Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
88 : 10

وَقَالَ مُوْسٰی رَبَّنَاۤ اِنَّكَ اٰتَیْتَ فِرْعَوْنَ وَمَلَاَهٗ زِیْنَةً وَّاَمْوَالًا فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۙ— رَبَّنَا لِیُضِلُّوْا عَنْ سَبِیْلِكَ ۚ— رَبَّنَا اطْمِسْ عَلٰۤی اَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلٰی قُلُوْبِهِمْ فَلَا یُؤْمِنُوْا حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟

10.88. மூஸா கூறினார்: “எங்கள் இறைவா! இவ்வுலக வாழ்வில் நீ பிர்அவ்னுக்கும் அவனுடைய சமூகத்தின் தலைவர்களுக்கும் உலகத்தின் அலங்காரங்களையும் இந்த உலக வாழ்கையில் செல்வங்களையும் வழங்கியுள்ளாய். நீ அவர்களுக்கு அளித்தவற்றிற்காக அவர்கள் உனக்கு நன்றி செலுத்தவில்லை. மாறாக அவற்றைக் கொண்டு மக்களை உன் வழியை விட்டும் நெறிபிறழச் செய்தார்கள். எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை நீ அழித்து விடுவாயாக. அவர்களின் உள்ளங்களை கடினமாக்கி விடுவாயாக. எனெனில் அவர்கள் நம்பிக்கை கொள்வது பயனளிக்காத, வேதனை மிக்க தண்டனையை அவர்கள் காணும் நேரம் அன்றி அவர்கள் நம்பிக்கைகொள்ளமாட்டார்கள். info
التفاسير:
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• الثقة بالله وبنصره والتوكل عليه ينبغي أن تكون من صفات المؤمن القوي.
1. அல்லாஹ்வின் மீதும் அவனது உதவியின் மீதும் நம்பிக்கை வைப்பதும் அவனையே சார்ந்திருப்பதும் உறுதியான நம்பிக்கையாளனின் பண்புகளாக இருக்க வேண்டும். info

• بيان أهمية الدعاء، وأنه من صفات المتوكلين.
2. பிரார்த்தனையின் முக்கியத்துவமும் அது அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பவர்களின் பண்பாகும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. info

• تأكيد أهمية الصلاة ووجوب إقامتها في كل الرسالات السماوية وفي كل الأحوال.
3. அனைத்து நிலமைகளிலும் தொழுகையின் முக்கியத்துவமும், அதனை நிறைவேற்றுவதன் அவசியமும் அனைத்து வானுலக மதங்களிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன. info

• مشروعية الدعاء على الظالم.
4. அநியாயக்காரனுக்கு எதிராக பிரார்த்தனை புரிவது அனுமதிக்கப்பட்டதாகும். info