Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Übersetzungen


Übersetzung der Bedeutungen Vers: (27) Surah / Kapitel: Al-Anfâl
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللّٰهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْۤا اَمٰنٰتِكُمْ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟
8.27. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தாமல் அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகாமல் அவனுக்கும் தூதருக்கும் துரோகமிழைத்துவிடாதீர்கள். நீங்கள் செய்வது மோசடி என்பதை அறிந்து கொண்டே உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட கடன்கள் மற்றும் ஏனையவற்றில் மோசடி செய்துவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்களும் மோசடிக்காரர்களாக ஆகிவிடுவீர்கள்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
Die Nutzen der Versen in dieser Seite:
• الشكر نعمة عظيمة يزيد بها فضل الله تعالى، وينقص عند إغفالها.
1. நன்றி செலுத்துவது மிகப் பெரிய அருட்கொடையாகும். அது அல்லாஹ்வின் அருளை இன்னும் அதிகப்படுத்துகிறது. அவனது அருளை மறந்து வாழ்வது அதனைக் குறைத்துவிடுகிறது.

• للأمانة شأن عظيم في استقامة أحوال المسلمين، ما ثبتوا عليها وتخلقوا بها، وهي دليل نزاهة النفس واعتدال أعمالها.
2. முஸ்லிம் சமூகம் அமானிதப் பண்புமிக்கவர்களாகத் திகழ்வது அவர்களது நிலமைகள் சீராவதற்கான முக்கியமானதொரு விடயமாகும். இது ஆன்மாவின் நேர்மை, நீதிமிக்க அதன் செயற்பாடுகளுக்கான ஆதாரமாகும்.

• ما عند الله من الأجر على كَفِّ النفس عن المنهيات، خير من المنافع الحاصلة عن اقتحام المناهي لأجل الأموال والأولاد.
3. செல்வங்கள் மற்றும் பிள்ளைகளின் காரணமாக அல்லாஹ் தடுத்துள்ளவற்றைச் செய்து அதனால் கிடைக்கும் பலன்களை விட தடுக்கப்பட்டவற்றை விட்டும் ஆன்மாவைத் தடுத்துக்கொள்வதற்கு அல்லாஹ் வழங்கும் கூலி மிகச் சிறந்ததாகும்.

• في الآيات بيان سفه عقول المعرضين؛ لأنهم لم يقولوا: اللَّهُمَّ إن كان هذا هو الحق من عندك فاهدنا إليه.
4. இந்த வசனங்களிலே, புறக்கணிப்பவர்களின் அறிவீனம் வெளிப்படுகிறது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வே, இது சத்தியமாக இருந்தால் இதன்பால் எங்களுக்கு வழிகாட்டு என்று அவர்கள் பிரார்த்திக்கவில்லை.

• في الآيات فضيلة الاستغفار وبركته، وأنه من موانع وقوع العذاب.
5. வசனங்களில், -இஸ்திக்ஃபார்- பாவமன்னிப்புக் கோருதலின் சிறப்பும், அது வேதனையைத் தடுக்கும் காரணிகளில் ஒன்றாகும் என்பதும் தெளிவாகிறது.

 
Übersetzung der Bedeutungen Vers: (27) Surah / Kapitel: Al-Anfâl
Suren/ Kapiteln Liste Nummer der Seite
 
Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Übersetzungen

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Schließen