Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e haala Taamil - Umar Shariif * - Tippudi firooji ɗii

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

Firo maanaaji Simoore: Simoore saafaati   Aaya:
مَا لَكُمْ لَا تَنَاصَرُوْنَ ۟
(இன்னும், அவர்களை நோக்கி நிந்தனையாக கூறப்படும்:) “உங்களுக்கு என்ன நேர்ந்தது நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யாமல் இருக்கிறீர்கள்?”
Faccirooji aarabeeji:
بَلْ هُمُ الْیَوْمَ مُسْتَسْلِمُوْنَ ۟
மாறாக, அவர்கள் இன்று (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்.
Faccirooji aarabeeji:
وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
இன்னும், அவர்களில் சிலர், சிலரை முன்னோக்கி (தங்களது இறுதி தங்குமிடத்தைப் பற்றி) விசாரித்துக் கொள்வார்கள்.
Faccirooji aarabeeji:
قَالُوْۤا اِنَّكُمْ كُنْتُمْ تَاْتُوْنَنَا عَنِ الْیَمِیْنِ ۟
(வழிகெட்டவர்கள் தங்களை வழிகெடுத்த தலைவர்களை நோக்கி) கூறுவார்கள்: “நன்மையை விட்டும் (எங்களை) தடுக்க நீங்கள் எங்களிடம் தொடர்ந்து வந்தீர்கள்.”
Faccirooji aarabeeji:
قَالُوْا بَلْ لَّمْ تَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟ۚ
(வழிகெடுத்தவர்கள்) கூறுவார்கள்: “(நீங்கள் சொல்வது பொய்!) மாறாக, நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.”
Faccirooji aarabeeji:
وَمَا كَانَ لَنَا عَلَیْكُمْ مِّنْ سُلْطٰنٍ ۚ— بَلْ كُنْتُمْ قَوْمًا طٰغِیْنَ ۟
“(உங்களை வழிகெடுக்க) எங்களுக்கு உங்கள் மீது எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை. மாறாக, நீங்கள் அளவு கடந்து பாவம் செய்யும் மக்களாக இருந்தீர்கள்.”
Faccirooji aarabeeji:
فَحَقَّ عَلَیْنَا قَوْلُ رَبِّنَاۤ ۖۗ— اِنَّا لَذَآىِٕقُوْنَ ۟
“ஆகவே, நம் மீது நமது இறைவனுடைய (தண்டனையின்) வாக்கு உறுதியாகி விட்டது. நிச்சயமாக நாம் (தண்டனையை) சுவைப்பவர்கள்தான்.”
Faccirooji aarabeeji:
فَاَغْوَیْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِیْنَ ۟
“ஆக, நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். நிச்சயமாக நாங்கள் வழி கெட்டவர்களாகவே இருந்தோம்.”
Faccirooji aarabeeji:
فَاِنَّهُمْ یَوْمَىِٕذٍ فِی الْعَذَابِ مُشْتَرِكُوْنَ ۟
ஆக, நிச்சயமாக அவர்கள் (வழிகெடுத்தவர்களும் வழிகெட்டவர்களும்) அந்நாளில் தண்டனையில் (ஒன்றாக) கூட்டாகிவிடுவார்கள்.
Faccirooji aarabeeji:
اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِیْنَ ۟
நிச்சயமாக நாம் இப்படித்தான் குற்றவாளிகளுடன் நடந்து கொள்வோம்.
Faccirooji aarabeeji:
اِنَّهُمْ كَانُوْۤا اِذَا قِیْلَ لَهُمْ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ یَسْتَكْبِرُوْنَ ۟ۙ
“அல்லாஹ்வைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை” என்று அவர்களுக்கு கூறப்பட்டால் நிச்சயமாக அவர்கள் (அதை ஏற்றுக் கொள்ளாமல்) பெருமை அடி(த்து புறக்கணி)ப்பவர்களாக இருந்தனர்.
Faccirooji aarabeeji:
وَیَقُوْلُوْنَ اَىِٕنَّا لَتَارِكُوْۤا اٰلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُوْنٍ ۟ؕ
இன்னும், “பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை நிச்சயமாக நாங்கள் விட்டுவிடுவோமா?” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
Faccirooji aarabeeji:
بَلْ جَآءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِیْنَ ۟
(அவர்கள் கூறுவது போன்றல்ல.) மாறாக, அவர் சத்தியத்தைக் கொண்டு வந்தார். இன்னும், (முன்னர் வந்த) தூதர்களை உண்மைப்படுத்தினார்.
Faccirooji aarabeeji:
اِنَّكُمْ لَذَآىِٕقُوا الْعَذَابِ الْاَلِیْمِ ۟ۚ
(இணைவைப்பாளர்களே!) நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் தண்டனையை சுவைப்பீர்கள்.
Faccirooji aarabeeji:
وَمَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۙ
நீங்கள் எதை செய்துகொண்டிருந்தீர்களோ அதற்கே தவிர நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.
Faccirooji aarabeeji:
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் தண்டனையை விட்டும் பாதுகாக்கப்படுவார்கள்.)
Faccirooji aarabeeji:
اُولٰٓىِٕكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُوْمٌ ۟ۙ
(ருசியும் மணமும்) அறியப்பட்ட (சிறப்பான) உணவு அவர்களுக்கு உண்டு.
Faccirooji aarabeeji:
فَوَاكِهُ ۚ— وَهُمْ مُّكْرَمُوْنَ ۟ۙ
பழங்கள் (அவர்களுக்கு உண்டு). இன்னும், அவர்கள் (சொர்க்கத்தில் பலவிதமான சிறப்புகளைக் கொண்டு) கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
Faccirooji aarabeeji:
فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟ۙ
இன்பமிகு சொர்க்கங்களில் (இருப்பார்கள்).
Faccirooji aarabeeji:
عَلٰی سُرُرٍ مُّتَقٰبِلِیْنَ ۟
கட்டில்கள் மீது ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.
Faccirooji aarabeeji:
یُطَافُ عَلَیْهِمْ بِكَاْسٍ مِّنْ مَّعِیْنٍ ۟ۙ
மதுரமான தெளிவான நீரைப் போன்ற மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன் அவர்களை சுற்றிவரப்படும்.
Faccirooji aarabeeji:
بَیْضَآءَ لَذَّةٍ لِّلشّٰرِبِیْنَ ۟ۚ
அந்த மது வெண்மையாக அருந்துபவர்களுக்கு மிக இன்பமானதாக இருக்கும்.
Faccirooji aarabeeji:
لَا فِیْهَا غَوْلٌ وَّلَا هُمْ عَنْهَا یُنْزَفُوْنَ ۟
அதில் (அறிவைப் போக்கக்கூடிய) போதையும் இருக்காது (தலைவலி, வயிற்று வலி இருக்காது.) இன்னும், அவர்கள் அதனால் மயக்கமுற மாட்டார்கள்.
Faccirooji aarabeeji:
وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ عِیْنٌ ۟ۙ
பார்வைகளை தாழ்த்திய கண்ணழகிகள் அவர்களிடம் இருப்பார்கள்.
Faccirooji aarabeeji:
كَاَنَّهُنَّ بَیْضٌ مَّكْنُوْنٌ ۟
அவர்கள் பாதுகாக்கப்பட்ட (-மறைக்கப்பட்ட தீக்கோழியின்) முட்டையைப் போன்று (-அதன் நிறத்தில்) இருப்பார்கள்.
Faccirooji aarabeeji:
فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
ஆக, அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி (நரகவாசிகளைப் பற்றி) விசாரிப்பார்கள்.
Faccirooji aarabeeji:
قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ اِنِّیْ كَانَ لِیْ قَرِیْنٌ ۟ۙ
“நிச்சயமாக எனக்கு ஒரு நண்பன் இருந்தான்” என்று அவர்களில் பேசிய ஒருவர் கூறுவார்.
Faccirooji aarabeeji:
 
Firo maanaaji Simoore: Simoore saafaati
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e haala Taamil - Umar Shariif - Tippudi firooji ɗii

Eggi nde ko Seek Umar Sariif ɓii Abdu Salaam.

Uddude