Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (142) Sura: Suratu Al'an'am
وَمِنَ الْاَنْعَامِ حَمُوْلَةً وَّفَرْشًا ؕ— كُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ— اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟ۙ
பெரிய ஒட்டகங்கள் போன்ற பொதி சுமப்பதற்குப் பொருத்தமான கால்நடைகளையும் சிறு ஒட்டகங்கள் ஆடுகள் போன்ற பொதி சுமப்பதற்குத் தகுதியற்ற கால்நடைகளையும் அவனே உங்களுக்காகப் படைத்துள்ளான். மனிதர்களே! அவன் உங்களுக்கு அனுமதித்த அல்லாஹ் அருளிய இப்பொருட்களிலிருந்து உண்ணுங்கள். இணைவைப்பாளர்கள் செய்வது போன்று அல்லாஹ் தடைசெய்தவற்றை அனுமதிப்பதிலும் அனுமதித்தவற்றைத் தடைசெய்வதிலும் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி விடாதீர்கள். மனிதர்களே! நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு வெளிப்படையான விரோதியாவான். நீங்கள் அவ்வாறு செய்து அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட வேண்டும் என்று அவன் விரும்புகிறான்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• ذم الله المشركين بسبع صفات هي : الخسران والسفاهة وعدم العلم وتحريم ما رزقهم الله والافتراء على الله والضلال وعدم الاهتداء؛ فهذه أمور سبعة، وكل واحد منها سبب تام في حصول الذم.
2. இணைவைப்பாளர்களை அல்லாஹ் ஏழு பண்புகளைக் கொண்டு இழித்துரைத்துள்ளான். அவை: இழப்பு, மடமைத்தனம், அறிவின்மை, அல்லாஹ் வழங்கியதை தடை செய்துகொள்ளல், அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுதல், வழிகேடு, நேர்வழியடையாமை. இவ்வேழு காரியங்களில் ஒவ்வொன்றும் இழிவுக்கான தனிக் காரணமாகும்.

• الأهواء سبب تحريم ما أحل الله وتحليل ما حرم الله.
1. மனஇச்சையே அல்லாஹ் அனுமதித்ததை தடைசெய்வதற்கும் அவன் தடைசெய்ததை அனுமதிப்பதற்கும் காரணமாக இருக்கின்றது.

• وجوب الزكاة في الزروع والثمار عند حصادها، مع جواز الأكل منها قبل إخراج زكاتها، ولا يُحْسَب من الزكاة.
2. பயிர்களையும் பழங்களையும் அறுவடை செய்யும் போது அவற்றிற்குரிய ஸகாத் வழங்குவது கடமையாகும். ஸகாத் வழங்கப்படும் முன்னரே அவற்றிலிருந்து உண்ணலாம். அது ஸகாத்தில் சேராது.

• التمتع بالطيبات مع عدم الإسراف ومجاوزة الحد في الأكل والإنفاق.
3. உண்பதிலும் செலவு செய்வதிலும் வரம்புமீறாது, வீண்விரயம் செய்யாமல் நல்லவற்றை அனுபவிக்கலாம்.

 
Fassarar Ma'anoni Aya: (142) Sura: Suratu Al'an'am
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa