Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Al'a'raf   Aya:
وَاكْتُبْ لَنَا فِیْ هٰذِهِ الدُّنْیَا حَسَنَةً وَّفِی الْاٰخِرَةِ اِنَّا هُدْنَاۤ اِلَیْكَ ؕ— قَالَ عَذَابِیْۤ اُصِیْبُ بِهٖ مَنْ اَشَآءُ ۚ— وَرَحْمَتِیْ وَسِعَتْ كُلَّ شَیْءٍ ؕ— فَسَاَكْتُبُهَا لِلَّذِیْنَ یَتَّقُوْنَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِیْنَ هُمْ بِاٰیٰتِنَا یُؤْمِنُوْنَ ۟ۚ
7.156. நீ இந்த உலக வாழ்வில் அருட்கொடையையும் ஆரோக்கியத்தையும் வழங்கி, நற்செயல்கள் புரிவதற்கு பாக்கியம் அளித்து கண்ணியப்படுத்தியவர்களில் எங்களையும் ஆக்குவாயாக. மறுமையில் நீ சொர்க்கத்தை தயார்படுத்தி வைத்துள்ள நல்லடியார்களுடனும் எங்களை ஆக்குவாயாக. நாங்கள் எங்களின் தவறுகளை ஒத்துக்கொண்டு உன்பக்கம் திரும்பி விட்டோம். அதற்கு அல்லாஹ் கூறினான்: “துன்பத்துக்குரிய காரணிகளைச் செய்தவர்களில் நான் நாடியோரை என்னுடைய வேதனையினால் பிடிப்பேன். என் அருளோ இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும் விட விசாலமானது. அல்லாஹ்வின் அருளும் கருணையும் உபகாரமும் படைப்புகள் அனைத்தையும் சூழ்ந்துள்ளது. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்கு மறுமையில் என் அருளை எழுதி விடுவேன். அவர்கள் தங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தை உரியவர்களுக்கு வழங்குகிறார்கள். நம் வசனங்களின் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.
Tafsiran larabci:
اَلَّذِیْنَ یَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِیَّ الْاُمِّیَّ الَّذِیْ یَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِی التَّوْرٰىةِ وَالْاِنْجِیْلِ ؗ— یَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَیَنْهٰىهُمْ عَنِ الْمُنْكَرِ وَیُحِلُّ لَهُمُ الطَّیِّبٰتِ وَیُحَرِّمُ عَلَیْهِمُ الْخَبٰٓىِٕثَ وَیَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِیْ كَانَتْ عَلَیْهِمْ ؕ— فَالَّذِیْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَاتَّبَعُوا النُّوْرَ الَّذِیْۤ اُنْزِلَ مَعَهٗۤ ۙ— اُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟۠
7.157. அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறார்கள். அவர் எழுதவோ படிக்கவோ தெரியாத உம்மீ நபியாவார். அவரது இறைவன் அவருக்கு வஹி அறிவிக்கிறான். அவர்கள் அவருடைய பெயர், பண்புகள், அவருக்கு இறக்கப்பட்ட வேதம் ஆகியவற்றைப் பற்றி, மூஸாவுக்கு இறக்கப்பட்ட தவ்ராத்திலும், ஈஸாவுக்கு இறக்கப்பட்ட இன்ஜீலிலும் எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறார்கள். நல்லவற்றை அவர்களுக்கு ஏவுவதோடு, இயல்புக்கு முரணான, ஆரோக்கியமான அறிவுக்கு எதிரான தீய விஷயங்களை விட்டும் தடுக்கின்றார். தீங்குகளற்ற சுவையான உணவுப் பொருட்கள், குடிபானங்கள், திருமணஉறவுகள் ஆகியவற்றை அவர்களுக்கு அனுமதிக்கின்றார். அவற்றில் அசுத்தமானவற்றை அவர்கள் மீது தடைசெய்கிறார். வேண்டுமென்றோ தவறாகவோ கொலை செய்தவனையும் அவசியம் கொலை செய்ய வேண்டும் என்பது போன்ற அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த தாங்க முடியாத கடமைகளை அவர்களை விட்டும் அகற்றுகின்றார். இஸ்ராயீலின் மக்களிலும் மற்றவர்களிலும் அவரை உண்மைப்படுத்தி, கண்ணியப்படுத்தி, அவரை எதிர்க்கும் நிராகரிப்பாளர்களுக்கு எதிராக அவருக்கு உதவி புரிந்து அவர் மீது இறக்கப்பட்ட, நேர்வழி காட்டும் ஒளியான குர்ஆனைப் பின்பற்றுபவர்கள்தாம் வெற்றியாளர்கள். எதிர்பார்த்ததை அடைந்து அஞ்சும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்தவர்கள்.
Tafsiran larabci:
قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ اِنِّیْ رَسُوْلُ اللّٰهِ اِلَیْكُمْ جَمِیْعَا ١لَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ یُحْیٖ وَیُمِیْتُ ۪— فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ النَّبِیِّ الْاُمِّیِّ الَّذِیْ یُؤْمِنُ بِاللّٰهِ وَكَلِمٰتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟
7.158. தூதரே! நீர் கூறுவீராக: “மனிதர்களே! நான் அரபுக்கள் அரபி அல்லாதவர்கள் என உங்கள் அனைவரின்பாலும் அனுப்பப்பட்டுள்ள அல்லாஹ்வின் தூதராவேன். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவனே இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான். உயிருள்ளவர்களை மரணிக்கச் செய்கிறான். எனவே -மனிதர்களே-, நீங்கள் அல்லாஹ்வின் மீதும் எழுதவோ படிக்கவோ தெரியாத அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்ளுங்கள். தனது இறைவன் அறிவிக்கும் செய்தியையே அவர் எடுத்து வந்துள்ளார். அவர் அல்லாஹ்வின் மீதும் தமக்கு இறக்கப்பட்டதன் மீதும் தமக்கு முந்தைய தூதர்களுக்கு இறக்கப்பட்டதன் மீது பாகுபாடின்றி நம்பிக்கைகொண்டுள்ளார். இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களுக்கு நன்மைகள் அடங்கியுள்ள நேரான வழியை நீங்கள் அடையும் பொருட்டு அவர் தம் இறைவனிடமிருந்து கொண்டு வந்ததைப் பின்பற்றுங்கள்.
Tafsiran larabci:
وَمِنْ قَوْمِ مُوْسٰۤی اُمَّةٌ یَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ یَعْدِلُوْنَ ۟
7.159. இஸ்ராயீலின் மக்களில் ஒரு கூட்டம் சரியான மார்க்கத்தில் நிலைத்து நிற்பதுடன் மக்களுக்கும் அதன் பக்கம் அழைப்பு விடுக்கின்றனர். அவர்கள் அநீதியிழைக்காது நீதியாக தீர்ப்பளிக்கின்றனர்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• تضمَّنت التوراة والإنجيل أدلة ظاهرة على بعثة النبي محمد صلى الله عليه وسلم وعلى صدقه.
1. தவ்ராத்திலும் இன்ஜீலிலும் நபியவர்களின் தூதுத்துவம், அவர் உண்மையாளர் என்பற்றுக்கான தெளிவான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

• رحمة الله وسعت كل شيء، ولكن رحمة الله عباده ذات مراتب متفاوتة، تتفاوت بحسب الإيمان والعمل الصالح.
2. அல்லாஹ்வின் அருள் படைப்புகள் அனைத்தையும் சூழ்ந்துள்ளது. ஆயினும் நம்பிக்கை மற்றும் நற்செயல்களுக்கேற்ப அல்லாஹ்வின் அருளில் பல படித்தரங்களும் வேறுபாடுகளும் காணப்படுகின்றன.

• الدعاء قد يكون مُجْملًا وقد يكون مُفَصَّلًا حسب الأحوال، وموسى في هذا المقام أجمل في دعائه.
3. பிரார்த்தனை சூழ்நிலைக்கேற்ப சுருக்கமாகவும் விரிவாகவும் அமையலாம். இந்த இடத்தில் மூஸாவின் (அலை) சுருக்கமாக பிரார்த்தித்துள்ளார்கள்.

• من صور عدل الله عز وجل إنصافه للقِلَّة المؤمنة، حيث ذكر صفات بني إسرائيل المنافية للكمال المناقضة للهداية، فربما توهَّم متوهِّم أن هذا يعم جميعهم، فَذَكَر تعالى أن منهم طائفة مستقيمة هادية مهدية.
4. இறை நம்பிக்கையுடையவர்கள் சிறுபான்மையாக இருந்தாலும் அவர்களுடனும் நியாயமாக நடந்து கொள்வது அல்லாஹ்வின் நீதியின் ஒரு பகுதியாகும். எனவேதான் இஸ்ரவேலர்களின் நேர்வழிக்கு மாற்றமான தீய பண்புகளைக் குறிப்பிட்ட பிறகு, அனைத்து இஸ்ரவேலர்களும் இப்படிப்பட்டவர்களே என சிலர் எண்ணக்கூடும் என்பதால், அவர்களில் நேர்வழிபெற்று அதில் நிலைத்து நிற்கும் சிலரும் உள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளான்.

 
Fassarar Ma'anoni Sura: Al'a'raf
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa