Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
90 : 10

وَجٰوَزْنَا بِبَنِیْۤ اِسْرَآءِیْلَ الْبَحْرَ فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْیًا وَّعَدْوًا ؕ— حَتّٰۤی اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِیْۤ اٰمَنَتْ بِهٖ بَنُوْۤا اِسْرَآءِیْلَ وَاَنَا مِنَ الْمُسْلِمِیْنَ ۟

10.90. கடலைப் பிளந்து இஸ்ராயீலின் மக்களுக்கு அதனைக் கடப்பதை நாம் எளிதாக்கினோம். அவர்கள் பாதுகாப்பாக அதனைக் கடந்தார்கள். பிர்அவ்னும் அவனுடைய படைகளும் அநியாயமாகவும் வரம்பு மீறியும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். கடல் அவனை மூடி, மூழ்கடித்து, தப்புவதில் விரக்தியடைந்து அவன் கூறினான்: “இஸ்ராயீலின் மக்கள் யார் மீது நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான எந்த இறைவனும் இல்லை என்று நான் நம்பிக்கை கொள்கிறேன். கட்டளைகளை கொண்டு நான் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்களில் ஒருவனாகி விட்டேன்.” info
التفاسير:
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• وجوب الثبات على الدين، وعدم اتباع سبيل المجرمين.
1. குற்றவாளிகளின் பாதையைப் பின்பற்றாமல் மார்க்கத்தில் நிலைத்திருப்பது கட்டாயமாகும். info

• لا تُقْبل توبة من حَشْرَجَت روحه، أو عاين العذاب.
2. உயிர் தொண்டைக் குழியை அடைந்த பிறகு அல்லது வேதனையைக் கண்ட பிறகு பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாது. info

• أن اليهود والنصارى كانوا يعلمون صفات النبي صلى الله عليه وسلم، لكن الكبر والعناد هو ما منعهم من الإيمان.
3. யூதர்களும் கிறிஸ்தவர்களும் நபியவர்களின் பண்புகளைக் குறித்து அறிந்திருந்தார்கள். கர்வமும் பிடிவாதமுமே அவர்களை நம்பிக்கை கொள்ளவிடாமல் தடுத்தது. info