Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (87) Sura: Al'ma'ida
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُحَرِّمُوْا طَیِّبٰتِ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟
5.87. அல்லாஹ்வை நம்பியவர்களே! உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உணவுகள், குடிபானங்கள், திருமணம் ஆகிய இன்பங்களை தடைசெய்துவிடாதீர்கள். துறவரம், வழிபாடு எனக் கருதி அவற்றைத் தடைசெய்துவிடாதீர்கள். அல்லாஹ் தடைசெய்தவற்றின் வரம்புகளை மீறிவிடாதீர்கள். தான் விதித்த வரம்புகளை மீறக்கூடியவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. மாறாக அவர்களை வெறுக்கிறான்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• الأمر بتوخي الطيب من الأرزاق وترك الخبيث.
1. தூய்மையான உணவுகளையே தேடுமாறும் கெட்ட உணவுகளை விட்டு விடுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.

• عدم المؤاخذة على الحلف عن غير عزم للقلب، والمؤاخذة على ما كان عن عزم القلب ليفعلنّ أو لا يفعلنّ.
2. உள உறுதியின்றி செய்யப்படும் சத்தியங்களுக்கு குற்றமில்லை. செய்வேன் அல்லது செய்யமாட்டேன் என உளப்பூர்வமாக செய்யப்படும் சத்தியங்களுக்குத்தான் குற்றம்பிடிக்கப்படும்.

• بيان أن كفارة اليمين: إطعام عشرة مساكين، أو كسوتهم، أو عتق رقبة مؤمنة، فإذا لم يستطع المكفِّر عن يمينه الإتيان بواحد من الأمور السابقة، فليكفِّر عن يمينه بصيام ثلاثة أيام.
3. சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரம், பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது ஆடை வழங்க வேண்டும் அல்லது நம்பிக்கைகொண்ட ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஒருவர் மேற்குறிப்பிட்ட எதையும் செய்ய சக்திபெறவில்லையெனில் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்.

• قوله تعالى: ﴿... إنَّمَا الْخَمْرُ ...﴾ هي آخر آية نزلت في الخمر، وهي نص في تحريمه.
4. மதுபானம் சம்பந்தமான இங்கு இடம்பெற்றுள்ள வசனமே மதுபானம் சம்பந்தமாக இறங்கிய இறுதி வசனமாகும். இது மதுபானத்தை தெளிவாகவும் முழுமையாகவும் தடுக்கும் வசனமாகும்.

 
Fassarar Ma'anoni Aya: (87) Sura: Al'ma'ida
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa