Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans

external-link copy
3 : 7

اِتَّبِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ ؕ— قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟

7.3. மனிதர்களே! உங்கள் இறைவன் உங்கள் மீது இறக்கிய வேதத்தையும் தூதரின் வழிமுறையையும் பின்பற்றுங்கள். ஷைத்தான்கள் அல்லது தீய பாதிரிகள் ஆகியோரில் நீங்கள் நண்பர்களாகக் கருதுவோரின் மனஇச்சையைப் பின்பற்றாதீர்கள். அவர்களது மன இச்சைகள் கூறுவதற்காக அல்லாஹ் இறக்கியதை விட்டு விட்டு அவர்களை நேசம் கொள்கிறீர்கள். நீங்கள் குறைவாகவே அறிவுரை பெறுகிறீர்கள். நீங்கள் அறிவுரை பெற்றிருந்தால் சத்தியத்தை விட்டு விட்டு மற்றவற்றிற்கு முன்னுரிமை அளித்திருக்க மாட்டீர்கள்; உங்களின் தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றி அதன்படி செயல்பட்டிருப்பீர்கள்; அதனைத் தவிர மற்றவற்றை விட்டிருப்பீர்கள். info
التفاسير:
Die Nutzen der Versen in dieser Seite:
• من مقاصد إنزال القرآن الإنذار للكافرين والمعاندين، والتذكير للمؤمنين.
1. குர்ஆன் இறக்கப்பட்ட நோக்கங்களில் ஒன்று, நிராகரிப்பாளர்களுக்கும் பிடிவாதக்காரர்களுக்கும் எச்சரிக்கை செய்வதும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுவதுமாகும். info

• أنزل الله القرآن إلى المؤمنين ليتبعوه ويعملوا به، فإن فعلوا ذلك كملت تربيتهم، وتمت عليهم النعمة، وهُدُوا لأحسن الأعمال والأخلاق.
2. நம்பிக்கையாளர்கள் குர்ஆனைப் பின்பற்றி அதன்படி செயல்பட வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் குர்ஆனை இறக்கியுள்ளான். அவர்கள் இவ்வாறு செய்துவிட்டால் அவர்களின் தர்பியா முழுமையடைந்துவிடும்; அருட்கொடைகள் நிறைவடைந்துவிடும். நற்செயல்களின் மற்றும் நற்பண்புகளின் பக்கம் அவர்கள் வழிகாட்டப்படுவார்கள். info

• الوزن يوم القيامة لأعمال العباد يكون بالعدل والقسط الذي لا جَوْر فيه ولا ظلم بوجه.
3. மறுமை நாளில் அடியார்களின் செயல்கள் அனைத்தும் நியாயமாக எடைபோடப்படும். எந்த அநீதியும் இழைக்கப்படாது. info

• هَيَّأ الله الأرض لانتفاع البشر بها، بحيث يتمكَّنون من البناء عليها وحَرْثها، واستخراج ما في باطنها للانتفاع به.
4. மனிதன் பயனடைய வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் பூமியைத் தயார்படுத்தியுள்ளான். அவன் அங்கு வீடுகளை அமைக்கவும், பயிரிடவும், பயன்பெறுவதற்காக அதன் உள்ளே உள்ளவற்றை எடுக்கவும் முடியும். info