Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Alhadid   Aya:
لَقَدْ اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَیِّنٰتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتٰبَ وَالْمِیْزَانَ لِیَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِ ۚ— وَاَنْزَلْنَا الْحَدِیْدَ فِیْهِ بَاْسٌ شَدِیْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِیَعْلَمَ اللّٰهُ مَنْ یَّنْصُرُهٗ وَرُسُلَهٗ بِالْغَیْبِ ؕ— اِنَّ اللّٰهَ قَوِیٌّ عَزِیْزٌ ۟۠
57.25. நாம் தெளிவான ஆதாரங்கள், சான்றுகளைக்கொண்டு நம் தூதர்களை அனுப்பினோம். மனிதர்கள் நியாயமாக நடந்துகொள்ளும்பொருட்டு அவர்களுடன் வேதங்களையும், தராசையும் இறக்கினோம். நாம் இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான பலம் இருக்கின்றது. அதிலிருந்து ஆயுதங்கள் செய்யப்படுகின்றன. அதில் மக்களுக்கு அவர்களின் பணிகளிலும் தொழில்களிலும் பல பயன்களும் இருக்கின்றன. இது அல்லாஹ்வைக் காணாமல் யார் அவனுக்கு உதவி செய்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். எதுவும் அவனை மிகைத்துவிட முடியாது. எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.
Tafsiran larabci:
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا وَّاِبْرٰهِیْمَ وَجَعَلْنَا فِیْ ذُرِّیَّتِهِمَا النُّبُوَّةَ وَالْكِتٰبَ فَمِنْهُمْ مُّهْتَدٍ ۚ— وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
57.26. நாம் நூஹையும் இப்ராஹீமையும் தூதர்களாக அனுப்பினோம். அவர்களின் சந்ததிகளில் நபித்துவத்தையும் ஏற்படுத்தினோம்.அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களையும் வழங்கினோம். அவர்கள் இருவரின் வழித்தோன்றல்களில் சிலர் நேர்வழியில் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாதவர்களாகவே இருக்கின்றார்கள்.
Tafsiran larabci:
ثُمَّ قَفَّیْنَا عَلٰۤی اٰثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّیْنَا بِعِیْسَی ابْنِ مَرْیَمَ وَاٰتَیْنٰهُ الْاِنْجِیْلَ ۙ۬— وَجَعَلْنَا فِیْ قُلُوْبِ الَّذِیْنَ اتَّبَعُوْهُ رَاْفَةً وَّرَحْمَةً ؕ— وَرَهْبَانِیَّةَ ١بْتَدَعُوْهَا مَا كَتَبْنٰهَا عَلَیْهِمْ اِلَّا ابْتِغَآءَ رِضْوَانِ اللّٰهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَایَتِهَا ۚ— فَاٰتَیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا مِنْهُمْ اَجْرَهُمْ ۚ— وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
57.27. பின்னர் நாம் தூதர்களை தொடர்ந்து அனுப்பினோம். அவர்களின் சமூகங்களின்பால் தொடர்ந்து தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். நாம் அவர்களுக்குப் பின் மர்யமின் மகன் ஈசாவை அனுப்பினோம். அவருக்கு இன்ஜீலை வழங்கினோம். அவர்மீது நம்பிக்கைகொண்டு அவரைப் பின்பற்றியவர்களின் உள்ளங்களில் நாம் இரக்கத்தையும் கருணையையும் ஏற்படுத்தினோம். அவர்கள் தங்களிடையே அன்பானவர்களாகவும் கருணையாளர்களாகவும் திகழ்ந்தார்கள். தங்களின் மார்க்கத்தில் வரம்பு மீறுவதை அவர்கள் புதிதாக ஏற்படுத்திக் கொண்டார்கள். அல்லாஹ் அனுமதித்த சிலவற்றை - மணமுடிப்பது, இன்பங்களை அனுபவிப்பது போன்றவை - விட்டுவிட்டார்கள். நாம் அவர்களிடம் இவ்வாறு செய்யும்படிக் கூறவில்லை. அவர்கள் மார்க்கத்தில் இல்லாதவற்றை உருவாக்கி தங்களுக்குத் தாங்களே கடமையாக்கிக் கொண்டார்கள். நாம் அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதையே அவர்களிடம் விரும்பினோம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அவர்களில் நம்பிக்கைகொண்டவர்களுக்கு நாம் அவர்களுக்கான கூலியை வழங்கினோம். அவர்களில் பெரும்பாலோர் முஹம்மது கொண்டுவந்ததை நிராகரித்து அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாதவர்களாகவே இருக்கின்றார்கள்.
Tafsiran larabci:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَاٰمِنُوْا بِرَسُوْلِهٖ یُؤْتِكُمْ كِفْلَیْنِ مِنْ رَّحْمَتِهٖ وَیَجْعَلْ لَّكُمْ نُوْرًا تَمْشُوْنَ بِهٖ وَیَغْفِرْ لَكُمْ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟ۙ
57.28. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். முஹம்மது மீது நம்பிக்கைகொண்டதற்காகவும் முந்தைய தூதர்களின்மீது நம்பிக்கைகொண்டதற்காவும் அவன் உங்களுக்கு இருமடங்கு நன்மையையும் கூலியையும் வழங்குவான். இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு ஒளியை ஏற்படுத்துவான். நீங்கள் அதனைக்கொண்டு நேர்வழி பெறுவீர்கள். அதன் மூலம் மறுமை நாளில் சிராத் என்னும் பாலத்தையும் கடப்பீர்கள். அவன் உங்களை பாவங்களை மன்னித்து மறைத்துவிடுவான். அவற்றிற்காக உங்களைக் குற்றம்பிடிக்க மாட்டான். அவன் தன் அடியார்களை மிகவும் மன்னிப்பவனும் அவர்கள் மீது அன்புகாட்டுபவனும் ஆவான்.
Tafsiran larabci:
لِّئَلَّا یَعْلَمَ اَهْلُ الْكِتٰبِ اَلَّا یَقْدِرُوْنَ عَلٰی شَیْءٍ مِّنْ فَضْلِ اللّٰهِ وَاَنَّ الْفَضْلَ بِیَدِ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟۠
57.29. -நம்பிக்கையாளர்களே!- நாம் உங்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ள இரட்டிப்பான நன்மையின் மூலம் நமது மகத்தான அருளை நாம் உங்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டோம். இது வேதம் வழங்கப்பட்ட முன்சென்ற யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வின் அருளைத் தாம் நாடியவர்களுக்கு வழங்கி நாடியவர்களுக்குத் தடுப்பதற்கு தாங்கள் அல்லாஹ்வின் அருளிலிருந்து எதற்கும் சக்தி பெற்றவர்கள் அல்ல என்பதை அறிந்து, அல்லாஹ்விடமே அருள் உள்ளது, அதனை அவன் தான் நாடியவர்களுக்கு வழங்குகிறான், தான் நாடியவர்களுக்கு வழங்காமல் தடுத்துக் கொள்கிறான் என்பதை அறிந்துகொள்வதற்காகவும்தான். அவன் மாபெரும் அருளாளனாவான். தன் அடியார்களில் தான் நாடியோருக்கு அதனை வழங்குகிறான்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• الحق لا بد له من قوة تحميه وتنشره.
1. சத்தியத்தைப் பாதுகாக்கவும் பரப்பவும் பலம் மிகவும் அவசியமானதாகும்.

• بيان مكانة العدل في الشرائع السماوية.
2. வானுலக ஷரீஅத்துகளில் நீதியின் முக்கியத்துவம் தெளிவாகிறது.

• صلة النسب بأهل الإيمان والصلاح لا تُغْنِي شيئًا عن الإنسان ما لم يكن هو مؤمنًا.
3. நம்பிக்கையாளர்கள் மற்றும் நல்லோர்களுடன் உள்ள இரத்த உறவுகள் நம்பிக்கையாளராக இல்லாத வரை எந்தப் பயனையும் அளித்துவிட முடியாது.

• بيان تحريم الابتداع في الدين.
4. மார்க்கத்தில் இல்லாதவற்றை உருவாக்குவது முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று என்பது தெளிவாகிறது.

 
Fassarar Ma'anoni Sura: Alhadid
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa