Check out the new design

Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. * - Tərcumənin mündəricatı


Mənaların tərcüməsi Surə: Muhəmməd   Ayə:
اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ— وَالَّذِیْنَ كَفَرُوْا یَتَمَتَّعُوْنَ وَیَاْكُلُوْنَ كَمَا تَاْكُلُ الْاَنْعَامُ وَالنَّارُ مَثْوًی لَّهُمْ ۟
47.12. நிச்சயமாக அல்லாஹ் தன்மீதும் தன் தூதர்மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்கள் தங்களின் மனஇச்சையைப் பின்பற்றி உலகில் அனுபவிக்கிறார்கள். கால்நடைகள் உண்பதைப்போல உண்கிறார்கள். அவர்களின் வயிறுகளையும் மர்ம உறுப்புகளையும் தவிர அவர்களுக்கு வேறு கவலைகள் எதுவும் இல்லை. நரகமே மறுமை நாளில் அவர்களின் ஒதுங்குகின்ற தங்குமிடமாகும்.
Ərəbcə təfsirlər:
وَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ هِیَ اَشَدُّ قُوَّةً مِّنْ قَرْیَتِكَ الَّتِیْۤ اَخْرَجَتْكَ ۚ— اَهْلَكْنٰهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ ۟
47.13. தூதரே! உம்மை வெளியேற்றிய இந்த மக்காவாசிகளைவிட முன்னர் வாழ்ந்த எத்தனையோ ஊர்மக்கள் அதிக செல்வங்களையும் பிள்ளைகளையும் பெற்றவர்களாகவும் பலம்மிக்கவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் தங்களின் தூதர்களை பொய்ப்பித்தபோது அழித்துவிட்டோம். அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வந்தபோது அதிலிருந்து அவர்களை பாதுகாத்து அவர்களுக்கு உதவிசெய்யக்கூடிய உதவியாளர்கள் யாரும் இருக்கவில்லை. எனவே நாம் மக்காவாசிகளை அழிக்க நாடினால் அது நமக்கு இயலாததல்ல.
Ərəbcə təfsirlər:
اَفَمَنْ كَانَ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّهٖ كَمَنْ زُیِّنَ لَهٗ سُوْٓءُ عَمَلِهٖ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ ۟
47.14. தம் இறைவனிடமிருந்து தெளிவான ஆதாரத்தைப் பெற்று அவனை தெளிவான அகப்பார்வையோடு வணங்கிக் கொண்டிருப்பவரும், ஷைத்தான் தீய செயலை அழகாக்கிக் காட்டி அதனால் சிலைவணக்கம் மற்றும் பாவங்களில் ஈடுபடல், தூதர்களை பொய்ப்பித்தல் ஆகிய தம் மன இச்சைகளின்பால் சாய்ந்து அதனை பின்பற்றி கொண்டிருப்பவரும் சமமாவார்களா என்ன?
Ərəbcə təfsirlər:
مَثَلُ الْجَنَّةِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ— فِیْهَاۤ اَنْهٰرٌ مِّنْ مَّآءٍ غَیْرِ اٰسِنٍ ۚ— وَاَنْهٰرٌ مِّنْ لَّبَنٍ لَّمْ یَتَغَیَّرْ طَعْمُهٗ ۚ— وَاَنْهٰرٌ مِّنْ خَمْرٍ لَّذَّةٍ لِّلشّٰرِبِیْنَ ۚ۬— وَاَنْهٰرٌ مِّنْ عَسَلٍ مُّصَفًّی ؕ— وَلَهُمْ فِیْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ وَمَغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ ؕ— كَمَنْ هُوَ خَالِدٌ فِی النَّارِ وَسُقُوْا مَآءً حَمِیْمًا فَقَطَّعَ اَمْعَآءَهُمْ ۟
47.15. -தன் கட்டளைகளைச் செயல்படுத்தி, தான் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி- தன்னை அஞ்சக்கூடியவர்களை அல்லாஹ் நுழைவிப்பதாக வாக்களித்துள்ள சுவனத்தின் வர்ணனை இதுதான்: “நீண்ட நாட்கள் சென்றாலும் மாறாத மணமும் சுவையும் உடைய நீரினைக் கொண்ட ஆறுகள் இருக்கும். மாறாத சுவையுடைய பாலாறுகளும் அருந்துபவர்களுக்குச் சுவையான மது ஆறுகளும் கலப்படமற்ற தூய்மையான தேனாறுகளும் இருக்கும். அங்கு அவர்களுக்கு தாங்கள் விரும்பும் அனைத்துவகையான கனிகளும் கிடைக்கும். இத்தனைக்கும் மேல் அல்லாஹ் அவர்களின் பாவங்கள் அனைத்தையும் போக்கி விடுவான். அவற்றிற்காக அவன் அவர்களைக் குற்றம்பிடிக்க மாட்டான். இவ்வாறு கூலியைப் பெறுபவர், வெளியேற முடியாதபடி நிரந்தரமாக நரகத்தில் தங்கி, கடும் சூடான நீர் புகட்டப்பட்டு, அதன் கடுமையான சூட்டினால் வயிற்றிலுள்ள குடல்கள் துண்டுதுண்டாக்கப்படுபவருக்குச் சமமாவாரா?
Ərəbcə təfsirlər:
وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُ اِلَیْكَ ۚ— حَتّٰۤی اِذَا خَرَجُوْا مِنْ عِنْدِكَ قَالُوْا لِلَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ مَاذَا قَالَ اٰنِفًا ۫— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ طَبَعَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ ۟
47.16. -தூதரே!- நயவஞ்சகர்களில் சிலர் ஏற்றுக்கொள்ளும் நோக்கில் அல்லாமல் புறக்கணிக்கும் எண்ணத்தில் நீர் கூறுவதைக் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். அவர்கள் உம்மிடமிருந்து வெளியேறிவிட்டால் அல்லாஹ் யாருக்கு ஞானத்தை வழங்கினானோ அவர்களிடம் எதுவும் அறியாததுபோல் புறக்கணித்தவர்களாக கேட்கிறார்கள், அவர் இப்போது என்ன கூறினார், என்று.” இவர்களின் உள்ளங்களில்தான் அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். எனவே நன்மையான எதுவும் இவர்களின் உள்ளங்களை அடையாது. அவர்கள் தங்களின் மன இச்சைகளைப் பின்பற்றினார்கள். எனவே அவை அவர்களை சத்தியத்தைவிட்டும் குருடாக்கிவிட்டது.
Ərəbcə təfsirlər:
وَالَّذِیْنَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًی وَّاٰتٰىهُمْ تَقْوٰىهُمْ ۟
47.17. யாரெல்லாம் சத்தியப் பாதையை அடைந்து தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றினார்களோ அவர்களின் இறைவன் அவர்களுக்கு நன்மையின்பால் வழிகாட்டலையும் பாக்கியத்தையும் அதிகப்படுத்துகிறான். நரகத்திலிருந்து காப்பாற்றும் செயல்களைச் செய்யும் உள்ளுதிப்பை ஏற்படுத்துகிறான்.
Ərəbcə təfsirlər:
فَهَلْ یَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَاْتِیَهُمْ بَغْتَةً ۚ— فَقَدْ جَآءَ اَشْرَاطُهَا ۚ— فَاَنّٰی لَهُمْ اِذَا جَآءَتْهُمْ ذِكْرٰىهُمْ ۟
47.18. இந்த நிராகரிப்பாளர்கள் மறுமை நாள் தங்களிடம் திடீரென அதுபற்றிய எந்தவித முன்னறிவும் இல்லாமல் வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்களா? அதன் அடையாளங்கள் வெளிப்பட்டுவிட்டன. முஹம்மது தூதராக அனுப்பப்பட்டதும் சந்திரன் பிளக்கப்பட்டதும் அவற்றில் சிலவையே. மறுமை நாள் நிகழ்ந்துவிட்டால் அவர்களால் எவ்வாறு அறிவுரை பெற்றுக்கொள்ள முடியும்?
Ərəbcə təfsirlər:
فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَلِلْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوٰىكُمْ ۟۠
47.19. -தூதரே!- நிச்சயமாக அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை என்பதை உறுதியாக அறிந்துகொள்வீராக. அல்லாஹ்விடம் உம் பாவங்களுக்காகவும் நம்பிக்கைகொண்ட ஆண்கள், பெண்கள் செய்த பாவங்களுக்காகவும் மன்னிப்புக் கோருவீராக. நீங்கள் பகலில் செயல்படுவதையும் இரவில் ஓய்வெடுப்பதையும் அல்லாஹ் அறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Ərəbcə təfsirlər:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• اقتصار همّ الكافر على التمتع في الدنيا بالمتع الزائلة.
1. அழியக்கூடிய இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பதே நிராகரிப்பாளனின் குறுகிய நோக்கமாகும்.

• المقابلة بين جزاء المؤمنين وجزاء الكافرين تبيّن الفرق الشاسع بينهما؛ ليختار العاقل أن يكون مؤمنًا، ويختار الأحمق أن يكون كافرًا.
2. நம்பிக்கையாளர்களும் நிராகரிப்பாளர்களும் பெறும் கூலியை ஒப்பிடுவது இரண்டுக்கும் மத்தியில் உள்ள பாரிய இடைவெளியைத் தெளிவுபடுத்துகிறது. அறிவாளி தான் நம்பிக்கையாளனாக இருப்பதையும் மூடன் நிராகரிப்பாளனாக இருப்பதையும் தெரிவுசெய்வதற்காகவே இது தெளிவுபடுத்தபட்டுள்ளது.

• بيان سوء أدب المنافقين مع رسول الله صلى الله عليه وسلم.
3. நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் தூதருடன் ஒழுக்கயீனமாக நடந்துகொள்வதைத் தெளிவுபடுத்தல்.

• العلم قبل القول والعمل.
4. பேசுவதற்கும் செயல்படுவதற்கும் முன்னர் கற்றுக்கொள்ள வேண்டும்.

 
Mənaların tərcüməsi Surə: Muhəmməd
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. - Tərcumənin mündəricatı

Tərcümə "Quran araşdırmaları Təfsir Mərkəzi" tərəfindən yayımlanmışdır.

Bağlamaq