Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Simoore: Simoore faatir   Aaya:
هُوَ الَّذِیْ جَعَلَكُمْ خَلٰٓىِٕفَ فِی الْاَرْضِ ؕ— فَمَنْ كَفَرَ فَعَلَیْهِ كُفْرُهٗ ؕ— وَلَا یَزِیْدُ الْكٰفِرِیْنَ كُفْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ اِلَّا مَقْتًا ۚ— وَلَا یَزِیْدُ الْكٰفِرِیْنَ كُفْرُهُمْ اِلَّا خَسَارًا ۟
35.39. -மனிதர்களே!- அவனே உலகில் உங்களில் சிலரை சிலரின் வழித்தோன்றல்களாக ஆக்கியுள்ளான், நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதைச் சோதிக்கும்பொருட்டு. யார் அல்லாஹ்வையும் தூதர்கள் கொண்டு வந்ததையும் நிராகரித்தார்களோ அதனால் ஏற்படும் பாவமும் தண்டனையும் அவரையே சாரும். நிராகரிப்பாளர்களின் நிராகரிப்பு அவர்களின் இறைவனிடத்தில் கடும் வெறுப்பையே அதிகப்படுத்துகிறது. அவர்களின் நிராகரிப்பு இழப்பையே அதிகப்படுத்துகிறது. ஏனெனில் அவர்கள் நம்பிக்கைகொண்டால் கிடைக்கும் அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ள சுவனத்தை அவர்கள் இழந்துவிடுகிறார்கள்.
Faccirooji aarabeeji:
قُلْ اَرَءَیْتُمْ شُرَكَآءَكُمُ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— اَرُوْنِیْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِی السَّمٰوٰتِ ۚ— اَمْ اٰتَیْنٰهُمْ كِتٰبًا فَهُمْ عَلٰی بَیِّنَتٍ مِّنْهُ ۚ— بَلْ اِنْ یَّعِدُ الظّٰلِمُوْنَ بَعْضُهُمْ بَعْضًا اِلَّا غُرُوْرًا ۟
35.40. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் உங்களின் இணைதெய்வங்களைக் குறித்து எனக்குக் கூறுங்கள். அவை பூமியில் எதைப் படைத்தன? அதன் மலைகளையோ, ஆறுகளையோ, உயிரினங்களையோ அவை படைத்தனவா? அல்லது வானங்களைப் படைத்ததில் அவற்றிற்கு பங்கு இருக்கின்றதா? அல்லது நாம் உங்களுக்கு ஒரு வேதம் வழங்கி அதில் உங்களின் இணைதெய்வங்களை வணங்குவதற்கு அதில் தகுந்த ஆதாரத்தை வழங்கியுள்ளோமா? முடிவாக இவற்றில் எதுவும் இல்லை. மாறாக இறைவனை நிராகரித்து, பாவங்கள் புரிந்து தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்ட அநியாயக்காரர்கள் ஒருவருக்கொருவர் ஏமாற்றத்தையே வாக்குறுதிகளாக அளிக்கிறார்கள்.
Faccirooji aarabeeji:
اِنَّ اللّٰهَ یُمْسِكُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ اَنْ تَزُوْلَا ۚ۬— وَلَىِٕنْ زَالَتَاۤ اِنْ اَمْسَكَهُمَا مِنْ اَحَدٍ مِّنْ بَعْدِهٖ ؕ— اِنَّهٗ كَانَ حَلِیْمًا غَفُوْرًا ۟
35.41. நிச்சயமாக அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் விலகிவிடாதவாறு தடுத்து வைத்திருக்கிறான். -ஒருவேளை- அவை விலகிவிட்டால் அல்லாஹ்வுக்குப் பின் யாராலும் அவை விலகிச் செல்லாமல் தடுக்க முடியாது. திட்டமாக அவன் சகிப்புத் தன்மை மிக்கவனாக இருக்கின்றான். அடியார்களை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.
Faccirooji aarabeeji:
وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ لَىِٕنْ جَآءَهُمْ نَذِیْرٌ لَّیَكُوْنُنَّ اَهْدٰی مِنْ اِحْدَی الْاُمَمِ ۚ— فَلَمَّا جَآءَهُمْ نَذِیْرٌ مَّا زَادَهُمْ اِلَّا نُفُوْرَا ۟ۙ
35.42. இந்த நிராகரித்து பொய்ப்பிப்பவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியமிட்டுக் கூறினார்கள்: “அல்லாஹ்விடமிருந்து அவனது வேதனையை எச்சரிக்கை செய்யக்கூடிய ஒரு தூதர் எங்களிடம் வந்தால் நாங்கள் யூதர்கள், கிருஸ்தவர்கள் மற்றும் மற்ற சமூகங்களைவிட சத்தியத்தை பின்பற்றக்கூடியவர்களாகவும் உறுதியானவர்களாகவும் இருப்போம்.” ஆனால் முஹம்மது இறைவனிடமிருந்து அவர்களிடம் அவனுடைய வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்யக்கூடியவராக வந்தபோது அவர்கள் சத்தியத்தைவிட்டு தூரமாகி அசத்தியத்திற்கு இன்னும் நெருக்கமாகி விட்டார்கள். முன்புள்ள சமுதாயங்களை விட நேர்வழி பெற்றவர்களாக நாம் இருப்போம் என தாங்கள் உறுதியாக செய்த சத்தியத்தை அவர்கள் நிறைவேற்றவில்லை.
Faccirooji aarabeeji:
١سْتِكْبَارًا فِی الْاَرْضِ وَمَكْرَ السَّیِّئ ؕ— وَلَا یَحِیْقُ الْمَكْرُ السَّیِّئُ اِلَّا بِاَهْلِهٖ ؕ— فَهَلْ یَنْظُرُوْنَ اِلَّا سُنَّتَ الْاَوَّلِیْنَ ۚ— فَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَبْدِیْلًا ۚ۬— وَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَحْوِیْلًا ۟
35.43. அவர்கள் நல்லெண்ணத்தோடும் நல்ல நோக்கத்தோடும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறவில்லை. மாறாக பூமியில் கர்வம்கொள்வதற்காகவும் மக்களை ஏமாற்றுவதற்காகவுமே அவ்வாறு செய்தார்கள். தீய சூழ்ச்சி அதில் ஈடுபட்டவர்களையே தாக்கும். கர்வம் கொண்ட, சூழ்ச்சி செய்யக்கூடிய இவர்கள் உறுதியான அல்லாஹ்வின் வழிமுறையைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அது முந்தைய சமூகங்கள் அழிக்கப்பட்டது போன்று அவர்களும் அழிக்கப்படுவார்கள் என்பதாகும். கர்வமுள்ளவர்களை அழிக்காமல் விடுதல், கர்வமற்றவர்களை அழித்தல் என அல்லாஹ்வின் வழிமுறையில் எவ்வித மாற்றத்தையும் நீர் காண மாட்டீர். ஏனெனில் அல்லாஹ்வின் வழிமுறை மாறாததாகும்.
Faccirooji aarabeeji:
اَوَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ وَكَانُوْۤا اَشَدَّ مِنْهُمْ قُوَّةً ؕ— وَمَا كَانَ اللّٰهُ لِیُعْجِزَهٗ مِنْ شَیْءٍ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ ؕ— اِنَّهٗ كَانَ عَلِیْمًا قَدِیْرًا ۟
35.44. உம்மை மறுக்கும் இந்தக் குறைஷிப் பொய்யர்கள் பூமியில் பயணம் செய்து முன்னர் பொய்ப்பித்த சமூகங்களின் முடிவு என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் அவர்களை அழித்து அவர்களின் முடிவை தீயதாக ஆக்கவில்லையா? அவர்கள் குறைஷிகளை விட பலம் மிக்கவர்களாக இருக்கவில்லையா? வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வை விட்டு எதுவும் தப்பிவிட முடியாது. நிச்சயமாக அவன் இந்த பொய்ப்பிப்பவர்களின் செயல்களைக் குறித்து நன்கறிந்தவன். இவர்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை, ஒன்றும் தப்பிவிடவும் முடியாது. தான் விரும்பிய சமயத்தில் அவர்களை அழிப்பதற்கு அவன் ஆற்றலுடையவன்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• الكفر سبب لمقت الله، وطريق للخسارة والشقاء.
1. நிராகரிப்பு இறைவனின் வெறுப்புக்கான காரணியாக அமைகிறது. இழப்பு, துர்பாக்கியத்துக்கான வழியை ஏற்படுத்துகிறது.

• المشركون لا دليل لهم على شركهم من عقل ولا نقل.
2. இணைவைப்பாளர்கள் செய்யும் இணைவைப்பிற்கு புத்தி, குர்ஆன், சுன்னா சார்ந்த எவ்வித ஆதாரமும் இல்லை.

• تدمير الظالم في تدبيره عاجلًا أو آجلًا.
3. அநியாயக்காரனின் சூழ்ச்சி விரைவாகவோ, தாமதமாகவோ அவனுடைய அழிவுக்கு காரணமாக இருக்கின்றது.

 
Firo maanaaji Simoore: Simoore faatir
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude