Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Simoore: Simoore rewɓe   Aaya:
مَنْ یُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ ۚ— وَمَنْ تَوَلّٰی فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَیْهِمْ حَفِیْظًا ۟ؕ
4.80. யார் தூதர் கூறியவற்றைச் செயல்படுத்தி, அவர் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவருக்குக் கட்டுப்பட்டாரோ அவர் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவராவார். தூதரே! யார் உமக்குக் கட்டுப்பட மறுக்கிறாரோ அவருக்காக நீர் கவலைப்படவேண்டாம். ஏனெனில் அவரது செயல்களைப் பாதுகாக்கும் கண்காணிப்பாளராக நாம் உம்மை அனுப்பவில்லை. மாறாக நாம்தாம் அவரது செயலை எண்ணுகிறோம், கணக்கிடுகிறாம்.
Faccirooji aarabeeji:
وَیَقُوْلُوْنَ طَاعَةٌ ؗ— فَاِذَا بَرَزُوْا مِنْ عِنْدِكَ بَیَّتَ طَآىِٕفَةٌ مِّنْهُمْ غَیْرَ الَّذِیْ تَقُوْلُ ؕ— وَاللّٰهُ یَكْتُبُ مَا یُبَیِّتُوْنَ ۚ— فَاَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ— وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
4.81. இந்த நயவஞ்சகர்கள் தங்களின் நாவால், “நாங்கள் உமது கட்டளைக்குக் கட்டுப்படுகிறோம், அதனைச் செயல்படுத்துகிறோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் உம்மைவிட்டுச் சென்றவுடன் அவர்களில் ஒரு பிரிவினர் தாங்கள் கூறியதற்கு மாறாக மறைவில் சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்கள் சூழ்ச்சி செய்வதை அல்லாஹ் அறிகிறான். அவர்களின் இந்த சூழ்ச்சிகளுக்கு அவன் தண்டனை வழங்குவான். அவர்களின் பக்கம் கவனம் செலுத்தாதீர். அவர்கள் உமக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்திவிட முடியாது. உமது காரியங்களை அல்லாஹ்விடம் ஒப்படைப்பீராக. அவனையே நம்பி இருப்பீராக. நீர் நம்பிக்கை வைப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
Faccirooji aarabeeji:
اَفَلَا یَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ ؕ— وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَیْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِیْهِ اخْتِلَافًا كَثِیْرًا ۟
4.82. இவர்கள் ஏன் அல்குர்ஆனை சிந்திக்காமலும் படிக்காமலும் இருக்கின்றனர்? அவ்வாறு சிந்தித்திருந்தால் அல்குர்ஆனில் எவ்வித முரண்பாடும் இல்லை என்பது அவர்களுக்கு நிரூபனமாவதோடு, நீர் கொண்டுவந்தவை உண்மையே என்பதையும் புரிந்திருப்பர். இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதன் சட்டங்களில் தடுமாற்றத்தையும் கருத்துக்களில் ஏராளமான முரண்பாடுகளையும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
Faccirooji aarabeeji:
وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَوْفِ اَذَاعُوْا بِهٖ ؕ— وَلَوْ رَدُّوْهُ اِلَی الرَّسُوْلِ وَاِلٰۤی اُولِی الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِیْنَ یَسْتَنْۢبِطُوْنَهٗ مِنْهُمْ ؕ— وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّیْطٰنَ اِلَّا قَلِیْلًا ۟
4.83. முஸ்லிம்களின் அமைதி, மகிழ்ச்சி அல்லது அச்சம், கவலை சம்பந்தமான ஏதாவது ஒரு செய்தி இந்த நயவஞ்சகர்களிடம் வந்தால் அதனைப் பரப்பிவிடுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் அல்லது முஸ்லிம்களின் விவகாரங்களை நிர்ணயிக்கும் பொறுப்புதாரர்கள், அறிவுடையவர்கள், விசுவாசமானவர்களிடம் விஷயத்தை கொண்டு சென்றிருந்தால் ஆராய்ந்தறிவோர் அச்செய்தியை இரகசியமாக வைப்பதா வெளியிடுவதா என்பதை முடிவுசெய்திருப்பார்கள். இறைநம்பிக்கையாளர்களே! இஸ்லாத்தின் மூலம் அல்லாஹ்வின் அருளும் அல்குர்ஆனின் மூலம் அவனது கருணையும் உங்களுக்குக் கிடைத்து இந்த நயவஞ்சகர்களை சோதித்ததை விட்டும் அவன் உங்களைப் பாதுகாத்திருக்காவிட்டால் உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானின் ஊசலாட்டங்களைப் பின்பற்றியிருப்பீர்கள்.
Faccirooji aarabeeji:
فَقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ— لَا تُكَلَّفُ اِلَّا نَفْسَكَ وَحَرِّضِ الْمُؤْمِنِیْنَ ۚ— عَسَی اللّٰهُ اَنْ یَّكُفَّ بَاْسَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ— وَاللّٰهُ اَشَدُّ بَاْسًا وَّاَشَدُّ تَنْكِیْلًا ۟
4.84. தூதரே! அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக அவனுடைய பாதையில் போர் புரிவீராக. மற்றவர்களைக் குறித்து நீர் விசாரிக்கப்பட மாட்டீர். அது உங்களுக்கு அவசியமுமற்றது. ஏனெனில் உம்மை மட்டுமே நீர் போரில் ஈடுபடுத்த முடியும். நம்பிக்கையாளர்களுக்கு போர் புரிய ஆர்வமூட்டுவீராக. அல்லாஹ் உங்களின் போராட்டத்தைக் கொண்டு நிராகரிப்பாளர்களின் பலத்தை தடுத்துவிடலாம். அவன்தான் அதிக வல்லமைமிக்கவனாகவும் கடுந்தண்டனை அளிப்பவனாகவும் இருக்கின்றான்.
Faccirooji aarabeeji:
مَنْ یَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً یَّكُنْ لَّهٗ نَصِیْبٌ مِّنْهَا ۚ— وَمَنْ یَّشْفَعْ شَفَاعَةً سَیِّئَةً یَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا ؕ— وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ مُّقِیْتًا ۟
4.85. பிறருக்கு நன்மை ஏற்படுவதற்காக யார் முயற்சி செய்வாரோ அவருக்கும் அதன் நன்மையில் பங்கு உண்டு. பிறருக்கு தீங்கு செய்வதற்காக யார் முயற்சி செய்வாரோ அவருக்கும் அந்தப் பாவத்தில் பங்கு உண்டு. மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொன்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். நன்மை நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக அமைந்தால் அதில் உங்களுக்கும் பங்கு உண்டு. தீமை நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக அமைந்தால் அதில் உங்களுக்கும் பங்கு உண்டு.
Faccirooji aarabeeji:
وَاِذَا حُیِّیْتُمْ بِتَحِیَّةٍ فَحَیُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلٰی كُلِّ شَیْءٍ حَسِیْبًا ۟
86- உங்களுக்கு யாராவது ஸலாம் கூறினால் அவர் கூறியதை விட சிறந்த முறையில் அவருக்குப் பதிலளியுங்கள். அல்லது அவர் கூறியது போன்றாவது பதிலளியுங்கள். அதனை விடச் சிறந்த முறையில் பதிலளிப்பதே ஏற்றமானதாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பாதுகாப்பவனாகவே இருக்கிறான். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• تدبر القرآن الكريم يورث اليقين بأنه تنزيل من الله؛ لسلامته من الاضطراب، ويظهر عظيم ما تضمنه من الأحكام.
1. குர்ஆனைச் சிந்திப்பது அது அல்லாஹ்விடமிருந்து இறங்கிய வேதமே என்ற உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தும். ஏனெனில் அதில் எவ்வித முரண்பாடும் கிடையாது. மேலும் அவ்வாறு சிந்திப்பது அது உள்ளடக்கியிருக்கும் சட்டங்களிள் பெறுமதியையும் தெளிவுபடுத்தும்.

• لا يجوز نشر الأخبار التي تنشأ عنها زعزعة أمن المؤمنين، أو دبُّ الرعب بين صفوفهم.
2. முஸ்லிம்களின் அமைதியைக் குழைக்கும் அல்லது அவர்களுக்கு மத்தியில் பீதியை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடக்கூடாது.

• التحدث بقضايا المسلمين والشؤون العامة المتصلة بهم يجب أن يصدر من أهل العلم وأولي الأمر منهم.
3. முஸ்லிம்களின் பொதுவிவகாரங்கள் பற்றிய தகவல்கள் அறிஞர்கள் மற்றும் அதிகாரம் உடையவர்கள் மூலமே வெளியிடப்படவேண்டும்.

• مشروعية الشفاعة الحسنة التي لا إثم فيها ولا اعتداء على حقوق الناس، وتحريم كل شفاعة فيها إثم أو اعتداء.
4. பாவமோ மனிதர்களது உரிமைகளில் வரம்புமீறலோ அற்ற நல்ல பரிந்துரை அனுமதிக்கப்பட்டுள்ளது. பாவங்களும் வரம்புமீறலும் கலந்துள்ள தீய பரிந்துரை தடுக்கப்பட்டுள்ளது.

 
Firo maanaaji Simoore: Simoore rewɓe
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude