Превод на значењата на Благородниот Куран - Превод на тамилски - Омер Шериф

external-link copy
15 : 10

وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیَاتُنَا بَیِّنٰتٍ ۙ— قَالَ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا ائْتِ بِقُرْاٰنٍ غَیْرِ هٰذَاۤ اَوْ بَدِّلْهُ ؕ— قُلْ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اُبَدِّلَهٗ مِنْ تِلْقَآئِ نَفْسِیْ ۚ— اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ ۚ— اِنِّیْۤ اَخَافُ اِنْ عَصَیْتُ رَبِّیْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟

இன்னும், (நபியே!) இவர்களுக்கு முன்னர் நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால், நம் சந்திப்பை பயப்படாதவர்கள் - “இது அல்லாத (வேறு) ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரீர்; அல்லது, (எங்கள் விருப்பத்திற்கு ஏற்ப) நீர் அதை மாற்றுவீராக” என்று கூறுகிறார்கள். “என் புறத்திலிருந்து அதை நான் மாற்றுவது என்னால் முடியாது. எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்ற மாட்டேன். என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான (மறுமை) நாளி(ல் நரகத்தி)ன் தண்டனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று (நபியே!) கூறுவீராக. info
التفاسير: