Превод на значењата на Благородниот Куран - Превод на тамилски на Скратениот коментар на Благородниот Куран.

external-link copy
40 : 42

وَجَزٰٓؤُا سَیِّئَةٍ سَیِّئَةٌ مِّثْلُهَا ۚ— فَمَنْ عَفَا وَاَصْلَحَ فَاَجْرُهٗ عَلَی اللّٰهِ ؕ— اِنَّهٗ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟

42.40. தன் உரிமையைப் பெற விரும்புபவர் அதனை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் எவ்வித அதிகரிப்பு, வரம்புமீறலுமின்றி சரிக்கு சமமான அளவே அவர் பழிவாங்க வேண்டும். யார் தனக்குத் தீங்கிழைத்தவரைத் தண்டிக்காமல் மன்னித்துவிடுவாரோ, தனக்கும் தன் சகோதரனுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்திக் கொண்டாரோ அவருடைய கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அல்லாஹ் மக்களின் செல்வங்களிலோ, உயிர்களிலோ, மானத்திலோ அநியாயம் இழைக்கும் அநியாயக்காரர்களை விரும்புவதில்லை. மாறாக அவர்களை வெறுக்கிறான். info
التفاسير: |
Придобивки од ајетите на оваа страница:
• الصبر والشكر سببان للتوفيق للاعتبار بآيات الله.
1. பொறுமையும் நன்றிசெலுத்துவதும் அல்லாஹ்வின் சான்றுகளைக் கொண்டு படிப்பினைபெறும் பாக்கியத்தைப் பெற்றுத்தரும் இரு காரணிகளாக இருக்கின்றன. info

• مكانة الشورى في الإسلام عظيمة.
2. இஸ்லாத்தில் கலந்தாலோசனை செய்வதின் முக்கியத்துவம் மகத்தானதாகும். info

• جواز مؤاخذة الظالم بمثل ظلمه، والعفو خير من ذلك.
3. அநியாயக்காரனின் அநியாயத்திற்கு ஏற்ப தண்டிப்பது அனுமதிக்கப்பட்டதாகும். அதனை விட மன்னிப்பே சிறந்ததாகும். info