Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (34) Sura: Suratu Al'an'am
وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَ فَصَبَرُوْا عَلٰی مَا كُذِّبُوْا وَاُوْذُوْا حَتّٰۤی اَتٰىهُمْ نَصْرُنَا ۚ— وَلَا مُبَدِّلَ لِكَلِمٰتِ اللّٰهِ ۚ— وَلَقَدْ جَآءَكَ مِنْ نَّبَاۡ الْمُرْسَلِیْنَ ۟
6.34. அவர்கள் நீர் கொண்டுவந்ததை மட்டும்தான் நிராகரிக்கிறார்கள் என்று எண்ணிவிட வேண்டாம். உமக்கு முன்னர் வந்த தூதர்கள் பலர் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் சமூகங்கள் அவர்களைத் துன்புறுத்தியிருக்கின்றன. ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் உதவி வரும் வரை, பிரச்சாரத்திலும், அல்லாஹ்வின் பாதையில் போராடுவதன் மூலமும் பொறுமையாக இருந்து அவற்றை எதிர்கொண்டார்கள். அல்லாஹ் எழுதிவைத்த உதவியையும் தன் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியையும் யாராலும் மாற்ற முடியாது. தூதுரே! முந்தைய தூதர்களின் செய்திகளும் அவர்களது சமுதாயங்கள் மூலம் அவர்கள் அனுபவித்தவைகளும், அவர்களது எதிரிகளை அழித்து அவர்களுக்கு வழங்கிய வெற்றியைப் பற்றிய செய்திகளும் உம்மிடம் வந்தேயிருக்கின்றன.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• من عدل الله تعالى أنه يجمع العابد والمعبود والتابع والمتبوع في عَرَصات القيامة ليشهد بعضهم على بعض.
1. வணங்கியவன், வணங்கப்பட்டவன், பின்பற்றியவன், பின்பற்றப்பட்டவன் என அனைவரையும் அல்லாஹ் மறுமை நாளில் - அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் பொருட்டு - ஒன்றுதிரட்டுவான். இது அல்லாஹ் வழங்கும் நீதியாகும்.

• ليس كل من يسمع القرآن ينتفع به، فربما يوجد حائل مثل ختم القلب أو الصَّمَم عن الانتفاع أو غير ذلك.
2. குர்ஆனைச் செவியுறும் அனைவரும் பயனடைவார்கள் என்பதில்லை. உள்ளங்களிலும் செவிகளிலும் அடைப்பு உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவர்களால் குர்ஆனிலிருந்து பயனயோ அல்லது வேறு எதாவது ஒன்றையோ அடைய முடியாது.

• بيان أن المشركين وإن كانوا يكذبون في الظاهر فهم يستيقنون في دواخلهم بصدق النبي عليه الصلاة والسلام.
3. இணைவைப்பாளர்கள் வெளிப்படையாக நபியவர்களை பொய்யர் என்று கூறினாலும் அவர் உண்மையாளர் என்பதை உள்ளத்தில் உறுதியாக அறிந்திருந்தார்கள்.

• تسلية النبي عليه الصلاة والسلام ومواساته بإعلامه أن هذا التكذيب لم يقع له وحده، بل هي طريقة المشركين في معاملة الرسل السابقين.
4. இணைவைப்பாளர்கள் உம்மை மட்டும் புறக்கணிக்கவில்லை. மாறாக முந்தைய தூதர்களுடனும் இணைவைப்பாளர்கள் இவ்வாறே நடந்துகொண்டார்கள். என்று அறிவித்து நபியவர்களுக்கு ஆறுதல் கூறப்பட்டுள்ளது.

 
Fassarar Ma'anoni Aya: (34) Sura: Suratu Al'an'am
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa