Check out the new design

Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. * - Tərcumənin mündəricatı


Mənaların tərcüməsi Surə: əz-Zuxruf   Ayə:
وَلِبُیُوْتِهِمْ اَبْوَابًا وَّسُرُرًا عَلَیْهَا یَتَّكِـُٔوْنَ ۟ۙ
43.34. அவர்களின் வீடுகளுக்கு வாயில்களையும் அவர்கள் சாய்ந்துகொள்ளக்கூடிய கட்டில்களையும் ஆக்கியிருப்போம். இது அவர்களை விட்டுப்பிடிப்பதற்கும் சோதனைக்குமாகும்.
Ərəbcə təfsirlər:
وَزُخْرُفًا ؕ— وَاِنْ كُلُّ ذٰلِكَ لَمَّا مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ؕ— وَالْاٰخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِیْنَ ۟۠
43.35. அவர்களுக்கு தங்கத்தையும் ஏற்படுத்தியிருப்போம். இவையனைத்தும் இவ்வுலக இன்பங்கள்தாம். அவை நிரந்தரமற்றவை என்பதனால் அதனால் ஏற்படும் பயன்களோ குறைவானவையே. -தூதரே!- அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் இன்பங்களே அல்லாஹ்விடத்தில் சிறந்ததாகும்.
Ərəbcə təfsirlər:
وَمَنْ یَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَیِّضْ لَهٗ شَیْطٰنًا فَهُوَ لَهٗ قَرِیْنٌ ۟
43.36. யார் இந்த குர்ஆனை உரிய முறையில் சிந்திக்காததனால் அதனைப் புறக்கணிப்பாரோ அவர் ஷைத்தானின் ஆதிக்கம் மூலம் தண்டிக்கப்படுவார். அவன் அவருடன் சேர்ந்திருந்து மென்மேலும் அவரை வழிகெடுப்பான்.
Ərəbcə təfsirlər:
وَاِنَّهُمْ لَیَصُدُّوْنَهُمْ عَنِ السَّبِیْلِ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ ۟
43.37. குர்ஆனைப் புறக்கணிப்பவர்கள் மீது சாட்டப்பட்டுள்ள உடனிருக்கும் இந்த ஷைத்தான்கள் திட்டமாக அவர்களை அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் தடுக்கிறார்கள். அவர்கள் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்துவதில்லை. அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகியிருப்பதில்லை. இருந்தும் நிச்சயமாக தாங்கள் சத்தியத்தின்பால் நேர்வழிகாட்டப்படுவதாக அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் தங்களின் வழிகேட்டிலிருந்து பாவமன்னிப்புக் கோரி மீளுவதுமில்லை.
Ərəbcə təfsirlər:
حَتّٰۤی اِذَا جَآءَنَا قَالَ یٰلَیْتَ بَیْنِیْ وَبَیْنَكَ بُعْدَ الْمَشْرِقَیْنِ فَبِئْسَ الْقَرِیْنُ ۟
43.38. நம்மை நினைவுகூராமல் புறக்கணித்தவன் மறுமை நாளில் நம்மிடம் வரும்போது ஆசைப்பட்டவனாக கூறுவான்: “-நண்பனே!- எனக்கும் உனக்குமிடையே கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையே தொலைவு இருப்பது போன்று இருந்திருக்கக்கூடாதா? நண்பர்களில் மிகவும் மோசமானவன் நீ.”
Ərəbcə təfsirlər:
وَلَنْ یَّنْفَعَكُمُ الْیَوْمَ اِذْ ظَّلَمْتُمْ اَنَّكُمْ فِی الْعَذَابِ مُشْتَرِكُوْنَ ۟
43.39. அல்லாஹ் மறுமை நாளில் நிராகரிப்பாளர்களிடம் கூறுவான்: “நீங்கள் உலகில் -இணைவைத்து பாவங்கள் புரிந்து உங்களுக்கு நீங்களே அநியாயம் இழைத்துள்ள நிலையில்- இன்றைய தினம் வேதனையில் பங்காளிகளாக இருப்பதால் உங்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் உங்கள் பங்காளிகள் உங்களின் வேதனையில் எதனையும் உங்களுக்காக சுமக்கமாட்டார்கள்.”
Ərəbcə təfsirlər:
اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ اَوْ تَهْدِی الْعُمْیَ وَمَنْ كَانَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
43.40. நிச்சயமாக இவர்கள் சத்தியத்தை செவியேற்க முடியாத செவிடர்கள்; அதனைப் பார்க்க முடியாத குருடர்கள். -தூதரே!- செவிடனுக்குச் செவியேற்கச் செய்யவோ குருடனுக்கு நேர்வழிகாட்டவோ அல்லது நேரான வழியைவிட்டும் தெளிவான வழிகேட்டில் இருப்பவருக்கு நேர்வழிகாட்டவோ நீர் சக்திபெறுவீரா?.
Ərəbcə təfsirlər:
فَاِمَّا نَذْهَبَنَّ بِكَ فَاِنَّا مِنْهُمْ مُّنْتَقِمُوْنَ ۟ۙ
43.41. -அவர்களை தண்டிப்பதற்கு முன்பே நாம் உம்மை மரணிக்கச் செய்து- உம்மை எடுத்துக்கொண்டாலும் கூட நிச்சயமாக நாம் அவர்களை இவ்வுலகிலும் மறுவுலகிலும் வேதனை செய்து தண்டித்தே தீருவோம்.
Ərəbcə təfsirlər:
اَوْ نُرِیَنَّكَ الَّذِیْ وَعَدْنٰهُمْ فَاِنَّا عَلَیْهِمْ مُّقْتَدِرُوْنَ ۟
43.42. அல்லது நாம் அவர்களுக்கு எச்சரித்த வேதனையின் சில பகுதிகளை உமக்குக் காட்டுவோம். நிச்சயமாக நாம் அதற்கு ஆற்றலுடையோர்தாம். அவர்கள் எந்த விஷயத்திலும் நம்மை மிகைத்துவிட முடியாது.
Ərəbcə təfsirlər:
فَاسْتَمْسِكْ بِالَّذِیْۤ اُوْحِیَ اِلَیْكَ ۚ— اِنَّكَ عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
43.43. -தூதரே!- உம் இறைவன் உமக்கு வஹியாக அறிவிப்பதை பற்றிப்பிடித்துக் கொள்வீராக. அதன்படி செயல்படுவீராக. நிச்சயமாக நீர் குழப்பமற்ற சத்தியப் பாதையில் இருக்கின்றீர்.
Ərəbcə təfsirlər:
وَاِنَّهٗ لَذِكْرٌ لَّكَ وَلِقَوْمِكَ ۚ— وَسَوْفَ تُسْـَٔلُوْنَ ۟
43.44. நிச்சயமாக இந்த குர்ஆன் உமக்கும் உம் சமூகத்தினருக்கும் கண்ணியமாகும். மறுமை நாளில் அதன்மீது நம்பிக்கைகொண்டு, அதன் வழிகாட்டுதலைப் பின்பற்றி, அதன் பக்கம் அழைப்பு விடுத்ததைக் குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
Ərəbcə təfsirlər:
وَسْـَٔلْ مَنْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُّسُلِنَاۤ اَجَعَلْنَا مِنْ دُوْنِ الرَّحْمٰنِ اٰلِهَةً یُّعْبَدُوْنَ ۟۠
43.45. -தூதரே!- உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக: “நாம் அளவிலாக் கருணையாளனைத் தவிர வணங்கப்படும் வேறு தெய்வங்களை ஏற்படுத்தியிருந்தோமா என்பதை.”
Ərəbcə təfsirlər:
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَقَالَ اِنِّیْ رَسُوْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
43.46. நாம் மூஸாவை நம் சான்றுகளுடன் ஃபிர்அவ்னின் பக்கமும் அவன் சமூகத்து தலைவர்களின் பக்கமும் அனுப்பினோம். நிச்சயமாக அவர் அவர்களிடம் கூறினார்: “நிச்சயமாக நான் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன்.”
Ərəbcə təfsirlər:
فَلَمَّا جَآءَهُمْ بِاٰیٰتِنَاۤ اِذَا هُمْ مِّنْهَا یَضْحَكُوْنَ ۟
43.47. அவர் நம்முடைய சான்றுகளுடன் அவர்களிடம் வந்தபோது அவற்றைக் கண்டு பரிகாசமாக அவர்கள் சிரிக்கலானார்கள்.
Ərəbcə təfsirlər:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• خطر الإعراض عن القرآن.
1. குர்ஆனைப் புறக்கணிப்பதன் விபரீதம்.

• القرآن شرف لرسول الله صلى الله عليه وسلم ولأمته.
2. குர்ஆன் நபியவர்களுக்கும் அவர்களின் சமூகத்திற்கும் கண்ணியமாகும்.

• اتفاق الرسالات كلها على نبذ الشرك.
3. அனைத்து தூதுகளும் இணைவைப்பை எதிர்ப்பதில் ஒற்றுமைப்பட்டுள்ளது.

• السخرية من الحق صفة من صفات الكفر.
4. சத்தியத்தைப் பரிகாசம்செய்வது நிராகரிப்பின் பண்புகளில் ஒன்றாகும்.

 
Mənaların tərcüməsi Surə: əz-Zuxruf
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. - Tərcumənin mündəricatı

Tərcümə "Quran araşdırmaları Təfsir Mərkəzi" tərəfindən yayımlanmışdır.

Bağlamaq