Check out the new design

Qurani Kərimin mənaca tərcüməsi - Tamil dilinə tərcümə - Ömər Şərif. * - Tərcumənin mündəricatı

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

Mənaların tərcüməsi Surə: əl-İsra   Ayə:
وَاِذَا مَسَّكُمُ الضُّرُّ فِی الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُوْنَ اِلَّاۤ اِیَّاهُ ۚ— فَلَمَّا نَجّٰىكُمْ اِلَی الْبَرِّ اَعْرَضْتُمْ ؕ— وَكَانَ الْاِنْسَانُ كَفُوْرًا ۟
இன்னும், கடலில் உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால், அவனைத் தவிர நீங்கள் பிரார்த்தித்தவை (அனைத்தும் உங்கள் எண்ணங்களை விட்டு) மறைந்து விடுகின்றன. அவன் உங்களை பாதுகாத்(து கரையில் சேர்ப்பித்)தபோது (அவனை) புறக்கணிக்கிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
Ərəbcə təfsirlər:
اَفَاَمِنْتُمْ اَنْ یَّخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ اَوْ یُرْسِلَ عَلَیْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوْا لَكُمْ وَكِیْلًا ۟ۙ
ஆக, பூமியின் ஓரத்தில் அவன் உங்களை சொருகிவிடுவதை; அல்லது, உங்கள் மீது கல் மழையை அனுப்புவதை நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? பிறகு, (அவ்வாறு நிகழ்ந்து விட்டால்) உங்களுக்கு (-உங்களைப் பாதுகாக்கும்) பொறுப்பாளரை (-பாதுகாவலரை) நீங்கள் காணமாட்டீர்கள்.
Ərəbcə təfsirlər:
اَمْ اَمِنْتُمْ اَنْ یُّعِیْدَكُمْ فِیْهِ تَارَةً اُخْرٰی فَیُرْسِلَ عَلَیْكُمْ قَاصِفًا مِّنَ الرِّیْحِ فَیُغْرِقَكُمْ بِمَا كَفَرْتُمْ ۙ— ثُمَّ لَا تَجِدُوْا لَكُمْ عَلَیْنَا بِهٖ تَبِیْعًا ۟
அல்லது, மற்றொரு முறை உங்களை அவன் அதில் (-கடலில்) மீண்டும் அழைத்து சென்று, (கப்பலை) உடைத்தெரியும் காற்றை உங்கள் மீது அனுப்பி, (முன்பு புரிந்த அருளுக்கு) நீங்கள் நன்றி கெட்ட(த்தனமாக நடந்து கொண்ட)தால் உங்களை அவன் (கடலில்) மூழ்கடித்து விடுவதை நீங்கள் பயமற்று விட்டீர்களா? (அவ்வாறு செய்தால் அதன்) பிறகு, அதனை முன்னிட்டு உங்களுக்காக நம்மிடம் பழிதீர்ப்பவரை நீங்கள் காணமாட்டீர்கள்.
Ərəbcə təfsirlər:
وَلَقَدْ كَرَّمْنَا بَنِیْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِی الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰی كَثِیْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِیْلًا ۟۠
திட்டவட்டமாக ஆதமுடைய சந்ததிகளை (-மனிதர்களை) நாம் கண்ணியப்படுத்தினோம். இன்னும், கரையிலும் கடலிலும் அவர்கள் வாகனித்து செல்லும்படி நாம் செய்தோம். இன்னும், நல்ல உணவுகளிலிருந்து நாம் அவர்களுக்கு உணவளித்தோம். இன்னும், நாம் படைத்த அதிகமான படைப்புகளை விட நாம் அவர்களை முற்றிலும் மேன்மைப்படுத்தினோம்.
Ərəbcə təfsirlər:
یَوْمَ نَدْعُوْا كُلَّ اُنَاسٍ بِاِمَامِهِمْ ۚ— فَمَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ فَاُولٰٓىِٕكَ یَقْرَءُوْنَ كِتٰبَهُمْ وَلَا یُظْلَمُوْنَ فَتِیْلًا ۟
ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் நாம் அழைக்கும் நாளில், எவர் தமது (அமல்கள் எழுதப்பட்ட) புத்தகத்தை தமது வலக்கையில் கொடுக்கப்படுவாரோ அ(த்தகைய)வர்கள் தமது புத்தகத்தை (மகிழ்ச்சியுடன்) வாசிப்பார்கள். மேலும், ஒரு நூல் அளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
Ərəbcə təfsirlər:
وَمَنْ كَانَ فِیْ هٰذِهٖۤ اَعْمٰی فَهُوَ فِی الْاٰخِرَةِ اَعْمٰی وَاَضَلُّ سَبِیْلًا ۟
மேலும், எவர் இம்மையில் (நேர்வழி பெறாத) குருடராக இருந்தாரோ அவர் மறுமையிலும் (சொர்க்கப் பாதையில் செல்ல முடியாத) குருடராகவும் பாதையால் மிக வழிகெட்டவராகவும் இருப்பார்.
Ərəbcə təfsirlər:
وَاِنْ كَادُوْا لَیَفْتِنُوْنَكَ عَنِ الَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ لِتَفْتَرِیَ عَلَیْنَا غَیْرَهٗ ۖۗ— وَاِذًا لَّاتَّخَذُوْكَ خَلِیْلًا ۟
நாம் உமக்கு வஹ்யி அறிவித்ததை விட்டு (வேறு ஒன்றின் பக்கம்) உம்மை அவர்கள் திருப்பிவிட நிச்சயமாக நெருங்கிவிட்டனர், ஏனெனில், நீர் (வஹ்யில் எது அறிவிக்கப்பட்டதோ) அது அல்லாததை (பொய்யாக) நம் மீது இட்டுக் கட்டுவதற்காக. (அப்படி நீ இட்டுக்கட்டி இருந்தால்) அப்போது அவர்கள் உம்மை உற்ற நண்பராக எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
Ərəbcə təfsirlər:
وَلَوْلَاۤ اَنْ ثَبَّتْنٰكَ لَقَدْ كِدْتَّ تَرْكَنُ اِلَیْهِمْ شَیْـًٔا قَلِیْلًا ۟ۗۙ
மேலும், உம்மை நாம் உறுதிபடுத்தி இருக்காவிட்டால் கொஞ்சம் ஓர் அளவாவது அவர்கள் பக்கம் நீர் சாய்ந்துவிட நெருங்கி இருப்பீர்.
Ərəbcə təfsirlər:
اِذًا لَّاَذَقْنٰكَ ضِعْفَ الْحَیٰوةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَیْنَا نَصِیْرًا ۟
(அப்படி நீர் சாய்ந்திருந்தால்) அப்போது இவ்வாழ்கையில் இரு மடங்கு தண்டனையையும் மரணத்திற்குப் பின் இரு மடங்கு தண்டனையையும் நீர் சுவைக்கும்படி செய்திருப்போம். பிறகு, நமக்கு எதிராக உமக்கு உதவக் கூடியவரை காணமாட்டீர்.
Ərəbcə təfsirlər:
 
Mənaların tərcüməsi Surə: əl-İsra
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - Tamil dilinə tərcümə - Ömər Şərif. - Tərcumənin mündəricatı

Tərcümə edən: Şeyx Ömər Şərif bin Əbdüssalam.

Bağlamaq