Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango.

external-link copy
2 : 35

مَا یَفْتَحِ اللّٰهُ لِلنَّاسِ مِنْ رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۚ— وَمَا یُمْسِكْ ۙ— فَلَا مُرْسِلَ لَهٗ مِنْ بَعْدِهٖ ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

35.2. நிச்சயமாக ஒவ்வொரு பொருளின் திறவுகோலும் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது. அவன் மனிதர்களுக்கு அளிக்கும் வாழ்வாதாரம், வழிகாட்டுதல், நற்பாக்கியம், அவையல்லாத இன்னும் அருட்கொடைகளை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுத்ததை அதற்குப்பிறகு யாராலும் கொண்டு வர முடியாது. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தான் படைத்த படைப்புகளில், அமைத்த விதிகளில், தன் நிர்வாகத்தில் அவன் ஞானம் மிக்கவன்.
info
التفاسير: |
Hino jeyaa e nafooje Aayeeje on ka hello ɗoo.:
• مشهد فزع الكفار يوم القيامة مشهد عظيم.
1. மறுமை நாளில் நிராகரிப்பாளர்கள் பதற்றத்திற்கு உள்ளாகும் காட்சி மகத்தான காட்சியாகும். info

• محل نفع الإيمان في الدنيا؛ لأنها هي دار العمل.
2. ஈமான் பயனளிக்கும் இடம் உலகமாகும். ஏனெனில் நிச்சயமாக அதுவே செயல்படும் களமாகும். info

• عظم خلق الملائكة يدل على عظمة خالقهم سبحانه.
3. வானவர்களை பிரமாண்டமாக படைத்திருப்பது அவர்களைப் படைத்த படைப்பாளனின் மகத்துவத்தைக் காட்டுகிறது. info