Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Aaya: (183) Simoore: Simoore nagge
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَیْكُمُ الصِّیَامُ كَمَا كُتِبَ عَلَی الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟ۙ
2.183. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றுபவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைப்போல உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி உங்களுக்கும் அவனுடைய தண்டனைக்குமிடையே நற்செயல்களால் தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்த நற்செயல்களில் மிகச் சிறந்தது நோன்பாகும்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• فَضَّلَ الله شهر رمضان بجعله شهر الصوم وبإنزال القرآن فيه، فهو شهر القرآن؛ ولهذا كان النبي صلى الله عليه وسلم يتدارس القرآن مع جبريل في رمضان، ويجتهد فيه ما لا يجتهد في غيره.
1. குர்ஆனை இறக்கி நோன்பை விதியாக்கி அல்லாஹ் ரமலான் மாதத்தை சிறப்பித்துள்ளான். இது குர்ஆனுடைய மாதமாகும். எனவேதான் நபியவர்கள் இந்த மாதத்தில் ஜீப்ரீலுடன் சேர்ந்து குர்ஆனைப் படிப்பவர்களாக இருந்தார்கள். ஏனைய மாதங்களில் செய்யாதளவு அதிக வணக்கங்களில் இந்த மாதத்தில் ஈடுபடுவார்கள்.

• شريعة الإسلام قامت في أصولها وفروعها على التيسير ورفع الحرج، فما جعل الله علينا في الدين من حرج.
2. இஸ்லாமிய அடிப்படைகளும் கிளைச்சட்டங்களும் இலகுபடுத்தலையும் மற்றும் சங்கடங்களை அகற்றுவதையும் அடிப்படையாகக்கொண்டே அமைந்துள்ளன. அல்லாஹ் இந்த மார்க்கத்தில் நமக்கு எந்த சங்கடத்தையும் ஏற்படுத்தவில்லை.

• قُرْب الله تعالى من عباده، وإحاطته بهم، وعلمه التام بأحوالهم؛ ولهذا فهو يسمع دعاءهم ويجيب سؤالهم.
3. அல்லாஹ் தன் அடியார்களுக்கு மிக நெருக்கமாக அவர்களைச் சூழ்ந்துள்ளான். மேலும் அவர்களது விடயங்களை நுணுக்கமாக அறிந்து வைத்துள்ளான். எனவேதான் அவர்களது பிரார்த்தனையை செவியேற்று அவர்களது வேண்டுதலுக்கு பதிலளிக்கின்றான்.

 
Firo maanaaji Aaya: (183) Simoore: Simoore nagge
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude