Fassarar ma'anonin Alkura'ni mai girma - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
15 : 42

فَلِذٰلِكَ فَادْعُ ۚ— وَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ ۚ— وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ ۚ— وَقُلْ اٰمَنْتُ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنْ كِتٰبٍ ۚ— وَاُمِرْتُ لِاَعْدِلَ بَیْنَكُمْ ؕ— اَللّٰهُ رَبُّنَا وَرَبُّكُمْ ؕ— لَنَاۤ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ؕ— لَا حُجَّةَ بَیْنَنَا وَبَیْنَكُمْ ؕ— اَللّٰهُ یَجْمَعُ بَیْنَنَا ۚ— وَاِلَیْهِ الْمَصِیْرُ ۟ؕ

42.15. நேரான இந்த மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக. அல்லாஹ் உமக்குக் கட்டளையிட்டபடி அதில் உறுதியாக இருப்பீராக. அவர்களின் தீய மனஇச்சைகளைப் பின்பற்றாதீர். அவர்களுடன் விவாதம் புரியும் போது நீர் கூறுவீராக: “நான் அல்லாஹ்வின் மீதும் அவன் தன் தூதர்களின் மீது இறக்கிய வேதங்களின் மீதும் நம்பிக்கைகொண்டேன். அவன் உங்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டுள்ளான். நான் வணங்கும் அல்லாஹ்தான் எங்களின் இறைவனும் உங்கள் அனைவரின் இறைவனுமாவான். நன்மையோ, தீமையோ எங்களுக்கு எங்களின் செயல்கள். உங்களுக்கு உங்களின் செயல்கள். ஆதாரம் தெளிவான பின்னர் உங்களுக்கும் எங்களுக்குமிடையே எந்த விவாதமும் இல்லை. அல்லாஹ் நம் அனைவரையும் ஒன்றுதிரட்டுவான். மறுமை நாளில் அவன் பக்கமே திரும்ப வேண்டும். அவன் நம்மில் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்கிடுவான். அப்போது பொய்யரும் உண்மையாளரும் அசத்தியவாதியும் சத்தியவாதியும் தெளிவாகிவிடும். info
التفاسير: |
Daga cikin fa'idodin ayoyin a wannan shafi:
• دين الأنبياء في أصوله دين واحد.
1. அடிப்படைகளில் நபிமார்களின் மார்க்கம் ஒரே மார்க்கம்தான். info

• أهمية وحدة الكلمة، وخطر الاختلاف فيها.
2. ஒற்றுமையின் முக்கியத்துவமும் அதில் பிரிவினைபடுவதின் விபரீதமும். info

• من مقومات نجاح الدعوة إلى الله: صحة المبدأ، والاستقامة عليه، والبعد عن اتباع الأهواء، والعدل، والتركيز على المشترك، وترك الجدال العقيم، والتذكير بالمصير المشترك.
3. அல்லாஹ்வின்பால் அழைப்பு விடுக்கும் பணி வெற்றி பெறுவதற்கு சில அடிப்படையான தகுதிகள்: சரியான அடிப்படை, அதில் உறுதியாக இருத்தல், மனஇச்சைகளைப் பின்பற்றுவதில் இருந்து தூரமாகுதல், பொதுவிடயத்தில் கவனம்செலுத்தல், பயனற்ற விவாதத்தை விட்டுவிடல், பொதுவான முடிவை நினைவுபடுத்தல். info