Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Lambar shafi:close

external-link copy
54 : 10

وَلَوْ اَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِی الْاَرْضِ لَافْتَدَتْ بِهٖ ؕ— وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ ۚ— وَقُضِیَ بَیْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

அநியாயம் செய்த ஒவ்வோர் ஆன்மாவிற்கும் பூமியில் உள்ளவை (அனைத்தும் சொந்தமாக) இருந்தால் அவற்றை அது பரிகாரமாகக் கொடுத்துவிடும்! அவர்கள் வேதனையைக் காணும்போது துக்கத்தை மறைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும்; அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
55 : 10

اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— اَلَاۤ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟

வானங்கள் இன்னும் பூமியில் உள்ளவை நிச்சயமாக அல்லாஹ்விற்குரியன என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்பதை(யும்) அறிந்து கொள்ளுங்கள்! எனினும் அவர்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
56 : 10

هُوَ یُحْیٖ وَیُمِیْتُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟

அவன்தான் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்; அவனிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள். info
التفاسير:

external-link copy
57 : 10

یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِی الصُّدُوْرِ ۙ۬— وَهُدًی وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۟

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசமும், நெஞ்சங்களிலுள்ளவற்றிற்கு (குணப்படுத்தும்) மருந்தும் நேர்வழியும், நம்பிக்கையாளர்களுக்கு அருளும் வந்துவிட்டன. info
التفاسير:

external-link copy
58 : 10

قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْیَفْرَحُوْا ؕ— هُوَ خَیْرٌ مِّمَّا یَجْمَعُوْنَ ۟

“(இந்த குர்ஆன்) அல்லாஹ்வின் அருளைக் கொண்டும் அவனுடைய கருணையைக் கொண்டும் (இறக்கப்பட்டது). ஆகவே, இதைக் கொண்டே அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேகரிப்பவற்றை விட மிக மேலானது” என்று (நபியே) கூறுவீராக! info
التفاسير:

external-link copy
59 : 10

قُلْ اَرَءَیْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا ؕ— قُلْ آٰللّٰهُ اَذِنَ لَكُمْ اَمْ عَلَی اللّٰهِ تَفْتَرُوْنَ ۟

(நபியே!) கூறுவீராக! (மக்களே) அறிவிப்பீர்களாக! “உங்களுக்காக அல்லாஹ் இறக்கிவைத்த உணவில், அதில் சிலவற்றை ஆகாதவை என்றும், சிலவற்றை ஆகுமானவை என்றும் நீங்கள் ஆக்கிக்கொள்கிறீர்களா? அல்லாஹ் (இதற்கு) உங்களுக்கு அனுமதி அளித்தானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் (இவ்வாறு) இட்டுக் கட்டுகிறீர்களா?” info
التفاسير:

external-link copy
60 : 10

وَمَا ظَنُّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَشْكُرُوْنَ ۟۠

அல்லாஹ் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்களுடைய எண்ணம் மறுமை நாளில் என்ன? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன். எனினும் அவர்களில் அதிகமானவர்கள் நன்றி செலுத்தமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
61 : 10

وَمَا تَكُوْنُ فِیْ شَاْنٍ وَّمَا تَتْلُوْا مِنْهُ مِنْ قُرْاٰنٍ وَّلَا تَعْمَلُوْنَ مِنْ عَمَلٍ اِلَّا كُنَّا عَلَیْكُمْ شُهُوْدًا اِذْ تُفِیْضُوْنَ فِیْهِ ؕ— وَمَا یَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ وَلَاۤ اَصْغَرَ مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْبَرَ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟

(நபியே) நீர் எந்த செயலில் இருந்தாலும், (அல்லாஹ்வின் வேதமாகிய) குர்ஆனிலிருந்து நீர் எதை ஓதினாலும், (மக்களே) நீங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் நீங்கள் அவற்றில் ஈடுபடும் போது உங்கள் மீது சாட்சிகளாக நாம் இருந்தே தவிர அவற்றை (நீங்கள் செய்யமாட்டீர்கள்). பூமியிலோ வானத்திலோ ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனை விட்டு மறையாது. இதைவிட சிறிதும் இல்லை பெரிதும் இல்லை (அவனுடைய) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர. info
التفاسير: