Check out the new design

Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans * - Übersetzungen


Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Al-Māʾidah   Vers:
قَالُوْا یٰمُوْسٰۤی اِنَّا لَنْ نَّدْخُلَهَاۤ اَبَدًا مَّا دَامُوْا فِیْهَا فَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَاۤ اِنَّا هٰهُنَا قٰعِدُوْنَ ۟
5.24. இஸ்ராயீலின் மக்களில் மூஸா அலை அவர்களது கூட்டம் தமது தூதரின் கட்டளைக்கு தொடர்ந்து மாறுசெய்தவர்களாகக் கூறினார்கள்: “அந்த அநியாயக்காரர்கள் அங்கிருக்கும் வரை நாங்கள் ஒருபோதும் அந்நகரில் நுழைய மாட்டோம். நீரும் உம் இறைவனும் சென்று அந்த அநியாயக்காரர்களுடன் போரிடுங்கள். ஆனால் நாம் உங்கள் இருவருடனும் சேர்ந்து போருக்குச் செல்லாமல் நமது இடத்திலேயே அமர்ந்திருப்போம்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
قَالَ رَبِّ اِنِّیْ لَاۤ اَمْلِكُ اِلَّا نَفْسِیْ وَاَخِیْ فَافْرُقْ بَیْنَنَا وَبَیْنَ الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟
5.25. மூஸா தம் இறைவனிடம் கூறினார்: “என் இறைவா! என்னையும் என் சகோதரர் ஹாரூனையும் தவிர யார் மீதும் எனக்கு அதிகாரமில்லை. எனவே எங்களுக்கும், உனக்கும் உன் தூதருக்கும் கட்டுப்படாத இந்தக் கூட்டத்திற்குமிடையே தீர்ப்பளிப்பாயாக”
Arabische Interpretationen von dem heiligen Quran:
قَالَ فَاِنَّهَا مُحَرَّمَةٌ عَلَیْهِمْ اَرْبَعِیْنَ سَنَةً ۚ— یَتِیْهُوْنَ فِی الْاَرْضِ ؕ— فَلَا تَاْسَ عَلَی الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟۠
5.26. அல்லாஹ் தன் தூதரான மூஸாவிடம் கூறினான்: “இஸ்ராயீலின் மக்களின் மீது நாற்பது வருடங்கள் வரை புனித பூமியில் நுழைவதை அல்லாஹ் தடைசெய்துவிட்டான். இக்காலத்தில் அவர்கள் பாலைவனத்தில் வழிதெரியாமல் தடுமாறித்திரிவார்கள். மூஸாவே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாத இந்த மக்களுக்காக கவலைகொள்ளாதீர். ஏனெனில் இவர்கள் தாம் சம்பாதித்த பாவங்களின் காரணமாகத்தான் தண்டிக்கப்படுவார்கள்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ ابْنَیْ اٰدَمَ بِالْحَقِّ ۘ— اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ یُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ ؕ— قَالَ لَاَقْتُلَنَّكَ ؕ— قَالَ اِنَّمَا یَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِیْنَ ۟
5.27. தூதரே! பொறாமை மிகுந்த இந்த அநியாயக்கார யூதர்களிடம், ஆதமின் இரு மகன்களான காபீல், ஹாபீல் பற்றிய செய்தியை உண்மையுடன் எடுத்துரைப்பீராக. இருவரும் அல்லாஹ்விடம் ஒரு காணிக்கையை முன்வைத்த போது இறையச்சமுடைய ஹாபீலின் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இறையச்சமற்ற காபீலின் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. காபீல் பொறாமையில் ஹாபீலின் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை வெறுத்தான். “ஹாபீலே, நான் உன்னை நிச்சயம் கொன்றுவிடுவேன்” என்று கூறினான். அதற்கு ஹாபீல், “அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களிடமிருந்தே அவன் ஏற்றுக்கொள்கிறான்” என்று கூறினார்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
لَىِٕنْۢ بَسَطْتَّ اِلَیَّ یَدَكَ لِتَقْتُلَنِیْ مَاۤ اَنَا بِبَاسِطٍ یَّدِیَ اِلَیْكَ لِاَقْتُلَكَ ۚ— اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِیْنَ ۟
5.28. “நீ என்னைக் கொல்வதற்காக உன் கையை நீட்டினாலும் நான் உன்னைப் பழிவாங்கப்போவதில்லை. நான் கோழை என்பதனாலல்ல. ஆனாலும் நான் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்.”
Arabische Interpretationen von dem heiligen Quran:
اِنِّیْۤ اُرِیْدُ اَنْ تَبُوَْاَ بِاِثْمِیْ وَاِثْمِكَ فَتَكُوْنَ مِنْ اَصْحٰبِ النَّارِ ۚ— وَذٰلِكَ جَزٰٓؤُا الظّٰلِمِیْنَ ۟ۚ
5.29. மேலும் அச்சமூட்டியவராகக் கூறினார்: நீ என்னை அநியாயமாக, வரம்புமீறிக் கொலைசெய்த பாவத்தோடும் உனது முந்தைய பாங்களோடும் திரும்பி மறுமை நாளில் நிரந்தர நரகவாசிகளில் ஒருவனாக வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். இதுதான் வரம்புமீறுபவர்களுக்கான தண்டனையாகும். நான் உன்னைக் கொலைசெய்து அந்த பாவத்தோடு செல்ல விரும்பவில்லை.
Arabische Interpretationen von dem heiligen Quran:
فَطَوَّعَتْ لَهٗ نَفْسُهٗ قَتْلَ اَخِیْهِ فَقَتَلَهٗ فَاَصْبَحَ مِنَ الْخٰسِرِیْنَ ۟
5.30. காபீலின் மனம் தன் சகோதரன் ஹாபீலை அநியாயமாகக் கொலை செய்வதை அவனுக்கு அழகாக்கிக் காட்டியது. எனவே அவன் கொலை செய்துவிட்டான். இதன் காரணமாக அவன் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாகிவிட்டான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
فَبَعَثَ اللّٰهُ غُرَابًا یَّبْحَثُ فِی الْاَرْضِ لِیُرِیَهٗ كَیْفَ یُوَارِیْ سَوْءَةَ اَخِیْهِ ؕ— قَالَ یٰوَیْلَتٰۤی اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِیَ سَوْءَةَ اَخِیْ ۚ— فَاَصْبَحَ مِنَ النّٰدِمِیْنَ ۟
தனது சகோதரனின் சடலத்தை எவ்வாறு புதைப்பது என்பதை அவனுக்கு கற்பிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பிவைத்தான். அது இறந்துபோன ஒரு காகத்தை புதைப்பதற்காக அவனுக்கு முன்னால் மண்ணைக் கிளறியது. அப்போது தன் சகோதரனைக் கொன்றவன் கூறினான் கைசேதமே! இறந்த காகத்தைப் புதைத்த இந்த காகத்தைப் போன்று கூட என் சகோதரனின் சடலத்தைப் புதைக்க இயலாமலாகிவிட்டேனே! பின்னர் அவனைப் புதைத்துவிட்டு கைசேதப்பட்டவனாகிவிட்டான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
Die Nutzen der Versen in dieser Seite:
• مخالفة الرسل توجب العقاب، كما وقع لبني إسرائيل؛ إذ عاقبهم الله تعالى بالتِّيه.
1. தூதர்களின் கட்டளைக்கு மாற்றம் செய்வது தண்டனைக்குரியதாகும். அதுதான் இஸ்ராயீலின் மக்களுக்கும் நடந்தது. பாலைவனத்தில் தடுமாறுவதன் மூலம் அவர்களை அல்லாஹ் தண்டித்தான்.

• قصة ابني آدم ظاهرها أن أول ذنب وقع في الأرض - في ظاهر القرآن - هو الحسد والبغي، والذي أدى به للظلم وسفك الدم الحرام الموجب للخسران.
2. ஆதமுடைய இரு மகன்களின் சம்பவத்திலிருந்து பூமியில் நிகழ்ந்த முதல் பாவம் பொறாமையும் வரம்புமீறியதுமாகும். அதுவே அநியாயத்திற்கும் நஷ்டத்துக்கு வழிவகுக்கும் கொலைக்கும் வழிகோலியது.

• الندامة عاقبة مرتكبي المعاصي.
3.பாவங்களில் ஈடுபடுவோரின் முடிவு கைசேதமே.

• أن من سَنَّ سُنَّة قبيحة أو أشاع قبيحًا وشجَّع عليه، فإن له مثل سيئات من اتبعه على ذلك.
4.தவறான ஒரு வழிமுறைக்கு வழிகாட்டுபவர் அல்லது மானக்கேடான விடயத்தை பரப்பி அதற்கு ஆர்வமூட்டுபவருக்கு அவரைப் பின்பற்றி அதனைச் செய்வோரது பாவங்களைப் போன்றது கிடைக்கும்.

 
Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Al-Māʾidah
Suren/ Kapiteln Liste Nummer der Seite
 
Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans - Übersetzungen

Vom Tafsirzentrum für Quranwissenschaften herausgegeben.

Schließen