Check out the new design

Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. * - Tərcumənin mündəricatı


Mənaların tərcüməsi Surə: əl-Casiyə   Ayə:
قُلْ لِّلَّذِیْنَ اٰمَنُوْا یَغْفِرُوْا لِلَّذِیْنَ لَا یَرْجُوْنَ اَیَّامَ اللّٰهِ لِیَجْزِیَ قَوْمًا بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
45.14. -தூதரே!- அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரை உண்மைப்படுத்தியவர்களிடம் நீர் கூறுவீராக: “உங்களுக்குத் தீங்கிழைத்த நிராகரிப்பாளர்களை மன்னித்துவிடுங்கள். அவர்கள் அல்லாஹ்வின் அருளையோ, தண்டனையையோ பொருட்படுத்துவதில்லை. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையைக் கடைப்பிடித்த நம்பிக்கையாளர்கள், வரம்புமீறிய நிராகரிப்பாளர்கள் என ஒவ்வொருவருக்கும் அவர்கள் உலகில் சம்பாதித்த செயல்களுக்கான கூலியை வழங்கிடுவான்.
Ərəbcə təfsirlər:
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ— وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؗ— ثُمَّ اِلٰی رَبِّكُمْ تُرْجَعُوْنَ ۟
45.15. யார் நற்செயல் புரிவாரோ அந்த நற்செயலால் ஏற்படும் பலன் அவரையே சாரும். அவரது செயலைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன். யார் தீய செயல் புரிகின்றாரோ அந்த தீய செயலினால் ஏற்படும் தீய விளைவான தண்டனை அவருக்கே ஏற்படும். அந்த செயலால் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் ஏற்படப் போவதில்லை. நாம் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்கிடுவதற்காக பின்னர் நீங்கள் அனைவரும் மறுமையில் நம்மிடம் மட்டுமே திரும்ப வேண்டும்.
Ərəbcə təfsirlər:
وَلَقَدْ اٰتَیْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۚ
45.16. நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு தவ்ராத்தையும் அதன் சட்டங்களைக்கொண்டு மக்களிடையே தீர்ப்பளிப்பதையும் அளித்தோம். இப்ராஹீமின் சந்ததியைச் சார்ந்த அவர்களிலிருந்தே அதிகமான நபிமார்களை ஏற்படுத்தினோம். தூய்மையான பலவற்றிலிருந்து அவர்களுக்கு வாழ்வாதாரமும் அளித்தோம். அவர்கள் வாழ்ந்த காலத்தில் அனைவரைவிடவும் அவர்களை சிறப்பித்தோம்.
Ərəbcə təfsirlər:
وَاٰتَیْنٰهُمْ بَیِّنٰتٍ مِّنَ الْاَمْرِ ۚ— فَمَا اخْتَلَفُوْۤا اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ ۙ— بَغْیًا بَیْنَهُمْ ؕ— اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
45.17. அசத்தியத்திலிருந்து சத்தியத்தைத் தெளிவுபடுத்தும் ஆதாரங்களையும் அவர்களுக்கு வழங்கினோம். முஹம்மது தூதராக அனுப்பப்பட்டு ஆதாரங்கள் அவர்களுக்கு எதிராக நிலைநாட்டப்பட்ட பிறகே அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டார்கள். பதவி மற்றும் தலைமைத்துவத்தின் மீதுள்ள மோகத்தினால் அவர்களில் சிலர் சிலருக்கு அநீதியிழைத்துக்கொண்டதே இந்த கருத்துவேறுபாட்டின் பக்கம் அவர்களை இட்டுச் சென்றது. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் உலகில் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். அப்போது யார் சத்தியவாதிகள், யார் அசத்தியவாதிகள் என்பதைத் தெளிபடுத்துவான்.
Ərəbcə təfsirlər:
ثُمَّ جَعَلْنٰكَ عَلٰی شَرِیْعَةٍ مِّنَ الْاَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟
45.18. பின்னர் தூதரே! உமக்கு முன்னர் நம்முடைய தூதர்களுக்கு நம்முடைய கட்டளைகளில் இருந்து நாம் ஏவிய ஈமானின் பக்கமும் நற்செயல்களின் பக்கமும் அழைப்பு விடுக்கும் இஸ்லாமிய ஷரீஅத்தில் உம்மை ஆக்கினோம். இந்த மார்க்கத்தைப் பின்பற்றுவீராக. சத்தியத்தை அறியாதவர்களின் மனஇச்சைகளைப் பின்பற்றாதீர். அவர்களின் மனவிருப்பங்கள் சத்தியத்தைவிட்டு வழிகெடுத்துவிடும்.
Ərəbcə təfsirlər:
اِنَّهُمْ لَنْ یُّغْنُوْا عَنْكَ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ— وَاِنَّ الظّٰلِمِیْنَ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ۚ— وَاللّٰهُ وَلِیُّ الْمُتَّقِیْنَ ۟
45.19. நிச்சயமாக சத்தியத்தை அறியாதவர்களின் மனஇச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எதனையும் உம்மைவிட்டும் அவர்களால் தடுக்க முடியாது. நிச்சயமாக அனைத்து மார்க்கங்களிலுமுள்ள அநியாயக்காரர்கள் நம்பிக்கையாளர்களுக்கு எதிராக ஒருவருக்கொருவர் உதவியாளர்களாக இருக்கின்றார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவனே உதவியாளனாவான்.
Ərəbcə təfsirlər:
هٰذَا بَصَآىِٕرُ لِلنَّاسِ وَهُدًی وَّرَحْمَةٌ لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟
45.20. நம் தூதர் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் மக்களுக்கு அசத்தியத்திலிருந்து சத்தியத்தைத் தெளிவுபடுத்தும் அத்தாட்சியாகவும் சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் உறுதியாக நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு அருளாகவும் இருக்கின்றது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் தம் இறைவன் தம்மைப் பொருந்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதன் மூலம் நேரான வழியின்பால் வழிகாட்டப்படுகிறார்கள். அவன் அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து நரகத்தைவிட்டும் தூரமாக்குகிறான்.
Ərəbcə təfsirlər:
اَمْ حَسِبَ الَّذِیْنَ اجْتَرَحُوا السَّیِّاٰتِ اَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ— سَوَآءً مَّحْیَاهُمْ وَمَمَاتُهُمْ ؕ— سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟۠
45.21. தங்களின் உறுப்புகளால் நிராகரிப்பிலும் பாவங்களிலும் ஈடுபட்டவர்களை நாம் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிபவர்களைப்போன்று ஆக்கி உலகிலும் மறுமையிலும் அவர்கள் சமமாகிவிடுவார்கள் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவர்களின் இத்தீர்ப்பு மோசமானதாகும்.
Ərəbcə təfsirlər:
وَخَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزٰی كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
45.22. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் ஓர் உயர்ந்த நோக்கத்திற்காகப் படைத்துள்ளான். அவன் அவற்றை வீணாகப் படைக்கவில்லை. அது ஒவ்வொருவருக்கும் அவர் சம்பாதித்ததற்கான கூலியை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான். நலவுக்கு நன்மையும் அல்லது தீங்கிற்கு தீமையும் உண்டு. அல்லாஹ் அவர்களின் நன்மைகளைக் குறைத்தோ தீமைகளை அதிகரித்தோ அவர்கள் மீது அநீதி இழைத்துவிட மாட்டான்.
Ərəbcə təfsirlər:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• العفو والتجاوز عن الظالم إذا لم يُظهر الفساد في الأرض، ويَعْتَدِ على حدود الله؛ خلق فاضل أمر الله به المؤمنين إن غلب على ظنهم العاقبة الحسنة.
1. அநியாயக்காரன் பூமியில் குழப்பம் விளைவிக்காமல், அல்லாஹ்வின் வரம்புகளை மீறாமல் இருந்தால் அவனைக் கண்டுகொள்ளாமல் மன்னித்து விட்டுவிடுவது அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்குக் கட்டளையிட்ட சிறந்த பண்புகளில் ஒன்றாகும். பெரும்பாலும் நல்ல முடிவு ஏற்படும் என்று கருதினால்தான் அது சிறந்ததாகும்.

• وجوب اتباع الشرع والبعد عن اتباع أهواء البشر.
2. மார்க்கத்தைப் பின்பற்றுவதும் மனிதர்களின் மனஇச்சைகளைவிட்டும் தூரமாகி இருப்பதும் கட்டாயமாகும்.

• كما لا يستوي المؤمنون والكافرون في الصفات، فلا يستوون في الجزاء.
3. எவ்வாறு நம்பிக்கையாளர்களும் நிராகரிப்பாளர்களும் பண்புகளில் சமமாக மாட்டார்களோ அதுபோன்று கூலியிலும் சமமாக மாட்டார்கள்.

• خلق الله السماوات والأرض وفق حكمة بالغة يجهلها الماديون الملحدون.
4. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் ஓர் உயர்ந்த நோக்கத்திற்கேற்ப படைத்துள்ளான். நாஸ்திகவாதிகளும் உலகாயுதவாதிகளும் அதனை அறிய மாட்டார்கள்.

 
Mənaların tərcüməsi Surə: əl-Casiyə
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. - Tərcumənin mündəricatı

Tərcümə "Quran araşdırmaları Təfsir Mərkəzi" tərəfindən yayımlanmışdır.

Bağlamaq