Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Al'nisaa   Aya:
وَلَوْ اَنَّا كَتَبْنَا عَلَیْهِمْ اَنِ اقْتُلُوْۤا اَنْفُسَكُمْ اَوِ اخْرُجُوْا مِنْ دِیَارِكُمْ مَّا فَعَلُوْهُ اِلَّا قَلِیْلٌ مِّنْهُمْ ؕ— وَلَوْ اَنَّهُمْ فَعَلُوْا مَا یُوْعَظُوْنَ بِهٖ لَكَانَ خَیْرًا لَّهُمْ وَاَشَدَّ تَثْبِیْتًا ۟ۙ
4.66,67,68. “நீங்கள் ஒருவரையொருவர் கொன்றுவிடுங்கள் அல்லது உங்களின் வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று நாம் அவர்கள்மீது விதித்திருந்தால் சிலரைத் தவிர மற்றவர்கள் அதனைச் செயல்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சிரமமானதை அவன் அவர்கள்மீது விதிக்கவில்லை என்பதற்காக அவர்கள் அவனைப் புகழட்டும். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறு அவர்களுக்குக் கூறப்பட்டதை செயல்படுத்தி இருந்தால் அது மாறுசெய்வதை விட சிறந்ததாகவும் அவர்களது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்; நாம் அவர்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கியிருப்போம்; அல்லாஹ்வின் பக்கமும் அவனது சுவனத்தின் பக்கமும் செல்லக்கூடிய நேரான வழியையும் காட்டியிருப்போம்.
Tafsiran larabci:
وَّاِذًا لَّاٰتَیْنٰهُمْ مِّنْ لَّدُنَّاۤ اَجْرًا عَظِیْمًا ۟ۙ
4.66,67,68.“நீங்கள் ஒருவரையொருவர் கொன்றுவிடுங்கள் அல்லது உங்களின் வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று நாம் அவர்கள்மீது விதித்திருந்தால் சிலரைத் தவிர மற்றவர்கள் அதனைச் செயல்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சிரமமானதை அவன் அவர்கள்மீது விதிக்கவில்லை என்பதற்காக அவர்கள் அவனைப் புகழட்டும். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறு அவர்களுக்குக் கூறப்பட்டதை செயல்படுத்தி இருந்தால் அது மாறுசெய்வதை விட சிறந்ததாகவும் அவர்களது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்; நாம் அவர்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கியிருப்போம்; அல்லாஹ்வின் பக்கமும் அவனது சுவனத்தின் பக்கமும் செல்லக்கூடிய நேரான வழியையும் காட்டியிருப்போம்.
Tafsiran larabci:
وَّلَهَدَیْنٰهُمْ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟
4.66,67,68.“நீங்கள் ஒருவரையொருவர் கொன்றுவிடுங்கள் அல்லது உங்களின் வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று நாம் அவர்கள்மீது விதித்திருந்தால் சிலரைத் தவிர மற்றவர்கள் அதனைச் செயல்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சிரமமானதை அவன் அவர்கள்மீது விதிக்கவில்லை என்பதற்காக அவர்கள் அவனைப் புகழட்டும். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறு அவர்களுக்குக் கூறப்பட்டதை செயல்படுத்தி இருந்தால் அது மாறுசெய்வதை விட சிறந்ததாகவும் அவர்களது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்; நாம் அவர்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கியிருப்போம்; அல்லாஹ்வின் பக்கமும் அவனது சுவனத்தின் பக்கமும் செல்லக்கூடிய நேரான வழியையும் காட்டியிருப்போம்.
Tafsiran larabci:
وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓىِٕكَ مَعَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ وَالصِّدِّیْقِیْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِیْنَ ۚ— وَحَسُنَ اُولٰٓىِٕكَ رَفِیْقًا ۟ؕ
4.69. அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்பட்டவர், இறைதூதர்கள், தூதர்கள் கொண்டுவந்ததை முழுமையாக உண்மைப்படுத்தி, அதன்படி செயல்பட்ட உண்மையாளர்கள், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட உயிர்த்தியாகிகள், வெளிரங்கமும் அந்தரங்கமும் சீர்பெற்று நல்லமல்களுடைய நல்லவர்கள் ஆகிய அல்லாஹ்வின் அருளைப்பெற்றோருடன் சுவனத்தில் இருப்பார். சுவனத்தில் உள்ள இந்தத் தோழர்கள் எத்துணை சிறப்பானவர்கள்!.
Tafsiran larabci:
ذٰلِكَ الْفَضْلُ مِنَ اللّٰهِ ؕ— وَكَفٰی بِاللّٰهِ عَلِیْمًا ۟۠
4.70. மேற்கூறப்பட்ட இந்த நன்மைகள் அல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்கும் கிருபையாகும். அவர்களின் நிலைமைகளை அறிவதற்கு அல்லாஹ் போதுமானவன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.
Tafsiran larabci:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا خُذُوْا حِذْرَكُمْ فَانْفِرُوْا ثُبَاتٍ اَوِ انْفِرُوْا جَمِیْعًا ۟
4.71. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்கள் எதிரிகளுடன் போரிடுவதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்களுடன் போரிடுவதற்கு ஒரு படையின் பின் ஒரு படையாகவோ அனைவரும் ஒன்றுசேர்ந்தோ புறப்படுங்கள். இவையனைத்தும் உங்களின் நலன்களின் அடிப்படையிலும், எதிரிகளுக்கு சேதமும் தோல்வியும் ஏற்படும் விதத்திலும் நீங்கள் முடிவுசெய்ய வேண்டியதாகும்.
Tafsiran larabci:
وَاِنَّ مِنْكُمْ لَمَنْ لَّیُبَطِّئَنَّ ۚ— فَاِنْ اَصَابَتْكُمْ مُّصِیْبَةٌ قَالَ قَدْ اَنْعَمَ اللّٰهُ عَلَیَّ اِذْ لَمْ اَكُنْ مَّعَهُمْ شَهِیْدًا ۟
4.72. முஸ்லிம்களே! உங்களில் தமது கோழைத்தனத்தால் எதிரிகளுடன் போரிடச் செல்லாமல் பின்தங்கக்கூடியவர்களும் ஏனையோரை பின்வாங்கச் செய்வோரும் இருக்கின்றார்கள். அவர்கள் நயவஞ்சகர்களும் பலவீனமான ஈமானுடையவர்களும் ஆவர். உங்களுக்கு உயிரிழப்போ தோல்வியோ ஏற்பட்டால், அவர்களில் ஒருவர் தான் தப்பியதை நினைத்து மகிழ்வடைந்து, “அல்லாஹ் என் மீது அருள்புரிந்ததனால் அவர்களுடன் சேர்ந்து போருக்கு நான் புறப்படவில்லை. இல்லாவிட்டால் அவர்களுக்கு ஏற்பட்டது எனக்கும் ஏற்பட்டிருக்கும்” என்று கூறுகின்றார்.
Tafsiran larabci:
وَلَىِٕنْ اَصَابَكُمْ فَضْلٌ مِّنَ اللّٰهِ لَیَقُوْلَنَّ كَاَنْ لَّمْ تَكُنْ بَیْنَكُمْ وَبَیْنَهٗ مَوَدَّةٌ یّٰلَیْتَنِیْ كُنْتُ مَعَهُمْ فَاَفُوْزَ فَوْزًا عَظِیْمًا ۟
4.73. முஸ்லிம்களே! வெற்றி, போர்ச் செல்வம் போன்ற அல்லாஹ்வின் உதவி உங்களுக்குக் கிடைத்தால் போரைவிட்டுப் பின்தங்கியவன் உங்களுக்கும் அவனுக்கும் எந்த நட்போ தோழமையோ இல்லாததுபோல, “நான் அவர்களுடன் சேர்ந்து போர் புரிந்திருக்கக்கூடாதா! அவர்களைப்போன்று பெரும் வெற்றியைப் பெற்றிருப்பேனே!” என்று கூறுவான்.
Tafsiran larabci:
فَلْیُقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ الَّذِیْنَ یَشْرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا بِالْاٰخِرَةِ ؕ— وَمَنْ یُّقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ فَیُقْتَلْ اَوْ یَغْلِبْ فَسَوْفَ نُؤْتِیْهِ اَجْرًا عَظِیْمًا ۟
4.74. மறுமைக்குப் பகரமாக இவ்வுலக வாழ்க்கையை விற்ற உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்குவதற்காக அவனுடைய பாதையில் போர் புரியட்டும். அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்குவதற்காக அவனுடைய பாதையில் போரிட்டு கொல்லப்படுபவர் அல்லது எதிரியை வீழ்த்தி வெற்றி பெறுபவருக்கு அல்லாஹ் பெரும் நன்மையை வழங்குவான். அது சுவனமும் அவனது திருப்தியுமாகும்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• فعل الطاعات من أهم أسباب الثبات على الدين.
1. நன்மையான காரியங்களில் ஈடுபடுவது மார்க்கத்தில் உறுதியாக நிலைத்து நிற்பதற்கான பிரதான காரணிகளில் ஒன்றாகும்.

• أخذ الحيطة والحذر باتخاذ جميع الأسباب المعينة على قتال العدو، لا بالقعود والتخاذل.
2. முஸ்லிம் சமூகம் எதிரிகளை எதிர்ப்பதற்குத் தேவையான எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பின்தங்கிவிடுதன் மூலமோ பலவீனப்படுவதன் மூலமோ அல்ல.

• الحذر من التباطؤ عن الجهاد وتثبيط الناس عنه؛ لأن الجهاد أعظم أسباب عزة المسلمين ومنع تسلط العدو عليهم.
3. போருக்குச் செல்லாமல் பின்தங்குவது மற்றும் மக்களை போருக்குச் செல்லவிடாமல் தடுப்பது ஆகியவற்றை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் போர் புரிவதுதான் முஸ்லிம்களின் கண்ணியத்திற்கும் அவர்கள் மீது எதிரிகளின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கும் வழிவகுக்கக்கூடிய மிக முக்கியமான காரணியாகும்.

 
Fassarar Ma'anoni Sura: Al'nisaa
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa