அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் * - மொழிபெயர்ப்பு அட்டவணை

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு அத்தியாயம்: ஸூரா அல்ஜின்   வசனம்:

ஸூரா அல்ஜின்

قُلْ اُوْحِیَ اِلَیَّ اَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوْۤا اِنَّا سَمِعْنَا قُرْاٰنًا عَجَبًا ۟ۙ
(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக ஜின்களில் சில நபர்கள் (நான் குர்ஆன் ஓதுவதை) செவியுற்றனர் என்று எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது. மேலும், அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக நாங்கள் அதிசயமான குர்ஆனை செவியுற்றோம்.
அரபு விரிவுரைகள்:
یَّهْدِیْۤ اِلَی الرُّشْدِ فَاٰمَنَّا بِهٖ ؕ— وَلَنْ نُّشْرِكَ بِرَبِّنَاۤ اَحَدًا ۟ۙ
அது, நேர்வழிக்கு வழிகாட்டுகிறது. ஆகவே, நாங்கள் அதை நம்பிக்கை கொண்டோம்; இன்னும், எங்கள் இறைவனுக்கு ஒருவரையும் நாங்கள் இணையாக்க மாட்டோம்.
அரபு விரிவுரைகள்:
وَّاَنَّهٗ تَعٰلٰی جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَّلَا وَلَدًا ۟ۙ
நிச்சயமாக விஷயமாவது, எங்கள் இறைவனின் மதிப்பு மிக உயர்ந்தது. அவன் (தனக்கு) மனைவியையும் பிள்ளைகளையும் எடுத்துக் கொள்ளவில்லை.
அரபு விரிவுரைகள்:
وَّاَنَّهٗ كَانَ یَقُوْلُ سَفِیْهُنَا عَلَی اللّٰهِ شَطَطًا ۟ۙ
இன்னும் நிச்சயமாக விஷயமாவது, எங்களில் உள்ள (-இப்லீஸ் ஆகிய) மூடன் அல்லாஹ்வின் மீது அநியாயமான (-உண்மைக்கு புறம்பான விஷயத்)தை கூறுபவனாக இருந்தான்.
அரபு விரிவுரைகள்:
وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ تَقُوْلَ الْاِنْسُ وَالْجِنُّ عَلَی اللّٰهِ كَذِبًا ۟ۙ
இன்னும், “மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல மாட்டார்கள் என்று நிச்சயமாக நாங்கள் நம்பினோம்.
அரபு விரிவுரைகள்:
وَّاَنَّهٗ كَانَ رِجَالٌ مِّنَ الْاِنْسِ یَعُوْذُوْنَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوْهُمْ رَهَقًا ۟ۙ
இன்னும் நிச்சயமாக விஷயமாவது, மனிதர்களில் உள்ள ஆண்கள் சிலர் ஜின்களில் உள்ள ஆண்கள் சிலரிடம் பாதுகாவல் தேடினர். எனவே அவர்கள் (-ஆண் ஜின்கள்) அவர்களுக்கு (மனித ஆண்களுக்கு) பயத்தை (திகிலை) அதிகப்படுத்தினர்.
அரபு விரிவுரைகள்:
وَّاَنَّهُمْ ظَنُّوْا كَمَا ظَنَنْتُمْ اَنْ لَّنْ یَّبْعَثَ اللّٰهُ اَحَدًا ۟ۙ
இன்னும் நிச்சயமாக விஷயமாவது, அவர்கள் (-ஜின்களில் உள்ள நிராகரிப்பாளர்கள்) நீங்கள் (-மனிதர்களில் உள்ள நிராகரிப்பாளர்கள்) எண்ணுவது போன்றுதான் அல்லாஹ் ஒருவரையும் (அவர் மரணித்த பின்னர் மறுமையில்) அறவே எழுப்ப மாட்டான் என்று எண்ணினர்.
அரபு விரிவுரைகள்:
وَّاَنَّا لَمَسْنَا السَّمَآءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِیْدًا وَّشُهُبًا ۟ۙ
இன்னும், நிச்சயமாக நாங்கள் வானத்தை (சென்றடைய)த் தேடினோம். ஆக, அது கடுமையான காவல்களாலும் எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதாக அதை நாங்கள் கண்டோம்.
அரபு விரிவுரைகள்:
وَّاَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ ؕ— فَمَنْ یَّسْتَمِعِ الْاٰنَ یَجِدْ لَهٗ شِهَابًا رَّصَدًا ۟ۙ
இன்னும், நிச்சயமாக நாங்கள் அ(ந்த வானத்)தில் பல இடங்களில் (வானவர்கள் பேசுகின்ற செய்தியை) ஒட்டுக்கேட்க உட்காருபவர்களாக இருந்தோம். ஆக, இப்போது யார் ஒட்டுக் கேட்பாரோ அவரை (எரிக்க) எதிர்பார்த்திருக்கின்ற எரி நட்சத்திரத்தை காண்பார்.
அரபு விரிவுரைகள்:
وَّاَنَّا لَا نَدْرِیْۤ اَشَرٌّ اُرِیْدَ بِمَنْ فِی الْاَرْضِ اَمْ اَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا ۟ۙ
இன்னும், நிச்சயமாக நாங்கள் அறியமாட்டோம், “பூமியில் உள்ளவர்களுக்கு தீமை ஏதும் நாடப்பட்டதா? அல்லது, அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர்வழியை நாடினானா?” என்று.
அரபு விரிவுரைகள்:
وَّاَنَّا مِنَّا الصّٰلِحُوْنَ وَمِنَّا دُوْنَ ذٰلِكَ ؕ— كُنَّا طَرَآىِٕقَ قِدَدًا ۟ۙ
இன்னும் நிச்சயமாக எங்களில் நல்லவர்களும் உள்ளனர். இன்னும், எங்களில் அவர்கள் அல்லாத மற்ற (தீய)வர்களும் உள்ளனர். நாங்கள் பலதரப்பட்ட பிரிவுகளாக இருந்தோம்.
அரபு விரிவுரைகள்:
وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ نُّعْجِزَ اللّٰهَ فِی الْاَرْضِ وَلَنْ نُّعْجِزَهٗ هَرَبًا ۟ۙ
இன்னும், நிச்சயமாக நாங்கள் அறிந்தோம், அதாவது “நாங்கள் பூமியில் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க அறவே முடியாது; இன்னும் நாங்கள் (அவனை விட்டும்) ஓடி (ஒளிந்து) அவனை இயலாமல் ஆக்கிவிட முடியாது (அவனை விட்டும் நாங்கள் எங்கும் தப்பிக்க முடியாது)” என்று.
அரபு விரிவுரைகள்:
وَّاَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدٰۤی اٰمَنَّا بِهٖ ؕ— فَمَنْ یُّؤْمِنْ بِرَبِّهٖ فَلَا یَخَافُ بَخْسًا وَّلَا رَهَقًا ۟ۙ
இன்னும், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை செவியுற்றபோது நாங்கள் அதை நம்பிக்கை கொண்டோம். ஆக, எவர் தன் இறைவனை நம்பிக்கை கொள்வாரோ அவர் (தனது நன்மைக்குரிய கூலி) குறைவதையும் (தான் செய்யாத குற்றத்தை தன் மீது சுமத்தப்படுகின்ற) அநியாயத்தையும் பயப்படமாட்டார்.
அரபு விரிவுரைகள்:
وَّاَنَّا مِنَّا الْمُسْلِمُوْنَ وَمِنَّا الْقٰسِطُوْنَ ؕ— فَمَنْ اَسْلَمَ فَاُولٰٓىِٕكَ تَحَرَّوْا رَشَدًا ۟
இன்னும், நிச்சயமாக நாங்கள் எங்களில் முஸ்லிம்களும் உள்ளனர். இன்னும், எங்களில் (அல்லாஹ்வை நிராகரிக்கின்ற) அநியாயக்காரர்களும் உள்ளனர். ஆக, எவர் இஸ்லாமை ஏற்றாரோ அத்தகையவர்கள்தான் நேர்வழியை நன்கு ஆராய்ந்து தேடிப் பெற்றார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَاَمَّا الْقٰسِطُوْنَ فَكَانُوْا لِجَهَنَّمَ حَطَبًا ۟ۙ
ஆக, அநியாயக்காரர்கள் நரகத்தின் எரி கொல்லிகளாக இருக்கிறார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَی الطَّرِیْقَةِ لَاَسْقَیْنٰهُمْ مَّآءً غَدَقًا ۟ۙ
இன்னும், நிச்சயமாக விஷயமாவது, அவர்கள் நேரான (இஸ்லாமிய) மார்க்கத்தில் இணைந்து உறுதியாக இருந்திருந்தால் நாம் (அவர்களுக்கு தேவையான) பலன் தரக்கூடிய அதிகமான சுத்தமான நீரை நாம் அவர்களுக்கு புகட்டி இருப்போம் (-அவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக ஆக்கி இருப்போம்).
அரபு விரிவுரைகள்:
لِّنَفْتِنَهُمْ فِیْهِ ؕ— وَمَنْ یُّعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّهٖ یَسْلُكْهُ عَذَابًا صَعَدًا ۟ۙ
(அவர்களுக்கு வாழ்க்கை வசதியை நாம் கொடுப்பதாவது, அவர்கள் நமக்கு நன்றி செலுத்துகின்றார்களா என்று) அதன்மூலம் அவர்களை நாம் சோதிப்பதற்காக ஆகும். இன்னும், எவர் தன் இறைவனின் அறிவுரையை புறக்கணிப்பாரோ அவரை மிகக் கடினமான சிரமமான தண்டனையில் அவன் புகுத்துவான்.
அரபு விரிவுரைகள்:
وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا ۟ۙ
இன்னும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்விற்கு உரியன. ஆகவே, அல்லாஹ்வுடன் வேறு ஒருவரை வணங்காதீர்கள்!
அரபு விரிவுரைகள்:
وَّاَنَّهٗ لَمَّا قَامَ عَبْدُ اللّٰهِ یَدْعُوْهُ كَادُوْا یَكُوْنُوْنَ عَلَیْهِ لِبَدًا ۟ؕ۠
இன்னும், நிச்சயமாக விஷயமாவது, அல்லாஹ்வின் அடியார் (முஹம்மத்) அவனை வணங்குவதற்காக நின்றபோது அவர்கள் (-அரேபியர்கள்) எல்லோரும் ஒன்று சேர்ந்து அவருக்கு எதிராக ஆகிவிட முயற்சித்தனர்.
அரபு விரிவுரைகள்:
قُلْ اِنَّمَاۤ اَدْعُوْا رَبِّیْ وَلَاۤ اُشْرِكُ بِهٖۤ اَحَدًا ۟
(நபியே!) கூறுவீராக! நான் வணங்குவதெல்லாம் என் இறைவனை (மட்டும்)தான். ஒருவரையும் அவனுக்கு நான் இணையாக்க மாட்டேன்.
அரபு விரிவுரைகள்:
قُلْ اِنِّیْ لَاۤ اَمْلِكُ لَكُمْ ضَرًّا وَّلَا رَشَدًا ۟
(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நான் உங்களுக்கு கெடுதிக்கோ (-உங்களை விட்டும் அதை அகற்றுவதற்கும்) நல்லதுக்கோ (-உங்களுக்கு அதை செய்து தருவதற்கோ) சக்தி பெறமாட்டேன்.
அரபு விரிவுரைகள்:
قُلْ اِنِّیْ لَنْ یُّجِیْرَنِیْ مِنَ اللّٰهِ اَحَدٌ ۙ۬— وَّلَنْ اَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ۟ۙ
(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நான் (அவனுக்கு மாறுசெய்தால்) என்னை அல்லாஹ்விடமிருந்து ஒருவரும் அறவே காப்பாற்ற மாட்டார். அவனை அன்றி நான் (வேறு ஓர்) ஒதுங்குமிடத்தை (எனக்கு) அறவே காணமாட்டேன்.
அரபு விரிவுரைகள்:
اِلَّا بَلٰغًا مِّنَ اللّٰهِ وَرِسٰلٰتِهٖ ؕ— وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ۟ؕ
(எனினும்,) அல்லாஹ்விடமிருந்து (செய்திகளை) எடுத்துரைப்பதற்கும் அவனுடைய தூதுத்துவ செய்திகளுக்கும் தவிர (வேறு எதற்கும் நான் உரிமை பெற மாட்டேன்). எவர் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வாரோ நிச்சயமாக அவருக்கு நரக நெருப்புதான் உண்டு. அதில் அவர்கள் எப்போதும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
அரபு விரிவுரைகள்:
حَتّٰۤی اِذَا رَاَوْا مَا یُوْعَدُوْنَ فَسَیَعْلَمُوْنَ مَنْ اَضْعَفُ نَاصِرًا وَّاَقَلُّ عَدَدًا ۟
இறுதியாக, அவர்கள் தாங்கள் எச்சரிக்கப்பட்டதை (கண்கூடாக) பார்த்தால் அவர்கள் அறிந்து கொள்வார்கள், “எவர் உதவியாளரால் மிக பலவீனமானவர், எண்ணிக்கையால் மிக குறைவானவர்” என்று.
அரபு விரிவுரைகள்:
قُلْ اِنْ اَدْرِیْۤ اَقَرِیْبٌ مَّا تُوْعَدُوْنَ اَمْ یَجْعَلُ لَهٗ رَبِّیْۤ اَمَدًا ۟
(நபியே!) கூறுவீராக! “நீங்கள் எதை எச்சரிக்கப்படுகிறீர்களோ அது சமீபமாக உள்ளதா? அல்லது, அதற்கு என் இறைவன் ஒரு அவகாசத்தை ஆக்கி இருக்கின்றானா? என்று நான் அறியமாட்டேன்.”
அரபு விரிவுரைகள்:
عٰلِمُ الْغَیْبِ فَلَا یُظْهِرُ عَلٰی غَیْبِهٖۤ اَحَدًا ۟ۙ
(அவன்தான்) மறைவான விஷயங்களை நன்கறிந்தவன். ஆக, அவன், தனது மறைவான விஷயங்களை ஒருவருக்கும் வெளிப்படுத்த மாட்டான்.
அரபு விரிவுரைகள்:
اِلَّا مَنِ ارْتَضٰی مِنْ رَّسُوْلٍ فَاِنَّهٗ یَسْلُكُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖ رَصَدًا ۟ۙ
எனினும், அவன் (தனது) தூதர்களில் எவர்களை திருப்திகொண்டானோ அவர்களைத் தவிர. ஆக, (அவர்களுக்கு மட்டும் மறைவான விஷயங்களில் சிலவற்றை வெளிப்படுத்துவான்.) நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னாலிருந்தும் அவர்களுக்குப் பின்னாலிருந்தும் (கண்காணிக்கின்ற) பாதுகாவலர்களை அனுப்புவான்.
அரபு விரிவுரைகள்:
لِّیَعْلَمَ اَنْ قَدْ اَبْلَغُوْا رِسٰلٰتِ رَبِّهِمْ وَاَحَاطَ بِمَا لَدَیْهِمْ وَاَحْصٰی كُلَّ شَیْءٍ عَدَدًا ۟۠
அவர்கள் (-முந்திய தூதர்கள் எல்லோரும்) தங்கள் இறைவனின் தூதுத்துவ செய்திகளை திட்டமாக எடுத்துரைத்தார்கள் என்று அவர் (-முஹம்மத் நபி) அறிவதற்காக (அவன் தூதர்களுக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் பாதுகாவலர்களை அனுப்பி வைத்தான்). இன்னும், அவன் அவர்களிடம் உள்ளவற்றை சூழ்ந்தறிவான். இன்னும், எல்லா பொருள்களையும் அவன் எண்ணிக்கையால் (அவை என்னென்ன, எத்தனை என துல்லியமாக) கணக்கிட்டுள்ளான்.
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: ஸூரா அல்ஜின்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் - மொழிபெயர்ப்பு அட்டவணை

புனித அல் குர்ஆனுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு. அஷ்ஷெய்க் உமர் ஷரீப் அப்துல் சலாம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள்.

மூடுக