Check out the new design

Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans * - Übersetzungen


Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Al-Anfāl   Vers:
وَاِنْ یُّرِیْدُوْۤا اَنْ یَّخْدَعُوْكَ فَاِنَّ حَسْبَكَ اللّٰهُ ؕ— هُوَ الَّذِیْۤ اَیَّدَكَ بِنَصْرِهٖ وَبِالْمُؤْمِنِیْنَ ۟ۙ
8.62. -தூதரே!- போருக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ளும் எண்ணத்துடன், போரை விட்டு விட்டு சமாதானத்தின் பக்கம் சாய்ந்து அவர்கள் உம்மை ஏமாற்ற நாடினால், அவர்களின் ஏமாற்று சூழ்ச்சியை விட்டும் பாதுகாக்க அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவன்தான் தன் உதவியால் உம்மை பலப்படுத்தினான். நம்பிக்கைகொண்ட அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்கள் உதவியாலும் உம்மை பலப்படுத்தினான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَاَلَّفَ بَیْنَ قُلُوْبِهِمْ ؕ— لَوْ اَنْفَقْتَ مَا فِی الْاَرْضِ جَمِیْعًا مَّاۤ اَلَّفْتَ بَیْنَ قُلُوْبِهِمْ ۙ— وَلٰكِنَّ اللّٰهَ اَلَّفَ بَیْنَهُمْ ؕ— اِنَّهٗ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
8.63. உமக்கு உதவி செய்த நம்பிக்கையாளர்களின் பிரிந்து கிடந்த உள்ளங்களை அவன் ஒன்றிணைத்தான். அவற்றை ஒன்றிணைப்பதற்கு நீர் பூமியிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் செலவு செய்திருந்தாலும் உம்மால் அவற்றை ஒன்றிணைத்திருக்க முடியாது. ஆயினும் அல்லாஹ்வே அந்த உள்ளங்களிடையே இணைப்பை ஏற்படுத்தினான். அவன் தன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் அமைத்த விதிகளில், திட்டமிடுவதில், வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
یٰۤاَیُّهَا النَّبِیُّ حَسْبُكَ اللّٰهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟۠
8.64. நபியே! உம் எதிரிகளின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கவும் உம்மைப் பின்பற்றும் நம்பிக்கையாளர்களைப் பாதுகாக்கவும் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். எனவே அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக. அவனையே சார்ந்திருப்பீராக.
Arabische Interpretationen von dem heiligen Quran:
یٰۤاَیُّهَا النَّبِیُّ حَرِّضِ الْمُؤْمِنِیْنَ عَلَی الْقِتَالِ ؕ— اِنْ یَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صٰبِرُوْنَ یَغْلِبُوْا مِائَتَیْنِ ۚ— وَاِنْ یَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ یَّغْلِبُوْۤا اَلْفًا مِّنَ الَّذِیْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟
8.65. நபியே! நம்பிக்கையாளர்களைப் போர் புரியத் தூண்டுவீராக. அவர்களின் எண்ணங்களை உறுதிப்படுத்தி அதன்பால் ஊக்கமளிப்பீராக. -நம்பிக்கையாளர்களே!- உங்களில் நிராகரிப்பாளர்களுடன் போரிடுவதில் பொறுமையுள்ள இருபது பேர்கள் இருந்தால் அவர்கள் இருநூறு நிராகரிப்பாளர்களை வென்று விடலாம். உங்களில் நூறு பொறுமையாளர்கள் இருந்தால் அவர்கள் ஆயிரம் நிராகரிப்பாளர்களை வென்றுவிடலாம். இது ஏனெனில், நிராகரிப்பாளர்கள் அல்லாஹ் தன் எதிரிகளை அழித்து நேசர்களுக்கு உதவி புரிவான் என்ற அல்லாஹ்வின் நியதியை புரிந்துகொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். போரின் நோக்கத்தை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. உலகில் ஆதிக்கத்தை நிலைநாட்டவே அவர்கள் போர் புரிகிறார்கள்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
اَلْـٰٔنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِیْكُمْ ضَعْفًا ؕ— فَاِنْ یَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ یَّغْلِبُوْا مِائَتَیْنِ ۚ— وَاِنْ یَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ یَّغْلِبُوْۤا اَلْفَیْنِ بِاِذْنِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ مَعَ الصّٰبِرِیْنَ ۟
8.66. -நம்பிக்கையாளர்களே!- உங்களது பலவீனத்தை அல்லாஹ் அறிந்ததனால் அவன் உங்கள் மீது கருணை காட்டும் முகமாக உங்கள் மீதுள்ள சுமையைக் குறைத்துவிட்டான். உங்களில் ஒருவர் பத்து நிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்குப் பதிலாக இரு நிராகரிப்பாளர்களை எதிர்ப்பதை அவன் உங்கள் மீது கடமையாக்கிவிட்டான். உங்களில் நூறு பொறுமையாளர்கள் இருந்தால் அவர்கள் இருநூறு நிராகரிப்பாளர்களை போரில் வெல்லலாம். உங்களில் ஆயிரம் பொறுமையாளர்கள் இருந்தால் அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இரண்டாயிரம் நிராகரிப்பாளர்களை வெல்லலாம். அல்லாஹ் நம்பிக்கை கொண்ட பொறுமையாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்களுடன் இருக்கின்றான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
مَا كَانَ لِنَبِیٍّ اَنْ یَّكُوْنَ لَهٗۤ اَسْرٰی حَتّٰی یُثْخِنَ فِی الْاَرْضِ ؕ— تُرِیْدُوْنَ عَرَضَ الدُّنْیَا ۖۗ— وَاللّٰهُ یُرِیْدُ الْاٰخِرَةَ ؕ— وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
8.67. நிராகரிப்பாளர்களை கொன்று குவிக்கும் வரை அவர்களைக் கைதிகளாகப் பிடிப்பது தூதருக்கு உகந்ததல்ல. அப்போதுதான் அவர்களின் உள்ளங்களில் பயம் புகுந்து கொள்ளும். அவர்கள் மீண்டும் போரிட மாட்டார்கள். -நம்பிக்கையாளர்களே!- பத்ரில் கைதிகளாகப் பிடிக்கப்பட்டர்களிடம் பிணைத் தொகை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? அல்லாஹ்வோ மார்க்கத்திற்கு உதவி செய்து கிடைக்கும் மறுமையை விரும்புகிறான். தன் உள்ளமையில் பண்புகளில் அடக்கியாள்வதில் அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாரும் அவனை மிகைத்துவிட முடியாது. தான் அமைத்த விதிகளில், தான் வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
لَوْلَا كِتٰبٌ مِّنَ اللّٰهِ سَبَقَ لَمَسَّكُمْ فِیْمَاۤ اَخَذْتُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟
8.68. போர்ச் செல்வங்களைப் பெறுவதும், கைதிகளுக்காக பிணைத்தொகை பெறுவதும் ஆகுமானதே என தனது விதியில் ஏற்கனவே அல்லாஹ் தீர்மானித்திருக்காவிட்டால், வஹி இறங்கி அவை அனுமதிக்கப்பட முன்னரே, போர்ச் செல்வங்களையும், கைதிகளிடம் பிணைத் தொகையும் பெற்றுக் கொண்டதற்காக அல்லாஹ்விடமிருந்து கடுமையான வேதனை உங்களை அடைந்திருக்கும்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
فَكُلُوْا مِمَّا غَنِمْتُمْ حَلٰلًا طَیِّبًا ۖؗ— وَّاتَّقُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
8.69. நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களிடமிருந்து நீங்கள் கைப்பற்றிய போர்ச் செல்வங்களிலிருந்து உண்ணுங்கள். அவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கைகொண்ட தன் அடியார்களை மன்னிக்கக்கூடியவன்; அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
Die Nutzen der Versen in dieser Seite:
• في الآيات وَعْدٌ من الله لعباده المؤمنين بالكفاية والنصرة على الأعداء.
1. நம்பிக்கைகொண்ட தன் அடியார்களை பொறுப்பெடுத்துக் கொள்வதாகவும் எதிரிகளுக்கு எதிராக அவர்களுக்கு வெற்றியளிப்பதாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

• الثبات أمام العدو فرض على المسلمين لا اختيار لهم فيه، ما لم يحدث ما يُرَخِّص لهم بخلافه.
2. எதிரிகளுக்கு முன்னால் உறுதியுடன் நிற்பது முஸ்லிம்களின் மீது கட்டாயக் கடமையாகும். அதிலே அவர்கள் வேறு எந்த தெரிவும் கிடையாது, கடமையில்லை என சலுகை வழங்கும் ஏதேனும் நிகழ்வு நடந்தாலே தவிர.

• الله يحب لعباده معالي الأمور، ويكره منهم سَفْسَافَها، ولذلك حثهم على طلب ثواب الآخرة الباقي والدائم.
3. அல்லாஹ் தன் அடியார்களுக்கு உயர்ந்த விஷயங்களை விரும்புகிறான், தாழ்ந்த விஷயங்களை வெறுக்கிறான். எனவேதான் நிலையான மறுமையின் நன்மையைத் தேடுமாறு அவர்களுக்கு ஆர்வமூட்டியுள்ளான்.

• مفاداة الأسرى أو المنّ عليهم بإطلاق سراحهم لا يكون إلا بعد توافر الغلبة والسلطان على الأعداء، وإظهار هيبة الدولة في وجه الآخرين.
4. எதிரிகளின் மீது அதிகாரம் ஏற்பட்டு முஸ்லிம் நாட்டைப் பற்றிய பயம் ஏனையோரிடம் வெளிப்படும் வரை கைதிகளுக்குப் பிணைவழங்கவோ அல்லது அவர்களை இலவசமாக விடுவித்து கருணை காட்டவோ முடியாது.

 
Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Al-Anfāl
Suren/ Kapiteln Liste Nummer der Seite
 
Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans - Übersetzungen

Vom Tafsirzentrum für Quranwissenschaften herausgegeben.

Schließen