Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Suratu Al'najm   Aya:

ஸூரா அந்நஜ்ம்

daga cikin abunda Surar ta kunsa:
إثبات صدق الوحي وأنه من عند الله.
வஹீ உண்மை, அது அல்லாஹ்விடமிருந்துள்ளது என்பதை நிரூபித்தல்

وَالنَّجْمِ اِذَا هَوٰی ۟ۙ
53.1. உதிர்ந்து விழும் நட்சத்திரத்தைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
Tafsiran larabci:
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوٰی ۟ۚ
53.2. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நேரான பாதையைவிட்டும் தவறவுமில்லை; அவர் வழிகெட்டவராகவும் இல்லை. ஆனால் அவர் நேர்வழி பெற்றவராக இருக்கின்றார்.
Tafsiran larabci:
وَمَا یَنْطِقُ عَنِ الْهَوٰی ۟ؕۚ
53.3. தம் மன இச்சைக்கேற்ப அவர் இந்தக் குர்ஆனைக் கூறுவதில்லை.
Tafsiran larabci:
اِنْ هُوَ اِلَّا وَحْیٌ یُّوْحٰی ۟ۙ
53.4. இந்தக் குர்ஆன் ஜிப்ரீல் மூலமாக அல்லாஹ் அறிவித்த வஹியேயாகும்.
Tafsiran larabci:
عَلَّمَهٗ شَدِیْدُ الْقُوٰی ۟ۙ
53.5. கடும் வல்லமையுடைய வானவர் ஜிப்ரீல்தான் அவருக்கு இதனைக் கற்றுக் கொடுத்தார்.
Tafsiran larabci:
ذُوْ مِرَّةٍ ؕ— فَاسْتَوٰی ۟ۙ
53.6. ஜிப்ரீல் அழகிய தோற்றமுடையவர். அவர் தூதருக்கு முன்னால் அல்லாஹ் அவரைப் படைத்த இயல்பான தோற்றத்தில் தோன்றினார்.
Tafsiran larabci:
وَهُوَ بِالْاُفُقِ الْاَعْلٰی ۟ؕ
53.7. ஜிப்ரீல் உயர்ந்த அடிவானத்தில் இருக்கும்போது
Tafsiran larabci:
ثُمَّ دَنَا فَتَدَلّٰی ۟ۙ
53.8. பின்னர் ஜிப்ரீல் நபியை நெருங்கினார். பின்னர் அவரிடம் மிகவும் அதிகமாக நெருங்கினார்.
Tafsiran larabci:
فَكَانَ قَابَ قَوْسَیْنِ اَوْ اَدْنٰی ۟ۚ
53.9. அவரின் நெருக்கம் இரு வில்லுகள் அல்லது அதைவிடவும் நெருக்கமான அளவாக இருந்தது.
Tafsiran larabci:
فَاَوْحٰۤی اِلٰی عَبْدِهٖ مَاۤ اَوْحٰی ۟ؕ
53.10. ஜிப்ரீல் அல்லாஹ்வின் அடியார் முஹம்மதுக்கு வஹியாக அறிவிக்க வேண்டியதை அறிவித்தார்.
Tafsiran larabci:
مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَاٰی ۟
53.11. முஹம்மதின் உள்ளம் தன் பார்வை கண்டதைக்குறித்து பொய்யுரைக்கவில்லை.
Tafsiran larabci:
اَفَتُمٰرُوْنَهٗ عَلٰی مَا یَرٰی ۟
53.12. -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ் இராப்பயணம் அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவருக்குக் காட்டியதைக் குறித்து நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா?
Tafsiran larabci:
وَلَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰی ۟ۙ
53.13. முஹம்மது ஜிப்ரீலை இரவில் அழைத்துச் சென்றபோது மற்றொரு முறை அவரை அவரது தோற்றத்தில் கண்டார்,
Tafsiran larabci:
عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰی ۟
53.14. இறுதி எல்லையிலுள்ள இலந்தை மரத்திற்கு அருகே. அது ஏழாவது வானத்தில் இருக்கின்ற மிகப் பெரும் ஒரு மரமாகும்.
Tafsiran larabci:
عِنْدَهَا جَنَّةُ الْمَاْوٰی ۟ؕ
53.15. அந்த மரத்திற்கு அருகில்தான் ஜன்னத்துல் மஃவா எனும் சுவனம் இருக்கின்றது.
Tafsiran larabci:
اِذْ یَغْشَی السِّدْرَةَ مَا یَغْشٰی ۟ۙ
53.16. அல்லாஹ்வின் கட்டளையின்படி அந்த இலந்தை மரத்தை மகத்தான பொருளொன்று மூடிய போது அதன் யதார்த்தத்தை அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அறிய மாட்டார்.
Tafsiran larabci:
مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰی ۟
53.17. அவரது பார்வை வலப்புறமோ, இடப்புறமோ சாயவில்லை. அதற்கு விதிக்கப்பட்டதை மீறவுமில்லை.
Tafsiran larabci:
لَقَدْ رَاٰی مِنْ اٰیٰتِ رَبِّهِ الْكُبْرٰی ۟
53.18. முஹம்மது விண்ணுலகிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் தன் இறைவனின் வல்லமையை அறிவிக்கக்கூடிய மாபெரும் சான்றுகளைக் கண்டார். அவர் சுவனத்தையும் நரகத்தையும் அவற்றைத் தவிர உள்ளவற்றையும் கண்டார்.
Tafsiran larabci:
اَفَرَءَیْتُمُ اللّٰتَ وَالْعُزّٰی ۟ۙ
53.19,20. -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்குகின்ற சிலைகளான லாத், உஸ்ஸா
Tafsiran larabci:
وَمَنٰوةَ الثَّالِثَةَ الْاُخْرٰی ۟
20. மூன்றாவது மனாத் ஆகியவற்றைக் குறித்து எனக்கு அறிவியுங்கள், அவை உங்களுக்குப் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்தி பெறுகின்றனவா?
Tafsiran larabci:
اَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْاُ ۟
53.21. -இணைவைப்பாளர்களே!- உங்களுக்கு நீங்கள் விரும்பும் ஆண் பிள்ளைகள், அவனுக்கு நீங்கள் வெறுக்கும் பெண் பிள்ளைகளா?
Tafsiran larabci:
تِلْكَ اِذًا قِسْمَةٌ ضِیْزٰی ۟
53.22. உங்களின் மன இச்சைக்கேற்ப நீங்கள் செய்த இந்த பங்கீடு அநீதியான பங்கீடாயிற்றே!
Tafsiran larabci:
اِنْ هِیَ اِلَّاۤ اَسْمَآءٌ سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ— اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَمَا تَهْوَی الْاَنْفُسُ ۚ— وَلَقَدْ جَآءَهُمْ مِّنْ رَّبِّهِمُ الْهُدٰی ۟ؕ
53.23. இந்த சிலைகள் அர்த்தமற்ற வெறும் பெயர்களே அன்றி வேறில்லை. அவற்றிற்கு வணக்கத்திற்குத் தகுதியான எந்தப் பண்பும் இல்லை. அவை நீங்களும் உங்கள் முன்னோர்களும் வைத்துக் கொண்ட பெயர்களேயாகும். அல்லாஹ் அதற்கு எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லை. இணைவைப்பாளர்கள் யூகங்களையும் ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்துக்காட்டிய அவர்களின் மன இச்சைகளையுமே பின்பற்றுகிறார்கள். தூதரின் மூலம் அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி வந்துவிட்டது. ஆயினும் அவர்கள் அதைக் கொண்டு நேர்வழியடையவில்லை.
Tafsiran larabci:
اَمْ لِلْاِنْسَانِ مَا تَمَنّٰی ۟ؗۖ
53.24. அல்லது மனிதனுக்கு அல்லாஹ்விடத்தில் சிலைகளின் பரிந்துரை முதலான தான் விரும்பியதெல்லாம் கிடைத்துவிடுமா?
Tafsiran larabci:
فَلِلّٰهِ الْاٰخِرَةُ وَالْاُوْلٰی ۟۠
53.25. இல்லை, அவனுக்கு அவன் விரும்பியதெல்லாம் இல்லை. மறுமையும் இம்மையும் அல்லாஹ்வுக்கே உரியது. அவையிரண்டிலிருந்தும் அவன் தான் நாடியவர்களுக்கு வழங்குகிறான், தான் நாடியவர்களுக்கு தடுத்துக் கொள்கிறான்.
Tafsiran larabci:
وَكَمْ مِّنْ مَّلَكٍ فِی السَّمٰوٰتِ لَا تُغْنِیْ شَفَاعَتُهُمْ شَیْـًٔا اِلَّا مِنْ بَعْدِ اَنْ یَّاْذَنَ اللّٰهُ لِمَنْ یَّشَآءُ وَیَرْضٰی ۟
53.26. வானங்களிலுள்ள எத்தனையோ வானவர்களின் பரிந்துரை எந்தப் பயனையும் அளிக்காது. அவர்கள் யாருக்கேனும் பரிந்துரை செய்ய விரும்பினால் அல்லாஹ்வின் அனுமதிக்குப் பிறகே அதுவும் அவர்களில் அவன் நாடியவர்களுக்கே பரிந்துரை செய்ய முடியும். பரிந்துரை செய்பவரையும் பொருந்திக்கொள்ள வேண்டும். அல்லாஹ் தனக்கு இணைகளாக ஏற்படுத்தப்பட்டவர்களுக்கு பரிந்துரை செய்ய அனுமதிக்க மாட்டான். அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்ற பரிந்துரைசெய்யப்படும் எவரையும் பொருந்திக்கொள்ள மாட்டான்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• كمال أدب النبي صلى الله عليه وسلم حيث لم يَزغْ بصره وهو في السماء السابعة.
1. நபியவர்களின் பரிபூரண ஒழுக்கம். எனவேதான் ஏழாம் வானத்திலும் அவரது பார்வை திரும்பவில்லை.

• سفاهة عقل المشركين حيث عبدوا شيئًا لا يضر ولا ينفع، ونسبوا لله ما يكرهون واصطفوا لهم ما يحبون.
2.இணைவபை்பாளர்களின் மடமையான சிந்தனை. தீங்கிழைக்கவோ, பிரயோசனம்தரவோ முடியாதவற்றை வணங்கினார்கள். தாம் வெறுப்பவற்றை அல்லாஹ்வுக்கு இணைத்துக்கூறியும் தாம் விரும்புபவற்றைத் தமக்கு தேர்ந்தெடுத்தனர்.

• الشفاعة لا تقع إلا بشرطين: الإذن للشافع، والرضا عن المشفوع له.
3. பரிந்துரை செய்வதற்கான இரு நிபந்தனைகள்: 1. பரிந்துரை செய்பவருக்கான அனுமதி. 2. பரிந்துரை செய்யப்படுபவரைக் குறித்து திருப்தியடைதல்.

اِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ لَیُسَمُّوْنَ الْمَلٰٓىِٕكَةَ تَسْمِیَةَ الْاُ ۟
53.27. நிச்சயமாக மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நம்பாதவர்கள் வானவர்களை அல்லாஹ்வின் மகள்கள் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு பெண் பெயர் சூட்டுகிறார்கள். அவர்கள் கூறும் வார்த்தையைவிட்டும் அல்லாஹ் மிக உயர்ந்தவன்.
Tafsiran larabci:
وَمَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ ؕ— اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ ۚ— وَاِنَّ الظَّنَّ لَا یُغْنِیْ مِنَ الْحَقِّ شَیْـًٔا ۟ۚ
53.28. அவர்கள் இவ்வாறு வானவர்களுக்கு பெண் பெயர் சூட்டியதற்கு அவர்களிடம் ஆதாரமாக அமையத்தக்க எந்த அறிவும் இல்லை. அவர்கள் இந்த விஷயத்தில் யூகத்தையும் இட்டுக்கட்டுதலையும் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக யூகம் சத்தியத்தின் இடத்தை அடைவதற்கு முன்னால் எந்தப் பயனையும் அளிக்காது.
Tafsiran larabci:
فَاَعْرِضْ عَنْ مَّنْ تَوَلّٰی ۙ۬— عَنْ ذِكْرِنَا وَلَمْ یُرِدْ اِلَّا الْحَیٰوةَ الدُّنْیَا ۟ؕ
53.29. -தூதரே!- அல்லாஹ்வை நினைவுகூராமலும் அதுகுறித்து அக்கறை கொள்ளாமலும் இருப்பவனைப் புறக்கணித்து விடுவீராக. அவன் உலக வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் விரும்புவதுமில்லை, மறுமைக்காகச் செயல்படுவதுமில்லை. ஏனெனில் நிச்சயமாக அவன் அதனை நம்பவில்லை.
Tafsiran larabci:
ذٰلِكَ مَبْلَغُهُمْ مِّنَ الْعِلْمِ ؕ— اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِمَنِ اهْتَدٰی ۟
53.30. இந்த இணைவைப்பாளர்கள் வானவர்களுக்குப் பெண் பெயர் கூறுவதுதான் அவர்களின் அறிவின் மட்டமாகும். ஏனெனில் அவர்கள் அறிவிலிகள். நம்பிக்கையில் உறுதியை அடையவில்லை. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் சத்தியப் பாதையைவிட்டும் தவறியவர்களையும் அவனுடைய பாதையில்பால் நேர்வழி பெறுபவர்களையும் நன்கறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Tafsiran larabci:
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۙ— لِیَجْزِیَ الَّذِیْنَ اَسَآءُوْا بِمَا عَمِلُوْا وَیَجْزِیَ الَّذِیْنَ اَحْسَنُوْا بِالْحُسْنٰی ۟ۚ
53.31. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் உரிமையால், படைப்பால், நிர்ணயத்தால் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. இது அவன் உலகில் தீய செயல்கள் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனையை அளிப்பதற்காவும் நற்செயல்கள் புரிந்த நம்பிக்கையாளர்களுக்கு சுவனத்தை கூலியாக அளிப்பதற்காகவும்தான்.
Tafsiran larabci:
اَلَّذِیْنَ یَجْتَنِبُوْنَ كَبٰٓىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ اِلَّا اللَّمَمَ ؕ— اِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ؕ— هُوَ اَعْلَمُ بِكُمْ اِذْ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاِذْ اَنْتُمْ اَجِنَّةٌ فِیْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ ۚ— فَلَا تُزَكُّوْۤا اَنْفُسَكُمْ ؕ— هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰی ۟۠
53.32. அவர்கள் சிறு பாவங்களைத்தவிர பெரும் பாவங்களைவிட்டும் மானக்கேடான பாவங்களைவிட்டும் விலகியிருக்கிறார்கள். பெரும் பாவங்களைவிட்டுத் தவிர்ந்து நற்செயல்களில் அதிகமாக ஈடுபட்டால் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும், -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன். அடியார்கள் பாவமன்னிப்புக் கோரும்போது அவர்களின் பாவங்களை மன்னிக்கிறான். அவன் உங்களின் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்தபோதே, உங்கள் அன்னையரின் வயிற்றில் படிப்படியாக நீங்கள் படைக்கப்பட்டபோதே உங்களின் நிலைகளையும் விவகாரங்களையும் குறித்து நன்கறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. எனவே உங்களை நீங்களே இறையச்சமுடையவர்கள் என்று புகழாதீர்கள். உங்களில் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களை அவன் நன்கறிந்தவன்.
Tafsiran larabci:
اَفَرَءَیْتَ الَّذِیْ تَوَلّٰی ۟ۙ
53.33. இஸ்லாத்தின் அருகில் வந்த பின்னரும் அதனைப் புறக்கணித்தவனின் அவலட்சன நிலையை நீர் பார்த்தீரா?
Tafsiran larabci:
وَاَعْطٰی قَلِیْلًا وَّاَكْدٰی ۟
53.34. அவன் குறைவாக அளித்து பின்னர் தடுத்துக் கொண்டான். ஏனெனில் நிச்சயமாக கஞ்சத்தனமே அவனது இயல்பாகும். இருந்தும் அவன் தன்னைத்தானே பரிசுத்தப்படுத்துகிறான்.
Tafsiran larabci:
اَعِنْدَهٗ عِلْمُ الْغَیْبِ فَهُوَ یَرٰی ۟
53.35. அவனிடம் மறைவான ஞானம் இருந்து அதை அவன் பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கின்றானா?
Tafsiran larabci:
اَمْ لَمْ یُنَبَّاْ بِمَا فِیْ صُحُفِ مُوْسٰی ۟ۙ
53.36,37. அல்லது அவன் அல்லாஹ்வின்மீது இட்டுக்கட்டுகிறானா? அல்லது அல்லாஹ்வின்மீது இவ்வாறு இட்டுக்கட்டும் இவனுக்கு அல்லாஹ் மூஸாவின்மீது இறக்கிய ஆரம்ப ஏடுகளில் அறிவிக்கப்படவில்லையா?
Tafsiran larabci:
وَاِبْرٰهِیْمَ الَّذِیْ وَ ۟ۙ
37. தம் இறைவன் தமக்கு இட்ட கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமின் வேதங்களிலும் (உள்ளவை அறிவிக்கப்படவில்லையா)?
Tafsiran larabci:
اَلَّا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ۟ۙ
53.38. நிச்சயமாக ஒரு மனிதன் மற்ற மனிதனின் பாவத்தை சுமக்க மாட்டான்.
Tafsiran larabci:
وَاَنْ لَّیْسَ لِلْاِنْسَانِ اِلَّا مَا سَعٰی ۟ۙ
53.39. மனிதனுக்கு அவன் செய்த செயல்களின் நன்மைகளே அன்றி வேறில்லை.
Tafsiran larabci:
وَاَنَّ سَعْیَهٗ سَوْفَ یُرٰی ۟
53.40. மறுமை நாளில் தான் செய்த செயல்களை வெளிப்படையாகக் காண்பான்.
Tafsiran larabci:
ثُمَّ یُجْزٰىهُ الْجَزَآءَ الْاَوْفٰی ۟ۙ
53.41. பின்னர் அவனுடைய செயலுக்கேற்ப குறைவின்றி முழுமையாக கூலி வழங்கப்படுவான்.
Tafsiran larabci:
وَاَنَّ اِلٰی رَبِّكَ الْمُنْتَهٰی ۟ۙ
53.42. -தூதரே!- நிச்சயமாக அடியார்கள் மரணித்தபிறகு அவர்கள் உம் இறைவனின் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டும்.
Tafsiran larabci:
وَاَنَّهٗ هُوَ اَضْحَكَ وَاَبْكٰی ۟ۙ
53.43. நிச்சயமாக அவனே தான் நாடியவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான். அதனால் அவர்களை சிரிக்க வைக்கிறான். தான் நாடியவர்களை கவலையில் ஆழ்த்துகிறான். அதனால் அவர்களை அழ வைக்கிறான்.
Tafsiran larabci:
وَاَنَّهٗ هُوَ اَمَاتَ وَاَحْیَا ۟ۙ
53.44. நிச்சயமாக அவனே உலகில் உயிருள்ளவர்களை மரணிக்கச் செய்கிறான். மரணித்தவர்களை மறுமையில் மீண்டும் எழுப்பி உயிர்ப்பிக்கிறான்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• انقسام الذنوب إلى كبائر وصغائر.
1. பாவங்கள் சிறு பாவங்கள், பெரும் பாவங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

• خطورة التقوُّل على الله بغير علم.
2. அறிவின்றி அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதன் விபரீதம்

• النهي عن تزكية النفس.
3. தன்னைத் தானே தூய்மையானவன் என்று கூறுவதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளது.

وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَیْنِ الذَّكَرَ وَالْاُ ۟ۙ
53.45. நிச்சயமாக அவன் ஆண், பெண் என்ற இரு இணைகளைப் படைத்துள்ளான்,
Tafsiran larabci:
مِنْ نُّطْفَةٍ اِذَا تُمْنٰی ۪۟
53.46. கர்ப்பப்பையில் செலுத்தப்படும் விந்துத் துளியிலிருந்து.
Tafsiran larabci:
وَاَنَّ عَلَیْهِ النَّشْاَةَ الْاُخْرٰی ۟ۙ
53.47. நிச்சயமாக அவனே அவர்கள் இறந்தபின்னர் அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி மறுமுறை படைக்கிறான்.
Tafsiran larabci:
وَاَنَّهٗ هُوَ اَغْنٰی وَاَقْنٰی ۟ۙ
53.48. அவனே தன் அடியார்களில் தான் நாடியவர்களை சொத்துக்களை வழங்கி செல்வந்தர்களாக்குகிறான். மக்கள் சேகரித்து சீமானாக ஆகின்ற அளவுக்கு சொத்தை வழங்குகிறான்.
Tafsiran larabci:
وَاَنَّهٗ هُوَ رَبُّ الشِّعْرٰی ۟ۙ
அவன்தான் இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு வணங்கி வழிபட்டுக்கொண்டிருந்த (ஷிஃரா எனும்) நட்சத்திரத்தின் இறைவன்.
Tafsiran larabci:
وَاَنَّهٗۤ اَهْلَكَ عَادَا ١لْاُوْلٰی ۟ۙ
53.50. அவனே ஹுதின் சமூகத்தினரான ஆத் சமூகத்தை அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்தபோது அழித்தான்.
Tafsiran larabci:
وَثَمُوْدَاۡ فَمَاۤ اَبْقٰی ۟ۙ
53.51. ஸாலிஹின் மக்களான ஸமூத் சமூகத்தை அழித்தான். அவர்களில் யாரையும் விட்டுவைக்கவில்லை.
Tafsiran larabci:
وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ؕ— اِنَّهُمْ كَانُوْا هُمْ اَظْلَمَ وَاَطْغٰی ۟ؕ
53.52. ஆத், ஸமூத் ஆகியோருக்கு முன்னர் நூஹின் சமூகத்தை அழித்தான். நிச்சயமாக நூஹின் மக்கள் ஆத் மற்றும் ஸமூத் சமூகத்தைவிட கொடுங்கோலர்களாகவும் வரம்பு மீறக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். ஏனெனில் நூஹ் அவர்களிடையே இருந்து தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகளாக அவர்களை அல்லாஹ் ஒருவனின் பக்கம் அழைத்தார். ஆனால் அவர்கள் அவருக்குப் பதிலளிக்கவில்லை.
Tafsiran larabci:
وَالْمُؤْتَفِكَةَ اَهْوٰی ۟ۙ
53.53. அவன் லூத்தின் சமூகத்தினர் வாழ்ந்த ஊர்களை வானத்தின்பால் உயர்த்திய பின்னர் அதனை கவிழ்த்து பின்னர் பூமியில் விழச் செய்தான்.
Tafsiran larabci:
فَغَشّٰىهَا مَا غَشّٰی ۟ۚ
53.54. அவற்றை வானத்தில்பால் உயர்த்தி பூமியில் விழச் செய்தபிறகு அவற்றை மூட வேண்டிய கற்கள் மூடிக் கொண்டன.
Tafsiran larabci:
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكَ تَتَمَارٰی ۟
53.55. மனிதனே! உன் இறைவனின் வல்லமையை அறிவிக்கக்கூடிய சான்றுகளில் எதனைக் கொண்டு படிப்பினை பெறாமல் தர்க்கம் செய்வாய்?
Tafsiran larabci:
هٰذَا نَذِیْرٌ مِّنَ النُّذُرِ الْاُوْلٰی ۟
53.56. உங்களின்பால் அனுப்பப்பட்ட இந்த தூதர் முந்தைய தூதர்களின் இனத்திலுள்ளவர்தாம்.
Tafsiran larabci:
اَزِفَتِ الْاٰزِفَةُ ۟ۚ
53.57. நெருங்கி வரக்கூடிய மறுமை நாள் நெருங்கிவிட்டது.
Tafsiran larabci:
لَیْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ كَاشِفَةٌ ۟ؕ
53.58. அதனை தடுப்பவர் எவரும் இல்லை. அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அதனை அறிய முடியாது.
Tafsiran larabci:
اَفَمِنْ هٰذَا الْحَدِیْثِ تَعْجَبُوْنَ ۟ۙ
53.59. உங்களிடம் எடுத்துரைக்கப்படும் இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்று நீங்கள் ஆச்சரியமடைகின்றீர்களா?
Tafsiran larabci:
وَتَضْحَكُوْنَ وَلَا تَبْكُوْنَ ۟ۙ
53.60. அதன் அறிவுரைகளைக் கேட்கும் போது அழாமல் அதனைப் பரிகாசம் செய்தவாறு சிரிக்கிறீர்கள்.
Tafsiran larabci:
وَاَنْتُمْ سٰمِدُوْنَ ۟
53.61. நீங்கள் அதனைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருக்கின்றீர்கள்.
Tafsiran larabci:
فَاسْجُدُوْا لِلّٰهِ وَاعْبُدُوْا ۟
53.62. அல்லாஹ்வுக்கு மட்டும் நீங்கள் சிரம்பணியுங்கள். வணக்க வழிபாட்டை அவனுக்கு உரித்தாக்கிக் கொள்ளுங்கள்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• عدم التأثر بالقرآن نذير شؤم.
1. குர்ஆனைக் கொண்டு தாக்கமடையாமல் இருப்பது துர்ச்சகுனத்திற்கான எச்சரிக்கையாகும்.

• خطر اتباع الهوى على النفس في الدنيا والآخرة.
2. இவ்வுலகிலும் மறுவுலகிலும் மன இச்சையைப் பின்பற்றுவதனால் ஆன்மாவுக்கு ஏற்படும் ஆபத்து.

• عدم الاتعاظ بهلاك الأمم صفة من صفات الكفار.
3. முந்தைய சமூகங்கள் அழிக்கப்பட்டதைக் கொண்டு படிப்பினை பெறாமல் இருப்பது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும்.

 
Fassarar Ma'anoni Sura: Suratu Al'najm
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa