Check out the new design

Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. * - Tərcumənin mündəricatı


Mənaların tərcüməsi Surə: əz-Zumər   Ayə:
فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَبَ عَلَی اللّٰهِ وَكَذَّبَ بِالصِّدْقِ اِذْ جَآءَهٗ ؕ— اَلَیْسَ فِیْ جَهَنَّمَ مَثْوًی لِّلْكٰفِرِیْنَ ۟
39.32. அவனுக்கு இணை, துணை, பிள்ளை போன்ற அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்றவற்றை அவனுக்கு உண்டெனக் இணைத்துக் கூறுபவனை விட மிகப்பெரிய அநியாயக்காரன் வேறுயாருமில்லை. தூதர் வஹி மூலமாக கொண்டுவந்ததை பொய்ப்பிப்பவனை விட மிகப்பெரிய அநியாயக்காரன் வேறுயாருமில்லை. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதர் கொண்டுவந்ததை பொய்ப்பிப்பவர்களின் வசிப்பிடம் நரகத்தில் இல்லையா? ஆம், நிச்சயமாக அதில் அவர்களுக்கு வசிப்பிடங்கள் உள்ளன.
Ərəbcə təfsirlər:
وَالَّذِیْ جَآءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهٖۤ اُولٰٓىِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ ۟
39.33. தம் சொல்லிலும் செயலிலும் உண்மையைக் கடைபிடித்து, நம்பிய நிலையில் அதனை உண்மைப்படுத்தி, அதனடிப்படையில் செயல்பட்ட நபிமார்களும் ஏனையவர்களுமே உண்மையில் அல்லாஹ்வை அஞ்சியவர்களாவர். அவர்கள் தம் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருக்கிறார்கள்.
Ərəbcə təfsirlər:
لَهُمْ مَّا یَشَآءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ؕ— ذٰلِكَ جَزٰٓؤُا الْمُحْسِنِیْنَ ۟ۚۖ
39.34. அவர்களுக்கு தாங்கள் விரும்புகின்ற நிலையான இன்பங்கள் எல்லாம் அவர்களின் இறைவனிடத்தில் கிடைக்கும். இதுதான் தம்மைப் படைத்தவனுடனும் அவனது அடியார்களுடனும் நல்ல முறையில் செயல்படுவோருக்கு வழங்கப்படும் கூலியாகும்.
Ərəbcə təfsirlər:
لِیُكَفِّرَ اللّٰهُ عَنْهُمْ اَسْوَاَ الَّذِیْ عَمِلُوْا وَیَجْزِیَهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ الَّذِیْ كَانُوْا یَعْمَلُوْنَ ۟
39.35. இது, அவர்கள் தங்களின் இறைவன் பக்கம் திரும்பி அவனிடம் மன்னிப்புக் கோரியதினால் அவர்கள் உலகில் செய்த பாவங்களைப் போக்கி அவர்கள் செய்த நற்செயல்களுக்குக் நல்ல முறையில் கூலி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான்.
Ərəbcə təfsirlər:
اَلَیْسَ اللّٰهُ بِكَافٍ عَبْدَهٗ ؕ— وَیُخَوِّفُوْنَكَ بِالَّذِیْنَ مِنْ دُوْنِهٖ ؕ— وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟ۚ
39.36. அல்லாஹ் தன் அடியார் முஹம்மதுக்கு அவரின் உலக மற்றும் மறுமை விவகாரங்களிலும் போதுமானவனாகவும் எதிரிகளிடமிருந்து அவரைப் பாதுகாப்வனாகவும் இல்லையா? ஆம், நிச்சயமாக அவன் அவருக்குப் போதுமானவன். -தூதரே!- அவர்கள் அறியாமையினால் அல்லாஹ்வை விடுத்து தாங்கள் வணங்கும் சிலைகள் உமக்கு தீங்கிழைக்கும் என உம்மை அச்சுறுத்துகிறார்கள். அல்லாஹ் யாரைக் கைவிட்டு நேர்வழிபெறுவதற்கு உதவி புரியவில்லையோ அவருக்கு நேர்வழிகாட்டி உதவி புரியம் எவரும் இல்லை.
Ərəbcə təfsirlər:
وَمَنْ یَّهْدِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّضِلٍّ ؕ— اَلَیْسَ اللّٰهُ بِعَزِیْزٍ ذِی انْتِقَامٍ ۟
39.37. அல்லாஹ் யாருக்கு நேர்வழிகாட்ட உதவி புரிகிறானோ அவரை யாராலும் வழிகெடுக்க முடியாது. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் யாராலும் மிகைக்க முடியாதவனாகவும் தன்னை நிராகரிப்பவன் மற்றும் தனக்கு மாறுசெய்பவன் ஆகியோரைத் தண்டிப்பவனாகவும் இல்லையா? ஆம், நிச்சயமாக அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும் தண்டிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றான்.
Ərəbcə təfsirlər:
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَیَقُوْلُنَّ اللّٰهُ ؕ— قُلْ اَفَرَءَیْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اِنْ اَرَادَنِیَ اللّٰهُ بِضُرٍّ هَلْ هُنَّ كٰشِفٰتُ ضُرِّهٖۤ اَوْ اَرَادَنِیْ بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكٰتُ رَحْمَتِهٖ ؕ— قُلْ حَسْبِیَ اللّٰهُ ؕ— عَلَیْهِ یَتَوَكَّلُ الْمُتَوَكِّلُوْنَ ۟
39.38. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம், வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? என்று கேட்டால் “அவற்றை அல்லாஹ்தான் படைத்தான்” என்று நிச்சயம் கூறுவார்கள். அவர்கள் வணங்கும் தெய்வங்களின் இயலாமையை வெளிப்படுத்தும் விதத்தில் அவர்களிடம் கேட்பீராக: “அல்லாஹ்வைவிடுத்து நீங்கள் வணங்கும் இந்த தெய்வங்களைக்குறித்து எனக்கு கூறுங்கள். அல்லாஹ் எனக்கு தீங்கிழைக்க நாடினால் அவற்றால் என்னைவிட்டு அந்தத் தீங்கினை அகற்ற முடியுமா? அல்லது அவன் என்மீது அருள்புரிய நாடினால் அவற்றால் அவனது அருளை என்னைவிட்டும் தடுக்க முடியுமா?” நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். என்னுடைய எல்லா விவகாரங்களிலும் அவனையே நான் சார்ந்துள்ளேன். சார்ந்திருப்பவர்கள் அவனை மட்டுமே சார்ந்திருக்கின்றனர்.”
Ərəbcə təfsirlər:
قُلْ یٰقَوْمِ اعْمَلُوْا عَلٰی مَكَانَتِكُمْ اِنِّیْ عَامِلٌ ۚ— فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟ۙ
39.39. -தூதரே!- நீர் கூறுவீராக: “என் சமூகமே! நீங்கள் விரும்புகின்ற இணைவைத்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே செயல்பட்டுக்கொண்டிருங்கள். நிச்சயமாக என் இறைவன் எனக்குக் கட்டளையிட்டவாறு அவனை ஒருமைப்படுத்தி அழைத்து வணக்கத்தை அவனுக்கு மாத்திரம் செய்துகொண்டும் இருக்கிறேன். ஒவ்வொரு வழியின் விளைவையும் நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள்.”
Ərəbcə təfsirlər:
مَنْ یَّاْتِیْهِ عَذَابٌ یُّخْزِیْهِ وَیَحِلُّ عَلَیْهِ عَذَابٌ مُّقِیْمٌ ۟
39.40. இவ்வுலகில் இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடையும், மறுமையில் என்றும் அழியாத, துண்டிக்கப்படாத நிலையான வேதனை யார் மீது இறங்கும்? என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
Ərəbcə təfsirlər:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• عظم خطورة الافتراء على الله ونسبة ما لا يليق به أو بشرعه له سبحانه.
1. அல்லாஹ்வின் மீது அவதூறு கூறி, அவனுக்கும் அவனது மார்க்கத்திற்கும் பொருத்தமற்றவற்றை இணைத்துக் கூறுவதின் மிகப் பெரிய பாரதூரம்.

• ثبوت حفظ الله للرسول صلى الله عليه وسلم أن يصيبه أعداؤه بسوء.
2. எதிரிகளினால் ஏற்படும் தீங்குகளில் இருந்து அல்லாஹ் தன் தூதரைப் பாதுகாப்பது நிரூபனமாகிறது.

• الإقرار بتوحيد الربوبية فقط بغير توحيد الألوهية، لا ينجي صاحبه من عذاب النار.
3. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் அவன் மட்டுமே படைத்துப் பராமரிப்பவன் என்று ஏற்றுக்கொள்வது நரக வேதனையிலிருந்து அவரை காப்பாற்றாது.

 
Mənaların tərcüməsi Surə: əz-Zumər
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. - Tərcumənin mündəricatı

Tərcümə "Quran araşdırmaları Təfsir Mərkəzi" tərəfindən yayımlanmışdır.

Bağlamaq