Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Übersetzungen

Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Ash-Shams   Vers:

ஸூரா அஷ்ஷம்ஸ்

Die Ziele der Surah:
التأكيد بأطول قسم في القرآن، على تعظيم تزكية النفس بالطاعات، وخسارة دسّها بالمعاصي.
அல்குர்ஆனில் இடம்பெறும் மிக நீண்ட சத்தியத்தின் மூலம் (வணக்க வழிபாடுகளை கொண்டு) ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், அதனைப் பாவங்களில் ஈடுபடுத்துவதனால் ஏற்படும் நஷ்டத்தையும் உறுதிப்படுத்தல்

وَالشَّمْسِ وَضُحٰىهَا ۟
91.1. அல்லாஹ் சூரியனைக் கொண்டும் கிழக்கிலிருந்து அது உதயமாகி உயர்ந்து செல்லும் நேரத்தைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَالْقَمَرِ اِذَا تَلٰىهَا ۟
91.2. அது மறைந்தபிறகு அதனைப் பின்தொடர்ந்து வரும் சந்திரனைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَالنَّهَارِ اِذَا جَلّٰىهَا ۟
91.3. தன் ஒளியின் மூலம் பூமியின் மேற்பரப்பில் உள்ளவற்றை வெளிப்படுத்தும் பகலைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَالَّیْلِ اِذَا یَغْشٰىهَا ۟
91.4. பூமியின் மேற்பரப்பைச் சூழ்ந்து அது இருளாகிவிடும் இரவைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَالسَّمَآءِ وَمَا بَنٰىهَا ۟
91.5. வானத்தைக் கொண்டும் அதன் உறுதியான கட்டமைப்பைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَالْاَرْضِ وَمَا طَحٰىهَا ۟
91.6. பூமியைக் கொண்டும் அதனை மனிதன் வசிப்பதற்கேற்ப விரித்ததைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَنَفْسٍ وَّمَا سَوّٰىهَا ۟
91.7. ஒவ்வொரு ஆன்மாவைக் கொண்டும் அதனை அவன் செம்மையாக படைத்ததைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰىهَا ۟
91.8. தவிர்ந்திருப்பதற்கு தீமையையும், செய்வதற்கு நன்மையையும் கற்காமல் உள்ளுதிப்பின் மூலம் அதற்கு அவன் உணர்த்தியுள்ளான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰىهَا ۟
91.9. தன் ஆன்மாவை தீயவற்றிலிருந்து நீக்கி நற்பண்புகளால் அலங்கரித்து தூய்மைப்படுத்திக் கொண்டவர் வேண்டியதை பெற்று வெற்றியடைந்து விட்டார்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَقَدْ خَابَ مَنْ دَسّٰىهَا ۟ؕ
91.10. அதனைப் பாவங்களால் களங்கப்படுத்தியவர் தோல்வியடைந்து விட்டார்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَاۤ ۟
91.11. ஸமூத் சமூகத்தினர் வரம்புமீறி பாவங்களில் ஈடுபட்டதன் காரணமாக தம் தூதர் ஸாலிஹை பொய்ப்பித்தார்கள்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
اِذِ انْۢبَعَثَ اَشْقٰىهَا ۟
91.12. அவர்களில் துர்பாக்கியவான் தன் சமூகம் அவனை அழைத்த பிறகு எழுந்து நின்றபோது.
Arabische Interpretationen von dem heiligen Quran:
فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْیٰهَا ۟ؕ
91.13. அல்லாஹ்வின் தூதர் ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வின் ஒட்டகத்தை விட்டுவிடுங்கள். அது ஒருநாள் தண்ணீர் அருந்தட்டும். அதற்கு எவ்வித தீங்கும் இழைக்காதீர்கள்.”
Arabische Interpretationen von dem heiligen Quran:
فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا— فَدَمْدَمَ عَلَیْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰىهَا ۟
91.14. அவர்கள் ஒட்டகம் விஷயத்தில் தங்களின் தூதரை பொய்ப்பித்தார்கள். அவர்களில் துர்பாக்கியவான் அவர்களின் சம்மதத்துடன் அந்த ஒட்டகத்தைக் கொன்றுவிட்டான். எனவே அவர்களும் பாவத்தில் பங்காளிகளாக இருந்தார்கள். ஆகவே அல்லாஹ் அவர்கள் மீது தன் வேதனையைச் சாட்டினான். அவர்களின் பாவங்களின் காரணமாக பெரும் சப்தத்தால் அவர்களை அழித்துவிட்டான். அவன் அழித்த தண்டனையில் அவர்களை சமமானவர்களாக்கிவிட்டான்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
وَلَا یَخَافُ عُقْبٰهَا ۟۠
91.15. அவர்களை அழித்து தண்டனை செய்த அல்லாஹ் அதன் விளைவைக் குறித்து அஞ்சவில்லை.
Arabische Interpretationen von dem heiligen Quran:
Die Nutzen der Versen in dieser Seite:
• أهمية تزكية النفس وتطهيرها.
1. உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம்.

• المتعاونون على المعصية شركاء في الإثم.
2. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்பவர்கள் பாவத்திலும் பங்காளிகளாவர்.

• الذنوب سبب للعقوبات الدنيوية.
3. பாவங்கள் உலகில் ஏற்படும் தண்டனைகளுக்குக் காரணமாக அமைகின்றன.

• كلٌّ ميسر لما خلق له فمنهم مطيع ومنهم عاصٍ.
4. ஒவ்வொருவரும் அவருக்கு படைக்கப்பட்டதை நிறைவேற்றுவதற்கு இலகுவாக்கப்பட்டுள்ளார். எனவேதான் அவர்களில் சிலர் வழிப்படுவோராகவும் மாறுசெய்வோராகவும் உள்ளனர்.

Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Ash-Shams
Suren/ Kapiteln Liste Nummer der Seite
 
Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Übersetzungen

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Schließen