Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (2) Sura: Suratu Al'nisaa
وَاٰتُوا الْیَتٰمٰۤی اَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِیْثَ بِالطَّیِّبِ ۪— وَلَا تَاْكُلُوْۤا اَمْوَالَهُمْ اِلٰۤی اَمْوَالِكُمْ ؕ— اِنَّهٗ كَانَ حُوْبًا كَبِیْرًا ۟
4.2. பொறுப்பாளிகளே! உங்களிடம் இருக்கும் அநாதைகள் பருவ வயதை அடைந்து அவர்கள் புரிந்து நடந்துகொள்வோராகவும் இருந்தால் அவர்களின் செல்வங்களை முழுமையாக வழங்கிவிடுங்கள். அவர்களிடமிருந்து தரமான பொருட்களைப் பெற்று மோசமான பொருட்களை திருப்பி அளித்து அனுமதிக்கப்பட்டதற்குப் பகரமாக தடைசெய்யப்பட்டதை மாற்றி எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர்களின் செல்வங்களை உங்களின் செல்வங்களோடு சேர்த்துவிடாதீர்கள். நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் பெரும்பாவமாக இருக்கின்றது.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• الأصل الذي يرجع إليه البشر واحد، فالواجب عليهم أن يتقوا ربهم الذي خلقهم، وأن يرحم بعضهم بعضًا.
1. மனித இனத்தின் மூலம் ஒருவர்தான். எனவே அவர்கள் தங்களைப் படைத்த இறைவனான அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். ஒருவருக்கொருவர் கருணையோடு நடந்துகொள்ள வேண்டும்.

• أوصى الله تعالى بالإحسان إلى الضعفة من النساء واليتامى، بأن تكون المعاملة معهم بين العدل والفضل.
2. பலவீனமான பெண்கள், அநாதைகள் விஷயத்தில் நியாயமாகவும் நல்லமுறையிலும் நடந்துகொள்ளும்படி அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.

• جواز تعدد الزوجات إلى أربع نساء، بشرط العدل بينهن، والقدرة على القيام بما يجب لهن.
3. ஒரு ஆண் நான்கு பெண்கள்வரை மணமுடித்துக் கொள்ளலாம். ஆனால் அவன் அவர்களிடையே நியாயமாக நடந்துகொள்பவனாகவும் அவர்களைப் பராமரிக்கும் அளவு சக்தியுடையவனாகவும் இருக்க வேண்டும்.

• مشروعية الحَجْر على السفيه الذي لا يحسن التصرف، لمصلحته، وحفظًا للمال الذي تقوم به مصالح الدنيا من الضياع.
4. செல்வங்களைப் பராமரிக்கத் தெரியாதவரின் நலனை கருத்தில்கொண்டும் உலக நலவுகள் நிறைவேறுவதற்குத் தேவையான பணம் வீணாகுவதைத் தடுக்கும் பொருட்டும் அவர் மீது பணத்தைக் கையாள்வதற்குத் தடை விதிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.

 
Fassarar Ma'anoni Aya: (2) Sura: Suratu Al'nisaa
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa