Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Lambar shafi:close

external-link copy
116 : 3

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ— وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களின் செல்வங்களும், அவர்களின் சந்ததிகளும் அல்லாஹ்விடமிருந்து (வேதனையில்) எதையும் அவர்களை விட்டு தடுக்காது. அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள். info
التفاسير:

external-link copy
117 : 3

مَثَلُ مَا یُنْفِقُوْنَ فِیْ هٰذِهِ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَثَلِ رِیْحٍ فِیْهَا صِرٌّ اَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَاَهْلَكَتْهُ ؕ— وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰكِنْ اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟

இவ்வுலக வாழ்வில் (இஸ்லாமிற்கு எதிராக அவர்கள்) தர்மம் செய்வதின் உதாரணம், அதில் கடுமையான குளிருள்ள ஒரு காற்றின் உதாரணத்தைப் போலாகும். தங்களுக்குத்தாமே அநீதியிழைத்த ஒரு கூட்டத்தாரின் விளை நிலத்தை (அக்காற்று) அடைந்து, அதை அழித்தது. அல்லாஹ் அவர்களுக்கு அநீதியிழைக்கவில்லை. எனினும், தங்களுக்குத்தாமே அநீதியிழைக்கின்றனர். info
التفاسير:

external-link copy
118 : 3

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا یَاْلُوْنَكُمْ خَبَالًا ؕ— وَدُّوْا مَا عَنِتُّمْ ۚ— قَدْ بَدَتِ الْبَغْضَآءُ مِنْ اَفْوَاهِهِمْ ۖۚ— وَمَا تُخْفِیْ صُدُوْرُهُمْ اَكْبَرُ ؕ— قَدْ بَیَّنَّا لَكُمُ الْاٰیٰتِ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ۟

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாதவர்களிலிருந்து உற்ற நண்பர்களை ஆக்காதீர்கள். (அவர்கள்) உங்களுக்கு தீங்கிழைப்பதை குறைக்கமாட்டார்கள்; நீங்கள் துன்பப்படுவதை விரும்பினார்கள். அவர்களுடைய வாய்களிலிருந்து பகைமை வெளிப்பட்டுவிட்டது. அவர்களுடைய நெஞ்சங்கள் மறைப்பதோ (தீமையால் அதைவிட) மிகப் பெரியது. திட்டமாக அத்தாட்சிகளை உங்களுக்கு விவரித்தோம் (நீங்கள்) புரிபவர்களாக இருந்தால் (புரிந்து கொள்ளுங்கள்). info
التفاسير:

external-link copy
119 : 3

هٰۤاَنْتُمْ اُولَآءِ تُحِبُّوْنَهُمْ وَلَا یُحِبُّوْنَكُمْ وَتُؤْمِنُوْنَ بِالْكِتٰبِ كُلِّهٖ ۚ— وَاِذَا لَقُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا ۖۗۚ— وَاِذَا خَلَوْا عَضُّوْا عَلَیْكُمُ الْاَنَامِلَ مِنَ الْغَیْظِ ؕ— قُلْ مُوْتُوْا بِغَیْظِكُمْ ؕ— اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

நீங்கள் இவர்களை(யா) நேசிக்கிறீர்கள்! அவர்கள் உங்களை நேசிப்பதில்லை. வேதம் எல்லாவற்றையும் நம்பிக்கை கொள்கிறீர்கள். அவர்கள் உங்களைச் சந்தித்தால், "நம்பிக்கை கொண்டோம்" எனக் கூறுகின்றனர். அவர்கள் (உங்களை விட்டு) தனித்தால் உங்கள் மீது (உள்ள) கோபத்தினால் (தங்கள்) விரல் நுனிகளை கடிக்கின்றனர். (நபியே!) கூறுவீராக: "உங்கள் கோபத்தினால் சாவுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்." info
التفاسير:

external-link copy
120 : 3

اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ ؗ— وَاِنْ تُصِبْكُمْ سَیِّئَةٌ یَّفْرَحُوْا بِهَا ؕ— وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا یَضُرُّكُمْ كَیْدُهُمْ شَیْـًٔا ؕ— اِنَّ اللّٰهَ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟۠

உங்களை ஒரு நல்லது அடைந்தால் (அது) அவர்களுக்கு வருத்தம் தருகிறது. உங்களை ஒரு தீங்கு அடைந்தால் அதன் மூலம் மகிழ்ச்சியடைகிறார்கள். நீங்கள் பொறுத்தால், அல்லாஹ்வை அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு சிறிதளவும் தீங்கிழைக்காது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்து (அறிந்து)ள்ளான். info
التفاسير:

external-link copy
121 : 3

وَاِذْ غَدَوْتَ مِنْ اَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِیْنَ مَقَاعِدَ لِلْقِتَالِ ؕ— وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ

(நபியே! நீர்) போருக்காக (பொருத்தமான) இடங்களில் நம்பிக்கையாளர்களை தங்கவைப்பதற்காக உம் குடும்பத்திலிருந்து காலையில் புறப்பட்ட சமயத்தை நினைவு கூறுவீராக! அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன். info
التفاسير: