Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Qaaf   Aya:

காஃப்

daga cikin abunda Surar ta kunsa:
وعظ القلوب بالموت والبعث.
மரணம், மறுமையில் எழுப்புதல் ஆகிவற்றின் மூலம் உள்ளங்களுக்கு நல்லுபதேசம் செய்தல்

قٓ ۫— وَالْقُرْاٰنِ الْمَجِیْدِ ۟ۚ
50.1. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆனில் அடங்கியுள்ள ஏராளமான கருத்துக்கள், நன்மைகள் மற்றும் பரக்கத்துகளின் காரணத்தால் அல்லாஹ் அதனைக் கொண்டு சத்தியம் செய்துள்ளான். விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் நீங்கள் மறுமை நாளில் எழுப்பப்பட்டே தீருவீர்கள் என்று.
Tafsiran larabci:
بَلْ عَجِبُوْۤا اَنْ جَآءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا شَیْءٌ عَجِیْبٌ ۟ۚ
50.2. நீர் பொய் உரைக்கலாம் என்ற அவர்களின் எதிர்ப்பார்ப்பு அவர்களின் மறுப்புக்கான காரணமல்ல. அவர்கள் உம் வாய்மையைக் குறித்து அறிவார்கள். மாறாக வானவர்கள் இனத்திலிருந்து அல்லாமல் அவர்களின் இனத்திலிருந்தே எச்சரிக்கை செய்யக்கூடிய ஒரு தூதர் அவர்களிடம் வந்ததற்காக அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஆச்சரியத்தில் அவர்கள் கூறுகிறார்கள்: “ஒரு மனிதர் நமக்குத் தூதராக அனுப்பப்படுவது மிகவும் ஆச்சரியமான ஒன்றுதான்.”
Tafsiran larabci:
ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ۚ— ذٰلِكَ رَجْعٌ بَعِیْدٌ ۟
50.3. நாம் இறந்து மண்ணோடு மண்ணாகிவிட்டாலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோமா? உக்கிப் போன நம் உடல்களுக்கு மீண்டும் உயிர் திரும்பி மீண்டும் எழுப்பப்படுவது சாத்தியமற்ற ஒன்றாகும். அவ்வாறு நிகழ முடியாது.”
Tafsiran larabci:
قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْاَرْضُ مِنْهُمْ ۚ— وَعِنْدَنَا كِتٰبٌ حَفِیْظٌ ۟
50.4. அவர்கள் இறந்து அழிந்த பிறகு அவர்களின் உடல்களை பூமி எந்த அளவு தின்கிறது என்பதை நாம் அறிவோம். அவற்றில் எதுவும் நம்மைவிட்டு மறைவாக இல்லை. நம்மிடத்தில் ஒரு புத்தகம் இருக்கின்றது. அது அவர்களின் இவ்வுலக வாழ்க்கையிலும் மரணத்திற்குப் பின்னும் அல்லாஹ் அவர்களுக்கு விதித்ததைப் பாதுகாக்கிறது.
Tafsiran larabci:
بَلْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَآءَهُمْ فَهُمْ فِیْۤ اَمْرٍ مَّرِیْجٍ ۟
50.5. மாறாக இந்த இணைவைப்பாளர்கள் தூதர் அவர்களிடம் கொண்டுவந்த குர்ஆனைப் பொய்யெனக் கூறினார்கள். அவர்கள் இது குறித்து தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். அதனைக்குறித்து எந்த நிலையான நிலைப்பாட்டிலும் அவர்கள் இல்லை.
Tafsiran larabci:
اَفَلَمْ یَنْظُرُوْۤا اِلَی السَّمَآءِ فَوْقَهُمْ كَیْفَ بَنَیْنٰهَا وَزَیَّنّٰهَا وَمَا لَهَا مِنْ فُرُوْجٍ ۟
50.6. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இணைவைப்பாளர்களின் மறுப்பைக் குறிப்பிட்ட பின், அது நிகழ்வதற்கான ஆதாரங்களை அவர்களுக்கு அவன் நினைவூட்டுகிறான். அவன் கூறுகிறான்: மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் இவர்கள் தங்களுக்கு மேலுள்ள வானத்தை நாம் எவ்வாறு படைத்து அதில் நட்சத்திரங்களை வைத்து அழகுபடுத்தியுள்ளோம் என்பதையும், அதில் குறை ஏற்படுத்தக்கூடிய எந்தப் பிளவும் இல்லை என்பதையும் அவர்கள் சிந்திக்கவில்லையா?! இந்த வானத்தைப் படைத்தவன் இறந்தவர்களை மீண்டும் உயிர்கொடுத்து உயிருள்ளவர்களாக எழுப்புவதற்கு இயலாதவனல்ல.
Tafsiran larabci:
وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَیْنَا فِیْهَا رَوَاسِیَ وَاَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِیْجٍ ۟ۙ
50.7. நாம் பூமியை வசிப்பதற்கு ஏற்றவாறு விரித்துள்ளோம். அது ஆட்டம் காணாமல் இருக்கும்பொருட்டு அதில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினோம். அதில் அழகிய தோற்றமுடைய ஒவ்வொரு வகையான தாவரங்களையும் மரங்களையும் முளைக்கச் செய்தோம்.
Tafsiran larabci:
تَبْصِرَةً وَّذِكْرٰی لِكُلِّ عَبْدٍ مُّنِیْبٍ ۟
50.8. இவையனைத்தையும் நாம் படைத்தது கீழ்ப்படிவதன்மூலம் தன் இறைவனின் பக்கம் திரும்பக்கூடிய ஒவ்வொரு அடியானுக்கும் சான்றாகவும் நினைவூட்டலாகவும் இருக்கும்பொருட்டேயாகும்.
Tafsiran larabci:
وَنَزَّلْنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰرَكًا فَاَنْۢبَتْنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِیْدِ ۟ۙ
50.9. நாம் வானத்திலிருந்து ஏராளமான பயன்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய நீரை இறக்குகின்றோம். அந்த நீரைக் கொண்டு தோட்டங்களையும் நீங்கள் அறுவடை செய்யும் கோதுமை தானியங்கள் மற்றும் ஏனையவற்றையும் முளைக்கச்செய்தோம்.
Tafsiran larabci:
وَالنَّخْلَ بٰسِقٰتٍ لَّهَا طَلْعٌ نَّضِیْدٌ ۟ۙ
50.10. அதன் மூலம் அடுக்கடுக்கான குலைகள் கொண்ட உயர்ந்த நீண்ட பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம்.
Tafsiran larabci:
رِّزْقًا لِّلْعِبَادِ ۙ— وَاَحْیَیْنَا بِهٖ بَلْدَةً مَّیْتًا ؕ— كَذٰلِكَ الْخُرُوْجُ ۟
50.11. அவற்றை நாம் முளைக்கச் செய்து அடியார்கள் உண்பதற்கான வாழ்வாதாரமாக அவற்றை ஆக்கினோம். அந்த நீரைக் கொண்டு நாம் செடிகொடிகளற்ற வறண்ட பூமியை உயிர்த்தெழச் செய்கின்றோம். அந்த நீரைக் கொண்டு நாம் வறண்ட பூமியை உயிர்த்தெழச் செய்வதைப்போன்றே இறந்தவர்களை உயிர்ப்பிப்போம். எனவே அவர்கள் உயிர்பெற்று வெளிப்படுவார்கள்.
Tafsiran larabci:
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّاَصْحٰبُ الرَّسِّ وَثَمُوْدُ ۟ۙ
50.12. தூதரே! உம்மை பொய்ப்பித்துக்கொண்டிருக்கும் இவர்களுக்கு முன்னரே எத்தனையோ சமூகங்கள் தங்களின் தூதர்களை பொய்ப்பித்துள்ளன. நூஹின் சமூகம், கிணறுவாசிகள், ஸமூதின் சமூகம் ஆகியன பொய்ப்பித்தன.
Tafsiran larabci:
وَعَادٌ وَّفِرْعَوْنُ وَاِخْوَانُ لُوْطٍ ۟ۙ
50.13. ஆத், ஃபிர்அவ்ன் மற்றும் லூத்தின் சமூகம் பொய்ப்பித்துள்ளன.
Tafsiran larabci:
وَّاَصْحٰبُ الْاَیْكَةِ وَقَوْمُ تُبَّعٍ ؕ— كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِیْدِ ۟
ஷுஐபின் கூட்டமும், யமன் மன்னன் துப்பஇன் கூட்டமும் நிராகரித்தனர். இந்தக் கூட்டங்கள் அனைத்தும் அவர்களிடம் அல்லாஹ் அனுப்பிய துதர்களை மறுத்தனர். அதனால் அவர்களுக்கு அல்லாஹ் வாக்குறுதியளித்த வேதனை ஏற்பட்டது.
Tafsiran larabci:
اَفَعَیِیْنَا بِالْخَلْقِ الْاَوَّلِ ؕ— بَلْ هُمْ فِیْ لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِیْدٍ ۟۠
50.15. உங்களை முதன்முறையாகப் படைப்பதற்கு நாம் இயலாமல் இருந்தோமா மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்புவதற்கு இயலாமல் ஆவதற்கு? மாறாக அவர்கள் முதன்முறையாகப் படைக்கப்பட்ட பிறகு மீண்டும் புதிதாக படைக்கப்படுவது குறித்து சந்தேகத்தில் இருக்கின்றார்கள்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• المشركون يستعظمون النبوة على البشر، ويمنحون صفة الألوهية للحجر!
1. நபித்துவம் மனிதனுக்கு வழங்கப்பட்டதை பெரிதாக கருதும் இணைவைப்பாளர்கள் கற்களுக்கு வணங்கும் தன்மையை கொடுத்துவிடுகிறார்கள்.

• خلق السماوات، وخلق الأرض، وإنزال المطر، وإنبات الأرض القاحلة، والخلق الأول: كلها أدلة على البعث.
2. வானங்களைப் படைத்தல், பூமியைப் படைத்தல், மழை பொழியச் செய்தல், வறண்ட பூமியில் தாவரங்களை முளைப்பித்தல், முதன் முறையாகப் படைத்தல் ஆகிய அனைத்தும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான ஆதாரங்களாகும்.

• التكذيب بالرسل عادة الأمم السابقة، وعقاب المكذبين سُنَّة إلهية.
3. தூதர்களை பொய்ப்பிப்பது முந்தைய சமூகங்களின் வழக்கம்தான். பொய்ப்பிப்பாளர்களைத் தண்டிப்பது இறைவனின் நியதியாகும்.

 
Fassarar Ma'anoni Sura: Qaaf
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa