Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (70) Sura: Suratu Al'a'raf
قَالُوْۤا اَجِئْتَنَا لِنَعْبُدَ اللّٰهَ وَحْدَهٗ وَنَذَرَ مَا كَانَ یَعْبُدُ اٰبَآؤُنَا ۚ— فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
7.70. அவருடைய சமூகத்தார் அவரிம் கூறினார்கள்: “ஹூதே! அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டுவிட வேண்டும் என்று கூறுவதற்காகவா எங்களிடம் வந்துள்ளீர்? உமது வாதத்தில் நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நேரும் என நீர் எச்சரிக்கும் வேதனையைக் கொண்டுவாரும்.”
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• ينبغي التّحلّي بالصبر في الدعوة إلى الله تأسيًا بالأنبياء عليهم السلام.
1. இறைத் தூதர்களைப் பின்பற்றி அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் பணியில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

• من أولويات الدعوة إلى الله الدعوة إلى عبادة الله وحده لا شريك له، ورفض الإشراك به ونبذه.
2. இணையோ துணையோ அற்ற அல்லாஹ்வை மாத்திரமே வணங்குவதற்கும், அவனுக்கு இணைவைப்பதை மறுத்துரைப்பதன் பக்கமும் அழைப்பதற்கே அழைப்புப் பணியில் முதலில் முன்னுரிமை தரப்பட வேண்டும்.

• الاغترار بالقوة المادية والجسدية يصرف صاحبها عن الاستجابة لأوامر الله ونواهيه.
3. உடல் பலம் பொருளாதார பலம் ஆகியவற்றைக் கொண்டு மயங்குவது அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களுக்குப் பதிலளிப்பதிலிருந்து மனிதனைத் திசை திருப்பிவிடுகின்றன.

• النبي يكون من جنس قومه، لكنه من أشرفهم نسبًا، وأفضلهم حسبًا، وأكرمهم مَعْشرًا، وأرفعهم خُلُقًا.
4. தூதர் அந்த சமூக மக்களின் இனத்திலிருந்தே வருவார். ஆனால் அவர் சிறந்த குடும்பத்தைச் சார்ந்தவராகவும் நற்பெயர் மிக்கவர்களில் உள்ளவராகவும் கண்ணியமானவராகவும் உயர்ந்த ஒழுக்கங்களைப் பெற்றவராகவும் இருப்பார்.

• الأنبياء وورثتهم يقابلون السّفهاء بالحِلم، ويغضُّون عن قول السّوء بالصّفح والعفو والمغفرة.
5. இறைத் தூதர்களும் அவர்களின் வாரிசுகளும் மூடர்களை பொறுமையால் எதிர்கொள்கிறார்கள். தீய வார்த்தையை கண்டும் காணாமல் மன்னித்தும் மறைத்தும் புறக்கணித்துவிடுகிறார்கள்.

 
Fassarar Ma'anoni Aya: (70) Sura: Suratu Al'a'raf
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa