Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (142) Sura: Suratu Al'a'raf
وَوٰعَدْنَا مُوْسٰی ثَلٰثِیْنَ لَیْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِیْقَاتُ رَبِّهٖۤ اَرْبَعِیْنَ لَیْلَةً ۚ— وَقَالَ مُوْسٰی لِاَخِیْهِ هٰرُوْنَ اخْلُفْنِیْ فِیْ قَوْمِیْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِیْلَ الْمُفْسِدِیْنَ ۟
7.142. அல்லாஹ் தன் தூதர் மூஸாவுடன் இரகசியமாக உரையாட அவருக்கு முப்பது இரவுகளை வாக்களித்திருந்தான். பின்னர் பத்து இரவுகளை அதிகப்படுத்தி நாற்பது இரவுகளாக அதனை முழுமைப்படுத்தினான். மூஸா தம் இறைவனிடம் இரகசியமாக உரையாடச் சென்ற போது தம் சகோதரர் ஹாரூனிடம் கூறினார்: “ஹாரூனே! என் சமூகத்தில் என் பிரதிநிதியாக இருப்பீராக. அவர்களது விவகாரங்களை சிறந்த நிர்வாகம் மூலமும் மிருதுவான தன்மை மூலமும் சீர்படுத்துவீராக. பாவங்கள் புரிந்து குழப்பவாதிகளின் பாதையில் சென்றுவிடாதீர். பாவிகளுக்கு உதவியாளராக ஆகிவிடாதீர்.”
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• تؤكد الأحداث أن بني إسرائيل كانوا ينتقلون من ضلالة إلى أخرى على الرغم من وجود نبي الله موسى بينهم.
1. இஸ்ரவேலர்கள் - அல்லாஹ்வின் தூதர் மூஸா அலை அவர்கள் அவர்களிடையே இருந்த போதும் ஒரு வழிகேட்டிலிருந்து இன்னொரு வழிகேட்டை நோக்கிச் செல்பவர்களாக இருந்தார்கள் என்பதை நிகழ்வுகள் உறுதி செய்கின்றன.

• من مظاهر خذلان الأمة أن تُحَسِّن القبيح، وتُقَبِّح الحسن بمجرد الرأي والأهواء.
2. சமூகத்தின் பலவீனுத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று, வெறும் சிந்தனை மற்றும் மனஇச்சையின் அடிப்படையில் கெட்டவற்றை நல்லவையாகவும் நல்லவற்றைக் கெட்டவையாகவும் அச்சமுதாயம் கருதுவதாகும்.

• إصلاح الأمة وإغلاق أبواب الفساد هدف سام للأنبياء والدعاة.
3. சமூகத்தை சீர்படுத்துவதும் குழப்பங்களின் வாயில்களை அடைப்பதும் தூதர்கள் மற்றும் அழைப்பாளர்களின் ஓர் உயரிய இலக்காகும்.

• قضى الله تعالى ألا يراه أحد من خلقه في الدنيا، وسوف يكرم من يحب من عباده برؤيته في الآخرة.
4. இந்த உலகில் தன்னை எந்தப் படைப்பினமும் காணமுடியாது என்று அல்லாஹ் முடிவுசெய்துள்ளான். மறுமையில் தான் விரும்பும் அடியார்களை அவனைப் பார்ப்பதன் மூலம் கண்ணியப்படுத்துவான்.

 
Fassarar Ma'anoni Aya: (142) Sura: Suratu Al'a'raf
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa