Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Al'fajr   Aya:

அல்பஜ்ர்

daga cikin abunda Surar ta kunsa:
بيان عاقبة الطغاة، والحكمة من الابتلاء، والتذكير بالآخرة.
அநியாயக்காரர்களின் முடிவையும் சோதனையின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தலும், மறுமையை ஞாபகமூட்டலும்

وَالْفَجْرِ ۟ۙ
89.1. அல்லாஹ் அதிகாலையைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.
Tafsiran larabci:
وَلَیَالٍ عَشْرٍ ۟ۙ
89.2. துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.
Tafsiran larabci:
وَّالشَّفْعِ وَالْوَتْرِ ۟ۙ
89.3. இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படையான பொருட்களைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.
Tafsiran larabci:
وَالَّیْلِ اِذَا یَسْرِ ۟ۚ
89.4. வந்துவிடும், நீடிக்கும், பின்னோக்கிச் செல்லும் இரவைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான். உங்கள் செயல்களுக்கு கூலி வழங்கப்பட்டே தீரும் என்பதுதான் இந்த சத்தியங்களின் பதிலாகும்.
Tafsiran larabci:
هَلْ فِیْ ذٰلِكَ قَسَمٌ لِّذِیْ حِجْرٍ ۟ؕ
89.5. மேற்கூறப்பட்டதில் அறிவாளிக்குப் போதுமான சத்தியம் இல்லையா?
Tafsiran larabci:
اَلَمْ تَرَ كَیْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ۟
89.6. -தூதரே!- ஹுத் உடைய மக்கள் தம் தூதர் ஆதை நிராகரித்தபோது உம் இறைவன் அவர்களை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
Tafsiran larabci:
اِرَمَ ذَاتِ الْعِمَادِ ۟
89.7. ஆத் கோத்திரம் தமது உயர்ந்த பாட்டனான இரமுடன் சென்று இணைபவர்கள்.
Tafsiran larabci:
الَّتِیْ لَمْ یُخْلَقْ مِثْلُهَا فِی الْبِلَادِ ۟
89.8. அவர்களைப் போன்று ஒரு சமூகம் எந்த நாடுகளிலும் படைக்கப்பட்டிருக்கவில்லை.
Tafsiran larabci:
وَثَمُوْدَ الَّذِیْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ ۟
89.9. மலைகளிலுள்ள பாறைகளைக் குடைந்து கற்களால் வீடுகளை அமைத்துக் கொண்ட சாலிஹின் கூட்டமான ஸமூதை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
Tafsiran larabci:
وَفِرْعَوْنَ ذِی الْاَوْتَادِ ۟
89.10. முளைகளுடைய ஃபிர்அவ்னை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவற்றைக் கொண்டு மக்களை அவன் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.
Tafsiran larabci:
الَّذِیْنَ طَغَوْا فِی الْبِلَادِ ۟
89.11. இவர்கள் அனைவரும் அநியாயம் செய்வதில் வரம்புமீறினார்கள். ஒவ்வொருவரும் தம் நாட்டில் வரம்புமீறினார்கள்.
Tafsiran larabci:
فَاَكْثَرُوْا فِیْهَا الْفَسَادَ ۟
89.12. அங்கு நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்களைப் பரப்பி அதிகம் குழப்பம் விளைவித்தார்கள்.
Tafsiran larabci:
فَصَبَّ عَلَیْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ ۟ۚۙ
89.13. ஆகவே அல்லாஹ் அவர்களை தனது கடுமையான வேதனையை சுவைக்கச் செய்தான். பூமியிலிருந்து அடியோடு அவர்களை அகற்றிவிட்டான்.
Tafsiran larabci:
اِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ ۟ؕ
89.14. நிச்சயமாக -தூதரே!- உம் இறைவன் அடியார்களின் செயல்களைக் கண்காணிக்கிறான். அது நற்செயல்கள் புரிந்தவர்களுக்கு சுவனத்தையும் தீய செயல்கள் புரிந்தவர்களுக்கு நரகத்தையும் கூலியாக அளிப்பதற்காகவாகும்.
Tafsiran larabci:
فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰىهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ ۙ۬— فَیَقُوْلُ رَبِّیْۤ اَكْرَمَنِ ۟ؕ
89.15. மனிதனை அல்லாஹ் சோதித்து கண்ணியப்படுத்தினால், அவனுக்கு செல்வத்தையும் குழந்தைகளையும் பதவியையும் வழங்கினால் அது அல்லாஹ்விடமிருந்து தனக்கு அளிக்கும் கண்ணியம் என்று எண்ணிக் கொள்கிறான். “நான் அவனது அருளுக்குத் தகுதியானவன் என்பதால் என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான்” என்று கூறுவது மனித இயல்பில் உள்ளதே.
Tafsiran larabci:
وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰىهُ فَقَدَرَ عَلَیْهِ رِزْقَهٗ ۙ۬— فَیَقُوْلُ رَبِّیْۤ اَهَانَنِ ۟ۚ
89.16. அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரத்தில் நெருக்கடியை வழங்கி அவனை சோதித்தால் அதனை அல்லாஹ் தனக்கு அளிக்கும் இழிவு என்று அவன் நிச்சயமாக எண்ணுகிறான். “என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்” என்று கூறுகிறான்.
Tafsiran larabci:
كَلَّا بَلْ لَّا تُكْرِمُوْنَ الْیَتِیْمَ ۟ۙ
89.17.ஒருபோதும் இல்லை. இந்த மனிதன் எண்ணுவதுபோலல்ல விடயம் அருட்கொடை வழங்கப்படுவது அடியானின் மீது அல்லாஹ்வுடைய திருப்தியின் அடையாளமோ துன்பங்கள் அவன் அளிக்கும் இழிவின் அடையாளமோ அல்ல. உண்மையில் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாழ்வாதாரத்திலிருந்து அநாதைகளுக்கு வழங்கி அவர்களைக் கண்ணியப்படுத்துவுமில்லை
Tafsiran larabci:
وَلَا تَحٰٓضُّوْنَ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ۙ
89.18 நீங்கள் ஒருவருக்கொருவர் உண்ண வழியற்ற ஏழைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டுவதுமில்லை.
Tafsiran larabci:
وَتَاْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّمًّا ۟ۙ
89.19. மாறாக பெண்கள், அநாதைகள் போன்ற பலவீனர்களின் உரிமைகளை அது ஹலாலானதா எனக் கவனிக்காமல் முழுமையாக சாப்பிட்டு விடுகிறீர்கள்.
Tafsiran larabci:
وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا ۟ؕ
89.20. செல்வத்தின்மீது அளவுகடந்து மோகம் கொண்டு அதனை அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்யாமல் கஞ்சத்தனம் செய்கிறீர்கள்.
Tafsiran larabci:
كَلَّاۤ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّا ۟ۙ
89.21. உங்களின் செயல் இவ்வாறு இருப்பது உகந்ததல்ல. பூமி பலமாக உலுக்கப்படும்போது.
Tafsiran larabci:
وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا ۟ۚ
89.22. -தூதரே!- உம் இறைவன் தன் அடியார்களிடையே தீர்ப்பளிப்பதற்காக வருவான். வானவர்களும் அணிவகுத்து வருவார்கள்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• فضل عشر ذي الحجة على أيام السنة.
1. வருடத்தின் ஏனைய நாட்களை விட துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களின் சிறப்பு தெளிவாகிறது.

• ثبوت المجيء لله تعالى يوم القيامة وفق ما يليق به؛ من غير تشبيه ولا تمثيل ولا تعطيل.
2. மறுமை நாளில் எந்தவகையான ஒப்புவமை, உதாரணம் கூறுவதின்றி அல்லாஹ் தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு வருவான் என்பது உறுதியாகிறது.

• المؤمن إذا ابتلي صبر وإن أعطي شكر.
3. நம்பிக்கையாளன் சோதனைக்குள்ளாக்கப்பட்டால் பொறுமையாகவும் (ஏதும்) வழங்கப்பட்டால் நன்றிமிக்கவனாகவும் இருப்பான்.

 
Fassarar Ma'anoni Sura: Al'fajr
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa