Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (132) Sura: Suratu Al'nisaa
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
4.132. வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன்தான் வழிபடுவதற்குத் தகுதியானவன். படைப்புகளின் விவகாரங்கள் அனைத்தையும் நிர்வகிப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• استحباب المصالحة بين الزوجين عند المنازعة، وتغليب المصلحة بالتنازل عن بعض الحقوق إدامة لعقد الزوجية.
1. பிரச்சினை ஏற்படும்போது திருமண உறவை நிலைத்திருக்கச் செய்யும்பொருட்டு ஒருவருக்கொருவர் உரிமைகளை விட்டுக் கொடுத்து கணவன், மனைவி இருவரும் சமாதானம் செய்துகொள்வதே சிறந்ததாகும்.

• أوجب الله تعالى العدل بين الزوجات خاصة في الأمور المادية التي هي في مقدور الأزواج، وتسامح الشرع حين يتعذر العدل في الأمور المعنوية، كالحب والميل القلبي.
2. கணவனின் சக்திக்குட்பட்ட உலக விவகாரங்களில் மனைவியரிடையே நீதிசெலுத்துவதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அன்பு நேசம் போன்ற நீதிசெலுத்தமுடியாத மனரீதியான செயல்பாடுகளில் நீதமாக நடப்பது சாத்தியமற்ற கட்டங்களில் மார்க்கம் விட்டுக்கொடுத்துள்ளது.

• لا حرج على الزوجين في الفراق إذا تعذرت العِشْرة بينهما.
3. கணவன், மனைவி சேர்ந்து வாழ்வது சிரமமாக இருந்தால் இருவரும் பிரிந்துவிடுவது குற்றமாகாது.

• الوصية الجامعة للخلق جميعًا أولهم وآخرهم هي الأمر بتقوى الله تعالى بامتثال الأوامر واجتناب النواهي.
4. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதன் மூலம் அல்லாஹ்வை அஞ்சவேண்டும் என்பதே, ஆரம்பம் முதல் இறுதிவரையுள்ள அனைத்து மனிதர்களுக்குமான பொருள்செறிந்த அறிவுரையாகும்.

 
Fassarar Ma'anoni Aya: (132) Sura: Suratu Al'nisaa
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa