Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (175) Sura: Al'nisaa
فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَاعْتَصَمُوْا بِهٖ فَسَیُدْخِلُهُمْ فِیْ رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ ۙ— وَّیَهْدِیْهِمْ اِلَیْهِ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ؕ
4.175. யாரெல்லாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு தங்கள் தூதரின் மீது இறக்கப்பட்ட குர்ஆனைப் பற்றிப்பிடித்துக் கொண்டார்களோ அல்லாஹ் அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வதன் மூலம் அவர்களின் மீது கருணை புரிவான். அதிகமான நன்மைகளையும் உயர்ந்த அந்தஸ்தையும் அவர்களுக்கு வழங்குவான். கோணலற்ற நேரான வழியின்பால் அவர்களுக்கு வழிகாட்டுவான். அது நிலையான சுவனத்தின்பால் செல்லும் வழியாகும்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• بيان أن المسيح بشر، وأن أمه كذلك، وأن الضالين من النصارى غلوا فيهما حتى أخرجوهما من حد البشرية.
1. ஈஸாவும் அவரது அன்னையும் மனிதர்கள்தாம். வழிகெட்ட கிறிஸ்தவர்கள் அவ்விருவரையும் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கருதும் அளவுக்கு அவர்களின் விஷயத்தில் வரம்புமீறிவிட்டார்கள்.

• بيان بطلان شرك النصارى القائلين بالتثليث، وتنزيه الله تعالى عن أن يكون له شريك أو شبيه أو مقارب، وبيان انفراده - سبحانه - بالوحدانية في الذات والأسماء والصفات.
2. இறைவன் மூவர் என்று கூறும் கிறிஸ்தவர்களின் இணைவைப்புக் கொள்கை தவறானது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் இணையோ, அல்லது அவனை போன்றவனோ அல்லது நெருக்கமானவனோ எதுவுமின்றி தூய்மையானவன். உள்ளமையிலும் பெயர்களிலும் பண்புகளிலும் அவன் தனித்தவன் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

• إثبات أن عيسى عليه السلام والملائكة جميعهم عباد مخلوقون لا يستكبرون عن الاعتراف بعبوديتهم لله تعالى والانقياد لأوامره، فكيف يسوغ اتخاذهم آلهة مع كونهم عبيدًا لله تعالى؟!
3. ஈஸாவும் வானவர்கள் அனைவரும் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அடியார்கள்தாம் என்ற விஷயம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களில் யாரும் ‘அவன் மட்டுமே வணக்கத்திற்கும் கட்டுப்படுவதற்கும் தகுதியானவன்’ என்பதை ஏற்றுக்கொள்வதை விட்டும் கர்வம்கொள்வதில்லை. எனவே அல்லாஹ்வின் அடியார்களாக இருப்பவர்களை எவ்வாறு கடவுள்களாக்க முடியும்?

• في الدين حجج وبراهين عقلية تدفع الشبهات، ونور وهداية تدفع الحيرة والشهوات.
சந்தேகத்தைக் களையும் அறிவியல் ஆதாரங்களும் அத்தாட்சிகளும், தடுமாற்றத்தையும் மனோ இச்சையையும் அகற்றும் ஒளியும் நேர்வழியும் இம்மார்க்கத்தில் உண்டு.

 
Fassarar Ma'anoni Aya: (175) Sura: Al'nisaa
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa