Check out the new design

Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans * - Übersetzungen


Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Ar-Raʿd   Vers:
وَیَسْتَعْجِلُوْنَكَ بِالسَّیِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلٰتُ ؕ— وَاِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلٰی ظُلْمِهِمْ ۚ— وَاِنَّ رَبَّكَ لَشَدِیْدُ الْعِقَابِ ۟
13.6. -தூதரே!- இணைவைப்பாளர்கள் தண்டனையை விரைவாகக் கொண்டுவரும்படி உம்மை அவசரப்படுத்துகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு விதித்த அருட்கொடைகளை முழுமையாக அனுபவிக்க முன்னரே அவர்கள் மீது தண்டனை இறங்காமலிருப்பதை தாமதமாகக் கருதுகிறார்கள். அவர்களுக்கு முன்னர் அவர்களைப் போன்று நிராகரித்த சமூகங்களுக்கு தண்டனைகள் ஏற்பட்டுள்ளன. ஏன் அவர்கள் அவற்றைக் கொண்டு படிப்பினை பெறுவதில்லை? -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் மக்கள் அநீதி இழைத்த போதிலும் அவர்களை மன்னிக்கக் கூடியவன். எனவே அவர்கள் அவனிடம் தவ்பா செய்து மீள வேண்டும் என்பதற்காக அவர்களை உடனுக்குடன் தண்டிப்பதில்லை. பாவமன்னிப்புக் கோராமல் நிராகரிப்பில் நிலைத்திருப்பவர்களைத் தண்டிப்பதில் அவன் கடுமையானவன்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ؕ— اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرٌ وَّلِكُلِّ قَوْمٍ هَادٍ ۟۠
13.7. அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் -பிடிவாதத்திலும் புறக்கணிப்பிலும் நிலைத்தவர்களாகக்- கூறுகிறார்கள்: “மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் வழங்கப்பட்டது போன்று முஹம்மது மீதும் அவருடைய இறைவனிடமிருந்து ஒரு சான்று இறக்கப்பட வேண்டாமா?” -தூதரே!- நீர் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து மக்களை எச்சரிக்கை செய்யும் ஒரு எச்சரிக்கையாளர்தான். அல்லாஹ் உமக்கு வழங்கிய சான்றுகளைத் தவிர உம்மிடம் எந்த சான்றுகளும் இல்லை. ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய ஒரு தூதர் இருக்கின்றார். அதன்படி அவர்களை வழிகாட்டுவார்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
اَللّٰهُ یَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ اُ وَمَا تَغِیْضُ الْاَرْحَامُ وَمَا تَزْدَادُ ؕ— وَكُلُّ شَیْءٍ عِنْدَهٗ بِمِقْدَارٍ ۟
13.8. ஒவ்வொரு பெண்ணும் தன் வயிற்றில் சுமப்பதையும் அது குறித்து ஒவ்வொன்றையும் அல்லாஹ் அறிகிறான். கர்ப்பப்பைகளில் நிகழும் கூடுதல், குறைவு, ஆரோக்கியம், சுகவீனம் ஆகிய அனைத்தையும் அவன் அறிகிறான். ஒவ்வொன்றும் அவனிடம் அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனை விட கூடுவதுமில்லை, குறைவதுமில்லை.
Arabische Interpretationen von dem heiligen Quran:
عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْكَبِیْرُ الْمُتَعَالِ ۟
13.9. படைப்பினங்களின் புலனுறுப்புக்களுக்கு அப்பாற்பட்ட, புலன்களுக்கு உட்பட்ட ஒவ்வொன்றையும் அவன் அறிந்துள்ளான். அவன் தன் பண்புகளிலும் பெயர்களிலும் செயல்களிலும் மகத்தானவன். உள்ளமையிலும், பண்புகளிலும் தனது அனைத்து படைப்புகளை விடவும் மிக உயர்ந்தவன்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
سَوَآءٌ مِّنْكُمْ مَّنْ اَسَرَّ الْقَوْلَ وَمَنْ جَهَرَ بِهٖ وَمَنْ هُوَ مُسْتَخْفٍ بِالَّیْلِ وَسَارِبٌ بِالنَّهَارِ ۟
13.10. அவன் மறைவானதையும் இரகசியமானதையும் அறிகிறான். -மனிதர்களே!- நீங்கள் வெளிப்படையாகப் பேசினாலும் இரகசியமாகப் பேசினாலும் அவனுக்கு ஒன்றுதான்; இரவின் இருளில் மக்களின் பார்வையை விட்டு மறைந்திருப்பவனும் பகலின் வெளிச்சத்தில் தன் செயல்களால் வெளிப்படையானவனும் அவனுக்கு ஒன்றுதான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖ یَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُغَیِّرُ مَا بِقَوْمٍ حَتّٰی یُغَیِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ ؕ— وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْٓءًا فَلَا مَرَدَّ لَهٗ ۚ— وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ ۟
13.11. ஒருவருக்குப் பின் ஒருவராக மனிதனிடம் வருகை தரும் வானவர்கள் இருக்கிறார்கள். சிலர் இரவிலும் சிலர் பகலிலும் வருகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு மனிதனை அவனுக்கு நிகழக் கூடாது என எழுதப்பட்டிருக்கும் விதிகளிலிருந்து பாதுகாக்கிறார்கள். மனிதனின் சொற்களையும் செயல்களையும் எழுதுகிறார்கள். ஒரு சமூகம் நன்றி மிக்க தமது நிலையை மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ்வும் அவர்களது நல்ல நிலையை அவர்கள் வெறுக்கும் நிலையாக மாற்ற மாட்டான். அவன் ஒரு சமூகத்தை அழிக்க நாடினால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. -மனிதர்களே!- உங்களைப் பீடித்திருக்கும் தீங்கினை அகற்றுவதற்கு நீங்கள் ஒதுங்க அவனைத் தவிர உங்களுக்கு வேறு பொறுப்பாளன் இல்லை.
Arabische Interpretationen von dem heiligen Quran:
هُوَ الَّذِیْ یُرِیْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّیُنْشِئُ السَّحَابَ الثِّقَالَ ۟ۚ
13.12. -மனிதர்களே!- அவனே உங்களுக்கு மின்னலைக் காட்டுகிறான். இடி முழக்கத்தால் அச்சத்தையும் மழையால் ஆர்வத்தையும் அதன் மூலம் அவன் உங்களுக்கு ஏற்படுத்துகிறான். அவனே அடர்த்தியான மழை நீர் மூலம் கனமான மேகங்களை உருவாக்குகிறான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَیُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلٰٓىِٕكَةُ مِنْ خِیْفَتِهٖ ۚ— وَیُرْسِلُ الصَّوَاعِقَ فَیُصِیْبُ بِهَا مَنْ یَّشَآءُ وَهُمْ یُجَادِلُوْنَ فِی اللّٰهِ ۚ— وَهُوَ شَدِیْدُ الْمِحَالِ ۟ؕ
13.13. இடிமுழக்கம் தன் இறைவனைப் புகழ்வதுடன் அவனது தூய்மையையும் பறைசாற்றுகிறது. வானவர்கள் அச்சத்தினாலும் கண்ணியத்தினாலும் தங்கள் இறைவனைப் புகழ்கிறார்கள். அவன் தான் நாடிய படைப்புகள் மீது பொசுக்கக்கூடிய இடியை அனுப்பி அவற்றை அழித்து விடுகிறான். நிராகரிப்பாளர்கள் அல்லாஹ் ஒருவனே என்பதில் தர்க்கம் புரிகிறார்கள். தனக்கு மாறாகச் செயல்பட்டவர்களைத் தண்டிப்பதில் கடுமையானவன். அவன் நாடிய எதனையும் செய்தே தீருவான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
Die Nutzen der Versen in dieser Seite:
• عظيم مغفرة الله وحلمه عن خطايا بني آدم، فهم يستكبرون ويَتَحَدَّوْنَ رسله وأنبياءه، ومع هذا يرزقهم ويعافيهم ويحلم عنهم.
1. மனிதர்களின் தவறுகளுக்கான அல்லாஹ்வின் பெரும் மன்னிப்பும் சகிப்புத் தன்மையும் புலப்படுகிறது. ஏனெனில் அவர்கள் கர்வம் கொள்வதோடு அவனது தூதர்களுக்கு, நபிமார்களுக்கு சவால் விடுகின்றனர். அவ்வாறிருந்தும் இறைவன் அவர்களுக்கு வாழ்வாதாரமும் ஆரோக்கியமும் அளித்து அவர்களுடன் சகிப்புத் தன்மையுடனே நடந்து கொள்கிறான்.

• سعة علم الله تعالى بما في ظلمة الرحم، فهو يعلم أمر النطفة الواقعة في الرحم، وصَيْرُورتها إلى تخليق ذكر أو أنثى، وصحته واعتلاله، ورزقه وأجله، وشقي أو سعيد، فعلمه بها عام شامل.
2. கருவறையின் இருளில் உள்ளவற்றை அறியுமளவு அல்லாஹ் பரந்த அறிவுடையவன். கருவறையில் உள்ள விந்து, அது ஆணாகவோ பெண்ணாகவோ மாறுவது அதன் ஆரோக்கியம், சுகவீனம், அதன் வாழ்வாதாரம், தவணை, அது சீதேவியா அல்லது மூதேவியா ஆகியவற்றை அவன் அறிந்து வைத்துள்ளான். அது பற்றிய அவனது அறிவு பரந்ததாகும்.

• عظيم عناية الله ببني آدم، وإثبات وجود الملائكة التي تحرسه وتصونه وغيرهم مثل الحَفَظَة.
3. ஆதமுடைய மக்களை அல்லாஹ் சிறந்த முறையில் பராமரிக்கின்றான். அவர்களைக் காவல் காத்து, பாதுகாக்கக்கூடிய, பாதுகாவலர்கள் போன்று வானவர்கள் இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

• أن الله تعالى يغير حال العبد إلى الأفضل متى ما رأى منه اتباعًا لأسباب الهداية، فهداية التوفيق منوطة باتباع هداية البيان.
4. அல்லாஹ் அடியான் நேர்வழிக்கான காரணிகளை பின்பற்றுவதைக் காணும் போது அவனது நிலையை இன்னும் சிறந்ததாக மாற்றுகிறான். நேர்வழிக்கான உதவி வழிகாட்டலைப் பின்பற்றுவதுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

 
Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Ar-Raʿd
Suren/ Kapiteln Liste Nummer der Seite
 
Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans - Übersetzungen

Vom Tafsirzentrum für Quranwissenschaften herausgegeben.

Schließen