Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Aaya: (25) Simoore: Simoore roɓo
رَبُّكُمْ اَعْلَمُ بِمَا فِیْ نُفُوْسِكُمْ ؕ— اِنْ تَكُوْنُوْا صٰلِحِیْنَ فَاِنَّهٗ كَانَ لِلْاَوَّابِیْنَ غَفُوْرًا ۟
17.25. -மனிதர்களே!- வணக்கத்திலும் நற்காரியங்களிலும் பெற்றோர் நலன் பேணுவதிலும் உங்களின் உள்ளங்களிலுள்ள மனத்தூய்மையை உங்களின் இறைவன் நன்கறிந்தவன். இவற்றில் உங்களின் எண்ணங்கள் சரியானதாக இருந்தால் நிச்சயமாக அவன் தன் பக்கம் திரும்பி பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களை மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான். தனது இறைவனுக்குக் கட்டுப்படுவதில், தாய், தந்தையருடன் நல்ல முறையில் நடந்துகொள்வதில் ஏற்பட்ட தவறுகளுக்காக யார் பாவமன்னிப்புத் தேடுவாறோ அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• ينبغي للإنسان أن يفعل ما يقدر عليه من الخير وينوي فعل ما لم يقدر عليه؛ ليُثاب على ذلك.
1. மனிதன் தன்னால் இயன்ற நற்செயல்களில் ஈடுபட வேண்டும். இயலாதவற்றைச் செய்வதற்கு எண்ண வேண்டும். அதற்காகவும் அவன் கூலி வழங்கப்படுவான்.

• أن النعم في الدنيا لا ينبغي أن يُسْتَدل بها على رضا الله تعالى؛ لأنها قد تحصل لغير المؤمن، وتكون عاقبته المصير إلى عذاب الله.
2. உலகில் கிடைக்கும் அருட்கொடைகள் இறைதிருப்திக்கான ஆதாரமல்ல. ஏனெனில் அது விசுவாசம்கொள்ளாதவர்களுக்கும் கிடைத்து அதன் இறுதி முடிவு அல்லாஹ்வின் வேதனையாக இருக்கலாம்.

• الإحسان إلى الوالدين فرض لازم واجب، وقد قرن الله شكرهما بشكره لعظيم فضلهما.
3. தாய், தந்தையருடன் நல்லமுறையில் நடந்துகொள்வது கட்டாயக் கடமையாகும். அல்லாஹ் தனக்கு நன்றி செலுத்துவதுடன் தாய், தந்தையருக்கு நன்றி செலுத்துவதையும் இணைத்துக்கூறுமளவுக்கு அவ்விருவரின் சிறப்பு மகத்தானதாகும்.

• يحرّم الإسلام التبذير، والتبذير إنفاق المال في غير حقه.
4. இஸ்லாம் வீண்விரயம் செய்வதைத் தடைசெய்கிறது. பணத்தை (சொத்தை) தேவையற்ற விதத்தில் செலவளிப்பதே வீண்விரயமாகும்.

 
Firo maanaaji Aaya: (25) Simoore: Simoore roɓo
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude