Fassarar Ma'anonin Alqura'ni - Fassara da yaren Tamil -Abdulhamid Bagawi * - Teburin Bayani kan wasu Fassarori

XML CSV Excel API
Please review the Terms and Policies

Fassarar Ma'anoni Sura: Suratu Al'kalam   Aya:

ஸூரா அல்கலம்

نٓ وَالْقَلَمِ وَمَا یَسْطُرُوْنَ ۟ۙ
1. நூன். எழுதுகோலின் மீதும் (அதைக் கொண்டு) அவர்கள் எதை எழுதுகிறார்களோ அதன்மீதும் சத்தியமாக!
Tafsiran larabci:
مَاۤ اَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍ ۟ۚ
2. (நபியே!) உமது இறைவனருளால் நீர் பைத்தியக்காரரல்ல.
Tafsiran larabci:
وَاِنَّ لَكَ لَاَجْرًا غَیْرَ مَمْنُوْنٍ ۟ۚ
3. நிச்சயமாக உமக்கு முடிவுறாத (நீடித்த) கூலி இருக்கிறது.
Tafsiran larabci:
وَاِنَّكَ لَعَلٰی خُلُقٍ عَظِیْمٍ ۟
4. நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கிறீர்.
Tafsiran larabci:
فَسَتُبْصِرُ وَیُبْصِرُوْنَ ۟ۙ
5-6. ‘‘உங்களில் யார் பைத்தியக்காரர்'' என்பதை அதிசீக்கிரத்தில் (நபியே!) நீர் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.
Tafsiran larabci:
بِاَیِّىكُمُ الْمَفْتُوْنُ ۟
5-6. ‘‘உங்களில் யார் பைத்தியக்காரர்'' என்பதை அதிசீக்கிரத்தில் (நபியே!) நீர் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.
Tafsiran larabci:
اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ ۪— وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟
7. நிச்சயமாக உமது இறைவன் அவன் வழியிலிருந்து தவறியவர் யார் என்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவர்களையும் அவன் நன்கறிவான்.
Tafsiran larabci:
فَلَا تُطِعِ الْمُكَذِّبِیْنَ ۟
8. ஆகவே, (நபியே!) இப்பொய்யர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!
Tafsiran larabci:
وَدُّوْا لَوْ تُدْهِنُ فَیُدْهِنُوْنَ ۟
9. (கடமையை நிறைவேற்றுவதில்) நீர் அலுத்து(ச் சலித்தால்) அவர்களும் சலித்து (உம்மை விட்டு) விலகி விடவே விரும்புகின்றனர்.
Tafsiran larabci:
وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِیْنٍ ۟ۙ
10. (நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்.
Tafsiran larabci:
هَمَّازٍ مَّشَّآءٍ بِنَمِیْمٍ ۟ۙ
11. (அவன்) தொடர்ந்து (புறம்பேசிக்) குற்றம் கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக்கொண்டு திரிபவன்.
Tafsiran larabci:
مَّنَّاعٍ لِّلْخَیْرِ مُعْتَدٍ اَثِیْمٍ ۟ۙ
12. (அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும்பாவி;
Tafsiran larabci:
عُتُلٍّۢ بَعْدَ ذٰلِكَ زَنِیْمٍ ۟ۙ
13. கடின சுபாவமுள்ளவன். இத்துடன் இழிவானவனும் கூட.
Tafsiran larabci:
اَنْ كَانَ ذَا مَالٍ وَّبَنِیْنَ ۟ؕ
14. ஏதோ சந்ததிகளும், பொருள்களும் (அவனுக்கு) இருக்கிறது என்பதற்காக (அவன் கர்வம்கொண்டு),
Tafsiran larabci:
اِذَا تُتْلٰی عَلَیْهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
15. நம் வசனங்கள் அவனுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக் கதைகள் என்று கூறுகிறான்.
Tafsiran larabci:
سَنَسِمُهٗ عَلَی الْخُرْطُوْمِ ۟
16. (என்றென்றும் இருக்கக்கூடியவாறும், அனைவரும் அறியக்கூடியவாறும்) அவனுடைய மூக்கில் அதிசீக்கிரத்தில் ஓர் அடையாளமிடுவோம்.
Tafsiran larabci:
اِنَّا بَلَوْنٰهُمْ كَمَا بَلَوْنَاۤ اَصْحٰبَ الْجَنَّةِ ۚ— اِذْ اَقْسَمُوْا لَیَصْرِمُنَّهَا مُصْبِحِیْنَ ۟ۙ
17. (யமன் நாட்டில் வசித்த) தோப்பின் சொந்தக்காரர்களை நாம் சோதித்தவாறே (மக்காவாசிகளாகிய) இவர்களையும், (ஆறு ஆண்டுகள் பஞ்சத்தைக் கொண்டு) நிச்சயமாக நாம் சோதித்தோம். (அத்தோப்புடையவர்கள்) அதிலுள்ள விளைச்சலை (மறுநாள்) அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோம் என்று சத்தியம் செய்தார்கள்.
Tafsiran larabci:
وَلَا یَسْتَثْنُوْنَ ۟
18. எனினும், ‘இன்ஷா அல்லாஹ்' (அல்லாஹ் நாடினால்) என்று கூறவில்லை.
Tafsiran larabci:
فَطَافَ عَلَیْهَا طَآىِٕفٌ مِّنْ رَّبِّكَ وَهُمْ نَآىِٕمُوْنَ ۟
19. ஆகவே, அவர்கள் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கும்போதே உமது இறைவனிடமிருந்து ஓர் ஆபத்து (வந்து) அத்தோட்டத்தைத் துடைத்து (அழித்து) விட்டது.
Tafsiran larabci:
فَاَصْبَحَتْ كَالصَّرِیْمِ ۟ۙ
20. பயிர்களையெல்லாம் வேருடன் களைந்துவிட்ட மாதிரி (அது அழிந்து) போயிற்று.
Tafsiran larabci:
فَتَنَادَوْا مُصْبِحِیْنَ ۟ۙ
21. (அதை அறியாத தோட்டக்காரர்கள்) விடியற்காலையில் ஒருவருக்கொருவர் சப்தமிட்டு அழைத்து,
Tafsiran larabci:
اَنِ اغْدُوْا عَلٰی حَرْثِكُمْ اِنْ كُنْتُمْ صٰرِمِیْنَ ۟
22. ‘‘நீங்கள் விளைச்சலை அறுப்பதாயிருந்தால், அதை அறுவடை செய்ய உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் வாருங்கள்'' (என்றும் கூறிக் கொண்டார்கள்).
Tafsiran larabci:
فَانْطَلَقُوْا وَهُمْ یَتَخَافَتُوْنَ ۟ۙ
23. (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக்கொண்டே சென்றார்கள்.
Tafsiran larabci:
اَنْ لَّا یَدْخُلَنَّهَا الْیَوْمَ عَلَیْكُمْ مِّسْكِیْنٌ ۟ۙ
24. (யாசகம் கேட்கக்கூடிய) ஏழை ஒருவர் (கூட) உங்களிடம் இன்றைய தினம் அதில் நுழையாதிருக்கவும் (என்று மெதுவாகப் பேசிக்கொண்டார்கள்).
Tafsiran larabci:
وَّغَدَوْا عَلٰی حَرْدٍ قٰدِرِیْنَ ۟
25. தங்கள் எண்ணத்தில் (தங்களுடன் ஓர் ஏழையும் வராது) தடுத்து விட்டதாக எண்ணிக்கொண்டு, அதிகாலையில் சென்றார்கள்.
Tafsiran larabci:
فَلَمَّا رَاَوْهَا قَالُوْۤا اِنَّا لَضَآلُّوْنَ ۟ۙ
26. (சென்று) அதைப் பார்க்கவே, (விளைச்சலெல்லாம் அழிந்து போயிருப்பதைக் கண்டு ‘‘இது நம்முடையதல்ல; வேறொருவருடைய தோட்டத்திற்கு) நிச்சயமாக நாம் வழிதவறியே வந்துவிட்டோம்'' என்றார்கள்.
Tafsiran larabci:
بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ۟
27. (பின்னர், அதைத் தங்கள் தோட்டம்தான் என்று அறிந்து) அல்ல. நாம்தான் நம் பலன்களை இழந்து விட்டோம் (என்று கூறினார்கள்).
Tafsiran larabci:
قَالَ اَوْسَطُهُمْ اَلَمْ اَقُلْ لَّكُمْ لَوْلَا تُسَبِّحُوْنَ ۟
28. அவர்களிலுள்ள ஒரு நடுநிலையாளன் அவர்களை நோக்கி ‘‘(அடிக்கடி) நான் உங்களுக்குக் கூறவில்லையா? (நான் கூறியபடி) நீங்கள் (இறைவனைத்) துதிசெய்து கொண்டிருக்க வேண்டாமா?'' என்று கூறினார்.
Tafsiran larabci:
قَالُوْا سُبْحٰنَ رَبِّنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
29. அதற்கவர்கள் ‘‘எங்கள் இறைவனே! நீ மிக்க பரிசுத்தமானவன்; நிச்சயமாக நாங்கள்தான் (எங்களுக்கு) தீங்கிழைத்துக் கொண்டோம்'' என்று கூறி,
Tafsiran larabci:
فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَلَاوَمُوْنَ ۟
30. பின்னர், அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கி, ஒருவர் மற்றவரை நிந்தனை செய்து கொண்டனர்.
Tafsiran larabci:
قَالُوْا یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا طٰغِیْنَ ۟
31. ‘‘நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறிவிட்டோம்; எங்களுக்குக் கேடுதான்'' என்று அவர்கள் கூறினர்.
Tafsiran larabci:
عَسٰی رَبُّنَاۤ اَنْ یُّبْدِلَنَا خَیْرًا مِّنْهَاۤ اِنَّاۤ اِلٰی رَبِّنَا رٰغِبُوْنَ ۟
32. ‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனையே நோக்குகிறோம். எங்கள் இறைவன் இதைவிட மேலானதொன்றை எங்களுக்குத் தரக்கூடும்'' (என்றும் கூறினர்).
Tafsiran larabci:
كَذٰلِكَ الْعَذَابُ ؕ— وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟۠
33. (நபியே! உம்மை நிராகரிக்கின்ற இவர்களுக்கும்) இத்தகைய வேதனைதான் கிடைக்கும். மறுமையிலுள்ள வேதனையோ (இதைவிட) மிகப் பெரிது. இதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
Tafsiran larabci:
اِنَّ لِلْمُتَّقِیْنَ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
34. நிச்சயமாக, இறையச்சமுடையவர்களுக்கு, தங்கள் இறைவனிடத்தில் மிக்க இன்பம் தரும் சொர்க்கங்கள் உண்டு.
Tafsiran larabci:
اَفَنَجْعَلُ الْمُسْلِمِیْنَ كَالْمُجْرِمِیْنَ ۟ؕ
35. (நமக்கு) முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கி விடுவோமா?
Tafsiran larabci:
مَا لَكُمْ ۫— كَیْفَ تَحْكُمُوْنَ ۟ۚ
36. உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இருவரும் சமமென) எவ்வாறு, தீர்ப்பு அளிக்கிறீர்கள்?
Tafsiran larabci:
اَمْ لَكُمْ كِتٰبٌ فِیْهِ تَدْرُسُوْنَ ۟ۙ
37. அல்லது உங்களிடம் (ஏதும்) வேத நூல் இருக்கிறதா? அதில் நீங்கள் (இரு வகுப்பாரும் சமமெனப்) படித்திருக்கிறீர்களா?
Tafsiran larabci:
اِنَّ لَكُمْ فِیْهِ لَمَا تَخَیَّرُوْنَ ۟ۚ
38. நீங்கள் விரும்பியதெல்லாம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்குமென்று அதில் இருக்கிறதா?
Tafsiran larabci:
اَمْ لَكُمْ اَیْمَانٌ عَلَیْنَا بَالِغَةٌ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۙ— اِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُوْنَ ۟ۚ
39. அல்லது நீங்கள் கட்டளையிடுவதெல்லாம் மறுமை நாள் வரை, நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்குமென்று நாம் உங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றோமா?
Tafsiran larabci:
سَلْهُمْ اَیُّهُمْ بِذٰلِكَ زَعِیْمٌ ۟ۚۛ
40. (நபியே!) அவர்களிடம் கேட்பீராக: ‘‘(அவ்வாறாயின்) அவர்களில் இதற்கு யார் பொறுப்பாளி?
Tafsiran larabci:
اَمْ لَهُمْ شُرَكَآءُ ۛۚ— فَلْیَاْتُوْا بِشُرَكَآىِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِیْنَ ۟
41. அல்லது அவர்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளியா? இதில் அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், அவர்கள் இணைவைத்தவற்றை (இன்றைய தினம் தங்கள் சாட்சிகளாக) அழைத்து வரவும்.
Tafsiran larabci:
یَوْمَ یُكْشَفُ عَنْ سَاقٍ وَّیُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ فَلَا یَسْتَطِیْعُوْنَ ۟ۙ
42. கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்). அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச்சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும்.
Tafsiran larabci:
خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ— وَقَدْ كَانُوْا یُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ وَهُمْ سٰلِمُوْنَ ۟
43. அவர்களுடைய பார்வையெல்லாம் கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) சுகமா(ன தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதை நிராகரித்து விட்டனர்.)
Tafsiran larabci:
فَذَرْنِیْ وَمَنْ یُّكَذِّبُ بِهٰذَا الْحَدِیْثِ ؕ— سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَیْثُ لَا یَعْلَمُوْنَ ۟ۙ
44. ஆகவே, (நீர் மத்தியில் வராது) என்னையும் இவ்வசனங்களைப் பொய்யாக்கும் இவர்களையும் விட்டு விடுவீராக. அவர்கள் அறியாத விதத்தில் அதிசீக்கிரத்தில் அவர்களை சிரமத்தில் சிக்க வைப்போம்.
Tafsiran larabci:
وَاُمْلِیْ لَهُمْ ؕ— اِنَّ كَیْدِیْ مَتِیْنٌ ۟
45. (அவர்களுடைய பாவம் அதிகரிப்பதற்காக) அவர்களை விட்டுவைப்போம். நிச்சயமாக நம் சூழ்ச்சி மிக்க பலமானது. (அவர்கள் தப்பவே முடியாது.)
Tafsiran larabci:
اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَ ۟ۚ
46. (நபியே!) அவர்களிடம் (வரியாக) கூலி ஏதும் கேட்கிறீரா? அவ்வாறாயின் (அதற்காக அவர்கள்) பட்ட கடனில் (அல்லது அந்த வரியின் பளுவைச் சுமக்க முடியாது) அவர்கள் மூழ்கிவிட்டனரா?
Tafsiran larabci:
اَمْ عِنْدَهُمُ الْغَیْبُ فَهُمْ یَكْتُبُوْنَ ۟
47. அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் குறிப்பு) அவர்களிடம் இருந்து, அதில் (தங்களை நல்லவர்களென) எழுதிக் கொண்டிருக்கின்றனரா?
Tafsiran larabci:
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوْتِ ۘ— اِذْ نَادٰی وَهُوَ مَكْظُوْمٌ ۟ؕ
48. (நபியே!) உமது இறைவனின் கட்டளைக்காகப் பொறுத்திருப்பீராக. (கோபம் தாங்காது) மீன் வயிற்றில் சென்றவரை (-யூனுஸை)ப் போல் நீரும் ஆகிவிடவேண்டாம். அவர் கோபத்தில் மூழ்கிச் சென்று (மீனால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றில் இருந்துகொண்டு இறைவனைப்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்ப்பீராக!
Tafsiran larabci:
لَوْلَاۤ اَنْ تَدٰرَكَهٗ نِعْمَةٌ مِّنْ رَّبِّهٖ لَنُبِذَ بِالْعَرَآءِ وَهُوَ مَذْمُوْمٌ ۟
49. அவருடைய இறைவனின் அருள் அவரை அடையாதிருப்பின், வெட்ட வெளியான (அந்த) மைதானத்தில் எறியப்பட்டு நிந்திக்கப்பட்டவராகவே இருப்பார்.
Tafsiran larabci:
فَاجْتَبٰىهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟
50. (இறைவனின் அருள் அவரை அடைந்ததால்) அவருடைய இறைவன் அவரை (மன்னித்துத்) தேர்ந்தெடுத்து, அவரை நல்லவர்களிலும் ஆக்கிவைத்தான்.
Tafsiran larabci:
وَاِنْ یَّكَادُ الَّذِیْنَ كَفَرُوْا لَیُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَیَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌ ۟ۘ
51. (நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் பார்வைகளைக் கொண்டே உம்மை வீழ்த்தி விடுபவர்களைப்போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். மேலும், அவர்கள் (உம்மைப் பற்றி) நிச்சயமாக, இவர் பைத்தியக்காரர்தான் என்று கூறுகின்றனர்.
Tafsiran larabci:
وَمَا هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟۠
52. (நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்) இது, பொதுவாக உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.
Tafsiran larabci:
 
Fassarar Ma'anoni Sura: Suratu Al'kalam
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassara da yaren Tamil -Abdulhamid Bagawi - Teburin Bayani kan wasu Fassarori

ترجمة معاني القرآن الكريم إلى اللغة التاميلية، ترجمها الشيخ عبد الحميد الباقوي.

Rufewa