Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Aaya: (96) Simoore: Simoore roɓo
قُلْ كَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنِیْ وَبَیْنَكُمْ ؕ— اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِیْرًا بَصِیْرًا ۟
17.96. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட தூதர் என்பதற்கும் உங்களுக்கு எத்திவைக்குமாறு கூறப்பட்ட தூதை நான் எடுத்துரைத்துவிட்டேன் என்பற்கு, எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சி கூறுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் நிலைகளை சூழ்ந்தவனாக இருக்கின்றான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவர்களின் உள்ளங்களில் மறைத்துவைத்திருக்கும் அனைத்தையும் அவன் பார்க்கக்கூடியவன்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• بيَّن الله للناس في القرآن من كل ما يُعْتَبر به من المواعظ والعبر والأوامر والنواهي والقصص؛ رجاء أن يؤمنوا.
1. மக்கள் நம்பிக்கைகொள்ளும்பொருட்டு அறிவுரைகள், ஏவல்கள், விலக்கல்கள், சம்பவங்கள் என படிப்பினைக்குரிய அனைத்தையும் அல்லாஹ் குர்ஆனில் தெளிவுபடுத்திவிட்டான்.

• القرآن كلام الله وآية النبي الخالدة، ولن يقدر أحد على المجيء بمثله.
2. குர்ஆன் அல்லாஹ்வின் வாக்காகவும் தூதருக்கு வழங்கப்பட்ட நிரந்தர அற்புதமாகவும் இருக்கின்றது. அதனைப் போன்ற ஒன்றைக் கொண்டுவர எவனும் சக்திபெறமாட்டான்.

• من رحمة الله بعباده أن أرسل إليهم بشرًا منهم، فإنهم لا يطيقون التلقي من الملائكة.
3. அல்லாஹ் தன் அடியார்களுக்கு மனித இனத்திலிருந்தே தூதர்களை அனுபுவது அல்லாஹ்வின் அருளாகும். ஏனெனில் நிச்சயமாக வானவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் சக்தி அவர்களிடம் இல்லை.

• من شهادة الله لرسوله ما أيده به من الآيات، ونَصْرُه على من عاداه وناوأه.
4. அல்லாஹ் தனது தூதரை உறுதிப்படுத்த வழங்கிய அத்தாட்சிகள், அவரை எதிர்த்தோருக்கு எதிராக அவருக்கு உதவுதல் ஆகியவை அல்லாஹ் தனது தூதருக்குக் கூறும் சாட்சியாகும்.

 
Firo maanaaji Aaya: (96) Simoore: Simoore roɓo
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude