Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Simoore: Simoore pelle   Aaya:
تَحِیَّتُهُمْ یَوْمَ یَلْقَوْنَهٗ سَلٰمٌ ۖۚ— وَّاَعَدَّ لَهُمْ اَجْرًا كَرِیْمًا ۟
33.44. நம்பிக்கையாளர்கள் தங்கள் இறைவனை சந்திக்கும்போது “சாந்தி உண்டாகட்டும், எல்லா வகையான தீங்குகளிலிருந்தும் பாதுகாவல் கிடைக்கட்டும்” என்பதுதான் அவர்களின் முகமனாக இருக்கும். அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டதற்கும் பாவங்களிலிருந்து விலகியிருந்ததற்கும் கூலியாக அவன் அவர்களுக்கு -சுவனம் என்னும்- கண்ணியமான கூலியை தயார்படுத்தி வைத்துள்ளான்.
Faccirooji aarabeeji:
یٰۤاَیُّهَا النَّبِیُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِیْرًا ۟ۙ
33.45. தூதரே! மனிதர்களை நோக்கி உம்மிடம் அனுப்பிவைக்கப்பட்ட தூதை நீர் எடுத்துரைத்தீர் என அவர்களின் மீது சாட்சி கூறுபவராகவும் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் சுவனத்தை தயார்படுத்தி வைத்துள்ளான் என்று நற்செய்தி கூறக்கூடியவராகவும் நிராகரிப்பாளர்களுக்கு அவன் வேதனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான் என்று எச்சரிக்கை செய்யக்கூடியவராகவும் நாம் உம்மை அனுப்பியுள்ளோம்.
Faccirooji aarabeeji:
وَّدَاعِیًا اِلَی اللّٰهِ بِاِذْنِهٖ وَسِرَاجًا مُّنِیْرًا ۟
33.46. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியன். அவனுடைய கட்டளைக்கு அடிபணிய வேண்டும் என்பதன்பால் அழைக்கும் அழைப்பாளராகவும் நேர்வழி பெற விரும்புவோர் நேர்வழிபெறுவதற்காக ஒளிவீசும் விளக்காகவும் நாம் உம்மை அனுப்பியுள்ளோம்.
Faccirooji aarabeeji:
وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ بِاَنَّ لَهُمْ مِّنَ اللّٰهِ فَضْلًا كَبِیْرًا ۟
33.47. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்ட நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து இவ்வுலகில் உதவியையும் மறுமையில் வெற்றிபெற்று சுவனம் நுழைதல் என்பதை உள்ளடக்கிய பெரும் அருட்கொடை உண்டு என்னும் நற்செய்தியைக் கூறுவீராக.
Faccirooji aarabeeji:
وَلَا تُطِعِ الْكٰفِرِیْنَ وَالْمُنٰفِقِیْنَ وَدَعْ اَذٰىهُمْ وَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ— وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
33.48. நயவஞ்சகர்களும் நிராகரிப்பாளர்களும் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் தடுக்கும் அழைப்பில் அவர்களுக்குக் கட்டுப்படாதீர். அவர்களைப் புறக்கணித்துவிடுவீராக. நீர் கொண்டுவந்ததன் மீது அவர்கள் நம்பிக்கைகொள்வதற்கு இதுவே சிறந்த அழைப்பாக அமையலாம். உமது எதிரிகளுக்கெதிராக உதவுதல் உட்பட உம்முடைய எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக. இம்மையிலும், மறுமையிலும் அடியார்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் சார்ந்து இருக்கும் போது அவர்களை பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்.
Faccirooji aarabeeji:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنٰتِ ثُمَّ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ فَمَا لَكُمْ عَلَیْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّوْنَهَا ۚ— فَمَتِّعُوْهُنَّ وَسَرِّحُوْهُنَّ سَرَاحًا جَمِیْلًا ۟
33.49. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! நீங்கள் நம்பிக்கைகொண்ட பெண்களுடன் திருமண ஒப்பந்தம் செய்து பின்னர் அவர்களுடன் உறவு கொள்ளாமலேயே அவர்களை விவாகரத்து செய்துவிட்டால் அவர்கள் மாதம் அல்லது மாதவிடாய் என இத்தா காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுடன் உறவு கொள்ளாததால் அவர்களின் கருவறையில் எதுவும் இல்லை என்பது தெளிவாகிவிட்டதால் அவ்வாறு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. விவாகரத்தால் காயம்பட்ட அவர்களின் உள்ளத்திற்கு ஆறுதலாக உங்களின் வசதிக்கேற்ப செல்வங்களை அளியுங்கள். அவர்களுக்குத் தொல்லையளிக்காமல் நல்லமுறையில் அவர்களது வழியில் செல்வதற்கு விட்டுவிடுங்கள்.
Faccirooji aarabeeji:
یٰۤاَیُّهَا النَّبِیُّ اِنَّاۤ اَحْلَلْنَا لَكَ اَزْوَاجَكَ الّٰتِیْۤ اٰتَیْتَ اُجُوْرَهُنَّ وَمَا مَلَكَتْ یَمِیْنُكَ مِمَّاۤ اَفَآءَ اللّٰهُ عَلَیْكَ وَبَنٰتِ عَمِّكَ وَبَنٰتِ عَمّٰتِكَ وَبَنٰتِ خَالِكَ وَبَنٰتِ خٰلٰتِكَ الّٰتِیْ هَاجَرْنَ مَعَكَ ؗ— وَامْرَاَةً مُّؤْمِنَةً اِنْ وَّهَبَتْ نَفْسَهَا لِلنَّبِیِّ اِنْ اَرَادَ النَّبِیُّ اَنْ یَّسْتَنْكِحَهَا ۗ— خَالِصَةً لَّكَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ؕ— قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَیْهِمْ فِیْۤ اَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ اَیْمَانُهُمْ لِكَیْلَا یَكُوْنَ عَلَیْكَ حَرَجٌ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
33.50. தூதரே! நீர் மணக்கொடை அளித்து மணமுடித்துக்கொண்ட உம் மனைவியரை உமக்கு ஆகுமாக்கியுள்ளோம். அல்லாஹ் உமக்கு போரில் அளித்து நீ சொந்தமாக்கிக் கொண்ட அடிமைப் பெண்களையும் உமக்கு அனுமதித்துள்ளோம். உம்முடன் மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த உம் தந்தையின் சகோதர சகோதரிகளின் மகள்கள், உம் தாயின் சகோதர சகோதரிகளின் மகள்கள் ஆகியோரையும் நாம் உமக்கு அனுமதித்துள்ளோம். தன்னைத் தூதருக்கு அன்பளிப்புச் செய்த நம்பிக்கைகொண்ட பெண்ணையும் தூதர் விரும்பினால் மணக்கொடையின்றி திருமணம் செய்துகொள்ளலாம். தன்னை அன்பளிப்புச் செய்த பெண்ணைத் திருமணம் செய்யும் இச்சலுகை உமக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இது அனுமதிக்கப்பட்டதல்ல. அவர்களுக்கு நான்கு மனைவியரை விட கூடுதலாக மணமுடித்துக்கொள்ளமுடியாது என நாம் அவர்களின் மனைவிமார் விஷயத்தில் அவர்கள் மீது கடமையாக்கியதையும் அடிமைப்பெண்களில் எண்ணிக்கையின்றி தாம் விரும்பியவர்களை அனுபவிக்கலாம் என அவர்களின் அடிமைப் பெண்கள் விஷயத்தில் கடமையாக்கியதையும் நாம் அறிவோம். நாம் மற்றவர்களுக்கு அனுமதியளிக்காததை உமக்கு அனுமதியளித்தது உமக்கு எந்த சங்கடமும், கஷ்டமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• الصبر على الأذى من صفات الداعية الناجح.
1. துன்பங்களைப் பொறுமையாகச் சகித்துக் கொள்வது வெற்றிமிக்க அழைப்பாளனின் பண்புகளில் ஒன்றாகும்.

• يُنْدَب للزوج أن يعطي مطلقته قبل الدخول بها بعض المال جبرًا لخاطرها.
2. உறவுகொள்வதற்கு முன்னரே விவகாரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு அவளது மனதை தேற்றுவதற்காக ஓரளவு பணத்தை கணவன் வழங்குவது வரவேற்கத்தக்கதாகும்.

• خصوصية النبي صلى الله عليه وسلم بجواز نكاح الهبة، وإن لم يحدث منه.
3.அன்பளிப்புத் திருமணத்தை அனுமதித்து நபியவர்களுக்கு சிறப்புச் சலுகை வழங்கல். அவ்வாறு அது அவரிடம் நிகழாத போதிலும் சரி.

 
Firo maanaaji Simoore: Simoore pelle
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude