Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Yunus   Aya:

யூனுஸ்

daga cikin abunda Surar ta kunsa:
تقرير النبوة بالأدلة، ودعوة المكذبين للإيمان مع تهديدهم بالعذاب.
நபித்துவத்தை ஆதாரங்களின் மூலம் நிறுவுதலும், மறுத்தவர்களுக்கு வேதனை உண்டு என அச்சுறுத்துவதுடன் ஈமானின் பக்கம் அவர்களுக்கு அழைப்பு விடுத்தலும்

الٓرٰ ۫— تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْحَكِیْمِ ۟
10.1. (الٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கப்படும் வசனங்கள் ஞானத்தையும் சட்டதிட்டங்களையும் உள்ளடக்கிய உறுதியான குர்ஆனின் வசனங்களாகும்.
Tafsiran larabci:
اَكَانَ لِلنَّاسِ عَجَبًا اَنْ اَوْحَیْنَاۤ اِلٰی رَجُلٍ مِّنْهُمْ اَنْ اَنْذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِنْدَ رَبِّهِمْ ؔؕ— قَالَ الْكٰفِرُوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ مُّبِیْنٌ ۟
10.2. அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து மனிதர்களை எச்சரிக்கை செய்யுமாறு கூறி நாம் அவர்களிலிருந்தே ஒரு மனிதர் மீது வஹி இறக்கியது மனிதர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறதா? -தூதரே!- அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்கள் செய்த நற்செயல்களின் காரணமாக இறைவனிடத்தில் உயர்ந்த அந்தஸ்து உண்டு என்னும் நற்செய்தியைக் கூறுவீராக. நிராகரிப்பாளர்கள் கூறினார்கள்: “இந்த சான்றுகளைக் கொண்டு வந்துள்ள இந்த மனிதர் வெளிப்படையான சூனியக்காரரே.”
Tafsiran larabci:
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ یُدَبِّرُ الْاَمْرَ ؕ— مَا مِنْ شَفِیْعٍ اِلَّا مِنْ بَعْدِ اِذْنِهٖ ؕ— ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ— اَفَلَا تَذَكَّرُوْنَ ۟
10.3. -ஆச்சரியப்படக்கூடியவர்களே!- அல்லாஹ்வே உங்கள் இறைவன். அவன் பிரமாண்டமான வானங்களையும் பரந்து விரிந்த பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். உங்கள் இனத்திலிருந்தே ஒரு மனிதரை தூதராக அவன் அனுப்பியதையிட்டு எவ்வாறு ஆச்சரியப்படலாம்? பரந்து விரிந்த தன் ஆட்சியில் அவனே விதிகளை நிர்ணயம் செய்கிறான், நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றியும் பரிந்துரை செய்பவரைப் அவன் பொருந்திக் கொள்ளாமலும் யாரும் அவனிடம் பரிந்துரை செய்ய முடியாது. இந்த பண்புகளை உடையவன்தான் உங்கள் இறைவனான அல்லாஹ் ஆவான். எனவே வணக்க வழிபாட்டை அவனுக்கு மட்டுமே உரித்தாக்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கும் இந்த ஆதாரங்களையும் சான்றுகளையும் கண்ட பின்னரும் நீங்கள் அறிவுரைபெற மாட்டீர்களா? ஏனெனில் சிறிதளவு புரிதல் உள்ளவர் கூட இந்த உண்மையை அறிந்து கொள்வார், அதன் மீது நம்பிக்கை கொள்வார்.
Tafsiran larabci:
اِلَیْهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا ؕ— وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ— اِنَّهٗ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ لِیَجْزِیَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ ؕ— وَالَّذِیْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِیْمٍ وَّعَذَابٌ اَلِیْمٌ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟
10.4. அவன் உங்களின் செயல்களுக்குக் கூலி வழங்கும் பொருட்டு மறுமை நாளில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அல்லாஹ் மனிதர்களுக்கு உண்மையான வாக்குறுதி அளிக்கிறான். அதனை அவன் மீறுவதில்லை. நிச்சயமாக அவன் இதற்கு ஆற்றலுடையவன். அவன் படைப்பினங்களை எவ்வித முன்மாதிரியுமின்றி முதன் முதலில் உருவாக்குகிறான். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அவர்களின் நன்மைகளைக் குறைக்காமலும் தீமைகளை அதிகரிக்காமலும் நியாயமாக கூலி வழங்குவதற்காக படைப்பினங்கள் மரணித்த பின்னரும் திரும்பவும் அவற்றை உருவாக்குவான். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்களுக்கு கொதிக்கும் நீர் குடிப்பதற்காகக் கொடுக்கப்படும். அதன் சூட்டினால் அவர்களின் குடல்கள் துண்டுதுண்டாகிவிடும். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்ததனால் அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு.
Tafsiran larabci:
هُوَ الَّذِیْ جَعَلَ الشَّمْسَ ضِیَآءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِیْنَ وَالْحِسَابَ ؕ— مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَقِّ ۚ— یُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
10.5. அவனே சூரியனை ஒளி வீசக்கூடியதாகவும் சந்திரனை பிரகாசமளிக்கக் கூடியதாகவும் ஆக்கினான். அதன் ஓட்டத்தை இருபத்து எட்டு நிலைகளாக நிர்ணயித்துள்ளான். ஒரு நிலை என்பது ஒரு நாளில் அது கடக்கும் தொலைவாகும். -மனிதர்களே- சூரியனைக் கொண்டு நீங்கள் நாட்களின் எண்ணிக்கையையும் சந்திரனைக் கொண்டு மாதங்கள் மற்றும் வருடங்களின் எண்ணிக்கையையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவற்றை இவ்வாறு அமைத்துள்ளான். வானங்களையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் அவன் ஒரு நோக்கத்திற்காகவே படைத்துள்ளான். இதன் மூலம் தன்னுடைய வல்லமையை, ஆற்றலை அவன் மக்களுக்கு வெளிப்படுத்துகிறான். தான் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய ஆதாரங்களையும் சான்றுகளையும் அறிந்து கொள்ளும் மக்களுக்காக அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
Tafsiran larabci:
اِنَّ فِی اخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللّٰهُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَّقُوْنَ ۟
10.6. நிச்சயமாக இரவு, பகல் மாறிமாறி வருவதிலும் அதனோடு வரக்கூடிய இருளிலும், ஒளியிலும் ஒன்று குறுகியதாகவும் மற்றொன்று நீளமாகவும் இருப்பதிலும், வானங்கள், பூமி ஆகியவற்றில் உள்ள படைப்பினங்களிலும் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சும் மக்களுக்கு அவனுடைய வல்லமையை, ஆற்றலை அறிவிக்கக்கூடிய சான்றுகள் இருக்கின்றன.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• إثبات نبوة النبي صلى الله عليه وسلم وأن إرساله أمر معقول لا عجب فيه .
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நபித்துவம் அறிவுபூர்வமான ஒன்றுதான். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

• خلق السماوات والأرض ومن فيهما، وتدبير الأمر، وتقدير الأزمان واختلاف الليل والنهار كلها آيات عظيمة دالة على ألوهية الله سبحانه.
2. வானங்களையும், பூமியையும், அவற்றில் உள்ளவைகளையும் படைத்தல், காரியங்களைத் திட்டமிடல், காலங்களை நிர்ணயித்தல், இரவும் பகலும் மாறி மாறி வருதல் ஆகிய ஒவ்வொன்றும் அல்லாஹ் மாத்திரமே வனக்கத்திற்குத் தகுதியானவன் என்பதற்கான பெரும் சான்றுகாளாகும்.

• الشفاعة يوم القيامة لا تكون إلا لمن أذن له الله، ورضي قوله وفعله.
3. அல்லாஹ் யாருக்கு அனுமதி வழங்கி அவரது சொல்லையும் செயலையும் பொருந்திக் கொள்கிறானோ அவருக்கு மாத்திரமே மறுமையில் சிபாரிசு செய்யலாம்.

• تقدير الله عز وجل لحركة الشمس ولمنازل القمر يساعد على ضبط التاريخ والأيام والسنين.
4. சூரியனின் அசைவையும் சந்திரனின் நிலைகளையும் அல்லாஹ் நிர்ணயம் செய்திருப்பது திகதியையும் நாட்களையும் வருடங்களையும் ஒழுங்குபடுத்திக்கொள்ள உதவுகிறது.

 
Fassarar Ma'anoni Sura: Yunus
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa