Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Al'zumar   Aya:
اِنَّاۤ اَنْزَلْنَا عَلَیْكَ الْكِتٰبَ لِلنَّاسِ بِالْحَقِّ ۚ— فَمَنِ اهْتَدٰی فَلِنَفْسِهٖ ۚ— وَمَنْ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیْهَا ۚ— وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِوَكِیْلٍ ۟۠
39.41. -தூதரே!- நாம் மனிதர்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காக உம்மீது குர்ஆனை சத்தியத்துடன் இறக்கியுள்ளோம். யாரேனும் நேர்வழியைப் பின்பற்றினால் நேர்வழியின் பயன் அவருக்கே உரியது. அவரது நேர்வழியால் அல்லாஹ்வுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் நிச்சயமாக அவன் அதனை விட்டும் தேவையற்றவன். யாரேனும் வழிகெட்டால் அந்த வழிகேட்டின் தீங்கு அவனுக்கே கிடைக்கும். அவனின் வழிகேட்டால் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பும் இல்லை. நீர் அவர்களை நேர்வழியில் நிர்ப்பந்திப்பதற்கு அவர்களின் பொறுப்பாளி அல்ல. எடுத்துரைக்குமாறு உமக்கு கட்டளையிடப்பட்டதை எடுத்துரைப்பதைத் தவிர உம்மீது எந்தப் பொறுப்பும் இல்லை.
Tafsiran larabci:
اَللّٰهُ یَتَوَفَّی الْاَنْفُسَ حِیْنَ مَوْتِهَا وَالَّتِیْ لَمْ تَمُتْ فِیْ مَنَامِهَا ۚ— فَیُمْسِكُ الَّتِیْ قَضٰی عَلَیْهَا الْمَوْتَ وَیُرْسِلُ الْاُخْرٰۤی اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
39.42. அல்லாஹ்வே உயிர்களை அவற்றின் தவணை நிறைவடையும்போது கைப்பற்றுகிறான். யாருடைய தவணை நிறைவடையவில்லையோ அவர்களின் உயிர்களை அவர்கள் தூங்கும்போது கைப்பற்றுகிறான். யார் மீது மரணம் விதிக்கப்பட்டு விட்டதோ அவருடைய உயிரை தடுத்து வைத்துக்கொள்கிறான். யார் மீது மரணம் விதிக்கப்படவில்லையோ அவர்களின் உயிர்களை தனது அறிவில் உள்ள குறிப்பிட்ட தவணை வரை திருப்பி அனுப்புகிறான். நிச்சயமாக இவ்வாறு உயிர்களைக் கைப்பற்றுதல், திருப்பி அனுப்புதல், மரணிக்கச்செய்தல், உயிர்கொடுத்தல் ஆகியவற்றில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு, இவற்றையெல்லாம் செய்யும் ஆற்றலுடையவன் மரணத்திற்குப் பின் விசாரணைக்காக, கூலி கொடுப்பதற்காக மனிதர்கள் அனைவரையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் ஆற்றலுடையவன் என்பதற்கான சான்றுகள் அடங்கியுள்ளன.
Tafsiran larabci:
اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ شُفَعَآءَ ؕ— قُلْ اَوَلَوْ كَانُوْا لَا یَمْلِكُوْنَ شَیْـًٔا وَّلَا یَعْقِلُوْنَ ۟
39.43. அல்லாஹ்வை விடுத்து தங்களுக்குப் பயனளிக்கும் என்று இணைவைப்பாளர்கள் ஆதரவு வைக்கும் சிலைகளைப் பரிந்துரை செய்பவர்களாக எடுத்துக் கொண்டார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “உங்களுக்கோ, தமக்கோ எதையும் சொந்தமாக்க முடியாத, எதையும் விளங்கிக்கொள்ள முடியாதவற்றையும் கூட நீங்கள் பரிந்துரை செய்பவர்களாக ஆக்கிக் கொள்கிறீர்களா?. ஏனெனில் அவை பேசவோ, செவியேற்கவோ, பார்க்கவோ, பயனளிக்கவோ, தீங்கிழைக்கவோ இயலாத ஒன்றையும் கேட்காத சடப்பொருள்களாகும்.”
Tafsiran larabci:
قُلْ لِّلّٰهِ الشَّفَاعَةُ جَمِیْعًا ؕ— لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— ثُمَّ اِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
39.44. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “பரிந்துரை அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அவனது அனுமதியின்றி யாரும் அவனிடம் பரிந்துரைசெய்ய முடியாது. அவன் யாரை விரும்புகிறானோ அவருக்குத்தான் பரிந்துரை செய்ய முடியும். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. பின்னர் மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் அவனிடமே திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Tafsiran larabci:
وَاِذَا ذُكِرَ اللّٰهُ وَحْدَهُ اشْمَاَزَّتْ قُلُوْبُ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ ۚ— وَاِذَا ذُكِرَ الَّذِیْنَ مِنْ دُوْنِهٖۤ اِذَا هُمْ یَسْتَبْشِرُوْنَ ۟
39.45. அல்லாஹ் மாத்திரம் நினைவுகூறப்பட்டால் மறுமை நாள் மற்றும் அதில் இடம்பெறும் உயிர்கொடுத்து எழுப்பப்படுதல், விசாரணை, கூலி வழங்கப்படல் ஆகிவற்றின் மீது நம்பிக்கைகொள்ளாத இணைவைப்பாளர்களின் உள்ளங்கள் வெறுப்படைகின்றன. அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கக்கூடிய சிலைகள் நினைவுகூறப்பட்டால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
Tafsiran larabci:
قُلِ اللّٰهُمَّ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ عٰلِمَ الْغَیْبِ وَالشَّهَادَةِ اَنْتَ تَحْكُمُ بَیْنَ عِبَادِكَ فِیْ مَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
39.46. -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றி படைத்தவனே! மறைந்திருப்பதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்தவனே! அவற்றில் எதுவும் உன்னை விட்டும் மறையாது. நீயே மறுமை நாளில் அடியார்களிடையே அவர்கள் உலகில் முரண்பட்டுக்கொண்டிருந்த விஷயங்களில் தீர்ப்பளிக்கின்றாய். அப்போது சத்தியவாதிகளும் அசத்தியவாதிகளும் நற்பாக்கியசாலிகளும் துர்பாக்கியசாலிகளும் தெளிவாகிவிடுவார்கள்.
Tafsiran larabci:
وَلَوْ اَنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا مَا فِی الْاَرْضِ جَمِیْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ مِنْ سُوْٓءِ الْعَذَابِ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— وَبَدَا لَهُمْ مِّنَ اللّٰهِ مَا لَمْ یَكُوْنُوْا یَحْتَسِبُوْنَ ۟
39.47. நிச்சயமாக இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு பூமியில் பெருமதியான செல்வங்கள் அனைத்தும் பலமடங்காக இருந்தாலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்ட பிறகு அவர்கள் காணும் கடுமையான வேதனைக்கு ஈடாக அவற்றைக் கொடுத்துவிட விரும்புவார்கள். ஆனால் அவர்களுக்கு அது முடியாத காரியமாகும். ஒருவேளை அவர்களுக்கு முடிந்தாலும் கூட, அது அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் எதிர்பார்த்து இருக்காத பலவகையான வேதனை அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஏற்படும்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• النوم والاستيقاظ درسان يوميان للتعريف بالموت والبعث.
1. தூக்கமும் விழிப்பும் மரணத்தையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதையும் அறிந்துகொள்வதற்கான தினசரி பாடங்களாகும்.

• إذا ذُكِر الله وحده عند الكفار أصابهم ضيق وهمّ؛ لأنهم يتذكرون ما أمر به وما نهى عنه وهم معرضون عن هذا كله.
2. நிராகரிப்பாளர்களிடம் அல்லாஹ் ஒருவன் நினைவுகூரப்பட்டால் கவலையும் நெருக்கடியும் ஏற்படும். ஏனெனில் அவர்கள் அவன் ஏவியவைகளையும் தடுத்தவைகளையும் நினைத்துப் பார்க்கிறார்கள். அவையனைத்தையும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.

• يتمنى الكافر يوم القيامة افتداء نفسه بكل ما يملك مع بخله به في الدنيا، ولن يُقْبل منه.
3. நிராகரிப்பாளன் இவ்வுலகில் கஞ்சத்தனமாக நடந்துகொண்டாலும் மறுமை நாளில் தன்னிடம் உள்ள அனைத்தையும் ஈடாகக் கொடுத்துவிட விரும்புவான். ஆனால் அவனிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

 
Fassarar Ma'anoni Sura: Al'zumar
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa