Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (53) Sura: Suratu Al'nahl
وَمَا بِكُمْ مِّنْ نِّعْمَةٍ فَمِنَ اللّٰهِ ثُمَّ اِذَا مَسَّكُمُ الضُّرُّ فَاِلَیْهِ تَجْـَٔرُوْنَ ۟ۚ
16.53. -மனிதர்களே!- நீங்கள் அனுபவிக்கும் மார்க்க, உலக, அருட்கொடைகள் யாவும் அல்லாஹ்விடமிருந்தே கிடைத்ததாகும். வேறு யாரிடமும் அல்ல. பின்னர் உங்களை வறுமையோ, நோயோ, துன்பமோ தாக்கிவிட்டால் அதனை நீக்குவதற்காக அவனிடமே நீங்கள் பிராா்த்தித்து மன்றாடுகிறீர்கள். உங்களுக்கு அருட்கொடைகள் அளிக்கும், துன்பத்தைப் போக்கும் இறைவன் மாத்திரமே வணங்கப்படுவது கட்டாயமாகும்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• على المجرم أن يستحي من ربه أن تكون نعم الله عليه نازلة في جميع اللحظات ومعاصيه صاعدة إلى ربه في كل الأوقات.
1. அல்லாஹ் அருட்கொடைகளை மனிதனின் மீது சதாவும் இறங்கிக்கொண்டிருக்கும் அதே வேளை எப்பொழுதும் அவனது பாவங்களே இறைவனைச் சென்றடைகிறது என்பதை நினைத்து பாவி வெட்கப்பட வேண்டும்.

• ينبغي لأهل الكفر والتكذيب وأنواع المعاصي الخوف من الله تعالى أن يأخذهم بالعذاب على غِرَّة وهم لا يشعرون.
2.நிராகரிப்பாளர்கள், பொய்பிப்பவர்கள், பாவிகள் ஆகியோர் (எதையும்) உணராமல் அலட்சியமாக இருக்கும் சமயத்தில் அவர்களை அல்லாஹ் வேதனையால் தண்டித்துவிடலாம் என்பதால் அவர்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டும்.

• جميع النعم من الله تعالى، سواء المادية كالرّزق والسّلامة والصّحة، أو المعنوية كالأمان والجاه والمنصب ونحوها.
3. அருட்கொடைகள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து கிடைத்தவையே. அவை வாழ்வாதாரம், பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்ற பௌதீக அருட்கொடைகளாக இருந்தாலும் சரி; அந்தஸ்து, பதவி, நிம்மதி போன்ற மானசீக அருட்கொடைகளாக இருந்தாலும் சரி!

• لا يجد الإنسان ملجأً لكشف الضُّرِّ عنه في وقت الشدائد إلا الله تعالى فيضجّ بالدّعاء إليه؛ لعلمه أنه لا يقدر أحد على إزالة الكرب سواه.
4. துன்ப துயரங்களின் போது தன்னை விட்டும் அதனை நீக்குவதற்கு மனிதனுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு புகலிடம் கிடையாது. துன்பத்தை அவனைத் தவிர வேறு யாரும் அகற்ற முடியாது என்று அவன் அறிந்துள்ளதனால் அவனிடம் பிரார்த்தித்து மன்றாடுகின்றான்.

 
Fassarar Ma'anoni Aya: (53) Sura: Suratu Al'nahl
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa