Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Al'ma'ida   Aya:
وَقَفَّیْنَا عَلٰۤی اٰثَارِهِمْ بِعِیْسَی ابْنِ مَرْیَمَ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ التَّوْرٰىةِ ۪— وَاٰتَیْنٰهُ الْاِنْجِیْلَ فِیْهِ هُدًی وَّنُوْرٌ ۙ— وَّمُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ التَّوْرٰىةِ وَهُدًی وَّمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟ؕ
5.46. இஸ்ராயீலின் மக்களிலுள்ள தூதர்களைத் தொடர்ந்து மர்யமின் மகன் ஈஸாவை தவ்ராத்திலுள்ளவற்றை நம்பியவராகவும் அதன்படி தீர்ப்பளிக்கக்கூடியவராகவும் நாம் அனுப்பினோம். சத்தியத்திற்கான வழிகாட்டலையும், சந்தேகங்களைப் போக்கக்கூடிய ஆதாரங்களையும், அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய சட்டங்களையும் உள்ளடக்கிய இன்ஜீலை நாம் அவருக்கு வழங்கினோம். அது அதற்கு முன் இறங்கிய தவ்ராத்தின் சில சட்டங்களை மாத்திரம் மாற்றியமைத்தாலும் ஏனைய விடயங்களில் அதனுடன் உடன்படக்கூடியதாகவும் இருந்தது. நாம் அதனை வழிகாட்டியாகவும், தடை செய்யப்பட்ட பாவங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் எச்சரிக்கையாகவும் ஆக்கினோம்.
Tafsiran larabci:
وَلْیَحْكُمْ اَهْلُ الْاِنْجِیْلِ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فِیْهِ ؕ— وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
5.47. இன்ஜீலில் அல்லாஹ் இறக்கியதை கிறிஸ்தவர்கள் நம்பட்டும். அவர்களிடம் - முஹம்மத் (ஸல்) அவர்கள் வருவதற்கு முன் - அதில் கூறப்பட்டுள்ளதன்படி தீர்ப்பளிக்கட்டும். அல்லாஹ் இறக்கியதன்படி தீர்ப்பளிக்காதவர்கள்தாம் அவனுக்குக் கட்டுப்பட மறுப்பவர்கள், சத்தியத்தை விட்டுவிட்டு அசத்தியத்தின்பால் சாய்ந்தவர்கள்.
Tafsiran larabci:
وَاَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ الْكِتٰبِ وَمُهَیْمِنًا عَلَیْهِ فَاحْكُمْ بَیْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ الْحَقِّ ؕ— لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ لِّیَبْلُوَكُمْ فِیْ مَاۤ اٰتٰىكُمْ فَاسْتَبِقُوا الْخَیْرٰتِ ؕ— اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟ۙ
5.48. தூதரே! நாம் உம்மீது சந்தேகமின்றி உண்மையைக் கொண்டுள்ள குர்ஆனை இறக்கியுள்ளோம். அது அல்லாஹ்விடமிருந்து வந்ததது என்பதில் ஒரு சிறு சந்தேகமேனும் இல்லை. தனக்கு முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாகவும் அவற்றை நம்பத்தகுந்ததாக ஆக்குவதாகவும் இருக்கின்றது. அவற்றில் குர்ஆனோடு ஒத்துப்போகக்கூடியது உண்மையானதாகும், அதனோடு மாறுபடக்கூடியது பொய்யானதாகும். அதில் அல்லாஹ் உமக்கு இறக்கியதன்படி நீர் மக்களிடையே தீர்ப்பளிப்பீராக. உமக்கு இறக்கப்பட்ட சந்தேகமற்ற சத்தியத்தை விட்டுவிட்டு அவர்கள் பின்பற்றுகின்ற அவர்களின் மனவிருப்பங்களைப் பின்பற்றாதீர். ஒவ்வொரு சமூகத்திற்கும் செயன்முறை சட்டதிட்ட முறையையும் நேர்வழி நடப்பதற்கான தெளிவான பாதையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ், அனைவருக்கும் ஒரே வழிமுறையை ஏற்படுத்த நாடியிருந்தால் ஒரே வழிமுறையை ஏற்படுத்தியிருப்பான். ஆயினும் அவன் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு வழிமுறையை ஏற்படுத்தியுள்ளான், அனைவரையும் சோதித்து கீழ்ப்படிபவர் யார்? மாறுசெய்பவர் யார்? என்பது தெளிவாவதற்காக. எனவே நன்மையான செயல்களின் பக்கம், பாவங்களை விட்டொழிப்பதன் பக்கம் விரையுங்கள். மறுமைநாளில் அல்லாஹ்விடமே நீங்கள் திரும்ப வேண்டும். நீங்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். நீங்கள் முற்படுத்தி அனுப்பிவைத்த செயல்களின் அடிப்படையில் அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Tafsiran larabci:
وَاَنِ احْكُمْ بَیْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ وَاحْذَرْهُمْ اَنْ یَّفْتِنُوْكَ عَنْ بَعْضِ مَاۤ اَنْزَلَ اللّٰهُ اِلَیْكَ ؕ— فَاِنْ تَوَلَّوْا فَاعْلَمْ اَنَّمَا یُرِیْدُ اللّٰهُ اَنْ یُّصِیْبَهُمْ بِبَعْضِ ذُنُوْبِهِمْ ؕ— وَاِنَّ كَثِیْرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوْنَ ۟
5.49. தூதரே! அல்லாஹ் உமக்கு இறக்கியதன்படி அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக. மனஇச்சையைப் பின்பற்றியதால் தோன்றும் அவர்களின் கருத்துகளைப் பின்பற்றாதீர். அல்லாஹ் உமக்கு இறக்கிய சிலவற்றைவிட்டும் அவர்கள் உம்மை வழிகெடுத்துவிடுவதை விட்டும் எச்சரிக்கையாக இருப்பீராக. இந்த முயற்சியில் அவர்கள் கொஞ்சமும் சோர்வடைந்துவிட மாட்டார்கள். அல்லாஹ் உம்மீது இறக்கியதன் படி தீர்ப்புச் செய்வதை அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களின் சில பாவங்களுக்குத் தண்டனையை இவ்வுலகிலும், அனைத்துப் பாவங்களுக்கான தண்டனையை மறுமையிலும் வழங்க விரும்புகிறான் என்பதை அறிந்துகொள்வீராக. மனிதர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
Tafsiran larabci:
اَفَحُكْمَ الْجَاهِلِیَّةِ یَبْغُوْنَ ؕ— وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟۠
5.50. தங்கள் மனஇச்சைப்படி தீர்ப்பளிக்கும் சிலை வணங்கிகளான அறியாமைக் கால மக்களின் தீர்ப்பை வேண்டியவர்களாக உம்முடைய தீர்ப்பை புறக்கணிக்கின்றனரா?! அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கியதை புரிந்துகொள்ளும் உறுதியான நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வைவிட சிறந்த நீதிபதி யாரும் இல்லை. அசத்தியமாக இருந்தாலும் தங்களின் மனஇச்சைக்கு ஒத்ததை மாத்திரமே ஏற்றுக்கொள்ளும் மூடர்களுக்கல்ல.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• الأنبياء متفقون في أصول الدين مع وجود بعض الفروق بين شرائعهم في الفروع.
1. மார்க்கத்தின் அடிப்படையான விஷயங்களில் தூதர்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளார்கள். கிளை அம்சங்களான சட்டதிட்டங்களில் சிறு வேறுபாடுகள் காணப்படுகிறது.

• وجوب تحكيم شرع الله والإعراض عمّا عداه من الأهواء.
2. அல்லாஹ்வின் சட்டங்களை ஏற்றுக்கொள்வதும் அவற்றைத் தவிரவுள்ள மனஇச்சைகளைப் புறக்கணித்துவிடுவதும் கட்டாயமாகும்.

• ذم التحاكم إلى أحكام أهل الجاهلية وأعرافهم.
3. அறியாமைக் கால சட்டங்களின்படியோ வழக்கத்தின்படியோ தீர்ப்புத் தேடுவது தடுக்கப்பட்டுள்ளது.

 
Fassarar Ma'anoni Sura: Al'ma'ida
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa