Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango.

external-link copy
71 : 11

وَامْرَاَتُهٗ قَآىِٕمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنٰهَا بِاِسْحٰقَ ۙ— وَمِنْ وَّرَآءِ اِسْحٰقَ یَعْقُوْبَ ۟

11.71. இப்ராஹீமின் மனைவி சாரா நின்று கொண்டிருந்தார். நாம் சாராவுக்கு இஸ்ஹாக் என்னும் மகன் பிறப்பான் என்றும் இஸ்ஹாக்கிற்கு யஅகூப் என்னும் மகன் பிறப்பான் என்ற மகிழ்வூட்டும் நற்செய்தியை கூறினோம். அவள் சிரித்தாள். தாம் செவியுற்றதைக் கொண்டு மகிழச்சியடைந்தாள். info
التفاسير:
Hino jeyaa e nafooje Aayeeje on ka hello ɗoo.:
• عناد واستكبار المشركين حيث لم يؤمنوا بآية صالح عليه السلام وهي من أعظم الآيات.
1.ஸாலிஹ் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட சான்று மிகப் பெரிய சான்றாகும். ஆயினும் பிடிவாதத்திலே நிலைத்து, பெருமையடித்து இருந்த இணைவைப்பாளர்கள் அந்த சான்றுகளை நம்பிக்கை கொள்ளவில்லை. info

• استحباب تبشير المؤمن بما هو خير له.
2. நம்பிக்கையாளனுக்கு நலவான ஒன்றை கொண்டு நற்செய்தி கூறுவது விரும்பத்தக்கது. info

• مشروعية السلام لمن دخل على غيره، ووجوب الرد.
3. மற்றவர்களிடம் நுழையும் போது சலாம் கூற வேண்டும். அதற்குப் பதிலளிப்பது கட்டாயமாகும். info

• وجوب إكرام الضيف.
4. விருந்தாளியை உபசரிப்பது கடமையாகும். info