیْنِكُمْ اِنِ اسْتَطَاعُوْا ؕ— وَمَنْ یَّرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِیْنِهٖ فَیَمُتْ وَهُوَ كَافِرٌ فَاُولٰٓىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ— وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
(இந்த) புனித மாதம், அதில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “அதில் போர் புரிவது (பாவத்தால்) பெரியதாகும். அல்லாஹ்வுடைய பாதை இன்னும் அல்மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பதும், அவனை (-அல்லாஹ்வை) நிராகரிப்பதும், அதில் வசிப்போரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (புனித மாதத்தில் போர் செய்வதை விட பாவத்தால்) மிகப்பெரியதாகும். (அல்லாஹ்விற்கு) இணைவைப்பது(ம் அவனை நிராகரிப்பதும் பாவத்தால்) கொலையை விட மிகப் பெரியதாகும்.” அவர்களால் முடியுமேயானால் உங்களை உங்கள் மார்க்கத்தை விட்டு அவர்கள் மாற்றிவிடும் வரை உங்களிடம் ஓயாது போர் புரிந்து கொண்டே இருப்பார்கள். உங்களில் எவர்கள் தமது மார்க்கத்தை விட்டு மாறி - அவர்களோ நிராகரிப்பாளர்களாகவே - இறந்துவிட்டால், அவர்களின் (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Esegesi in lingua araba:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَاجَرُوْا وَجٰهَدُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۙ— اُولٰٓىِٕكَ یَرْجُوْنَ رَحْمَتَ اللّٰهِ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ, இன்னும் எவர்கள் ஹிஜ்ரத் செய்து, அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாது செய்தார்களோ அவர்கள் அல்லாஹ்வுடைய கருணையை ஆசை வைக்கிறார்கள். இன்னும் அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Esegesi in lingua araba:
یَسْـَٔلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَیْسِرِ ؕ— قُلْ فِیْهِمَاۤ اِثْمٌ كَبِیْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ ؗ— وَاِثْمُهُمَاۤ اَكْبَرُ مِنْ نَّفْعِهِمَا ؕ— وَیَسْـَٔلُوْنَكَ مَاذَا یُنْفِقُوْنَ ؕ۬— قُلِ الْعَفْوَؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ ۟ۙ
மது இன்னும் சூதாட்டத்தைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “அவ்விரண்டிலும் பெரும் பாவமும், மக்களுக்கு(ச் சில) பலன்களும் உள்ளன. அவ்விரண்டின் பாவம் அவ்விரண்டின் பலனைவிட மிகப் பெரியதாகும்.’’ இன்னும், அவர்கள் எதைத் தர்மம் செய்யவேண்டுமென உம்மிடம் கேட்கிறார்கள். “(உங்கள் தேவைக்குப் போக) மீதமுள்ளதை (தர்மம் செய்யுங்கள்)’’ எனக் கூறுவீராக! நீங்கள் (இம்மை, மறுமையின் காரியத்தில்) சிந்திப்பதற்காக இவ்வாறு அல்லாஹ் வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்.
Esegesi in lingua araba:
فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ— وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْیَتٰمٰی ؕ— قُلْ اِصْلَاحٌ لَّهُمْ خَیْرٌ ؕ— وَاِنْ تُخَالِطُوْهُمْ فَاِخْوَانُكُمْ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَعْنَتَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
(நீங்கள்) இம்மை, மறுமையி(ன் காரியத்தி)ல் (சிந்திப்பதற்காக அல்லாஹ் வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்). இன்னும், அனாதைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அவர்களைச் சரியான முறையில் பராமரிப்பது மிக நன்மையாகும்! இன்னும், நீங்கள் (உங்களுடன்) அவர்களைச் சேர்த்துக் கொண்டால் (அது தவறில்லை. காரணம், அவர்கள்) உங்கள் சகோதரர்களே! சரியான முறையில் பராமரிப்பவரிலிருந்து கெடுதி செய்பவர்களை அல்லாஹ் அறிவான். இன்னும், அல்லாஹ் நாடினால் உங்களைச் சிரமப்படுத்தி இருப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.”
Esegesi in lingua araba:
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰی یُؤْمِنَّ ؕ— وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَیْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ ۚ— وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِیْنَ حَتّٰی یُؤْمِنُوْا ؕ— وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَیْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْ ؕ— اُولٰٓىِٕكَ یَدْعُوْنَ اِلَی النَّارِ ۖۚ— وَاللّٰهُ یَدْعُوْۤا اِلَی الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ ۚ— وَیُبَیِّنُ اٰیٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟۠
இணைவைக்கும் பெண்களை - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - மணக்காதீர்கள். திட்டமாக, நம்பிக்கையாளரான ஓர் அடிமைப்பெண் இணைவைப்பவளைவிடச் சிறந்தவள், (இணைவைக்கும்) அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - நீங்கள் (நம்பிக்கையாளரான பெண்ணை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். திட்டமாக நம்பிக்கையாளரான ஓர் அடிமை இணைவைப்பவனைவிடச் சிறந்தவர், அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. (இணைவைக்கும்) அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லாஹ்வோ, தன் கட்டளையினால் சொர்க்கம் இன்னும் மன்னிப்பிற்கு (உங்களை) அழைக்கிறான். இன்னும், மக்களுக்குத் தன் வசனங்களை அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக விவரிக்கிறான்.
Esegesi in lingua araba:
وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْمَحِیْضِ ؕ— قُلْ هُوَ اَذًی ۙ— فَاعْتَزِلُوا النِّسَآءَ فِی الْمَحِیْضِ ۙ— وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰی یَطْهُرْنَ ۚ— فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَیْثُ اَمَرَكُمُ اللّٰهُ ؕ— اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیْنَ وَیُحِبُّ الْمُتَطَهِّرِیْنَ ۟
இன்னும், மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: “அது ஓர் இடையூறாகும். எனவே, மாதவிடாயில் பெண்களிடமிருந்து (-அவர்களுடன் உடலுறவு வைப்பதிலிருந்து) விலகிவிடுங்கள். அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களுடன் உடலுறவு வைக்காதீர்கள். அவர்கள் (மாதவிடாய் நின்று, குளித்து) முழுமையாக சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் வாருங்கள்.’’ நிச்சயமாக அல்லாஹ் பாவத்திலிருந்து திருந்தி அல்லாஹ்வின் பக்கம் மீளுபவர்கள் மீது அன்பு வைக்கிறான். இன்னும், பரிசுத்தமானவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
Esegesi in lingua araba:
نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ ۪— فَاْتُوْا حَرْثَكُمْ اَنّٰی شِئْتُمْ ؗ— وَقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّكُمْ مُّلٰقُوْهُ ؕ— وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟
உங்கள் மனைவிகள் உங்களுக்கு விளைநிலங்கள் ஆவார்கள். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் நாடியவாறு வாருங்கள். இன்னும், உங்களுக்காக (நன்மைகளை) முற்படுத்துங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக நீங்கள் அவனைச் சந்திக்கக் கூடியவர்கள் என்பதை அறியுங்கள். இன்னும், (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
Esegesi in lingua araba:
وَلَا تَجْعَلُوا اللّٰهَ عُرْضَةً لِّاَیْمَانِكُمْ اَنْ تَبَرُّوْا وَتَتَّقُوْا وَتُصْلِحُوْا بَیْنَ النَّاسِ ؕ— وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
“நீங்கள் நன்மை செய்ய மாட்டீர்கள்; இன்னும், அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்கள்; இன்னும் மக்களுக்கு மத்தியில் இணக்கம் ஏற்படுத்த மாட்டீர்கள்” என்று நீங்கள் செய்கின்ற சத்தியங்களுக்கு வலுவாக (-ஆதாரமாக) அல்லாஹ்வை ஆக்காதீர்கள். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
Esegesi in lingua araba:
لَا یُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِیْۤ اَیْمَانِكُمْ وَلٰكِنْ یُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ حَلِیْمٌ ۟
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்கமாட்டான். எனினும், உங்கள் உள்ளங்கள் செய்த (உறுதியான சத்தியத்)திற்காக (அதை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால்) அவன் உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன் ஆவான்.
Esegesi in lingua araba:
لِلَّذِیْنَ یُؤْلُوْنَ مِنْ نِّسَآىِٕهِمْ تَرَبُّصُ اَرْبَعَةِ اَشْهُرٍ ۚ— فَاِنْ فَآءُوْ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
தங்கள் மனைவிகளிடம் ஈலா* செய்பவர்களுக்கு நான்கு மாதங்கள் எதிர்பார்ப்பதற்கு அனுமதி உண்டு. (அதற்குள்) அவர்கள் (தங்கள் மனைவிகளுடன்) மீண்டுவிட்டால் (அவர்களுக்குள் பிரிவு ஏற்படாது. அவர் செய்த ஈலாவை அல்லாஹ் மன்னித்து விடுவான்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
*ஈலா என்றால் மனைவியுடன் உடலுறவு வைக்க மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதாகும்.
Esegesi in lingua araba:
وَاِنْ عَزَمُوا الطَّلَاقَ فَاِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
இன்னும் அவர்கள் (ஈலாவினால்) விவாகரத்தை உறுதிப்படுத்தினால், (விவாகரத்து ஏற்பட்டுவிடும். அவர்களின் சொல்லை) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், (அவர்களின் எண்ணங்களை) நன்கறிந்தவன் ஆவான்.
Esegesi in lingua araba:
وَالْمُطَلَّقٰتُ یَتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْٓءٍ ؕ— وَلَا یَحِلُّ لَهُنَّ اَنْ یَّكْتُمْنَ مَا خَلَقَ اللّٰهُ فِیْۤ اَرْحَامِهِنَّ اِنْ كُنَّ یُؤْمِنَّ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ— وَبُعُوْلَتُهُنَّ اَحَقُّ بِرَدِّهِنَّ فِیْ ذٰلِكَ اِنْ اَرَادُوْۤا اِصْلَاحًا ؕ— وَلَهُنَّ مِثْلُ الَّذِیْ عَلَیْهِنَّ بِالْمَعْرُوْفِ ۪— وَلِلرِّجَالِ عَلَیْهِنَّ دَرَجَةٌ ؕ— وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠
விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், தங்களுக்கு (இத்தா முடிவதற்கு) மூன்று மாதவிடாய்களை எதிர்பார்ப்பார்கள். இன்னும், அவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கிறவர்களாக இருந்தால், அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப்பைகளில் படைத்ததை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல. இன்னும், அவர்களின் கணவர்கள் (தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை) சீர்திருத்த(ம் செய்து சேர்ந்து வாழ) விரும்பினால் அதில் (-தவணைக்குள்) அவர்களை மீட்டுக்கொள்வதற்கு உரிமையுடையவர்கள் ஆவார்கள். (பெண்களாகிய) அவர்கள் மீது கடமைகள் இருப்பது போன்றே அவர்களுக்கு உரிமைகளும் உண்டு. இன்னும், ஆண்களுக்கு அவர்கள் மீது ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
Esegesi in lingua araba:
اَلطَّلَاقُ مَرَّتٰنِ ۪— فَاِمْسَاكٌ بِمَعْرُوْفٍ اَوْ تَسْرِیْحٌ بِاِحْسَانٍ ؕ— وَلَا یَحِلُّ لَكُمْ اَنْ تَاْخُذُوْا مِمَّاۤ اٰتَیْتُمُوْهُنَّ شَیْـًٔا اِلَّاۤ اَنْ یَّخَافَاۤ اَلَّا یُقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ؕ— فَاِنْ خِفْتُمْ اَلَّا یُقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ۙ— فَلَا جُنَاحَ عَلَیْهِمَا فِیْمَا افْتَدَتْ بِهٖ ؕ— تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَعْتَدُوْهَا ۚ— وَمَنْ یَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
(மீட்பதற்கு அனுமதியுள்ள) விவாகரத்து இருமுறை (மட்டும்) ஆகும். (அந்த தவணைக்குள்) நல்ல முறையில் (அவளை) தடுத்து (மனைவியாக) வைத்தல் வேண்டும். அல்லது அழகிய முறையில் விட்டுவிடுதல் வேண்டும். (ஆண்களாகிய) நீங்கள் (பெண்களாகிய) அவர்களுக்குக் கொடுத்ததிலிருந்து (-மஹ்ர் தொகை அல்லது மஹ்ர் பொருளிலிருந்து) எதையும் திரும்ப வாங்குவது உங்களுக்கு ஆகுமானதல்ல. (ஆனால், திருமண வாழ்க்கையில் மீண்டும் இணைந்தால்) அல்லாஹ்வின் சட்டங்களை அவ்விருவரும் நிலைநிறுத்த மாட்டார்கள் என்று அவ்விருவரும் பயந்தாலே தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநிறுத்தமாட்டார்கள் என (நடுவர்களாகிய) நீங்கள் பயந்தால், அவள் (தனக்கு கொடுக்கப்பட்ட மஹ்ரிலிருந்து) எதை (திரும்ப) கொடுத்து (தன்னை) விடுவிப்பாளோ அதில் அவ்விருவர் மீதும் அறவே குற்றம் இல்லை. இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். ஆகவே, இவற்றை மீறாதீர்கள். எவர்கள் அல்லாஹ்வின் சட்டங்களை மீறுகிறார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
Esegesi in lingua araba:
فَاِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهٗ مِنْ بَعْدُ حَتّٰی تَنْكِحَ زَوْجًا غَیْرَهٗ ؕ— فَاِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَیْهِمَاۤ اَنْ یَّتَرَاجَعَاۤ اِنْ ظَنَّاۤ اَنْ یُّقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ؕ— وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ یُبَیِّنُهَا لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
பிறகு, (மூன்றாவது தலாக் கூறி) அவளை அவன் விவாகரத்து செய்தால் (அதன்) பிறகு அவள் அவனுக்கு ஆகுமாக மாட்டாள், அவனல்லாத (வேறு) ஒரு கணவனை அவள் மணம் புரியும் வரை. (அப்படி மணம் புரிந்து, பிறகு) அவனும் அவளை விவாகரத்து செய்தால் (அந்த இத்தா முடிந்தவுடன் முதல் கணவரும் இவளும் இந்த) இருவரும் அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநிறுத்துவோம் என்று எண்ணினால் இவ்விருவரும் மீண்டும் திருமணம் செய்வது இவ்விருவர் மீது அறவே குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். அறி(ந்து அமல் செய்)யும் மக்களுக்காக அவற்றை அவன் விவரிக்கிறான்.
Esegesi in lingua araba:
وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ سَرِّحُوْهُنَّ بِمَعْرُوْفٍ ۪— وَلَا تُمْسِكُوْهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوْا ۚ— وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ؕ— وَلَا تَتَّخِذُوْۤا اٰیٰتِ اللّٰهِ هُزُوًا ؗ— وَّاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ وَمَاۤ اَنْزَلَ عَلَیْكُمْ مِّنَ الْكِتٰبِ وَالْحِكْمَةِ یَعِظُكُمْ بِهٖ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
இன்னும், நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் (இத்தா முடியும்) தவணையை அடைந்தால் நல்ல முறையில் (மண வாழ்க்கையில்) அவர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள். அல்லது, (விவாகரத்து செய்து) நல்ல முறையில் விட்டுவிடுங்கள். நீங்கள் தீங்கிழைத்து (அவர்கள் மீது) அநியாயம் செய்வதற்காக அவர்களை (உங்கள் திருமண பந்தத்தில்) தடுத்து வைக்காதீர்கள். எவர் அதைச் செய்வாரோ திட்டமாக அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்தார். அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுக்காதீர்கள். இன்னும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவுகூருங்கள்! இன்னும், உங்கள் மீது அவன் இறக்கிய வேதத்தையும் ஞானத்தையும் நினைவில் வையுங்கள்! அவன் இவற்றின் மூலமாக உங்களுக்கு உபதேசிக்கிறான். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதை அறியுங்கள்.
Esegesi in lingua araba:
وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوْهُنَّ اَنْ یَّنْكِحْنَ اَزْوَاجَهُنَّ اِذَا تَرَاضَوْا بَیْنَهُمْ بِالْمَعْرُوْفِ ؕ— ذٰلِكَ یُوْعَظُ بِهٖ مَنْ كَانَ مِنْكُمْ یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ— ذٰلِكُمْ اَزْكٰی لَكُمْ وَاَطْهَرُ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
இன்னும், நீங்கள் பெண்களை (மூன்றுக்கும் குறைவாக) விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் (இத்தா) தவணையை (முழுமையாக) அடைந்தால், (அதன் பின்னர் அந்த பெண்களும் அவர்களின் கணவர்களும் மண வாழ்க்கையில் இணைய விரும்பி) அவர்கள் தங்களுக்கு மத்தியில் (ஒருவர் மற்றவர் மீது) திருப்தியடைந்தால் அப்போது அந்தப் பெண்களை - அவர்கள் தங்கள் (முந்திய) கணவர்களை மணந்து கொள்வதிலிருந்து - (அவர்களின் பொறுப்பாளர்களாகிய) நீங்கள் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் இதன் மூலம் உபதேசிக்கப்படுகிறார். இதுதான் உங்களுக்கு மிகத் தூய்மையானதும் மிகப் பரிசுத்தமானதுமாகும். அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
Esegesi in lingua araba:
وَالْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ لِمَنْ اَرَادَ اَنْ یُّتِمَّ الرَّضَاعَةَ ؕ— وَعَلَی الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ ؕ— لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَا ۚ— لَا تُضَآرَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ ۗ— وَعَلَی الْوَارِثِ مِثْلُ ذٰلِكَ ۚ— فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَیْهِمَا ؕ— وَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْۤا اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّاۤ اٰتَیْتُمْ بِالْمَعْرُوْفِ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
எவர் பாலூட்டுவதை முழுமைப்படுத்த விரும்புகிறாரோ அவருக்காக, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முழுமையான ஈராண்டுகள் பாலூட்டுவார்கள். நல்ல முறையில் அவர்களுக்கு உணவளிப்பதும் ஆடை கொடுப்பதும் எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (-குழந்தையின் உரிமையாளராகிய பிள்ளையின் தந்தை) மீது கடமையாகும். ஓர் ஆத்மா அதன் வசதிக்கு மேல் நிர்ப்பந்திக்கப்படாது. ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக துன்புறுத்தப்பட மாட்டாள். இன்னும், எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவரும் தன் குழந்தைக்காக (துன்புறுத்தப்பட மாட்டார்). அது போன்றே வாரிசுதாரர் மீதும் (கடமையாகும்). அவ்விருவரும் தங்கள் பரஸ்பர திருப்தியுடனும் பரஸ்பர ஆலோசனையுடனும் பால்குடியை நிறுத்த விரும்பினால் அது அவ்விருவர் மீதும் அறவே குற்றமில்லை. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு (பிற பெண் மூலம்) பாலூட்டுவதை விரும்பினால், - நீங்கள் கொடுப்பதை நல்ல முறையில் (பாலூட்டும் தாய்க்குரிய கூலியை) ஒப்படைத்தால் - (அது) உங்கள் மீது குற்றமில்லை. இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் என்பதை அறியுங்கள்.
Esegesi in lingua araba:
وَالَّذِیْنَ یُتَوَفَّوْنَ مِنْكُمْ وَیَذَرُوْنَ اَزْوَاجًا یَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا ۚ— فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا فَعَلْنَ فِیْۤ اَنْفُسِهِنَّ بِالْمَعْرُوْفِ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
இன்னும், உங்களில் எவர்கள் இறப்பார்களோ; இன்னும், மனைவிகளை விட்டுச் செல்வார்களோ அந்த மனைவிமார்கள் நான்கு மாதங்கள், பத்து நாட்கள் தங்களுக்கு (இத்தா முடிவதை) எதிர்பார்(த்து இரு)ப்பார்கள். அவர்கள் தங்கள் (இத்தாவின் இறுதி) தவணையை அடைந்து விட்டால் நல்ல முறையில் அவர்கள் தங்களை (மறுமணத்திற்கு) தயார் செய்வதில் (பொறுப்பாளர்களாகிய) உங்கள் மீது(ம் அவர்கள் மீதும்) அறவே குற்றமில்லை. (அவர்கள் செய்தது விரும்பத்தக்க நல்ல செயல்தான்.) நீங்கள் செய்வதை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Esegesi in lingua araba:
وَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا عَرَّضْتُمْ بِهٖ مِنْ خِطْبَةِ النِّسَآءِ اَوْ اَكْنَنْتُمْ فِیْۤ اَنْفُسِكُمْ ؕ— عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ سَتَذْكُرُوْنَهُنَّ وَلٰكِنْ لَّا تُوَاعِدُوْهُنَّ سِرًّا اِلَّاۤ اَنْ تَقُوْلُوْا قَوْلًا مَّعْرُوْفًا ؕ۬— وَلَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّكَاحِ حَتّٰی یَبْلُغَ الْكِتٰبُ اَجَلَهٗ ؕ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِیْۤ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ۚ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِیْمٌ ۟۠
இன்னும், அப்பெண்களை திருமணம் பேசுவதற்காக நீங்கள் சூசகமாக எடுத்துக் கூறியதில் அல்லது உங்கள் உள்ளங்களில் மறைத்(து வைத்)ததில் உங்கள் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களை (மணமுடிக்க) நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். நல்ல கூற்றைக் கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில்) அவர்களுக்கு ரகசியமாக (திருமண) வாக்குறுதி அளிக்காதீர்கள். விதிக்கப்பட்ட சட்டம் (இத்தா) அதன் தவணையை அடையும் வரை (அப்பெண்களுடன்) திருமண ஒப்பந்தத்தை உறுதி செய்யாதீர்கள். உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான் என்பதை அறியுங்கள். ஆகவே, அவனைப் பயந்து (அவனுக்கு மாறுசெய்வதைவிட்டு) எச்சரிக்கையாக இருங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன் என்பதையும் அறியுங்கள்.
Esegesi in lingua araba:
لَا جُنَاحَ عَلَیْكُمْ اِنْ طَلَّقْتُمُ النِّسَآءَ مَا لَمْ تَمَسُّوْهُنَّ اَوْ تَفْرِضُوْا لَهُنَّ فَرِیْضَةً ۖۚ— وَّمَتِّعُوْهُنَّ ۚ— عَلَی الْمُوْسِعِ قَدَرُهٗ وَعَلَی الْمُقْتِرِ قَدَرُهٗ ۚ— مَتَاعًا بِالْمَعْرُوْفِ ۚ— حَقًّا عَلَی الْمُحْسِنِیْنَ ۟
பெண்களை - அவர்களை நீங்கள் தொடாமல் (-உடலுறவு வைக்காமல்) இருக்கும்போது; அல்லது, அவர்களுக்கு மஹ்ரை நிர்ணயிக்காமல் இருக்கும்போது - நீங்கள் விவாகரத்து செய்தால் (அது) உங்கள் மீது அறவே குற்றமில்லை. அவர்களுக்கு (தலாக் விடப்பட்ட பெண்களுக்கு) நல்ல முறையில் பொருள் கொடுங்கள். (தலாக் செய்த) செல்வந்தர் மீது அவருடைய (பொருளாதார) அளவு(க்கு)ம் (தலாக் செய்த) ஏழை மீது அவருடைய (பொருளாதார) அளவு(க்கு)ம் (தலாக் விடப்பட்ட பெண்களுக்கு பொருளை அன்பளிப்பு செய்வது) கடமையாகும். நல்லறம் புரிவோர் மீது (இது) கடமையாகும்.
Esegesi in lingua araba:
وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِیْضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ اِلَّاۤ اَنْ یَّعْفُوْنَ اَوْ یَعْفُوَا الَّذِیْ بِیَدِهٖ عُقْدَةُ النِّكَاحِ ؕ— وَاَنْ تَعْفُوْۤا اَقْرَبُ لِلتَّقْوٰی ؕ— وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَیْنَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
இன்னும், அவர்களுக்கு ஒரு மஹ்ரை நீங்கள் நிர்ணயித்து விட்டிருக்க, அவர்களைத் தொடுவதற்கு (-உடலுறவுக்கு) முன்னதாகவே அவர்களை நீங்கள் விவாகரத்து செய்தால் நீங்கள் நிர்ணயித்ததில் பாதி (அப்பெண்களுக்கு) கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் (-மனைவிகள்) மன்னித்தால் அல்லது எவனுடைய கையில் திருமண ஒப்பந்தம் இருக்கிறதோ அவன் (-கணவன்) மன்னித்தால் தவிர. (மனைவி பாதி மஹ்ரையும் வாங்காமல் விடலாம். அல்லது, கணவன் முழு மஹ்ரையும் கொடுக்கலாம்.) ஆயினும், (ஆண்களாகிய) நீங்கள் மன்னி(த்து முழு மஹ்ரையும் கொடு)ப்பது இறை அச்சத்திற்கு மிக நெருக்கமா(ன செயலா)கும். உங்களுக்கு மத்தியில் (ஒருவர் மற்றவருக்கு) உதவுவதை மறக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.
Esegesi in lingua araba:
حٰفِظُوْا عَلَی الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰی ۗ— وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِیْنَ ۟
(எல்லாத்) தொழுகைகளையும், (குறிப்பாக) நடுத்தொழுகையையும் பேணி பாதுகாத்து வழமையாக நிறைவேற்றி வாருங்கள். இன்னும், (தொழுகையில்) அல்லாஹ்விற்குப் பணிந்தவர்களாக நில்லுங்கள்.
Esegesi in lingua araba:
فَاِنْ خِفْتُمْ فَرِجَالًا اَوْ رُكْبَانًا ۚ— فَاِذَاۤ اَمِنْتُمْ فَاذْكُرُوا اللّٰهَ كَمَا عَلَّمَكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ۟
ஆக, நீங்கள் (ஓர் இடத்தில் நின்று தொழும்போது எதிரிகள் தாக்குவார்கள் என்று) பயந்தால், அப்போது நடந்தவர்களாக அல்லது வாகனித்தவர்களாக (தொழுங்கள்). நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் நீங்கள் அறிந்திருக்காதவற்றை அவன் உங்களுக்குக் கற்பித்(து அருள் புரிந்)தது போன்று (தொழுகையிலும் அதற்கு வெளியிலும்) அல்லாஹ்வை (புகழ்ந்து நன்றியுடன்) நினைவு கூருங்கள்.
Esegesi in lingua araba:
وَالَّذِیْنَ یُتَوَفَّوْنَ مِنْكُمْ وَیَذَرُوْنَ اَزْوَاجًا ۖۚ— وَّصِیَّةً لِّاَزْوَاجِهِمْ مَّتَاعًا اِلَی الْحَوْلِ غَیْرَ اِخْرَاجٍ ۚ— فَاِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْ مَا فَعَلْنَ فِیْۤ اَنْفُسِهِنَّ مِنْ مَّعْرُوْفٍ ؕ— وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
உங்களில் எவர்கள் மரணிக்கிறார்களோ, இன்னும் மனைவிகளை விட்டுச் செல்கிறார்களோ அவர்கள் தங்கள் மனைவிகளுக்கு ஓராண்டு வரை (அவர்களை தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றாமல் இருப்பதற்கும் (அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான) பொருள்களை (-செலவுகளை) வழங்குமாறும் (வாரிசுகளுக்கு) மரண சாசனம் கூறவும். ஆக, அவர்கள் (தாமாகவே) வெளியேறினால், நல்ல முறையில் அவர்கள் தங்களை (மறுமணத்திற்கு) தயார் செய்வதில் (பொறுப்பாளர்களாகிய) உங்கள் மீது(ம் அவர்கள் மீதும்) அறவே குற்றமில்லை. (அவர்கள் செய்தது விரும்பத்தக்க நல்ல செயல்தான்.) அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
Esegesi in lingua araba:
وَلِلْمُطَلَّقٰتِ مَتَاعٌ بِالْمَعْرُوْفِ ؕ— حَقًّا عَلَی الْمُتَّقِیْنَ ۟
விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் பொருள் உதவி செய்ய வேண்டும். அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீது அது கடமையாகும்.
Esegesi in lingua araba:
كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟۠
நீங்கள் சிந்தித்து புரிவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு விவரிக்கிறான்.
Esegesi in lingua araba:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ خَرَجُوْا مِنْ دِیَارِهِمْ وَهُمْ اُلُوْفٌ حَذَرَ الْمَوْتِ ۪— فَقَالَ لَهُمُ اللّٰهُ مُوْتُوْا ۫— ثُمَّ اَحْیَاهُمْ ؕ— اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟
(நபியே!) மரணத்தின் பயத்தால் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களோ பல ஆயிரங்கள் இருந்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களை நோக்கி, ‘இறந்து விடுங்கள்’ எனக் கூறினான். பிறகு, அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது (பெரும்) அருளுடையவன் ஆவான். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
وَقَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் என்பதை அறியுங்கள்.
Esegesi in lingua araba:
مَنْ ذَا الَّذِیْ یُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَیُضٰعِفَهٗ لَهٗۤ اَضْعَافًا كَثِیْرَةً ؕ— وَاللّٰهُ یَقْبِضُ وَیَبْصُۜطُ ۪— وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
அழகிய கடனாக அல்லாஹ்விற்குக் கடன் கொடுப்பவர் யார்? (அல்லாஹ்) அவருக்கு அதைப் பல மடங்குகளாக பெருக்கித் தருவான். அல்லாஹ் (தான் நாடியவருக்கு) சுருக்கியும் கொடுக்கிறான், (தான் நாடியவருக்கு) விசாலமாகவும் கொடுக்கிறான். அவனிடமே (நீங்கள் எல்லோரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Esegesi in lingua araba:
اَلَمْ تَرَ اِلَی الْمَلَاِ مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ مِنْ بَعْدِ مُوْسٰی ۘ— اِذْ قَالُوْا لِنَبِیٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُّقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ— قَالَ هَلْ عَسَیْتُمْ اِنْ كُتِبَ عَلَیْكُمُ الْقِتَالُ اَلَّا تُقَاتِلُوْا ؕ— قَالُوْا وَمَا لَنَاۤ اَلَّا نُقَاتِلَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَقَدْ اُخْرِجْنَا مِنْ دِیَارِنَا وَاَبْنَآىِٕنَا ؕ— فَلَمَّا كُتِبَ عَلَیْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟
(நபியே!) மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளைச் சேர்ந்த (அந்த) பிரமுகர்களை நீர் கவனிக்கவில்லையா? “எங்களுக்கு ஓர் அரசரை அனுப்புவீராக! அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரிவோம்” என்று தங்களது நபியிடம் அவர்கள் கூறியபோது, “போர் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால் நீங்கள் போர் புரியாமல் இருக்கக்கூடுமா?’’ என்று அ(ந்த நபியான)வர் கூறினார். “அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரியாதிருக்க எங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நாங்கள் எங்கள் இல்லங்கள் இன்னும் எங்கள் சந்ததிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம்” என்று அவர்கள் கூறினார்கள். ஆக, போர் அவர்கள் மீது கடமையாக்கப்பட்டபோது அவர்களில் குறைவானவர்களைத் தவிர (எல்லோரும் போரை விட்டு) விலகிவிட்டார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன் ஆவான்.
Esegesi in lingua araba:
وَقَالَ لَهُمْ نَبِیُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوْتَ مَلِكًا ؕ— قَالُوْۤا اَنّٰی یَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَیْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ یُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ ؕ— قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰىهُ عَلَیْكُمْ وَزَادَهٗ بَسْطَةً فِی الْعِلْمِ وَالْجِسْمِ ؕ— وَاللّٰهُ یُؤْتِیْ مُلْكَهٗ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
இன்னும், அவர்களுடைய நபி, “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்’’ என்று அவர்களுக்குக் கூறினார். “எங்கள் மீது ஆட்சி (செலுத்த) அவருக்கு (தகுதி) எப்படி இருக்கும்? அவரைவிட நாங்கள் ஆட்சிக்கு மிகவும் தகுதியுடையவர்கள். அவர் செல்வத்தின் வசதி கொடுக்கப்படவில்லையே’’ என்று (அம்மக்கள்) கூறினார்கள். “நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்தான். இன்னும், (போர்க்) கல்வியிலும், உடலிலும் ஏராளமான ஆற்றலை (அபரிமிதமான திறமையை) அவருக்கு அதிகம் கொடுத்திருக்கிறான். அல்லாஹ், தான் நாடியவருக்கே தனது ஆட்சியைத் தருவான். அல்லாஹ் விசாலமானவன் மிக அறிந்தவன்’’ என்று (அந்த தூதர்) கூறினார்.
Esegesi in lingua araba:
وَقَالَ لَهُمْ نَبِیُّهُمْ اِنَّ اٰیَةَ مُلْكِهٖۤ اَنْ یَّاْتِیَكُمُ التَّابُوْتُ فِیْهِ سَكِیْنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَبَقِیَّةٌ مِّمَّا تَرَكَ اٰلُ مُوْسٰی وَاٰلُ هٰرُوْنَ تَحْمِلُهُ الْمَلٰٓىِٕكَةُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟۠
இன்னும், “நிச்சயமாக அவருடைய ஆட்சிக்குரிய அத்தாட்சி பேழை உங்களிடம் வருவதாகும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து ஆறுதலும் மூஸாவின் குடும்பத்தார் மற்றும் ஹாரூனுடைய குடும்பத்தார் விட்டுச் சென்றதிலிருந்து மீதப்பொருட்களும் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி திட்டமாக உண்டு’’ என்று அவர்களுடைய நபி அவர்களுக்குக் கூறினார்.
Esegesi in lingua araba:
فَلَمَّا فَصَلَ طَالُوْتُ بِالْجُنُوْدِ ۙ— قَالَ اِنَّ اللّٰهَ مُبْتَلِیْكُمْ بِنَهَرٍ ۚ— فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَیْسَ مِنِّیْ ۚ— وَمَنْ لَّمْ یَطْعَمْهُ فَاِنَّهٗ مِنِّیْۤ اِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِیَدِهٖ ۚ— فَشَرِبُوْا مِنْهُ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ ؕ— فَلَمَّا جَاوَزَهٗ هُوَ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ ۙ— قَالُوْا لَا طَاقَةَ لَنَا الْیَوْمَ بِجَالُوْتَ وَجُنُوْدِهٖ ؕ— قَالَ الَّذِیْنَ یَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِ ۙ— كَمْ مِّنْ فِئَةٍ قَلِیْلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِیْرَةً بِاِذْنِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ مَعَ الصّٰبِرِیْنَ ۟
ஆக, தாலூத் படைகளுடன் புறப்பட்டபோது, அவர் கூறினார்: “நிச்சயமாக அல்லாஹ் ஓர் ஆற்றின் மூலம் உங்களைச் சோதிப்பான். ஆகவே, எவர் அதிலிருந்து குடித்தாரோ அவர் என்னைச் சேர்ந்தவரில்லை. எவர் அதைச் சுவைக்கவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சேர்ந்தவர். தன் கரத்தால் கையளவு நீர் அள்ளி குடித்தவரைத் தவிர. (அந்தளவு குடிப்பது அவர் மீது குற்றமில்லை.)” ஆக, அவர்களில் குறைவானவர்களைத் தவிர (எல்லோரும்) அதிலிருந்து (அதிகம்) குடித்தார்கள். அவரும் அவருடன் நம்பிக்கை கொண்ட (கையளவு தண்ணீர் குடித்த)வர்களும் அதைக் கடந்தபோது, (அதிகம் பருகியவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய படைகளுடனும் (போர் புரிய) இன்று எங்களுக்கு அறவே சக்தியில்லை என்று கூறி (போரில் கலந்து கொள்ளாமல் விலகி)னார்கள். எவர்கள், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்பவர்கள் என அறிந்தார்களோ, அவர்கள் கூறினார்கள்: “அதிகமான கூட்டத்தை எத்தனையோ குறைவான கூட்டம் அல்லாஹ்வின் அனுமதியினால் வென்றுள்ளன. அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.’’
Esegesi in lingua araba:
وَلَمَّا بَرَزُوْا لِجَالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَاۤ اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟ؕ
இன்னும், அவர்கள் (-தாலூத்தும் அவரின் படையும்) ஜாலூத்திற்கும் அவனுடைய படைகளுக்கும் முன்னால் வந்தபோது, “எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையை இறக்கு! இன்னும், எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து! இன்னும், நிராகரிப்பாளர்களாகிய மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவு’’ என்று கூறினார்கள்.
Esegesi in lingua araba:
فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ۫— وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا یَشَآءُ ؕ— وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰكِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟
ஆக, அல்லாஹ்வின் அனுமதியினால் (தாலூத்தின் படையினர்) அவர்களைத் தோற்கடித்தார்கள். தாவூது, ஜாலூத்தை கொன்றார். இன்னும், அல்லாஹ் அவருக்கு ஆட்சியையும் ஞானத்தையும் கொடுத்தான். இன்னும், அவன் தான் நாடியதிலிருந்து அவருக்கு கற்பித்தான். அல்லாஹ் - மக்களை அவர்களில் (உள்ள நல்லோர்) சிலரின் மூலம் (பாவம் செய்த) சிலரை (தண்டனையிலிருந்து) - பாதுகாக்க வில்லையென்றால் இப்பூமி அழிந்திருக்கும். எனினும், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார்கள் மீது (பெரும்) அருளுடையவன் ஆவான்.
Esegesi in lingua araba:
تِلْكَ اٰیٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَیْكَ بِالْحَقِّ ؕ— وَاِنَّكَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟
இவை, அல்லாஹ்வுடைய (கண்ணியமான குர்ஆன்) வசனங்களாகும். இவற்றை உமக்கு உண்மையுடன் நாம் ஓதிக் காண்பிக்கிறோம். இன்னும் நிச்சயமாக நீர் (நாம் அனுப்பிய) தூதர்களில் உள்ளவர்தான்.
Esegesi in lingua araba:
تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰی بَعْضٍ ۘ— مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍ ؕ— وَاٰتَیْنَا عِیْسَی ابْنَ مَرْیَمَ الْبَیِّنٰتِ وَاَیَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ وَلٰكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا ۫— وَلٰكِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یُرِیْدُ ۟۠
அத்தூதர்கள் - அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கினோம். அல்லாஹ் எவருடன் பேசினானோ அ(த்தகைய)வரும் அவர்களில் இருக்கிறார். இன்னும், அவர்களில் சிலரைப் பதவிகளால் அவன் உயர்த்தினான். இன்னும், மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். இன்னும், (ஜிப்ரீல் என்ற) பரிசுத்த ஆத்மாவின் மூலம் அவருக்கு உதவினோம். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்குப் பின் வந்தவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னர் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அவர்கள் (தங்களுக்குள் கொள்கையில்) கருத்து வேறுபாடு கொண்டார்கள். ஆக, அவர்களில் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டவரும் உண்டு. இன்னும், அவர்களில் (அல்லாஹ்வை) நிராகரித்தவரும் உண்டு. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (தங்களுக்குள்) சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அல்லாஹ் தான் நாடுவதைச் செய்கிறான்.
Esegesi in lingua araba:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِمَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ یَوْمٌ لَّا بَیْعٌ فِیْهِ وَلَا خُلَّةٌ وَّلَا شَفَاعَةٌ ؕ— وَالْكٰفِرُوْنَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
நம்பிக்கையாளர்களே! ஒரு நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியதிலிருந்து தர்மம் புரியுங்கள். அதில் வியாபாரமும் நட்பும், பரிந்துரையும் இருக்காது. (மறுமை நாளை) நிராகரிப்பவர்கள்தான் (பெரும்) அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
Esegesi in lingua araba:
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— اَلْحَیُّ الْقَیُّوْمُ ۚ۬— لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ ؕ— لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— مَنْ ذَا الَّذِیْ یَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ ؕ— یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ ۚ— وَلَا یُحِیْطُوْنَ بِشَیْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ— وَسِعَ كُرْسِیُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ ۚ— وَلَا یَـُٔوْدُهٗ حِفْظُهُمَا ۚ— وَهُوَ الْعَلِیُّ الْعَظِیْمُ ۟
அல்லாஹ் - அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் (என்றும்) உயிருள்ளவன், (தன்னில்) நிலையானவன். (படைப்புகளை நிர்வகிப்பவன்.) அவனுக்குள் சிறு உறக்கமும் பெரும் நித்திரையும் நிகழாது. (-அவனை சிறு உறக்கமும் பெரும் நித்திரையும் ஆட்கொள்ளாது.) வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்குரியனவே. அவனின் அனுமதியுடனே தவிர அவனிடம் (எவருக்கும்) யார் பரிந்துரைப்பார்? அவர்களுக்கு முன்னுள்ளதையும் அவர்களுக்குப் பின்னுள்ளதையும் (எல்லாக் காலத்தையும்) அவன் நன்கறிவான். அவன் நாடியதைத் தவிர அவனுடைய அறிவிலிருந்து எதையும் அவர்கள் சூழ்ந்தறிய மாட்டார்கள். அவனுடைய குர்சிய் - பாதஸ்தலம், வானங்களையும் பூமியையும் விட விசாலமாக (-பெரியதாக) இருக்கிறது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமளிக்காது. அவன் மிக உயர்வானவன், மிக மகத்தானவன் ஆவான்.
Esegesi in lingua araba:
لَاۤ اِكْرَاهَ فِی الدِّیْنِ ۚ— قَدْ تَّبَیَّنَ الرُّشْدُ مِنَ الْغَیِّ ۚ— فَمَنْ یَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَیُؤْمِنْ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰی ۗ— لَا انْفِصَامَ لَهَا ؕ— وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
இஸ்லாமில் (இணைவதில்) அறவே நிர்ப்பந்தமில்லை. வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி மிகத் தெளிவாகி விட்டது. (மௌட்டீகத்திலிருந்து, மூடத்தனத்திலிருந்து விலகி பகுத்தறிவும், அறிவு ஞானமும் மிகத் தெளிவாகிவிட்டன.) ஆக, எவர் ஷைத்தானை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறாரோ அவர் மிக உறுதியான வளையத்தை பற்றிப்பிடித்துக் கொண்டார். அறவே, அ(ந்)த (வளையத்தி)ற்குத் துண்டிப்பு இல்லை. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்.
Esegesi in lingua araba:
اَللّٰهُ وَلِیُّ الَّذِیْنَ اٰمَنُوْا یُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ۬— وَالَّذِیْنَ كَفَرُوْۤا اَوْلِیٰٓـُٔهُمُ الطَّاغُوْتُ یُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَی الظُّلُمٰتِ ؕ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠
அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் உதவியாளன் ஆவான். இருள்களிலிருந்து ஒளியை நோக்கி அவன் அவர்களை வெளியேற்றுகிறான். இன்னும், நிராகரிப்பவர்களோ அவர்களின் உதவியாளர்கள் ஷைத்தான்கள் ஆவார்கள். அவர்கள் அவர்களை ஒளியிலிருந்து இருள்களை நோக்கி வெளியேற்றுகிறார்கள். அவர்கள் (எல்லோரும்) நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Esegesi in lingua araba:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْ حَآجَّ اِبْرٰهٖمَ فِیْ رَبِّهٖۤ اَنْ اٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ ۘ— اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّیَ الَّذِیْ یُحْیٖ وَیُمِیْتُ ۙ— قَالَ اَنَا اُحْیٖ وَاُمِیْتُ ؕ— قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ یَاْتِیْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِیْ كَفَرَ ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۚ
(நபியே!) இப்ராஹீமிடம் அவருடைய இறைவன் விஷயத்தில் தர்க்கித்தவனை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ், அவனுக்கு ஆட்சியைக் கொடுத்ததால் (திமிரில் அவன் இப்படி தர்க்கித்தான்). “என் இறைவன், உயிர்ப்பிக்கிறான். இன்னும் மரணிக்கச் செய்கிறான்’’ என்று இப்ராஹீம் கூறியபோது, அவனோ “நானும் உயிர்ப்பிப்பேன். இன்னும் மரணிக்கச் செய்வேன்’’ என்று கூறினான். இப்ராஹீம் கூறினார்: “நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து கொண்டு வருகிறான். ஆக, நீ அதை மேற்கிலிருந்து கொண்டு வா.’’ ஆக, (அதற்கு பதில் சொல்ல முடியாமல்) நிராகரித்த(அ)வன் வாயடைத்துப்போனான். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.
Esegesi in lingua araba:
اَوْ كَالَّذِیْ مَرَّ عَلٰی قَرْیَةٍ وَّهِیَ خَاوِیَةٌ عَلٰی عُرُوْشِهَا ۚ— قَالَ اَنّٰی یُحْیٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا ۚ— فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ ؕ— قَالَ كَمْ لَبِثْتَ ؕ— قَالَ لَبِثْتُ یَوْمًا اَوْ بَعْضَ یَوْمٍ ؕ— قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ اِلٰی طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ یَتَسَنَّهْ ۚ— وَانْظُرْ اِلٰی حِمَارِكَ۫— وَلِنَجْعَلَكَ اٰیَةً لِّلنَّاسِ وَانْظُرْ اِلَی الْعِظَامِ كَیْفَ نُنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا ؕ— فَلَمَّا تَبَیَّنَ لَهٗ ۙ— قَالَ اَعْلَمُ اَنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
அல்லது ஒரு கிராமத்தை - அது (வசிப்பாரற்று) தன் முகடுகள் மீது விழுந்திருக்க - (அதைக்) கடந்து சென்றாரே அவரைப் போன்று ஒருவரை நீர் கவனிக்கவில்லையா? “இ(ந்த கிராமத்)தை, அது இறந்த பின்னர் அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான்?’’ என்று அவர் கூறினார். ஆக, அல்லாஹ் அவருக்கு நூறு ஆண்டுகள் வரை மரணத்தைக் கொடுத்தான், பிறகு, அவரை அவன் உயிர்ப்பித்தான். அல்லாஹ் கூறினான்: “நீர் எத்தனை (காலம் இங்கே) தங்கினீர்?’’ அவர் கூறினார்: “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு தங்கினேன்.’’ அல்லாஹ் கூறினான்: “மாறாக! நீர் நூறு ஆண்டுகள் (இங்கு) தங்கினீர். ஆக, உமது உணவையும், உமது பானத்தையும் நீர் பார்ப்பீராக! அவை கெட்டுப் போகவில்லை. இன்னும் உமது கழுதையைப் பார்ப்பீராக!. (அது செத்து மக்கிவிட்டது.) உம்மை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்). இன்னும், (கழுதையின்) எலும்புகளைப் பார்ப்பீராக, எவ்வாறு அவற்றை அசைத்து (சிலவற்றுக்கு மேல் சிலவற்றை) உயர்த்துகிறோம்; பிறகு அவற்றுக்கு மாமிசத்தைப் போர்த்துகிறோம்!! (இறந்த பிராணியை அல்லாஹ் உயிர்ப்பித்தது) தெளிவாக தெரிந்தபோது, “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை(க் கண்கூடாக) நான் அறிகிறேன்’’ என்று அவர் கூறினார்.
Esegesi in lingua araba:
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِیْ كَیْفَ تُحْیِ الْمَوْتٰی ؕ— قَالَ اَوَلَمْ تُؤْمِنْ ؕ— قَالَ بَلٰی وَلٰكِنْ لِّیَطْمَىِٕنَّ قَلْبِیْ ؕ— قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّیْرِ فَصُرْهُنَّ اِلَیْكَ ثُمَّ اجْعَلْ عَلٰی كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ یَاْتِیْنَكَ سَعْیًا ؕ— وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠
இன்னும், இப்ராஹீம் “என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கிறாய் என்பதை நீ எனக்குக் காண்பிப்பாயாக!’’ எனக் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “(இப்ராஹீமே!) நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?’’ எனக் கூறினான். (அல்லாஹ்வே!) அவ்வாறில்லை. “(நான் நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்.) எனினும், எனது உள்ளம் நிம்மதி பெறுவதற்காக (அதைக் காண்பிக்கும்படி உன்னிடம் வேண்டுகிறேன்)’’ எனக் கூறினார். பறவைகளில் நான்கைப் பிடித்து, அவற்றை உம்முடன் பழக்குவீராக! பிறகு (அவற்றைப் பல துண்டுகளாக்கி உம்மை சுற்றி உள்ள மலைகளில்) ஒவ்வொரு மலையின் மீதும் அவற்றிலிருந்து ஒரு பகுதியை ஆக்குவீராக! பிறகு, அவற்றை அழைப்பீராக! அவை (உயிர் பெற்று) உம்மிடம் விரைந்து வரும். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் என்பதை அறிந்து கொள்வீராக!” என்று (அல்லாஹ்) கூறினான்.
Esegesi in lingua araba:
مَثَلُ الَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِیْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ؕ— وَاللّٰهُ یُضٰعِفُ لِمَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களை தர்மம் புரிபவர்களின் உதாரணம், ஏழு கதிர்களை முளைக்க வைத்த ஒரு விதையின் உதாரணத்தைப் போன்றாகும். ஒவ்வொரு கதிரிலும் நூறு விதைகள் வந்தன. அல்லாஹ், தான் நாடுபவர்களுக்கு (நற்கூலியை)ப் பன்மடங்காக்குகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.
Esegesi in lingua araba:
اَلَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ثُمَّ لَا یُتْبِعُوْنَ مَاۤ اَنْفَقُوْا مَنًّا وَّلَاۤ اَذًی ۙ— لَّهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
எவர்கள் தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்தார்களோ, பிறகு தாங்கள் தர்மம் செய்ததை பின்தொடர்ந்து சொல்லிக்காட்டுவதையும் துன்புறுத்துவதையும் செய்யவில்லையோ அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. இன்னும் அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
قَوْلٌ مَّعْرُوْفٌ وَّمَغْفِرَةٌ خَیْرٌ مِّنْ صَدَقَةٍ یَّتْبَعُهَاۤ اَذًی ؕ— وَاللّٰهُ غَنِیٌّ حَلِیْمٌ ۟
துன்புறுத்தல் பின்தொடர்கிற தர்மத்தை விட, (-ஒருவருக்கு தர்மம் செய்துவிட்டு, பிறகு அவரை துன்புறுத்துவதை விட) நல்ல சொல்லும் மன்னிப்பும் சிறந்ததாகும் (-அழகிய முறையில், “இல்லை” என்று சொல்லி அனுப்பிவிடுவதும் தர்மம் கேட்டவர் மீது கோபிக்காமல் மன்னித்துவிடுவதும் சிறந்த நடைமுறையாகும்). அல்லாஹ் மகா செல்வந்தன் (எத்தேவையுமற்றவன்), பெரும் சகிப்பாளன் ஆவான்.
Esegesi in lingua araba:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰی ۙ— كَالَّذِیْ یُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ— فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَیْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ؕ— لَا یَقْدِرُوْنَ عَلٰی شَیْءٍ مِّمَّا كَسَبُوْا ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟
நம்பிக்கையாளர்களே! எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல், மக்களுக்கு காண்பிப்பதற்காகத் தனது செல்வத்தைத் தர்மம் செய்(து அதன் நன்மையை வீணாக்கிவிடு)கிறாரோ அவரைப் போன்று (நீங்கள் கொடுத்த) உங்கள் தர்மங்க(ளின் நன்மைக)ளை - (அவற்றை) சொல்லிக் காட்டுவதாலும் (தர்மம் பெற்றவரை) துன்புறுத்துவதாலும் - வீணாக்காதீர்கள். (செய்த தர்மத்தின் நன்மையை வீணாக்கிய) அவனின் உதாரணம், ஒரு வழுக்குப்பாறையின் உதாரணத்தைப் போன்றாகும். அதன் மீது மண் (படர்ந்து) இருந்தது. ஆக, அடை மழை அதன் மீது பெய்தது. ஆகவே, அதை(க் கழுவி) வெறும் பாறையாக விட்டுவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தர்மத்தின் நன்மையை முகஸ்துதியும், சொல்லிக்காட்டுதலும் அழித்துவிடும்.) (இத்தகைய செயலை செய்த) அவர்கள் (தர்மம்) செய்ததில் (நன்மைகள்) எதையும் பெறுவதற்கு ஆற்றல் பெற மாட்டார்கள். (மன முரண்டாக) நிராகரிக்கின்ற மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.
Esegesi in lingua araba:
وَمَثَلُ الَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ وَتَثْبِیْتًا مِّنْ اَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ اَصَابَهَا وَابِلٌ فَاٰتَتْ اُكُلَهَا ضِعْفَیْنِ ۚ— فَاِنْ لَّمْ یُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
இன்னும், எவர்கள் தங்களது செல்வங்களை அல்லாஹ்வின் திருப்தியைத் தேடியும் தங்கள் உள்ளங்களில் (இறை நம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் தர்மம் செய்கிறார்களோ அவர்களின் (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை)யிலுள்ள ஒரு தோட்டத்தின் உதாரணத்தைப் போன்றாகும். அ(ந்த தோட்டத்)தை அடைமழை அடைந்தது. ஆகவே, அது இரு மடங்குகளாக தன் பலனைத் தந்தது. ஆக, அதை அடைமழை அடையாவிட்டாலும் சிறு தூறல் அதை அடைவது போதும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
Esegesi in lingua araba:
اَیَوَدُّ اَحَدُكُمْ اَنْ تَكُوْنَ لَهٗ جَنَّةٌ مِّنْ نَّخِیْلٍ وَّاَعْنَابٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ— لَهٗ فِیْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ ۙ— وَاَصَابَهُ الْكِبَرُ وَلَهٗ ذُرِّیَّةٌ ضُعَفَآءُ ۖۚ— فَاَصَابَهَاۤ اِعْصَارٌ فِیْهِ نَارٌ فَاحْتَرَقَتْ ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ ۟۠
உங்களில் ஒருவர் - அவருக்கு பேரீச்சங்கனிகள் இன்னும் திராட்சைகளின் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழ் ஆறுகள் ஓடுகின்றன. அதில் எல்லாப் பழங்களும் அவருக்கு இருக்கின்றன. முதுமை அவரை அடைந்தது. இயலாத பலவீனமான குழந்தைகளும் அவருக்கு இருக்கின்றனர். ஆக, (இந்த நிலையில்) நெருப்புடன் கூடிய புயல் காற்று அதை அடைந்து, அதுவோ எரித்து (சாம்பலாகி) விடுவதை - விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக, அல்லாஹ் அத்தாட்சிகளை உங்களுக்கு இவ்வாறு விவரிக்கிறான்.
Esegesi in lingua araba:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِنْ طَیِّبٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّاۤ اَخْرَجْنَا لَكُمْ مِّنَ الْاَرْضِ ۪— وَلَا تَیَمَّمُوا الْخَبِیْثَ مِنْهُ تُنْفِقُوْنَ وَلَسْتُمْ بِاٰخِذِیْهِ اِلَّاۤ اَنْ تُغْمِضُوْا فِیْهِ ؕ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَنِیٌّ حَمِیْدٌ ۟
நம்பிக்கையாளர்களே! நீங்கள் சம்பாதித்ததிலும், நாம் உங்களுக்கு பூமியிலிருந்து உற்பத்தி செய்து கொடுத்ததிலும் உள்ள நல்ல பொருள்களில் இருந்து தர்மம் செய்யுங்கள். அதிலிருந்து கெட்டதை தர்மம் செய்ய நாடாதீர்கள். (கெட்டது, உங்களுக்குக் கொடுக்கப்பட்டால்) கண் மூடியவர்களாகவே தவிர நீங்கள் அதை வாங்குபவர்களாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா செல்வந்தன் (எத்தேவையுமற்றவன்), பெரும் புகழாளன் என்பதை அறியுங்கள்.
Esegesi in lingua araba:
اَلشَّیْطٰنُ یَعِدُكُمُ الْفَقْرَ وَیَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ ۚ— وَاللّٰهُ یَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ؕ— وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
ஷைத்தான் உங்களுக்கு வறுமையை அச்சுறுத்துகிறான். இன்னும், மானக்கேடான (கஞ்சத்தனத்)தை உங்களுக்கு ஏவுகிறான். அல்லாஹ் (உங்கள் தர்மத்திற்கு) தன்னிடமிருந்து மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.
Esegesi in lingua araba:
یُّؤْتِی الْحِكْمَةَ مَنْ یَّشَآءُ ۚ— وَمَنْ یُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِیَ خَیْرًا كَثِیْرًا ؕ— وَمَا یَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ ۟
அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு அறிவு ஞானத்தை தருகிறான். எவர் அறிவு ஞானம் தரப்படுகிறாரோ திட்டமாக அதிக நன்மை தரப்பட்டார். நிறைவான அறிவுடையவர்கள் தவிர (யாரும்) உபதேசம் பெறமாட்டார்.
Esegesi in lingua araba:
وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ نَّفَقَةٍ اَوْ نَذَرْتُمْ مِّنْ نَّذْرٍ فَاِنَّ اللّٰهَ یَعْلَمُهٗ ؕ— وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟
இன்னும், தர்மத்தில் எதை நீங்கள் தர்மம் செய்தாலும் அல்லது நேர்ச்சையில் எதை நேர்ச்சை செய்து நிறைவேற்றினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். இன்னும், அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் யாரும் இல்லை.
Esegesi in lingua araba:
اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِیَ ۚ— وَاِنْ تُخْفُوْهَا وَتُؤْتُوْهَا الْفُقَرَآءَ فَهُوَ خَیْرٌ لَّكُمْ ؕ— وَیُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَیِّاٰتِكُمْ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
தர்மங்களை நீங்கள் வெளிப்படுத்தினால் அவை நன்றே. அவற்றை நீங்கள் மறைத்து, அவற்றை ஏழைகளுக்குத் தந்தால் அதுவும் உங்களுக்குச் சிறந்ததுதான். இன்னும், உங்கள் பாவங்களில் (அல்லாஹ் நாடிய) சிலவற்றை உங்களை விட்டு போக்கிவிடுவான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Esegesi in lingua araba:
لَیْسَ عَلَیْكَ هُدٰىهُمْ وَلٰكِنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ— وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَلِاَنْفُسِكُمْ ؕ— وَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَآءَ وَجْهِ اللّٰهِ ؕ— وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ یُّوَفَّ اِلَیْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ۟
(நபியே! நீர் எவர்களை இஸ்லாமின் பக்கம் அழைக்கிறீர்களோ) அவர்களை நேர்வழி செலுத்துவது உம் மீது கடமை அல்ல. (உம்மீது நேர்வழியின் பக்கம் அழைப்பதுதான் கடமை.) என்றாலும், அல்லாஹ், தான் நாடியவர்களை நேர்வழி செலுத்துகிறான். செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் செய்தாலும் அது உங்களுக்கே நன்மையாகும். இன்னும், அல்லாஹ்வின் முகத்தை நாடியே தவிர, (புகழுக்காக) நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். இன்னும், (புகழை நாடாமல்) செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் செய்தாலும் அது உங்களுக்கு முழு (நன்)மையாக நிறைவேற்றப்படும். இன்னும், நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
Esegesi in lingua araba:
لِلْفُقَرَآءِ الَّذِیْنَ اُحْصِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ لَا یَسْتَطِیْعُوْنَ ضَرْبًا فِی الْاَرْضِ ؗ— یَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِیَآءَ مِنَ التَّعَفُّفِ ۚ— تَعْرِفُهُمْ بِسِیْمٰىهُمْ ۚ— لَا یَسْـَٔلُوْنَ النَّاسَ اِلْحَافًا ؕ— وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟۠
(கல்வி கற்பதற்காக அல்லது ஜிஹாது செய்வதற்காக) அல்லாஹ்வின் பாதையில் முற்றிலும் அடைக்கப்பட்ட ஏழைகளுக்கு (உங்கள் தர்மங்களை கொடுப்பது மிக ஏற்றமானதாகும்). அவர்கள் (செல்வத்தைத் தேடி) பூமியில் பயணிக்க சக்திபெற மாட்டார்கள். அறியாதவர் (அவர்களின்) ஒழுக்கத்தால் (-கையேந்தாமையால்) அவர்களைச் செல்வந்தர்கள் என நினைக்கிறார். (ஆனால்,) நீர் அவர்களை அவர்களின் (முகம் அல்லது ஆடை, அல்லது இருப்பிடத்தின்) அடையாளத்தால் (அவர்கள் தேவையுடையோர் என) அறியலாம். அவர்கள் மக்களிடம் வலியுறுத்தி யாசிக்க மாட்டார்கள். நீங்கள் செல்வத்திலிருந்து எதை தர்மம் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அ(தையும் அதன் நோக்கத்)தை(யும்) நன்கறிந்தவன் ஆவான்.
Esegesi in lingua araba:
اَلَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ سِرًّا وَّعَلَانِیَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ؔ
எவர்கள் தங்கள் செல்வங்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தர்மம் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு; அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
اَلَّذِیْنَ یَاْكُلُوْنَ الرِّبٰوا لَا یَقُوْمُوْنَ اِلَّا كَمَا یَقُوْمُ الَّذِیْ یَتَخَبَّطُهُ الشَّیْطٰنُ مِنَ الْمَسِّ ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَیْعُ مِثْلُ الرِّبٰوا ۘ— وَاَحَلَّ اللّٰهُ الْبَیْعَ وَحَرَّمَ الرِّبٰوا ؕ— فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰی فَلَهٗ مَا سَلَفَ ؕ— وَاَمْرُهٗۤ اِلَی اللّٰهِ ؕ— وَمَنْ عَادَ فَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
வட்டியைத் தின்பவர்கள் ஷைத்தான் தாக்கி பைத்தியம் பிடித்தவன் எழுவது போன்றே தவிர (மறுமையில்) எழ மாட்டார்கள். அதற்கு காரணம், “வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றுதான்’’ என நிச்சயமாக அவர்கள் கூறியதாகும். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கினான்; வட்டியைத் தடை செய்தான். ஆக, யார் தனது இறைவனிடமிருந்து உபதேசம் தனக்கு வந்த பிறகு, (வட்டியை விட்டு) அவர் விலகினால், (வட்டியில்) முன்னர் சென்றது (-வட்டி தடுக்கப்படுவதற்கு முன்னர் அவர் வாங்கிய வட்டி) அவருக்குரியது. அவருடைய காரியம் அல்லாஹ்வின் பக்கம் உள்ளது. (அல்லாஹ் அவரை மன்னிப்பான்.) யார் (உபதேசத்திற்குப் பின்னரும் வட்டியின் பக்கம்) திரும்புவார்களோ அவர்கள் நரகவாசிகள்தான் அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Esegesi in lingua araba:
یَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَیُرْبِی الصَّدَقٰتِ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِیْمٍ ۟
அல்லாஹ் வட்டியை அழிப்பான். இன்னும், தர்மங்களை வளர்ப்பான். பெரும் பாவியான மகா நிராகரிப்பாளரான ஒவ்வொருவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
Esegesi in lingua araba:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகைகளை நிலைநிறுத்தி, ஸகாத் கொடுத்தார்களோ அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِیَ مِنَ الرِّبٰۤوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
நம்பிக்கையாளர்களே! (உண்மையில்) நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், வட்டியில் மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள்.
Esegesi in lingua araba:
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ ۚ— وَاِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ ۚ— لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ ۟
ஆக, (அவ்வாறு) நீங்கள் செய்யவில்லையெனில் அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமிருந்து (உங்கள் மீது நிகழப்போகும்) ஒரு போரை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் (வட்டியிலிருந்து) திருந்தினால், உங்கள் செல்வங்களின் மூலதனம் உங்களுக்கு உண்டு. நீங்கள் (வட்டியைக் கேட்டு பிறருக்கு) அநீதி இழைக்காதீர்கள்; இன்னும், (உங்கள் அசல் தொகையை உங்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படாமல்) நீங்களும் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
Esegesi in lingua araba:
وَاِنْ كَانَ ذُوْ عُسْرَةٍ فَنَظِرَةٌ اِلٰی مَیْسَرَةٍ ؕ— وَاَنْ تَصَدَّقُوْا خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
இன்னும், வறியவர் (கடன் வாங்கி) இருந்தால் வசதி ஏற்படும் வரை (அவருக்கு) அவகாசமளித்தல் வேண்டும். இன்னும், (தர்மத்தின் நன்மையை) நீங்கள் அறிந்திருந்தால் (அதை அந்த வறியவருக்கே) நீங்கள் தர்மம் செய்வது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
Esegesi in lingua araba:
وَاتَّقُوْا یَوْمًا تُرْجَعُوْنَ فِیْهِ اِلَی اللّٰهِ ۫— ثُمَّ تُوَفّٰی كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟۠
இன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள். அதில் அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் திரும்ப கொண்டுவரப்படுவீர்கள். பிறகு, ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அது செய்தது(டைய கூலி) முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
Esegesi in lingua araba:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَایَنْتُمْ بِدَیْنٍ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی فَاكْتُبُوْهُ ؕ— وَلْیَكْتُبْ بَّیْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ ۪— وَلَا یَاْبَ كَاتِبٌ اَنْ یَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ فَلْیَكْتُبْ ۚ— وَلْیُمْلِلِ الَّذِیْ عَلَیْهِ الْحَقُّ وَلْیَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا یَبْخَسْ مِنْهُ شَیْـًٔا ؕ— فَاِنْ كَانَ الَّذِیْ عَلَیْهِ الْحَقُّ سَفِیْهًا اَوْ ضَعِیْفًا اَوْ لَا یَسْتَطِیْعُ اَنْ یُّمِلَّ هُوَ فَلْیُمْلِلْ وَلِیُّهٗ بِالْعَدْلِ ؕ— وَاسْتَشْهِدُوْا شَهِیْدَیْنِ مِنْ رِّجَالِكُمْ ۚ— فَاِنْ لَّمْ یَكُوْنَا رَجُلَیْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَآءِ اَنْ تَضِلَّ اِحْدٰىهُمَا فَتُذَكِّرَ اِحْدٰىهُمَا الْاُخْرٰی ؕ— وَلَا یَاْبَ الشُّهَدَآءُ اِذَا مَا دُعُوْا ؕ— وَلَا تَسْـَٔمُوْۤا اَنْ تَكْتُبُوْهُ صَغِیْرًا اَوْ كَبِیْرًا اِلٰۤی اَجَلِهٖ ؕ— ذٰلِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَقْوَمُ لِلشَّهَادَةِ وَاَدْنٰۤی اَلَّا تَرْتَابُوْۤا اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً حَاضِرَةً تُدِیْرُوْنَهَا بَیْنَكُمْ فَلَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَلَّا تَكْتُبُوْهَا ؕ— وَاَشْهِدُوْۤا اِذَا تَبَایَعْتُمْ ۪— وَلَا یُضَآرَّ كَاتِبٌ وَّلَا شَهِیْدٌ ؕ۬— وَاِنْ تَفْعَلُوْا فَاِنَّهٗ فُسُوْقٌ بِكُمْ ؕ— وَاتَّقُوا اللّٰهَ ؕ— وَیُعَلِّمُكُمُ اللّٰهُ ؕ— وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை (ஒருவர் மற்றவருடன்) கடனுக்கு வியாபாரம் செய்தால் அதை எழுதுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதமாக எழுதவும். எழுதுபவர் - அல்லாஹ் அவருக்கு (எழுத்தறிவை) கற்பித்துள்ளதால் - எழுத மறுக்க வேண்டாம். ஆக, அவர் எழுதவும்; கடன் வாங்கியவர் வாசகம் கூறவும்; தம் இறைவனான அல்லாஹ்வை அஞ்சவும்; அதில் எதையும் குறைக்க வேண்டாம். ஆக, கடன் வாங்கியவர், விவரமற்றவராக அல்லது பலவீனராக அல்லது வாசகம் கூற இயலாதவராக இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதமாக வாசகம் கூறவும். இன்னும், உங்கள் ஆண்களில் இரு சாட்சிகளை சாட்சியாக்கத் தேடுங்கள். ஆக, இருவரும் ஆண்களாக இல்லையென்றால் ஓர் ஆண், இரு பெண்கள் (இருக்க வேண்டும்). ஏனெனில், அவ்விருவரில் ஒருத்தி மறந்தால் மற்றவள் அவளுக்கு நினைவூட்டுவாள். சாட்சிகளில் நீங்கள் திருப்தியடைபவர்களிலிருந்து (சாட்சிகளை அமையுங்கள்). இன்னும், சாட்சிகள் (சாட்சி கூற) அழைக்கப்படும் போது அவர்கள் மறுக்க வேண்டாம். (கடன்) சிறிதோ பெரிதோ அதன் தவணை வரை அதை எழுத சோம்பல் படாதீர்கள். இது அல்லாஹ்விடம் மிக நீதமானதாகவும், சாட்சியத்திற்கு அதிகம் உறுதியானதாகவும், (கடன் தொகை அல்லது தவணைப் பற்றி) நீங்கள் சந்தேகிக்காமல் இருக்க மிக நெருக்கமாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் உங்களுக்கிடையில் அதை ரொக்கமாக நடத்துகிற வியாபாரமாக இருந்தால் தவிர. ஆக, அதை நீங்கள் எழுதாமலிருப்பது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் (கடனுக்கு) வியாபாரம் செய்தால் சாட்சி ஏற்படுத்துங்கள். இன்னும், எழுத்தாளரையும் சாட்சியையும் துன்புறுத்தக் கூடாது. நீங்கள் (துன்புறுத்தும் செயலைச்) செய்தால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். (மார்க்க சட்டங்களை) அல்லாஹ் உங்களுக்குக் கற்பிப்பான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
Esegesi in lingua araba:
وَاِنْ كُنْتُمْ عَلٰی سَفَرٍ وَّلَمْ تَجِدُوْا كَاتِبًا فَرِهٰنٌ مَّقْبُوْضَةٌ ؕ— فَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْیُؤَدِّ الَّذِی اؤْتُمِنَ اَمَانَتَهٗ وَلْیَتَّقِ اللّٰهَ رَبَّهٗ ؕ— وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ؕ— وَمَنْ یَّكْتُمْهَا فَاِنَّهٗۤ اٰثِمٌ قَلْبُهٗ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ ۟۠
இன்னும், நீங்கள் பயணத்தில் இருந்து, (கடன் பத்திரம்) எழுதுபவரை நீங்கள் பெறாவிட்டால் (அதற்கு பகரமாக) அடமானங்களை கைப்பற்றி வைக்க வேண்டும். உங்களில் சிலர் சிலரை நம்பினால், நம்பப்பட்டவர், தம்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை சரியாக நிறைவேற்றவும்! இன்னும் தமது இறைவனான அல்லாஹ்வை அவர் அஞ்சவும்! இன்னும், நீங்கள் சாட்சியத்தை மறைக்காதீர்கள்! யார் அதை மறைப்பாரோ நிச்சயமாக அவருடைய உள்ளம் பாவியாகிவிடும். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.
Esegesi in lingua araba:
لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَاِنْ تُبْدُوْا مَا فِیْۤ اَنْفُسِكُمْ اَوْ تُخْفُوْهُ یُحَاسِبْكُمْ بِهِ اللّٰهُ ؕ— فَیَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியவை ஆகும்! இன்னும், நீங்கள் உங்கள் உள்ளங்களில் உள்ளதை வெளிப்படுத்தினாலும் அல்லது அதை மறைத்தாலும் அதற்காக அல்லாஹ் உங்களுக்கு (கணக்கிட்டுக்) கூலி கொடுப்பான். ஆக, அவன் நாடுகிறவரை மன்னிப்பான்; அவன் நாடுகிறவரை தண்டிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Esegesi in lingua araba:
اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَیْهِ مِنْ رَّبِّهٖ وَالْمُؤْمِنُوْنَ ؕ— كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓىِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ ۫— لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ ۫— وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَیْكَ الْمَصِیْرُ ۟
தூதரும் நம்பிக்கையாளர்களும் தமது இறைவனிடமிருந்து தமக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டார்கள். (அவர்கள்) எல்லோரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டார்கள். இன்னும், அவர்கள் கூறினார்கள்: “அவனுடைய தூதர்களில் யார் ஒருவருக்கு மத்தியிலும் பிரிவினை காட்டமாட்டோம். இன்னும், நாங்கள் செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! நாங்கள் உன் மன்னிப்பை வேண்டுகிறோம். உன் பக்கமே (எங்கள்) மீளுமிடம் இருக்கிறது.”
Esegesi in lingua araba:
لَا یُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ؕ— لَهَا مَا كَسَبَتْ وَعَلَیْهَا مَا اكْتَسَبَتْ ؕ— رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِیْنَاۤ اَوْ اَخْطَاْنَا ۚ— رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَیْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَی الَّذِیْنَ مِنْ قَبْلِنَا ۚ— رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ ۚ— وَاعْفُ عَنَّا ۥ— وَاغْفِرْ لَنَا ۥ— وَارْحَمْنَا ۥ— اَنْتَ مَوْلٰىنَا فَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟۠
அல்லாஹ், ஓர் ஆன்மாவை அதன் வசதிக்கு மேல் (-சக்திக்கு மேல்) சிரமப்படுத்த மாட்டான். அது செய்த நல்லது அதற்கே நன்மையாக இருக்கும். இன்னும், அது செய்த கெட்டது அதற்கே பாதகமாக இருக்கும். எங்கள் இறைவா! நாங்கள் மறந்தால் அல்லது தவறிழைத்தால் எங்களைத் தண்டிக்காதே! எங்கள் இறைவா! இன்னும், எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நீ அதைச் சுமத்தியது போன்று எங்கள் மீது கடினமான (ஒப்பந்த) சுமையைச் சுமத்தாதே! எங்கள் இறைவா! இன்னும், எங்களுக்கு அறவே ஆற்றல் இல்லாததை எங்களைச் சுமக்க வைக்காதே! இன்னும், எங்களை (பாவங்களை) முற்றிலும் மன்னிப்பாயாக! இன்னும், எங்களுக்கு (எங்கள் குற்றங்களை மறைத்து எங்களை) மன்னித்து விடுவாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் மவ்லா (தலைவன், பொறுப்பாளன், உரிமையாளன், நிர்வகிப்பவன், எஜமானன், பரிபாலிப்பவன், ஆதரவாளன், அரசன்) ஆவாய்! ஆகவே நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!
Esegesi in lingua araba:
 
Traduzione dei significati Sura: Al-Baqarah
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione in tamil - Omar Sharif - Indice Traduzioni

Traduzione dei significati del Nobile Corano in tamil, a cura di Shaikh Omar Sharif bin Abdu-Ssalam

Chiudi