Check out the new design

Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. * - Tərcumənin mündəricatı


Mənaların tərcüməsi Surə: ən-Nəhl   Ayə:
وَقَالَ الَّذِیْنَ اَشْرَكُوْا لَوْ شَآءَ اللّٰهُ مَا عَبَدْنَا مِنْ دُوْنِهٖ مِنْ شَیْءٍ نَّحْنُ وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ دُوْنِهٖ مِنْ شَیْءٍ ؕ— كَذٰلِكَ فَعَلَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۚ— فَهَلْ عَلَی الرُّسُلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
16.35. தமது வணக்கத்தில் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கியவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் நாம் அவனுக்கு எதனையும் இணைவைக்காமல் அவனை மாத்திரமே வணங்க வேண்டுமென நாடியிருந்தால் நாங்களோ எங்கள் முன்னோர்களோ அவனுக்கு இணையாக யாரையும் ஆக்கியிருக்க மாட்டோம். அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கியிருக்கமாட்டோம். நாங்கள் எதனையும் தடைசெய்யக்கூடாது என அவன் நாடியிருந்தால் நாம் எதையும் தடைசெய்திருக்க மாட்டோம்.” இந்தத் தவறான ஆதாரத்தையே இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்பாளர்களும் கூறினார்கள். எடுத்துரைக்குமாறு ஏவப்பட்டதை தெளிவாக எடுத்துரைப்பதே தூதர்கள் மீதுள்ள கடமையாகும். அவர்கள் எடுத்துரைத்து விட்டார்கள். அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு விருப்பத்தையும் தேர்வு செய்யும் உரிமையையும் வழங்கி, அவர்களின்பால் தனது தூதர்களையும் அனுப்பிய பிறகு அவர்கள் விதியை தங்களுக்கு ஆதாரமாக கூறமுடியாது.
Ərəbcə təfsirlər:
وَلَقَدْ بَعَثْنَا فِیْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ ۚ— فَمِنْهُمْ مَّنْ هَدَی اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَیْهِ الضَّلٰلَةُ ؕ— فَسِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِیْنَ ۟
16.36. முந்தைய ஒவ்வொரு சமூகத்திற்கும் அவன் தூதர்களை அனுப்பி அவர்களுக்குப் பின்வருமாறு கட்டளையிட்டான்: “நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனைத் தவிர சிலைகளையோ ஷைத்தான்களையோ இன்னபிற பொருள்களையோ வணங்கக்கூடாது.” அவர்களில் அல்லாஹ்வின் அருளைப் பெற்று அவனை நம்பிக்கை கொண்டு, தங்களின் தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றியவர்களும் இருந்தனர். இன்னும் சிலர் அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு அல்லாஹ்வின் அருளுக்கு உட்படாதோரும் இருந்தனர். எனவே அவர்களின் மீது வழிகேடு உறுதியாகி விட்டது. தண்டனை மற்றும் அழிவுக்குள்ளான நிராகரிப்பாளர்களின் கதி என்னவாயிற்று என்பதை உங்கள் கண்களால் பார்ப்பதற்காக பூமியில் பயணம் செய்யுங்கள்.
Ərəbcə təfsirlər:
اِنْ تَحْرِصْ عَلٰی هُدٰىهُمْ فَاِنَّ اللّٰهَ لَا یَهْدِیْ مَنْ یُّضِلُّ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟
16.37. -தூதரே!- நீர் என்னதான் முயற்சி செய்து இவர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களின் நேர்வழியில் ஆர்வம் கொண்டு அதற்குரிய வழிகளில் ஈடுபட்டாலும், யாரை அவன் வழிகெடுத்து விட்டானோ அவர்களுக்கு நேர்வழிகாட்ட மாட்டான். அல்லாஹ்வைத் தவிர வேதனையிலிருந்து அவர்களைக் காக்கும் உதவியாளர்கள் யாரும் இல்லை.
Ərəbcə təfsirlər:
وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ ۙ— لَا یَبْعَثُ اللّٰهُ مَنْ یَّمُوْتُ ؕ— بَلٰی وَعْدًا عَلَیْهِ حَقًّا وَّلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟ۙ
16.38. உயிர் கொடுத்து எழுப்பப்படுவதைப் பொய்பிக்கக்கூடிய இவர்கள் உறுதியாக, எல்லை கடந்து, சத்தியமிட்டுக் கூறுகிறார்கள், “அல்லாஹ் மரணித்தவர்களை ஒருபோதும் எழுப்ப மாட்டான் என்று.” அவர்களிடம் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மாறாக அவன் மரணித்தவர்களை நிச்சயம் உயிர் கொடுத்து எழுப்புவான். இது அவனுடைய உறுதியான வாக்குறுதியாகும். ஆயினும் மக்களில் பெரும்பாலோர் மரணித்தவர்களை அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்புவான் என்பதை அறியமாட்டார்கள். எனவேதான் மறுமையில் உயிர் கொடுத்து எழுப்புவதை மறுக்கிறார்கள்.
Ərəbcə təfsirlər:
لِیُبَیِّنَ لَهُمُ الَّذِیْ یَخْتَلِفُوْنَ فِیْهِ وَلِیَعْلَمَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّهُمْ كَانُوْا كٰذِبِیْنَ ۟
16.39. அவர்கள் முரண்பட்டுக்கொண்டிருந்த ஓரிறைக் கொள்கை, தூதுத்துவம், மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புதல் ஆகிய விஷயங்களின் உண்மை நிலையை தெளிவுபடுத்துவதற்காகவும் அல்லாஹ்வுக்கு இணைகள் உண்டு என்ற தமது வாதத்திலும், மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதை மறுத்ததிலும் அவர்கள் பொய்யர்களே என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் மறுமைநாளில் அவர்கள் அனைவரையும் அவன் உயிர்கொடுத்து எழுப்புவான்.
Ərəbcə təfsirlər:
اِنَّمَا قَوْلُنَا لِشَیْءٍ اِذَاۤ اَرَدْنٰهُ اَنْ نَّقُوْلَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟۠
16.40. நாம் மரணித்தவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்ப விரும்பினால் எதுவும் நம்மை தடுத்துவிட முடியாது. நாம் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்ய விரும்பினால் ’ஆகு’ என்றுதான் கூறுவோம். அது சந்தேகமில்லாமல் ஆகிவிடும்.
Ərəbcə təfsirlər:
وَالَّذِیْنَ هَاجَرُوْا فِی اللّٰهِ مِنْ بَعْدِ مَا ظُلِمُوْا لَنُبَوِّئَنَّهُمْ فِی الدُّنْیَا حَسَنَةً ؕ— وَلَاَجْرُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟ۙ
16.41. நிராகரிப்பாளர்களால் துன்புறுத்தப்பட்டு நெருக்கடிக்குள்ளான பிறகு தங்களின் வீடுகளையும், செல்வங்களையும், குடும்பத்தையும் விட்டுவிட்டு அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக நிராகரித்த நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டை நோக்கி புலம்பெயர்ந்தவர்களுக்கு இவ்வுலகில் தங்குமிடத்தை வழங்குவோம். அங்கு அவர்கள் கண்ணியமிக்கவர்களாகி விடுவார்கள். மறுமையில் கிடைக்கும் கூலி அனைத்தையும்விட சிறந்ததாகும். எனெனில் அங்குதான் சுவனம் உண்டு. புலம்பெயராமல் பின்தங்கியவர்கள் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையை அறிந்திருந்தால் ஒருபோதும் பின்தங்கியிருக்க மாட்டார்கள்.
Ərəbcə təfsirlər:
الَّذِیْنَ صَبَرُوْا وَعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟
16.42. அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்த இவர்கள்தாம் தங்களின் சமூகத்தார் அளித்த துன்பங்களையும், நாட்டையும், வீட்டையும் பிரிந்ததனால் ஏற்பட்ட வலியைத் தாங்கிக்கொண்டார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள். அவர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் தங்கள் இறைவனையே சார்ந்திருக்கிறார்கள். எனவேதான் அல்லாஹ் அவர்களுக்கு மிகப் பெரும் இக்கூலியை வழங்கியுள்ளான்.
Ərəbcə təfsirlər:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• العاقل من يعتبر ويتعظ بما حل بالضالين المكذبين كيف آل أمرهم إلى الدمار والخراب والعذاب والهلاك.
1. பொய்பித்து வழிகெட்டவர்களுக்கு ஏற்பட்ட இறுதி முடிவான சேதத்தையும், அழிவையையும், வேதனையையும் கொண்டு உபதேசம், படிப்பினை பெற்றுக்கொள்பவனே அறிவாளியாவான்.

• الحكمة من البعث والمعاد إظهار الله الحقَّ فيما يختلف فيه الناس من أمر البعث وكل شيء.
2. மறுமையில் படைப்புகள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதன் நோக்கம், உயிர் கொடுத்து எழுப்புதல் போன்ற உலகில் மக்கள் முரண்பட்டுக்கொண்டிருந்த அனைத்து விஷயங்களிலும் அல்லாஹ் சத்தியத்தை தெளிவுபடுத்துவதாகும்.

• فضيلة الصّبر والتّوكل: أما الصّبر: فلما فيه من قهر النّفس، وأما التّوكل: فلأن فيه الثقة بالله تعالى والتعلق به.
3. பொறுமை மற்றும் அல்லாஹ்வையே சார்ந்திருத்தலின் சிறப்பு தெளிவாகிறது. பொறுமையினால் மனிதன் தன் மனதைக் அடக்கிக்கொள்கின்றான். அல்லாஹ்வையே நம்பி அவனுடனே சம்பந்தப்பட்டிருத்தல் தவக்குலில் உண்டு.

• جزاء المهاجرين الذين تركوا ديارهم وأموالهم وصبروا على الأذى وتوكّلوا على ربّهم، هو الموطن الأفضل، والمنزلة الحسنة، والعيشة الرّضية، والرّزق الطّيّب الوفير، والنّصر على الأعداء، والسّيادة على البلاد والعباد.
4. தமது வீடுகளையும், சொத்துகளையும் துறந்து புலம்பெயர்ந்து நோவினைகளை பொறுமையாக எதிர்கொண்டு தமது இறைவனைச் சார்ந்திருப்போருக்கான கூலி, சிறந்த வசிப்பிடமும் உயர்ந்த அந்தஸ்தும், விரும்பிய வாழ்வும், தாராளமான நல்ல வாழ்வாதாரமும், எதிரிகளின் மீது வெற்றியும் நாடுகளையும் அடியார்களையும் ஆட்சி செய்வதுமாகும்.

 
Mənaların tərcüməsi Surə: ən-Nəhl
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. - Tərcumənin mündəricatı

Tərcümə "Quran araşdırmaları Təfsir Mərkəzi" tərəfindən yayımlanmışdır.

Bağlamaq